பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ்
பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் பேணுதல் மிகுந்த வலிய்யுல்லாஹ் அரிய ஆலிம் பரம்பரையில் அவனியில் தோன்றிய வலிய்யுல்லாஹ் நாகூர் ஆலிம் பரம்பரையில் அலியார் ஆலிம் புத்திரராய் அப்துல் ஜவாத் வலீ ஆலிமென அழைக்கும் பெரிய வலிய்யுல்லாஹ் காத்த நகரின் வலிய்யுல்லாஹ் கல்விக் களஞ்சிய வலிய்யுல்லாஹ் ஏத்தமாய் எமக்கு இறை கூடம் என்றும் அருளிய வலிய்யுல்லாஹ் அஹ்மத் மீரான் வலிய்யுல்லாஹ் திருக் கரம் பற்றிய வலிய்யுல்லாஹ் அஹதை அறிந்து அவன் வழியில் அவனியில் நடந்த வலிய்யுல்லாஹ் ஹக்கன் காட்சி தினம்
Read Moreவைத்தியக் கலாநிதி பதுரியா பூஞ்சோலை வருகிறார்
காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019 முத்துப்பேட்டையின் முத்தே! வைத்தியக் கலாநிதியே! ஷெய்குத்தவா ஹகீமே! ஷெய்கு தாவூதே!
Read Moreமாநபீ புகழ் மாலை
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம் பாருக்கு வந்த ராஜாவே! பாலைவனத்து ரோஜாவே! பார்ப்பவர் லயித்த நிற்கும் பேரொளியே! பார் போற்றும் தீன் சுடரே! பாரை ஆளும் கோமானே! முதலோனின் முதலொளியே! முக்கனியே முழுமதியே! முக்காலம் போற்றும் மாதவரே! முழு நிலாவான பெருமானே! அகிலத்தின் அருட்கொடையே! அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ்வின் அருமை மைந்தரே! அவனிக்கு வந்த நாயகமே! அவனல்லாதொன்றுமில்லை என்றவரே! ஈருலகின் அரசரே!
Read Moreகொள்கைக்காக உயிர் வாழ்வோம்
கவிதை – மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அருளே அல்லாஹ் அருவுருவானோன் இதய இருளை நீக்கும் ஒளிமயமானோன் கருவாய் அகிலம் அனைத்தும் ஆனோன் உருவாய் உள்ளவை எல்லாம் ஆனோன் கருவின் உருவாய் கல்கின் முதலாய் திருவாய் மலர்ந்த முஹம்மது நபியை மரகத கவி மணி மாலை சூடி முறையுடன் புகழ்ந்தேன் பாக்கள் பாடி அப்தால் பிரிவில் தோன்றிய நாதர் அப்துல் ஜவாத் எனும் அருந்தவ சீலர் ஒப்பார் இல்லா இன்ஷான் காமில் உஸ்தாத் நாமம் ஓதினேன் பணிந்து
Read Moreமர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக
இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP அவர்கள் வாசித்த இரங்கற்பா. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Read Moreகரம் பிடிப்போம்! கரை சேர்வோம்!!!
காற்றும் வந்தே சோபனம் சொல்லும் கடலலை யோசை காதினில் மெல்லும் காத்த நகரின் மகத்துவம் சொல்லும் கதிரொளி மிஸ்பாஹீ கதை சொல்லும்! கருவுக்குக் கருத்தும் சொல்லிய நாதர் கருவேதான் எல்லாம் என்றிட்ட சீலர் கருப்பொருள் அறியா மனிதரோ வீணர் காவியம் சொன்ன மிஸ்பாஹீ வாழீ! “கறாமத்”கள் அனந்தம் செய்திடும் ராஜர் காத்த நகர்வாழ் அற்புத சோழர் காத்திடும் எங்கள் ஜவாத்வலீ நாதர் கருவாய் மலர்ந்த மிஸ்பாஹீ வாழீ!
Read Moreதியாகங்கள் செய்வோம்! இறைவனைக் காண்போம்!!!
கவி – மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) எல்லாம் அவனாய் இருந்திடும் இறையை துல்ஹஜ் மாதம் தோன்றிய பிறையை கண்டதும் எம்மில் அழித்திட்டான் கறையை அவனை நாமும் போற்றிட வாரீர்! நபிமார் அணியில் தோன்றிய நாதர் இறைவனின் சோதனை பெற்றிட்ட வேதர் “கலீலுல்லாஹ்” என்னும் பெயர் பெற்ற ராஜர் இப்றாஹீம் நபியின் சரித்திரம் கேட்பீர்!
Read Moreஅப்துல் ஜவாத் வலீ! நான் தேடும் நேர் வழி!!
ஆக்கியோன் மௌலவீ MJ.அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) மண்ணோர் வலம் வரும் இணையிலா கோனே விண்ணோர் புகழ்ந்திடும் மட்டில்லாப் புகழே நல்லோர் தேடிடும் காதலன் நீரே புகழ்ந்தே துதித்தேன் இரு கரமேந்தியே! அலியார் ஆலிமின் ஆன்மிக ஒளியே மூஸா உம்மா பெற்றிட்ட தவமே ஷெய்குனா தந்த தௌஹீதின் தளமே பத்ரிய்யஹ் ஆண்டிடும் நிகரிலா மதியே!
Read More“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!
-கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ அறிவுக்கண் திறந்த ஆத்மிகப் பேரொளியே அகவிருளை நீக்கிவைத்த அருள் ஞானம் கொண்டவரே ஆண்டு பல வாழ்ந்திடவே அல்லாஹ்வை பிரார்த்தித்தேன் அன்புள்ளம் கொண்டவரே அகமகிழ்ந்து வாழ்த்திடுவீர்! தியாகத்திரு நாளாம் திக்கெல்லாம் புகழ் நாளாம் திருவருள் சொரி நாளாம் தியாகங்கள் சொரி நாளாம் தரணியிலே நீங்கள் தித்திக்கும் பேரின்பம் தனித்துவங்கள் கொண்டுயர துய்யோனை வேண்டுகின்றேன் சற்குணத்தின் சற்குருவே சாந்தமொழிர் இன்முகமே சலனமற்ற மனங்கொண்ட சமூகத்தின் தீன் சுடரே சத்தியத்தை நிலை நாட்டி சரித்திரங்கள்
Read More