நபீமார்களின் வரலாறுகள் – Shums Media Unit – Tamil Islamic Sufi Website

கழிர் நபீ அவர்களும், இஸ்கந்தர் துல்கர்னைன் அரசரும்.
தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஆன்மிகம், லௌகீகம் இரண்டுக்கும் இரண்டு அரசர்கள்.

இவர் யார்? إبتلاء الأخيار எனும் நூலாசிரியர் கூறுகையில் அல்இஸ்கந்தர் என்பது பெயர் என்றும், “துல்கர்னைன்” என்பது (இரு கொம்புகள் உள்ளவர் அல்லது இரண்டு நூறாண்டுள்ளவர்) அவரின் பட்டம் என்றும் கூறியுள்ளார்.

இவர் வியப்பு மிக்க வரலாறுடையவர் ஆவார். இவரின் தந்தை உலகப் பிரசித்தி பெற்ற வானவியல் ஆய்வாளராயிருந்தார்.

كان أبوه أعلمَ أهلِ الأرض بعِلم النّجوم، ولم يراقب أحدٌ الفَلَكَ مَا رَاقَبَهُ، وكان قد مدّ الله تعالى له فى الأجل،

இவர் போல் உலகில் நட்சத்திர அறிவுள்ளவர் எவரும் இருக்கவில்லை. நீண்டகாலம் வாழும் நற்பாக்கியத்தை அல்லாஹ் இவருக்கு வழங்கியிருந்தான்.

فقال ذات ليلةٍ لزوجتِه، قد قتلني السّهرُ، فدَعِيْنِيْ أَرقدُ ساعةً، وانظُري إلى السّماء، فإذا رأيتِ قد طلع فى هذا المكان نَجْمٌ – وأشار بيده إلى موضع طُلوعِه – فَنَبِّهِيْنِيْ حتّى اَطَئَكِ، فَتَعَلِّقِيْ بولد يعيش إلى آخر الدّهر،

ஒரு நாள் இரவு தனது மனைவியிடம், தூக்கம் என்னைக் கொல்கிறது. அதாவது எனக்கு தூக்கம் மிகைத்து விட்டது. சொற்ப நேரம் நான் உறங்குகிறேன். நீ வானத்தைப் பார்த்து அவதானித்துக் கொண்டிரு. வானில் இன்ன இடத்தில் ஒரு நட்சத்திரம் உதித்தால் என்னை எழுப்பிவிடு. நான் அவ்வேளை உன்னுடன் உடலுறவு கொள்வேன். அவ்வேளை நீ கர்ப்பிணியானால் பிறக்கும் குழைந்தை நீண்ட காலம் வாழும் என்று கூறி வானில் குறித்த நட்சத்திரம் உதிக்கும் இடத்தையும் தனது கையால் சுட்டிக் காட்டினார்.

وكانتْ اُختُها تسمع كلامَه، ثمّ نام أبو الإسكندر، فجعلت اُختُ زوجته تراقب النَّجْمَ، فلمّا طلع النّجمُ أعلمتْ زوجَها بالقِصَّة، فوَطِئَها، فَعَلَقَتْ منه بالخضر، فكان الخضِرُ – الخِضْرُ – ابنَ خالةِ الإسكندر، ووزيرَه،

“இஸ்கந்தர் துல்கர்னைன்” என்பவரின் தந்தை வானவியல் ஆய்வாளர் தனது மனைவியிடம் நட்சத்திரம் உதித்தல் பற்றிச் சொன்ன செய்தியை அவளின் சகோதரி – இவரின் மதினி – இரகசியமாக செவிமடுத்துக் கொண்டிருந்தாள்.

இஸ்கந்தரின் தந்தை உறங்கிவிட்டார். அவரின் மனைவியின் சகோதரியான மதினி குறித்த நட்சத்திரத்தை அவதானித்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் தனது கணவனை எழுப்பி – விழிப்பூட்டி அவள் மறைந்து நின்ற கேட்ட இரகசியத் தகவலை தனது கணவனிடம் விபரமாகக் கூறினாள். அதாவது நட்சத்திரம் உதித்துவிட்டது. வானவியலாளரும், மனைவியும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று தனது கணவனிடம் சொன்னாள். அதாவது இந்த நேரம் நாம் உடலுறவு கொண்டு அத்தகைய ஒரு குழந்தையைப் பெற்றெடுப்போம் என்று அவரிடம் கூறினாள். அதாவது அவரை உடலுறவுக்கு அழைத்தாள். அவரும் சம்மதித்து உடலுறவு நடந்தது. அதில் பிறந்த குழந்தைதான் இன்று வரை “ஹயாத்” உயிருடன் வாழ்கின்ற “ஹயாத்து நபீ” என்று ஆண்களாலும், அதிகமாக பெண்களாலும் அழைக்கப்பட்டு வருகின்ற “களிர்” அல்லது “கிழ்று” அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர்.

பிறந்த குழந்தை கழிர் என்பவர் இஸ்கந்தர் என்பவரின் சாச்சியின் மகனும், அவரின் அமைச்சருமாவார்.

فلمّا استيقظَ أبو الإسكندر رأى النّجمَ قد نَزَلَ فى غير البُرْجِ الّذي يرقبُه، فقال لزوجته لِمَ لَمْ تُنَبِّهِيْنِيْ ؟ فقالت اسْتَحْيَيْتُ واللهِ، فقال لها أَمَا تَعْلَمِيْنَ أنِّي اُراقِبُ هذا النّجم منذ أربعين سنةً؟ والله لقد ضيَّعْتِ عمري فى غيرِ شيئ، ولكنّ السّاعة يطلع فى إثرِه نجمٌ فأطئُكِ فَتَعَلِّقِيْنَ بولد يملِكُ قَرْنَيِ الشمسِ، فما لَبِتَ أنْ طَلَعَ، فواقعها، فعلقت بالإسكندر،ووُلد الإسكندرُ وابن خالتِه الخضـر فى ليلة واحدة، ثمّ إنّ الإسكندر فتحَ اللهُ عليه بتمْكِينِهِ فى الأرض وفتح البلاد، وكان من أمره ما كان،

இஸ்கந்தரின் தந்தை வானவியலாளர் கண் விழித்து நட்சத்திரத்தை பார்த்த போது அவர் எதிர் பார்த்த கோட்டிலிருந்து வேறு பாதைக்கு அது இறங்கியிருந்தது. இதைக் கண்ட இஸ்கந்தரின் தந்தை நட்சத்திர ஆய்வாளர் தனது மனைவியிடம் கேட்ட போது அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு வெட்கமாயிருந்தது என்று கூறினார்.

அப்போதவர், நான் இந்த நட்சத்திரம் உதிப்பதை நாற்பதாண்டுகளாக எதிர்பார்த்து வந்தவன் என்பது உனக்குத் தெரியாதா? நீ என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய் என்று மனைவியிடம் கூறிவிட்டு இப்போது ஒரு நட்சத்திரம் உதிக்கப்போகிறது. உதித்ததும் நான் உன்னுடன் உடலுறவு கொள்வேன். இதில் கர்ப்பமாகி ஒரு குழந்தை பிறக்கும். அக்குழந்தை உலகை ஆளும் என்று கூறி அவளுடன் உடலுறவு கொண்டார். அதன் மூலம் பிறந்த குழந்தைதான் உலகையாண்ட இருவரில் ஒருவரான “சிக்கந்தர் துல் கர்னைன்” என்பவராவார்.

இஸ்கந்தர் துல்கர்னைன் என்பவரும், அவரின் சாச்சியின் மகன் கழிர் என்பவரும் ஒரே இரவில் பிறந்தவர்களாவர்.

சிக்கந்தர் துல்கர்னைன் உலகையாண்ட மன்னரானார். கழிர் – கிழ்று – அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆன்மிக வானில் உதிக்கும் நபீயாக அல்லது வலீயாக ஆனார்.

கழிர் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் நபீயா? வலீயா? என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் அவர்களை நபீ என்பர். இன்னும் சிலர் வலீ என்பர். எதார்த்தம் அல்லாஹ் அறிந்ததே! எனினும் “கழிர்” அலைஹிஸ்ஸலாம் இன்னும், இன்றும் உயிரோடுள்ளார்கள்.

இருவரின் வரலாறும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

இஸ்கந்தர் துல்கர்னைன் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போல் உலகம் முழுவதையும் ஆட்சி செய்த பெரும் அரசர்.

இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

வஹ்ப் இப்னு முனப்பஹ் எனும் வரலாற்றாசிரியர் அவர்கள் கூறுகையில் அவர் “றூம்” என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பருவ வயதை அடைந்ததும் அல்லாஹ் இவரை இந்தப் பரந்த பூமி முழுவதையும் ஆளும் அரசராக்கி அறிவுரைகளும் வழங்கினான் என்றும் கூறியுள்ளார்கள்.

இவர் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர் என்றும், அவர்களை எதிர்த்த அட்டூழியம் நிறைந்த ஓர் அரசனைக் கொன்றொழித்தவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

உலகம் முழுவதையும் ஆட்சி செய்த வல்லரசர்கள் நால்வர். இருவர் விசுவாசிகள் – முஸ்லிம்கள். இருவர் காபிர்கள் – முஸ்லிம்கள் அல்லாதவர்கள்.

நபீ ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்களும் இஸ்கந்தர் துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்களும் விசுவாசிகள். இப்றாஹீம் நபீ அவர்களை எதிர்த்த நும்றூத் என்பவனும், புக்து நஸ்ர் என்பவனும் காபிர்களாவர்.

ஐந்தாவது ஒருவர் ஸெய்யிதுனா மஹ்தீ அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர். இறுதி நாள் நெருங்கும் வேளை அவர்கள் வருவார்கள். இப்போது அவர்கள் இல்லை. பிறந்துதான் அவர்கள் வருவார்கள். அவர்கள்தான் அந்நாளில் மக்களை வழிகெடுக்க வருகின்ற “தஜ்ஜால்” என்பவனை கொலை செய்வர்கள்.

இவ்விருவரும் (சிக்கந்தர் துல்கர்னைன், “கழிர்”) இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர்கள் என்றும், நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தவர்கள் என்றும் வரலாற்றாசிரியர்களில் பலர் கூறுகின்றார்கள்.

சிக்கந்தர் துல்கர்னைன் என்பவர் உலகுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நீதி, நேர்மையுள்ள ஓர் அரசராவார்கள்.

“கழிர்” அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட நபீ அல்லது வலீ ஆவார்கள்.

கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி இன்னும் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!

கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகம் முழுவதையும் சுற்றி வருகின்ற ஒரு நபீ அல்லது ஒரு மெய்ஞ்ஞானி ஆவார்கள்.

முறைப்படியும், விதிப்படியும் முயற்சி செய்தால் அவர்களைக் காண முடியும். “கதிர்காமம்” என்ற ஊர் அவர்கள் வந்து போன ஊரென்பதற்கு சாத்தியம் உண்டு. “கழிர்” என்ற அறபுச் சொல்தான் “கதிர்” என்று மாறியுள்ளது.

எனது கட்டுரைகளை நுகர்கின்ற எவராயினும் எனக்காக ஒரு நொடி நேரம் இரு கரமேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!
-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி.

HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)-

இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம்.  நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும்.

அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை.

அல்லாஹ்வை அறிந்தவர்களும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரிந்தவர்களுமே அவனது சோதனைகளைப் பொருந்திக் கொள்கின்றனர். அவர்களே பரீட்சையில் சித்தியடைகின்றனர். தன்னை அறிந்தவர் களையே இறைவன் பெரிதும் சோதிப்பதுண்டு. மற்றோர் அது இறைசோதனை என்று புரிந்து கொள்வதில்லை.  இவ்வடிப்படையில் கடுமையான கஷ்டங்களையும், பலாய் மூஸீபத்துக்களையும் அனுபவித்து பொறுமை கொண்டவர்கள் நபீமார்களும், றஸுல்மார்களுமேயாவர்.

அவர்களையடுத்தவர் “உலமாஉபில்லாஹ்”  அல்லாஹ்வை அறிந்த உலமாக்களும் “அவ்லியாஉல்லாஹ்” எனப்படும் இறைநேசர்களும் ஸாலிஹீன்களான நல்லடியார்களுமேயாவர்

இவர்களில் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கலிமாவுக்காக உறவைத்துறந்தார்கள் உறவினர்களால் வெறுக்கப்பட்டார்கள் தான் பிறந்த நாட்டை, நண்பர்களைத் துறந்தார்கள். அவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் காபிர்கள் துணிந்தார்கள்.

இதேபோன்றுதான் இஸ்லாம் மார்க்கத்தை நிலைநாட்ட வந்த ஏனைய நபீமார்கள். றஸுல்மார்களுமாவர். இங்கு எல்லா நபீமார்களையும், றஸுல் மார்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் விளக்கமுடியாது இது தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளாக இருப்பதால் அதனோடு சம்பந்தப்பட்ட நபீ இப்றாஹீம் (அலை) அவர்களையும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் சுருக்கமாக வடிப்பது பொருத்தம் என்று கருதுகின்றேன்.

நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்

இவர்களே முதலில் மிஸ்வாக் செய்தவர்கள். சிறுநீர் கழித்தபின் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தவர்களில் இவர்களே முந்தியவர்கள்.

மேலும் நபீ இப்றாஹீம் அவர்களே முதலில் “கத்னா” செய்தவரும். முதலில் மீசையைக் கத்தரித்தவரும், முதலில் நரையைக் கண்டவர்களும், முதலில் சிர்வாலை அணிந்தவரும், முதலில் விருந்தளித்தவர்களும் அவர்களேயாவர்.

சோதனைகள். நபீ இப்றாஹீம் (அலை) அவர்களை இறைவன் பலவாறு சோதித்தான். அத்தனைசோதனைகளையும்  அவர்கள் பொருந்திக் கொண்டார்கள். இறுதியில் வெற்றியும் கண்டார்கள்.   அவர்களைச்  சூழ்ந்த சோதனைகளில் நான்கு முக்கியமானவை.

1) தனது மனைவியை யாருமற்ற இடத்தில் விட்டு வரும்படி         ஏவப்பட்டமை.

2) தனது மகன் இஸ்மாயீல் நபீயை அறுத்துக் குர்பான்       கொடுக்க ஏவப்பட்டமை.

3) நிம்றூத் அரசனால் தீக்கிடங்கில் தான் எறியப்பட்டமை.

4) கோடிக்கணக்கான தனது பொருளாதாரத்தை இறை திக்ருக்காகக் கொடுத்தமை.

முதலாவது சோதனை.

நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் “கலீலுல்லாஹ்” அல்லாஹ்வின் நண்பன் என்று பட்டம் பெற்றவர்கள்.

இவர்களது வெளியமைப்பு மற்றவரின் பார்வைக்கு வித்தியாசமான கருத்தை ஏற்படுத்தியது, மற்றோர் வித்தியாசமான நோக்கினும் அவர்கள் அல்லாஹ்வின் மெய்யடிமையாகவும், நண்பனாகவுமே திகழ்ந்தார்கள்.

இவர்கள் “ஹாஜர்”, “சாறஹ்” என்ற இருமங்கையரை மணந்திருந்தார்கள். சிலர் இவர்களது வெளியமைப்பைக் கண்டு பெண்ணாசை கொண்டவர் என்று கருதினார்கள். ஆனால் அவர்களது உள்ளத்தில் தன்மனைவியரை விட அல்லாஹ்வின் ஆசை நிறைந்திருப்பதை அல்லாஹ் கண்டான். அதை வெளிப்படுத்திக்காட்ட  அல்லாஹ் விரும்பினான் அதனால் மனைவி ஹாஐர் அவர்களை அந்நேரம் யாருமற்ற தற்போதைய கஃபஹ் அருகில் விட்டு வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.

இப்றாஹீம் இக்கட்டளையை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்று மலக்குகள் கூட எதிர்பார்தனர். ஆனால் இப்றாஹீம் நபீ அவர்கள் தனக்குத் தனது  மனைவி மேல் இருக்கும் பாசத்தைவிட அல்லாஹ்வின் கட்டளையே மேலானது எனக்கருதி இறை கட்டளையை நிறைவேற்றினார்கள். அவர்களது உள்ளத்தில் இறைபாசமே மேலோங்கியது.

இரண்டாவது சோதனை

அவர்களுக்கு ஏற்பட்ட இச்சோதனை மிகக்கடினமானது. அன்று இப்றாஹீம் நபீ நித்திரை செய்கிறார்கள். அதில் ஒரு கனவுதெரிகிறது. அதில் “இப்றாஹீமே! இது எனது கட்டளை எனக்காக நீ உனது மகன் இஸ்மாயீலை அறுத்து குர்பான்கொடுக்வேண்டுமென்று” இறைஆணை கிடைக்கிறது.விழிக்கிறார்கள் இப்றாஹீம் நபீ மகன் மீதிருந்த பாசத்தை விட இறைமேல்கொண்டிருந்த பாசம் உயர்ந்ததாகையால்நேரடியாக மனைவியிடமே தான் கண்ட கனவை எடுத்தோதுகிறார்கள். மகன் இஸ்மாயீல் அவர்களும் எந்த வித சலனமுமின்றி “தந்தையே நீங்கள் இறை கட்டளையை நிறைவேற்றுங்கள் நான் பூரண சம்மதம் தெரிவிக்கின்றேன்” என்று பதிலளிக்கின்றார்கள்.

தான் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு மைந்தன் இஸ்மாயீல் நபீயை அழைத்துச்செல்கிறார்கள். அறுப்பதற்கு.

இப்லீஸ் இடையில்தோன்றி இஸ்மாயீல் நபீயைநோக்கி உன்னை அறுப்பதற்காக உனது தந்தை உன்னை அழைத்துச்செல்கிறார்கள் நீபோகவேண்டாம் என்று கூறினான்.அதைக்கேட்ட இஸ்மாயீல் கீழே கிடந்த கல்லை எடுத்து அவனுக்கு எறிந்து துரத்தினார்கள்.

எனது தநதை “கலீலுல்லாஹ்”இறைவனின் நண்பர், இறை கட்டளையை நிறைவேற்றவே என்னை அழைத்துச்செல்கிறார்.நீ இப்லீஸ் ஓடிவிடு என்று மீண்டும் எறிந்து விரட்டினார்கள்.

தன் மகனை அழைத்துச் சென்ற இப்றாஹீம் நபீ உரிய இடம் வந்ததும் மகனை வழத்தி அறுப்பதற்கு தயாரானார்கள்.

அவர்களை நோக்கிய மைந்தன் இஸ்மாயீல், தந்தையே நான் உங்கள் மகன், என்மீதுள்ள உங்கள் இரக்கம் இறை கட்டளையை தாமதிக்கச்செய்து விடலாம் என்று நான் அஞ்சுகிறேன். தயவுசெய்து என்முகத்தை மூடி அறுங்கள் என்று கூறினார்கள். ஆனால் இப்றாஹீம் நபீயின் நெஞ்சில் இறை பாசமே மேலோங்கியிருந்தது.

அதனால் தக்பீர் முழக்கத்துடன் தன் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தார்கள், அறுத்தார்கள் அறுத்துக் கொண்டேயிருந்தார்கள்.எவ்வளவு அறுத்தும் மைந்தனின் கழுத்து அறுபட்டதாக தெரியவில்லை.அப்போது இறைகட்டளைக்கு நான் மாறுசெய்துவிட்டேனே என்று பயந்து அறுத்துக்கொண்டேயிருந்தார்கள்.அறுபடவில்லை. அவர்களுக்கு காபம் கூடுதலாக ஏற்பட்டது தாங்க முடியாத காபத்தால் கத்தியை கல்லின் மீது எறிந்தார்கள் கல் இரண்டாகப்பிளந்து தெறித்தது.

இதனைக்கண்டு வானம் அழுதது,பூமியழுத்து. மலக்குகள் அழுதார்கள். அனைத்திற்கும் மேலாக இப்றாஹீம் நபீயின் இறை கட்டளையை நிறைவேற்றும் உறுதியையும் மனாதிடத்தையும் மலக்குகள் கண்டு அதிர்ந்தார்கள்.

அல்லாஹ்விடம் பிராத்தித்து அழுதார்கள் இஸ்மாயீல் அறுபடக்கூடாது என்று “துஆ” செய்தார்கள். அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றான். ஆட்டை அறுத்து குர்பான் கொடுக்ம்படி ஜிப்ரீல் (அலை) அவர்களை நபீ இப்றாஹீமிடம் அனுப்பிவைத்தான். இதன் நிமித்தம் இன்று குர்பான் கொடுக்கப்படுகின்றது.

கத்தி அறுக்காததேன்?

எதையும் அறுக்கும், வெட்டும் வல்லமை பெற்ற கத்தி நபீ இஸ்மாயீலை அறுக்காததேன்? நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மீண்டும் மைந்தன் இஸ்மாயீலை அறுத்த போது அது அறுக்காததேன் ? இதற்குரிய காரணம் என்ன ? கல்லைப் பிளந்த கத்தி களுத்தை அறுக்க மறுத்ததேன் ?

மனிதர்கள் நினைத்தார்கள் கத்தி மற்றும் அவை போன்றவை சுயமாக அறுக்கும் தன்மை கொண்டவை என்று! ஆனால் இஸ்மாயீல் நபீயின் கழுத்தை அது அறுக்க முடியாத போதுதான் கத்திக்குச் சுயமாக அறுக்கும் தன்மை கிடையாது. அல்லாஹ்வின் சக்தி – உத்தரவு கொண்டுதான் அது அறுக்கும் வல்லமை பெறுகிறது என்ற “ லாபாயில இல்லல்லாஹ்”  செய்பவன் அல்லாஹ்தான் – அவனைத் தவிர வேறுயாருமில்லை என்ற ஏகத்துவ தத்துவம் உலகுக்கு விளங்கியது.

மட்டுமன்றி அல்லாஹ்வின் சக்தியின்றி உலகம் இயங்கமுடியாது என்பதும், எப்பொருளுக்கும் சுயமாகச் செய்யும் சக்தி கிடையாது என்பதும் அனைத்தும் அல்லாஹ்வின் சக்திகொண்டே இயங்குகின்றன என்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் தெளிவாகின்றது.

எனவே நபீ இப்றாஹீம் அலை அவர்கள் இச்சோதனையிலும்  சித்தியடைந்து இறை நெருக்கத்தைப் பொற்றார்கள். இறைவனின் உண்மை நண்பரானார்கள்.

பிள்ளைப் பாசத்தைவிட இறைபாசமே உயர்ந்த்து என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள்.

மூன்றாவது  சோதனை

நபீ இப்றாஹீம் தன்னுயிரைவிட இறைவனை நேசித்தார்கள்

என்பதற்கு அவர்களுக்கு ஏற்பட்ட பின்வரும் சோதனை எடுத்துக்காட்டாகிறது.

ஒவ்வொரு நபீயையும் அவரவர் காலத்தில் வாழ்ந்த கொடிய தலைவர்கள் எதிர்த்ததுபோல் இப்றாஹீம் நபீயையும் நிம்றூத் எனும் கொடியோன் எதிர்த்தான். அவன் பல கொடுமைகள் செய்தான்.

ஒரு நாள் மந்திரிசபையைக் கூட்டி இப்றாஹீம் நபீயை எரிக்கப்போவதாகச் சொன்னான். அதனால் மலைகள் சூழ்ந்த ஒரு பாரிய கிடங்கில் பல மாதங்களாக விறகைக் குவித்து, அதனுள்ளே நபீ இப்றாஹீமைத் தூக்கிப் போடுமாறு கட்டளையிட்டான்.

மலைகளின் இடையே நெருப்பு பயங்கரமாக எரிந்தது. நிம்றூதின் கட்டளைப்படி நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டார்கள். இப்றாஹீம் ஒழிந்தார். இனிமேல் அவரது போதம் ஒழிந்தது என்று நிம்றூதும் அவனது வால்களும் கனவு கண்டனர்.

அது பலநாள்கள் எரிந்துமுடிந்த போதுதான் தெரிந்தது உள்ளே இப்றாஹீம் நபீ உயிருடன் இருப்பது! நும்றூத் மட்டுமல்ல அங்கிருந்தோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பலர் இஸ்லாத்தை ஏற்றனர். பலமாதங்கள் விறகுபோடப்பட்டு எரிக்கப்பட்ட கிடங்கில் எறியப்பட்டவர் எப்படித் தப்பினார் என்ற வினா எல்லோர் நெஞ்சங்களிலும் எழுந்தது.

நெருப்பு எரிக்காததேன்?

இப்றாஹீம் நபீயவர்கள் தனது மைந்தர் இஸ்மாயீலை அறுத்தபோது கத்தி அறுக்கமறுத்தது அறுக்கும் சக்தி கத்திக்கன்று, இறைவனுக்கே உண்டு என்ற தத்துவத்தை நிலை நாட்டியதுபோல நிம்றூதின் நெருப்பு  இப்றாஹீம் நபீயை எரிக்க மறுத்ததன் மூலமும் எரிக்கும்  சக்தியும் நெருப்புக்குச் சுயமாக இல்லை. இறைவன்  நாடினாற்றான் நெருப்பு எரிக்குமேயன்றி அதற்கு சுயமாக எரிக்கும் சக்தி கிடையாது என்பதையும் இந்நிகழ்வு உலகுக்கு எடுத்தோதிவிட்டது.

அன்று இஸ்மாயீலை நபீயை கத்தி அறுத்திருந்தால், இப்றாஹீம் நபீயை நெருப்பு எரித்திருந்தால் உலகோர்க்கு இறைதத்துவம் புரிந்திருக்காது. சிருஷ்டிகளுக்கு எல்லாச் சக்தியும் உண்டு என்று  உலகம் புரிந்திருக்கும்.

கத்தி அறுக்க மறுத்ததும், நெருப்பு எரிக்க மறுத்ததும் சிருஷ்டி எதற்கும் சுயசக்திகிடையாது சுயசக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. இறைவன் நாடினாற்றான் கத்தி வெட்டுகிறது. நெருப்பு எரிக்கிறது. இறைவன் நாடவில்லையானால் எதுவுமே நடக்காது என்ற ஏகத்துவ இறைதத்துவத்தை இந்நிகழ்வு உலகுக்கு உணர்த்திவிட்டது.

சுடுகின்ற வல்லமைகொண்ட நெருப்பு நபீ இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கடும் சூடுமின்றி கடும் குளிருமின்றி பூஞ்சோலையாக மாறியது.

எனவே, நபீ இப்றாஹீம் அவர்கள் இறைவனுக்காகத் தன்னையே அர்ப்பணித்து  இறை சோதனையில் வெற்றி பெற்றார்கள்.

இவர்களின் இச்சோதனை உலகில் வாழ் முஃமீன்களுக்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். உயிர்போகும் நிலையிலும் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தால் அவன் கைவிடுவதில்லை என்பது உறுதி!

நான்காவது சோதனை

நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் பெரும்செல்வம் படைத்த கோடீஸ்வரராகத் திகழ்ந்தார்கள். ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டுப்பட்டிகள் அவர்களுக்கிருந்தன. ஒவ்வொரு பட்டியிலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டு மந்தைகள் இருந்தன. எங்கு பார்த்தாலும் அவர்களின் ஆடுகளே காணப்பட்டன.

அவர்களின் செல்வ நிலையைக் கண்ட மலக்குகள் அல்லாஹ்விடம் சென்று “இறைவா! இப்றாஹீம் நபீ பெரும் செல்வந்தராக இருக்கிறார். பணத்தில் பேராசை கெண்டவராக இருக்கிறார் என்று முறையிட்டனர்.

நீங்கள் வெளிப்படையைப் பார்க்கின்றீர் நான் அவரின் அக நிலையைப் பார்கின்றேன். நீங்கள் சொல்வது போல் அவரில்லை. அவர் அனைத்தைவிடவும் என் மீதே ஆசைகொண்டுள்ளார். நீங்கள் விரும்பின் அவரண்மை  சென்று

பரீட்சித்துப் பாருங்கள் என்றான். மலக்குகள் அதற்குச் சம்மந்தம் தெரிவித்தனர். ஹழ்றத் ஜிப்ரீல் (அலை), ஹழ்றத் மீகாயீல் (அலை), ஹழ்றத் இஸ்றாபீல் (அலை) ஆகியோர் மனித உருவெடுத்து நபீ இப்றாஹீம் அவர்களிடம் வந்து சலாம் கூறி நின்றனர்.

பதிலுரைத்த இப்றாஹீம் நபீ ஏதுவந்தீர்கள் என்று வினவினார்கள்.

ஹழ்றத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நான் “திக்ர்” ஒன்றைத் தெரிந்துள்ளேன்.

தாங்கள் விரும்பினால் சொல்வேன் என்றார்கள்.சொல்லுங்கள் என்றார் இப்றாஹீம் நபீ. சொன்னால் என்ன தருவீர்கள் என்று கேட்டார்கள் ஜிப்ரீல் ! எனது சொத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கைத் தருவேன் என்றார்கள் நபீ இப்றாஹீம் ! உடன் ஜிப்ரீல் அவர்கள் “சுப்பூஹீன் குத்தூஸுன் றப்புல் மலாயிகதி வர்றூஹ்” என்று ஒரு முறை சொன்னார்கள் அப்போது இப்றாஹீம் நபீ இதோ உங்கள் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.

அதன்பின் மனித உருவில் நின்ற  மீகாயில் (அலை) நானும் ஒரு தரம் சொல்லட்டுமா? சொன்னால் என்ன தருவீர்கள்? என்று கேட்டார்கள்.

சொல்லுங்கள் என்னிடமுள்ள மூன்றில் இரண்டில் ஒரு பங்கைத் தருகின்றேன் என்றார்கள் நபீ இப்றாஹீம் அவர்கள் !

உடன் மீக்காயீல் அவர்களும் ஒரு முறை அதே திக்ரை மொழிந்தார்கள். அதுகேட்டு மகிழ்ந்த நபீ இப்றாஹீம் தாம் சொன்னது போல் மூன்றில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்தார்கள்.

அப்போது அங்கு நின்ற இஸ்றாபீல் (அலை) அவர்களும் நானும் ஒருமுறை சொல்லட்டுமா என்றார்கள்.

நபீ ஆம் என்றதும் அவர்களும் ஒருதரம் சொல்லி முடிந்தார்கள். அப்போது தன்னிமுள்ள மூன்றில் ஒரு பங்கையும் இஸ்றாபீலுக்கு கொடுத்து முடித்தார்கள்.

தற்போது நபீ இப்றாஹீம் பரம ஏழையானார்கள் அவருக்குச் சொந்தமான எதுவுமே இருக்கவில்லை.

இதைக் கண்ட மூன்று மலக்குகளுக்கும் இப்றாஹீம் நபீயின் துறவற நிலை, எதிலும் பற்றற்ற நிலை, அவர்கள் பற்றி இறைவன் சொன்ன வார்தை புரிந்தது.

வெளியமைப்பைப் பார்த்துத் தாம் தப்பாகக் கருதியதை நினைத்து வருந்தினார்கள். இப்றாஹீம் நபீயிடம் மன்னிப்பும் கேட்டார்கள். தாம் மலக்குகள் . சோதிக்கவே வந்தோம்.

நீங்கள் வெற்றிபெற்று விட்டீர்கள். நாம் தோல்வியடைந்து விட்டோம்.

இதோ உங்கள் செத்துக்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று நபீயை கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு நபீயவர்கள்‘ இந்த இப்றாஹீம் சொன்னதுதான் சொல். அவர் உங்களுக்குக் கொடுத்து விட்டார்.  உங்களுக்குத் தேவையில்லா விடின் பைதுல் மாலுக்குக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்கள்.

மலக்குகள் மூவரும் திகைத்துப் போனார்கள். எனவே ஒரு திக்றுக்காக இப்றாஹீம் நபீ கோடிக்கணக்கான சொத்துக்களையே கெடுத்தார்கள் என்றால் அல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள பாசம் எத்தகையது என்பதை நாங்கள் புரிய வேண்டும்.

எனவே, அவர்கள் செய்த தியாகங்கள்  எங்கள் வாழ்விலும் நாங்கள் செய்ய வெண்டும். ஏழைகளுக்கு வாரி வழங்க வேண்டும்.

உலக ஆசைகள் எம்மை விட்டகன்று, இறைபாசமே ஒங்க வேண்டும். அவனுக்காக அகிம்சை வழியில் சென்று எதையும் செய்யும் தியாக மனம் கொண்டோராக நாம் திகழவேண்டும்.

உலக இன்பத்தைத் துறந்து பேரின்பத்திற்காக நாம் தியாகங்கள் செய்து வாழவேண்டுமென்று, தியாகத் திருநாளின் குணம் கொள்ள வேண்டுமென்றும் இக்கட்டுரை மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

முற்றும்…

நபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..
-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த குழந்தை கீழே நழுவி விழ அதனை ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றது. இவர்கள் உயிர் தப்பி அக்கரை வந்து சேர்ந்தார்கள்.

மனைவியோ இக்கரையில் இருந்தார். அப்பொழுது ஜிப்ரீல் (அலை) தோன்றி இவர்களை நீனவா சொல்லுமாறும் இவர்கள் மனைவி மக்களை இறைவன் இவர்களிடம் ஒன்று சேர்ப்பான் என்றும் கூறி மறைந்தனர். அவ்விதமே இவர்கள் அங்கு சென்று ஓறிறை வணக்கத்தை அவ்வூர் மக்களுக்குப் போதித்தும் அவர்கள் கேட்கவில்லை.பெறுமையிழந்த இவர்கள் அவர்கள் மீது நெருப்பு மழையாய் பொழியுமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள். சரி அவ்விதமே செய்கிறேன். நீர் இன்ன மலைமீதுபோய் அமர்ந்திரும் என்று இறைவன் கூறினான். அவ்விதமே  செய்ய அனல் காற்று வீசத்தொடங்கியது. அது கண்டு அலறிய மக்கள் தங்கள் பாவம்பெறுத்தறுளுமாறும்  அல்லாஹ் தவிர வேறு எவரும் இல்லை என்றும் யூனுஸ் (அலை) அவர்கள் அவனுடைய திருத்தூதர் என்றும் தாங்கள் நம்புவதாகவும் நாற்பது இரவு பகல் குப்புற வீழ்ந்து கண்ணீரும் கம்பலையுமாய்க் கூற, இறைவன் அவர்கள் மீது இரங்கினான். தீமழை செழுமையாய்ப் பொழிந்தது. இதனை இவர்கள் அறிந்ததும் கோபமுற்று அவ்வூரைவிட்டே நீங்கினார்கள்.

கப்பலில் செல்லும்போது கப்பல் திடீரென நின்றது. பாவியாகிய இவர்கள் கப்லில் இருப்பதால்தான் கப்பல் செல்லவில்லை என்று சீட்டுக் குலுக்கிப்பார்த்ததில் தெரிய வந்ததும் இவர்கள் கடலில் குதித்தார்கள். அப்பொழுது இறை ஆணைப்படி “நூன்” என்ற மீன் அவர்களை விழுங்கியது. பின்னர் இவர்கள் அதன் வயிற்றிலிருந்து வெளி வந்தபோது ஒரு சுரைக்கொடி இவர்களுக்கு நிழலிட்டதென்றும் ஒரு மான் காலையிலும் மாலையிலும் வந்து இவர்களுக்கு பால் நல்கி வந்த தென்றும் கூறப்படுகின்றது.

பின்னர் இவர்கள் மனைவியையும் மக்களையும் இவர்களுடன் ஒன்று சேர்த்தான் இறைவன். நீனவா மக்கள் இவர்களை இலக்குக் கண்டுகொண்டு இவர்களை தம் ஊர்வருமாறு வேண்ட  ஒரு நபி ஊரை விட்டு வெளியேறிவிடின் மீண்டும் அவர் அதில் குடிபுகமாட்டார்.  என்றுகூறி சகியூ என்ற மலையை அடைந்து அங்கேயே வாழ்த்து இவர்கள் உயிர்நீத்தார்கள். இவர்கள் நூன் என்ற மீனின் வயிற்றில் பல நாட்கள் இருந்தால் இவர்களுக்கு (துன்னூன்) மீனுடையவர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மௌலவீ K.R.M. ஸஹ்லான் றப்பானி BBA (Hons)

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான்.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (திருக்குர்ஆன் 15:26)

(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (திருக்குர்ஆன் 15:28)

முதல் மனித படைப்பைப் பற்றி ஹதீஸ்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன.

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம்( அலை)உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் – அறிவிப்பாளர்: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா)

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (நூல்: அஹ்மத் – அறிவிப்பாளர்: ஆபூமூஸா றழியல்லாஹு அன்ஹு)

மனித குலத்தின் முதல்வராக நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைக்க நாடிய போது பூமியின் பல பாகங்களிலுமிருந்து 10 நாட்கள் மண் சேகரிக்கப்பட்டது. 20 நாட்கள் மண் குழைக்கப்பட்டது. பின்னர் 40 நாற்பது நாட்கள் அல்லாஹ் தஆலா நபீ ஆதம் (அலை) அவர்களை அழகிய உருவமாக அமைத்தான். பின்னர் 20 நாட்கள் மண்ணின் இயல்பிலிருந்து மனித உடலின் இயல்பாக மாறும் வரை அந்த உருவத்தை விட்டு வைத்தான். மொத்தம் 3 மாதங்கள் ( ரஜப், ஷஃபான், றமழான்) கழிந்தன.

பின்னர் அல்லாஹ் தஆலா உயிரை (றூஹ்) அவர்களுக்கு கொடுத்தான். மலக்குகள் அனைவரையும் அவர்களுக்கு சுஜூத் செய்ய வைத்தான். பின்னர் அவர்களை சுவர்க்கத்து ஸூன்துஸ் எனும் விரிப்பு விரிக்கப்பட்ட சிவந்த மாணிக்கங்களால் உருவான 700 தூண்கள் கொண்டமைந்த மேடையில் வைத்து மலக்குகள் எல்லா வானங்களிலும் வலம் வந்து  சுவர்க்கத்தில் நுழைவித்தனர். அவர்களுக்கு சுவர்க்கத்து பட்டாடைகளும், மரகதத்தினால் உருவான கிரீடமும் அணிவிக்கப்பட்டது. அந்தக் கிரீடம் ஒளிவீசிக் கொண்டிருந்தது. இவற்றுக்கு எல்லாம் மகுடமாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஒளி ஆதம் (அலை) அவர்களின் நெற்றியில் ஒளிர்ந்தது.

நபீ ஆதம் (அலை) அவர்கள் ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் இடது பக்க விலா எழும்பை எடுத்து அதிலிருந்து ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைத்தான். இதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வலப்பக்க விலா எழும்புகள் 18 ஆகவும் இடப்பக்க விலா எழும்புகள் 17 ஆகவும் காணப்படுகிறது. . இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

ஆதம் (அலை) அவர்கள் கண்விழித்து பார்த்த போது தங்களின் தலைப்பக்கமாக ஹவ்வா (அலை) நிற்கின்றார்கள். யார் நீங்கள் ? என்று கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். நான் உமது மனைவி ஆயினும் எனக்கு நீங்கள் மஹர் தரவேண்டும் என்று சொன்னார்கள் ஹவ்வா (அலை) அவர்கள். இறைவா நான் என்ன மஹர் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். அதற்கு இறைவன் உமது பிள்ளை நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது 20 முறை ஸலவாத் சொல்லுங்கள். அதுதான் மஹர் என்று அல்லாஹ் தஆலா சொன்னான். இது வௌ்ளிக்கிழமை சூரியன் மத்தியில் இருந்து சாய்ந்தபின் நடை பெற்றது. இதனால்தான் வௌ்ளிக்கிழமை நிகாஹ் செய்வது சுன்னத்தாக்கப்பட்டது.

ஹவ்வா (அலை) அவர்கள் உலகத்து மாதர்களில் மிக அழகானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சுவர்க்கத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவனத்து மாதர்கள்-ஹூர்களும் சுவனத்து வாலிபர்களும் ஆதம்(அலை) , ஹவ்வா(அலை) தம்பதியினரை பின் தொடர விண்ணகம் முழுவதும் மலக்குகளுடன் அவர்கள் வலம்வந்தார்கள். பின்னர் 1000 ஆண்டுகள் சுவனத்து பூஞ்சோலையில் வாழ்ந்தார்கள். பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ் தஆலா பூமிக்கு அனுப்பிவைத்தான். இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

(அதற்கு) இறைவன், “இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள். உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” (திருக்குர்ஆன் 7:24)

“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 7:25)

நபீ ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் நூத் அல்லது றாஹூன் என்று அக்காலத்திலும் தற்காலத்தில் பாவா ஆதம் மலை எனவும் அழைக்கப்படும் மலையில் இறங்கினார்கள். இந்த    மலையின் சூழலில் 100 நீர் ஊற்றுக்கள் உள்ளன. மாணிக்கங்களும் மரகதங்களும் வாசனைத் திரவியங்களும் அழகிய மரங்களும் பூக்களும் அதனை சூழ அமைந்துள்ளன. வௌ்ளம் ஏற்படும் காலங்களில் மலையில் மறைந்துள்ள மாணிக்கங்கள் நீரில் அரிக்கப்பட்டு நீரோடைகளை வந்தடைகின்றன. அதை மனிதர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மலையின் உச்சியில் நபீ ஆதம் (அலை) அவர்களின் கால் அடிச்சுவடு காணப்படுகிறது.

ஹவ்வா (அலை) அவர்கள் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் இறங்கினார்கள். பின்னர் 300 அல்லது 500 ஆண்டுகளின் பின்னர் அறபாத்திடலிலே நபீ ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் சந்தித்தார்கள்.

ஆதம் (அலை) அவர்கள் 1000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு 10 ஸூஹூபுகளை அருளி முதலாவது றஸூலாகவும் அவர்களை தேர்ந்தெடுத்தான். அவர்களும் மனைவியும் சேர்ந்து 40 அல்லது 70 ஹஜ்ஜூகள் செய்தார்கள். அவர்களின் ஷரீஅத்தில் கூட செத்த பிராணி , பன்றியின் மாமிசம் இரத்தம் என்பன ஹறாமாக்கப்பட்டிருந்தது.

நபீ ஆதம் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது மலக்குகள் வந்து சூழ்ந்து நின்றனர். அவர்கள் மரணித்ததும் மலக்குகளே அவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு தொழுவித்து இலங்கையில் றாஹூன் மலையில் அடக்கம் செய்தனர். இதிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் ஹவ்வா (அலை) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் ஜித்தாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்விருவரும் வௌ்ளிக்கிழமை மரணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.