தொடர்- 02 …
வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் பற்றிய இமாம்களின் கருத்துகள்
இவர் தொழுகைக்குப் பின் “துஆ ஓதுவதை-பிராத்தனை செய்வதை தடை செய்தார். இது இஸ்லாத்திற்கு முரணான “பித்அத்” என்று கூறி வந்தார். தொழுகைக்குப் பின் நீங்கள் “துஆ” கேட்டால் அது நீங்கள் செய்த வணக்கத்திற்கு கூலி கேட்பது போலாகிவிடுமென்று போலிக்காரணமும் கூறி வந்தார்.
இவரின் வழிகேடும், அநாச்சாரக் கொள்கையும் காட்டுத்தீ போல் நாடெங்கும் பரவி வருவதைக் கண்ட சத்திய சன்மார்கத்தில் பற்றும், அதன் மீது ரோஷமும் கொண்ட அறிஞர்கள் பலர் இவருக்கு எதிராக பல மறுப்பு நூல்களை எழுதி வெளியிட்டார்கள்.
உலகில் அநாச்சாரம் வெளியாகிவிடும் பொழுது மார்க்க அறிஞனொருவன் அதை மறுக்காமல் மௌனியாக இருப்பவனாயின் அவன் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மற்றும் எல்லா மலக்குகளினதும் சாபம் உண்டாகட்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்- அத்துறறுஸ்ஸனிய்யஹ்.
அநாச்சாரக்காரர்கள் வெளியாகி விடுவார்களாயின் அவர்களை மறுப்பதற்காக தான் நாடிய அடியார்களை அல்லாஹ் தயார் செய்து விடுவான் என்றும் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
ஆதாரம்- அத்துறறுஸ்ஸனிய்யஹ்.
நபி(ஸல்) அவர்களின் இவ்விரு பொன்மொழிகளும்தான் ஸுன்னத் வல்ஜமாஅத் உலமாக்களை இவருக்கு மறுப்பெழுதுமாறு தூண்டிவிட்டன.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன. தலை சிறந்த பல உலமாக்கள் இவரின் வழிகேட்டை மக்களுக்கு எழுத்து மூலமும், பேச்சு மூலமும் தெளிவு படுத்தி இவரின் வழிகேட்டிலிருந்து அவர்களை எச்சரித்தார்கள்.
இவருக்கு மறுப்பெழுதிய இமாம்களின் பட்டியல் மிக விரிவானது. அதை முழுமையாக எழுதினால் இவ்விதழ் மிக விரிவடைந்துவிடும். எனினும் இவரை மறுத்து நூல்கள் எழுதிய அறஞர்களின் விவரத்தை மட்டும் இங்கு தருகிறேன்.
வழிகேட்டை எதிர்த்த வழிகாட்டிகள்.
1. இவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த “உஸ்தாத்” ஆசிரியர் முஹம்மத் இப்னு ஸுலைமான் அல்குர்தீ அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள்.
2. இவரின் ஆசிரியர் அல்லாமஹ் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லதீப் அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள். இவர்கள் எழுதிய மறுப்பு நூலின் பெயர் “தஜ்ரீது ஸெய்பில் ஜிஹாத்லி முத்தயில் இஜ்திஹாத்” என்பதாகும்.
3. அல்லாமாஹ் அபீபுத்தீன் அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல்ஹன்பலீ(றஹ்) அவர்கள். பஸறஹ், பக்தாத், ஹலப், அஹ்ஸா ஆகிய நகரங்களிலுள்ள அறிஞர்களின் மதிப்புரையுடன் இருபது தாள்களை கொண்டதாக வெளிவந்த இவரின் மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸவாயிகுவர்றுஊத்” என்பதாகும். இந்நூலை ஓமானைச் சேர்ந்த அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னுபஷீர் காழீ(றஹ்) அவர்கள் சுருக்கி எழுதியுள்ளார்கள்.
4. அல் அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு அமாலிக் அல்ஹன்பலீ(றஹ்) அவர்கள். இவருடைய மறுப்பு நூலின் பெயர் “தஹக்குமுல்முகல்லிதீன் பிமன் இத்தஆதஜ்தீதத்தீன்”
5. அல்லாமாஹ் அஹ்மத் இப்னு அலீ அல்குபானீஅல்பஸரீ அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள்.
6. அல் அல்லாமாஹ் அப்துல் வஹ்ஹாப் இப்னு அஹ்மத்பறகாத் அஷ்ஷாபிஈ அல் அஹ்மதீ அல் மக்கீ(றஹ்) அவர்கள்.
7. அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அதாஉல் மக்கீ(றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸாரிமுல் ஹிந்திய்யு பூ உனுகின் நஜ்திய்யி”
8. அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் இப்னுஈஸா அல்முவைஸீ(றஹ்) அவர்கள்.
9. அஷ் ஷெய்கு அஹ்மத் அல் மிஷ்ரீ(றஹ்) அவர்கள்.
10. பைதுல் மக்திஸை சேர்ந்த ஒரு மார்க்க மேதை. நூலின் பெயர் “அஸ்ஸுயூபுஸ்ஸிகால் பீ அஃனாகிமன் அன்கற அலல் அவ்லியாயி பஃதல் இன்திகால்”.
11. அஸ்ஸெய்யித் அலவீ பின் அஹ்மத் அல்ஹத்தாத்(றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸெய்புல்பாயிர் லி உனுகில் முன்கிரி அலல் அகாபிர்”. இந்நூல் 100 தாள்களை கொண்டது.
12. அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு அப்தில் லதீப் அல்இஹ்ஸாயி(றஹ்) அவர்கள்.
13. அல் அல்லாமாஹ் அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் மீர்கானிய்யி(றஹ்) அவர்கள். இவர் தாயிப் நகரை சேர்ந்தவர். மறுப்பு நூலின் பெயர் “தஹ்ரீளுல் அக்பியாயி அலல் இஸ்திகாததி பில் அன்பியாயி வல்அவ்லியாயி”.
14. அஸ்ஸெய்யித் அலவீ இப்னு அஹ்மத் அல்ஹத்தாத்(றஹ்) அவர்கள்.
15. அல்அல்லாமாஹ் தாஹிர் ஸுன்புலீ அல்ஹனபீ(றஹ்) அவர்கள். நூலின் பெயர் அல்இன்திஸார்லில் அவ்லியாயில் அப்றார்.
16. அஷ்ஷெய்குல் முஹத்தித் ஸாலிஹுல் பல்லானீ அல்மக்ரிபீ(றஹ்) அவர்கள்.
17. அல்அல்லாமாஹ் அஸ்ஸெய்யிதுல் முன்அமி(றஹ்) அவர்கள்.
இப்னு அப்தில் வஹ்ஹாப் ஒரு சமயம் தலைமுடி களையாதவர்களையெல்லாம் கொலை செய்தார். அந்நேரம் இப்பெரியார் ஒரு கவி நடையில் ஒரு நூல் எழுதினார்கள்.
18. அல் அல்லாமாஹ் அஸ்ஸெய்யித் அப்துர்றஹ்மான் (றஹ்) அவர்கள். இவர்கள் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கு எதிராக 67 பாடல் கொண்ட, அர்த்தமுள்ள ஒரு மறுப்பு நூல் எழுதினார்கள்.
19. அல்அல்லாமாஹ் அஸ்ஸெய்யித் அலவீ இப்னு அல்ஹத்தாத் (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “மிஸ்பாஹுல் அனாம் வஜிலாஉள்ளலாம் பீ றத்தி ஷுபஹில் பிதயிய்யின் நஜ்தியில்லதீ அழல்லபிஹல் அவாம்”இது ஹிஜ்ரி 1325 இல் அச்சிடப்பட்டது.
20. அஷ்ஷெய்கு ஸுலைமான் இப்னு அப்தில்வஹ்ஹாப் (றஹ்) அவர்கள். இவர் இப்னு அப்தில்வஹ்ஹாபின் உடன் பிறந்த சகோதரன். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸவாயிகுல் இலாஹிய்யஹ்”
21.அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்குல் இஸ்லாம் இஸ்மாயீல் அத்தமீமீ அல்மாலிகீ (றஹ்) அவர்கள்.
22. அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்கு ஸாலிஹுல் குவாஷ் அத்தூனூஸி (றஹ்) அவர்கள்.
23.அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஸ்ஸெய்யித் தாவூத் அல்பக்தாதீ (றஹ்) அவர்கள்
24. அஷ்ஷெய்கு இப்னு கலபூன் அல்லீபிய்யி (றஹ்) அவர்கள். லிபியா நாட்டைச் சேர்ந்த இவர் நாற்பது பாடல்கள் மூலம் நஜ்திக்கு மறுப்பெழுதினார்.
25. அஸ்ஸெய்யித் முஸ்தபல் மிஸ்ரிய்யில் பூலாதிய்யி (றஹ்) அவர்கள். இவர் 126 பாடல்கள் மூலம் நஜ்தி சாஹிபுவை இழித்துரைத்துள்ளார்.
26. அஸ்ஸெய்யித் அத்தபாதபாயி அல் பஸரி (றஹ்) அவர்கள்.
27. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு இப்றாஹீம் அஸ்ஸம்னூதி (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஸஆததுத் தாறைன் பிர்றத்தி அலல் பிர்கதைன்” என்பதாகும்.
28. அஸ்ஸெய்யித் அஹ்மத் ஸெய்னீ தஹ்லான் (றஹ்) அவர்கள். இவர்கள் எழுதிய மறுப்பு நூலின் பெயர் “அத்துறறுஸ் ஸனிய்யஹ்” இவர் மக்கா முப்தியாக இருந்து ஹிஜ்ரீ 1304இல் வபாத்தானார். இவருக்கு வேறு கிதாபுகளும் உள்ளன. இலங்கையில் வேர் விலை எனும் ஊரிலும், காத்தான்குடியிலும் முப்பது நாட்கள் இமாம் புஹாரீ (றஹ்) அவர்களின் “ஸஹீஹுல் புஹாரீ”ஓதிய பின் இப்பெரியார் கோர்வை செய்த “துஆ”பிராத்தனைதான் உலமாக்களால் இன்றும் ஓதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
29. அஷ்ஷெய்ஹு அல்லாமஹ் யூஸுப் அந்நபஹானீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஷவாஹிதுல் ஹக் பித்தவஸ்ஸுலி பிஸெய்யிதில் கல்கி” எனப்படும்.
30. அஷ்ஷெய்கு ஜெமீல் அஸ்ஸிந்தீ அஸ்ஸஹாவீ அல்பக்தாதீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அல் பஜ்றுஸ் ஸாதிக்”
31. அஷ்ஷெய்குல் மஷ்றபீ அம்மாலிகீ அல்ஜஸாயிரீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “இள்ஹாறுல் உகூக் மிம்மன் மனஅத் தவஸ்ஸுல பின் நபிய்யிவல் வலிய்யிஸ் ஸதூக்”
32. அஷ்ஷெய்கு அல் மஹ்தீ அல்வஸ்ஸானீ (றஹ்) அவர்கள். இவர் ஈரானிலுல்ல “பாஸ்” நகரின் முப்தியாவார்.
33. அஷ்ஷெய்கு முஸ்தபல் ஹமாமி அல்மிஸ்ரி (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “கவ்துல் இபாத் பிபயானிர் ரஷாத்”
34. அஷ்ஷெய்கு இப்றாஹீம் ஹில்மி அல்காதிரீ அல் இஸ்கந்தரீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஜிலாலுல் ஹக் பீ கஷ்பி அஹ்வாலி அஸ்றாரில் கல்க்”இந்நூல்1355ல் இஷ்கந்தரிய்யாவில் அச்சிடப்பட்டது.
35. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு ஸலாமதுல் அஸாமீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அல் பராஹீனுஸ் ஸாதிஆ”
36. அஷ்ஷெய்கு ஹஸன் சிஷ்தீ அல்ஹனபீ அத்திமிஸ்கி (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “அன்னுகூதுஷ் ஷர்யிய்யா பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்”
37. அஷ்ஷெய்கு முஹம்மது ஹுனைன் மக்லூபி (றஹ்) அவர்கள்.
38. அஷ்ஷெய்கு ஹஸன் கஸ்பக் (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “ அல்மகாலாதுல் வபிய்யா பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்”
39. அஷ்ஷெய்கு அதா அல்கஸ்ம் அத்திமிஸ்கீ கஸ்பக் (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “ அல் அக்வாலுல் மர்ழிய்யஹ் பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்”
40. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் அல்குறஸி அல் அஜ்லீ (றஹ்) அவர்கள்.இவர்கள் 95 பாடல்களில் வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பருக்கு மறுப்பெழுதினார்கள்.
வழிகேடர் இப்னு அப்தில்வஹ்ஹாபுக்கு மறுப்பெழுதிய நாதாக்களில் நாற்பது பேர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் இல்லாத இன்னும் அநேக இமாம்களும், மகான்களும் வழிகேடர் நஜ்தி சாஹிபுக்கு மறுப்பெழுயுள்ளார்கள். அவர்கள் அனைவரும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடைய வர்களேயாவர்.
இறைத்தூதரின் எச்சரிக்கை
நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலகட்டத்தில் பின்னொரு காலத்தில் தோன்றக்கூடிய வழிகேடர்கள் பற்றியும், அவர்கள் தோன்றும் இடங்கள் பற்றியும் சூசமாகச் சொல்லியிக்கின்றார்கள். அவற்றில் ஒருசில ஹதீஸ்களை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
“குழப்பம் இங்கிருந்துதான் உண்டாகும். குழப்பம் இங்கிருந்துதான் உண்டாகும் எனறு இருமுறை கூறிய நபீ (ஸல்) அவர்கள் கிழக்குப் பக்கமாக தங்களின் திருக்கரத்தைக் காட்டினார்கள்.
ஆதாரம்:புஹாரி, அத்துற்றுஸ்ஸனிய்யானிய்யஹ்.
அறிவிப்பு: அலி (றழி)
“கிழக்குப் பக்கமிருந்து சில மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் திருக்குர்ஆனும் ஓதுவார்கள். எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு புறப்படுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். வில்லை விட்டும் வெளியேறிய அம்பு மீண்டும் வில்லளலவில் மீளாதது போல் அவர்களும் சன்மார்க்கத்தினளவில் மீளமாட்டார்கள். அவர்களின் அடையாளம் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“எனது உம்மத்துக்களில் பல்வேறுகருத்து வேறுபாடுகளும், பல கூட்டங்களும் உண்டாகும். ஒரு கூட்டத்தினர் மிக அழகாகப் பேசுவார்கள். எனினும் கெட்ட செயல்களையேசெய்வார்கள். அவர்கள் திருக்குர்ஆனும் ஓதுவார்கள். எனினும் அவர்களுடையை “ஈமான்” விசுவாசம் அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லில் இருந்து அம்பு வெளியேருவது போல் அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேருவார்கள். அம்பு மீண்டும் வில்லுக்கு திரும்பாதது போல் அவர்களும் மார்க்கத்தளவில் மீள மாட்டார்கள்.அவர்கள் குணமும், நடைமுறையும் கெட்டவர்கள். அவர்களைக் கொண்றவர்களுக்கும், அவர்களால் கொள்ளப்பட்டவர்களுக்கும் சுபச்செய்தி உண்டாவதாக! அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின் பால் மக்களையழைப்பர்கள். எனினும் அவர்கள் வேதத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களின் அடையாளம் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடைசி காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் சிறுவயதினராகவும், புத்தி குறைந்தவர்களுமாயிருப்பார்கள். எனதுபேச்சையும் எடுத்துப் பேசுவார்கள்.அவர்கள் திருக்குர் ஆனையும் ஓதுவார்கள். எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு புறப்படுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் புறப்படுவார்கள். நீங்கள் அவர்களைக் கண்டால் கொன்று விடுங்கள். அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலியுண்டு என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புஹாரி
அறிவிப்பு : அலீ (றழி)
“ எனது உம்மத்துக்களில் சிலர் இருப்பார்கள். சிரைத்தல் அவர்களின் சின்னமாக இருக்கும். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள். . எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். குணமும், நடைமுறையும் கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ கிழக்கிழிருந்து சில மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள். அது அவர்களுடயை தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். அம்பு வில்லுக்குத் திரும்பி வராதது போல் மார்க்கத்துக்கு, திரும்பி வரமாட்டார்கள். அவர்களின் சின்னம் சிரைத்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குப்றுடைய தலை கிழக்குப் பக்கத்திலிருக்குமென்றும், பெருமை என்பது குதிரை ஓட்டங்களுடையவர்களில் இருக்குமென்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இங்கிருந்துதான் குழப்பம் “பித்னஹ்” வருமென்று கூறிய நபி (ஸல்) அவர்கள் கிழக்குப் பக்கம் கையைக்காட்டலானார்கள்.
“ ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இறைவா” எங்களுடைய ஷாம் சிரியாவிலும், எங்களுடைய எமனிலும் பறகச் செய்வாயாக” என்று பிராத்தனை செய்தார்கள். அப்பொழுது அங்கு வீற்றிருந்த “ நஜ்து” நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய நஜ்திலும் என்று சேர்ந்துச் சொன்னார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள்“இறைவா!எங்களுடைய ஷாமிலும் எங்களுடைய எமனிலும் பறகச் செய்வாயாக”என்று மீண்டும் கேட்டார்கள். மூன்றாம் முறையில் அங்கு – நஜ்தில்தான் குழப்பங்களும், வழிகேடுகளும் உண்டாகும்.இன்னும் அங்குதான் ஷெய்தானுடை கொம்பு வெளியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : இப்னு உமர் (றழி)
“கிழக்கிழிருந்து சில மனிதர்கள்தோன்றுவார்கள். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள்.எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. ஒரு கொம்பு இல்லாமற் போனால் மறுகொம்பு உண்டாகும்.கடைசியாக வரும் கொம்பு தஜ்ஜாலுடனிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலே எழுதிக்காட்டிய ஹதீஸ்களில் “நஜ்து” எனுமிடத்தில் தோன்றக்கூடிய ஒருவர் பற்றி நபி (ஸல்) அவர்கள் தீர்க்கதரிசனமாக ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் “நஜ்தில்” தோன்றக்கூடிய வழிகேடரின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும, அவருடைய தன்மைகள் பற்றி மேலே குறித்த ஹதீஸ்களில் சொல்லியிருக்கின்றார்கள்.
“நஜ்து” நாட்டில் தோன்றியவர்களில் மேலே கூறிய ஹதீஸ்களில் கூறப்பட்ட தன்மையுள்ளவர் யாரென்று மார்க்க அறிஞர்களும், மார்க்க வரலாற்றாய்வாளர்களும் ஆராய்ந்த வகையில் ஹிஜ்ரி (1111) ஆயிரத்து நூற்றுப்பதினொன்றில்“நஜ்தில்” பிறந்த முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்பாரைத் தவிர வேறெவரும் அங்கு தோன்றியதற்கு வரலாறில்லையென்று சொல்லியிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வபாத்தான காலத்திலிருந்து இன்றுவரை ஹதீஸ்களில் கூறப்பட்ட தன்மையுள்ளவர் “நஜ்து” நாட்டில் யார் தோன்றினார் என்று ஆராய்ந்தால் அப்துல் வஹ்ஹாப் உடைய மகன் முஹம்மது என்பவரைத் தவிர வேறு யாருமில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவிலிருந்து நன்கு தெளிவாகின்றது.
ஹிஜ்ரீ 1111ல் பிறந்த வழிகேடர்தான் இஸ்லாமிய சன்மார்க்கத்தில் பெரிய புரட்சியையும், பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், முஸ்லிம்களுக்கிடையில் பெரும் சன்டைகளையும், பொதுவாக இப்னு தைமிய்யஹ்வுடைய வழிகெட்ட கொள்கைகளையும் வஹ்ஹாபிஸத்தையும் ஏற்படுத்தினார்.
“நஜ்து” நாட்டில் இவரைத் தவிர சத்திய சன்மார்க்கத்தில் புரட்சியையும், வழிகேட்டையும் ஏற்படுத்தினவர் வேறுயாருமில்லை.
ஹிஜ்ரீ 1111ல் பிறந்த இவர்ஹிஜ்ரீ 1206ல் இறக்கும்வரை அறபு நாடெங்கும் பெரும் குழப்பங்களும், பிரச்சினைகளும் இருந்து வந்தன.
மேலே குறிப்பட்ட ஹதீஸ்களில் இந்த வழிகேடரின் அடையாளமும், இவரைப் பின்பற்றுபவர்களின் அடையாளமும் “அத்தஹ்லீக்”சிரைத்தலென்றும் நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சபிக்கப்பட்டவர்களின் சிரைத்தற்றொழில்
நபீ (ஸல்) அவர்கள் குறித்த வழிகேடர் “நஜ்து” நாட்டில் பிறந்த முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்பவர்தான் என்பதற்கு “அத்தஹ்லீக்” சிரைத்தலென்று அவர்கள் அடையாளம் கூறியிருப்பது மறுக்கமுடியாத ஆதாரமாகும்.
ஏனெனில், வழிகேடர் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் தனது கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை “முஷ்ரிக்” இணை வைத்தவர்களென்று கருதியிருந்ததால், அவர்களில் யாராவது தனது கொள்கையை ஏற்றுத் தன்னுடன் சேர்ந்து கொள்ள வந்தால் முதலில் தலை முடியைச் சிரைத்து விடுமாறு அவனைபணிப்பார். இது அவருடைய நிபந்தனைகளில் மிகப் பிரதானமான நிபந்தனையாகும்.
இதற்கு வழிகேடர் முஹம்மதும், அவரின் ஆதரவாளர்களும் கூறும் காரணமென்னவெனில் “ஷிர்க்” உடைய காலத்தில் முளைத்த முடியைக்களைந்து விட வேண்டுமென்பதாகும்.
வழிகேடர் முஹம்மத் தலை முடியைச் சிரைத்து மொட்டையடித்துக் கொள்ள வேண்டுமென்று ஆண்களுக்குக் கட்ளையிட்டதுபோல்பெண்களுக்கும் கட்டளையிட்டு வந்தார்.
ஒருசமயம் வழிகேடர் முஹம்மதுவின் கூலியாட்கள் தமது கொள்கையில் சேர்த்துக் கொள்வதற்காக பலாத்தாரமாக ஒரு பெண்ணைப்பிடித்து பிடித்து வந்து முஹம்மதுக்கு முன்னால் நிறுத்தினார்கள். அவர் தலை முடியைச் சிரைக்குமாறு அப்பெண்னைப்பணிந்தார்.
அதற்கவள் “நீ தலை முடியைச் சிரைக்குமாறு ஆண்களைப்பணிக்கின்றாய். அதற்குக் காரணமாகஅது ஷிர்க்குடைய காலத்தில் முளைத்த முடியென்றும் சொல்கிறாய். அதேபோல் பெண்களுக்கும் தலை முடியைச் சிரைக்குமாறு கட்டளையிடுகின்றாய். ஆனால் நீ சொல்லும் காரணத்தின்படி ஆண்கள் தமது தாடியையும் சிரைத்து விட வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டுமே! என்று கூறினாள். இக்கூற்றுக்கு பதிலலிக்க முடியாமல் அவ்வழிகேடர் விழிபிதிங்கித்தலைகுனிந்தார்.
வழிடேர் முஹம்மதும், அவரின் ஆதரவாளர்களும்தமது கொள்கையைப் பின்பற்றுவோர் அனைவரும் தமது தலை முடியைச் சிரைத்துவிட வேண்டும் என்று கூறுவதாலும், தலைமுடி களைவதை அவர்கள் பிரதான சட்டமாக வைத்திருப்பதனாலும்நபீ (ஸல்) அவர்கள் கூறிய வழிகேடர் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நபீ (ஸல்) அவர்கள் கூறிய “அத்தஹ்லீக்” சிரைத்தல் என்ற வார்த்தை இவரையும் இவருடைய வால்களையும் தான் காட்டுகிறது.
திருமதீனஹ் நகருக்கு கிழக்கேயிருக்கும் “நஜ்து” எனும் ஊரில் அன்று முதல் இன்றுவரை பல அறிஞர்களும், ஆலிம்களும் தோன்றியிருக்கின்றார்கள்.
அவர்களில் மார்க்கரீதியில் புரட்சியும், குழப்பமும் செய்தவர் இவரைத் தவிர வேறுயாருமில்லை.
இவர்தான் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என்ற திட்டத்தையும் ஏற்படுத்தினார். நஜ்து எனும் ஊரில்இப்படியொரு சிரைக்கும் திட்டத்தையேற்படுத்தியவர் இவரைத்தவிர வேறுயாருமில்லை.
இவரும் இவரது ஆதரவாளர்களும் ஏனையோர்களை “முஷ்ரிகீன்” இணை வைத்தவர்கள் என்று சொல்லி வந்ததால், இவர்களின் கொள்கையையேற்று இவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பு மொருவனுக்கும் அவனுடைய தலை முடியைச் சிரைத்து விடுமாறு கட்டளையிடுவார்கள்.
“நஜ்து” எனுமிடத்தில் வாழ்ந்தவர்களில் இவரையும், இவருடைய ஆதரவாளர்களையும் தவிர வேறு எவரும் சிரைக்கும் திட்டத்தையேற்படுத்தவில்லையாதலால் மேலே நான் எழுதிக்காட்டிய நபீ மொழிகளில் சொல்லப்பட்ட வழிகேடர் இவர்தான் என்பது திட்டமாகிவிட்டது.