Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 …

முஹம்மது நபியைக் குறை கண்டவரை முஸ்லிம்கள் ஏற்க முடியாது!

 
வழிகேடர் “இப்னு அப்தில் வஹ்ஹாபின்” நச்சுக் கருத்துக்கள் முஸ்லிம்களைப் புண்படுத்தக்கூடியவை!
 
இது வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் செய்த மாபெரும் மார்க்கத் துரோகமாகும்.
 
இந்த வழிகேடர் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறலாமென்று கூறியதோடு நின்று விடாமல் திருக்குர்ஆனிலிருந்து அவரவரின் அறிவுக்கும் சிந்தனைக்கு மேற்ற வாறு சட்டங்கள் நிறுவலாமென்று கூறினார்கள்.
 
இதனால் அவர்கள் தமக்கு விளங்கின மாதிரி யெல்லாம் திருக்குர்ஆனிலிருந்து சட்டங்கள் தயாரிக்கவும் தொடங்கினர்.
 
திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஒரு விஷயம் ஆகுமென்று ஒருவருக்கு விளங்கினால் அவர் அதை உடனேசொல்லி விடுவார். அவரும், ஏனையோரும் அதன்படி செயற்பட்டு விடுவார்கள்.
 
இன்னொருவருக்கு அதே வசனத்திலிருந்து ஆகாதென்று விளங்கினால் அவரும் உடனே அதைச் சொல்லி விடுவார். அதன் படி அவரும், அவருடைய சொல்லை நம்பினவர்களும் செயல்பட்டு வந்தனர்.
 
திருக்குர்ஆனுக்கு “முபஸ்ஸிரீன்” என்னும் திருமறை விரிவுரைகளான இமாம்கள் எழுதிய கருத்துக்களை அவர்கள் பார்க்கமாட்டார்கள். ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.
 
மத்ஹபுடைய நான்கு இமாம்கள் பற்றியும் அவர் குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள். நாலு இமாம்களும் இயற்றியுள்ள சட்டங்கள் பற்றி அவர்களிடம் பேசினால் அவர்களில் ஒரு விஷயமும் கிடையாது என சுருக்கமாகச் சொல்லி மழுப்பி விடுவார்கள்.
 
மத்ஹபுடைய நான்கு இமாம்களின் சிஷ்யர்கள் பற்றி இந்த வழிகேடர் கூறுகையில் “ளல்லூ வஅளல்லூ” தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்து விட்டார்கள் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள்.
 
இன்னும் மார்க்கம் ஒரேயொரு மார்க்கமாயிருக்கும் இமாம்கள் என்போர் அதை நான்காக்கி வைத்திருப்பது விந்தையான விஷயமென்றும் நாம் அல்லாஹ்வையும் றஸூலையும் தவிர வேறு யாருடைய சொல்லையும் கேட்கவோ பின் பற்றவோ தேவையில்லையென்றும் அடிக்கடி சொல்லிக்கொள்வார்.
 
வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கு மறுப்புக் கூறியவர்களில் அனேகர் ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த படியால் இப்னு அப்தில் வஹ்ஹாபும் அவர்களையே எதிர்த்து எச்சரித்து வந்தார்.
 
வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் தன்னிடம் ஒரு வரை விலக்கணம் வைத்திருந்தார். அதாவது எந்தவொரு விஷயம் தனது மனோ இச்சைக்கு இசைந்ததாக இருக்கின்றதோ அது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமாயிருந்தாலும் கூட அதுதான் சத்தியம் என்றும் எந்தவொரு விஷயம் தனது மனோ இச்சைக்கு மாறானதாக இருக்கின்றதோ அது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் இசைந்ததாக இருந்தாலும் அதுதான் அசத்தியம் என்றும் அவர் கணித்தும் கூறியும் வந்தார்.
 
இந்த வழிகேடர் நபி ஸல் அவர்களை மிகவும் தரக்குறைவாக கணித்து வந்தார். இவர் அவ்வாறு, கணித்ததற்கு காரணம் என்ன வெனில் நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதால் “ஷிர்க்” ஏற்பட்டுவிடுமென்று அவர் பயந்த்தேயாகும். இது அவருடைய அறியாமையே அன்றி வேறொன்றுமில்லை.
 
இவ்வழிகேடர் தனது பல நூல்களில் நபி (ஸல்) அவர்களைப்பற்றி குறிப்பிடும் பொழுது தரக் குறைவாகவே எழுதியுள்ளார். அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
 
நபிகளாரைகுறை காணும் நயவஞ்சகர் நஜ்தி 
 
நஜ்தி ஸாஹிபு நபி (ஸல்)அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘தாரிஷ்’ என்ற சொல்லை பிரயோகிப்பார்.சவூதி அரேபியாவில் கிழக்குப்பகுதியில் வாழ்பவர்கள் இச்சொல்லை ஒரு கூட்டத்திடம் செய்தி கொண்டு போகின்ற ஒருவனுக்கு உபயோகிப்பார்கள்.
 
ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒரு செய்தி கொண்டு போகின்றவரை அரபியில் “றசூல்” என்று சொல்லப்படும்.
 
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களிடம் சொல்பவர்களாக விளங்குவதால் ‘றசூல்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
 
திருக்குர்ஆனிலும் திருநபியின் நிறைமொழியிலும் நபி (ஸல்) அவர்கள் “றசூல்” என்ற சொல் கொண்டுதான அழைக்கப்பட்டுள்ளார்களேயல்லாமல்வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் சொல்வது போல் ‘தாரிஸ்’ என்ற சொல் கொண்டு அழைக்கப்படவில்லை.
 
ஏனெனில் ‘றசூல்’என்றசொல் தருகின்ற ‘தூதர்’என்ற அர்த்தம்’தாரிஸ்’என்ற சொல்லுக்கு இருந்தாலும் கூட இச்சொல் அவர்களுடைய வழக்கில் கீழ்த்தரமான விஷயங்களுக்கு தூது கொண்டு செல்லும் கீழ்த்தரமான ஒருவனுக்கு உபயோகிக்கப்பட்டது.
 
இந்த வழிகேடர் நபி ஸல் அவர்களை கீழ்த்தரமாகவும் தரக்குறைவாகவும் கணித்திருந்ததினால்தான் ‘றசூல்’ என்ற சொல்லைபாவிக்காமல் ‘தாரிஸ்’ என்ற சொல்லைப் பாவித்தார்கள்.
 
இது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவானவராக எடுத்துக் காட்டுவதற்கு வழிகேடர்நஜ்திஸாஹிபு கையாண்டு ஒரு பயங்கர சூழ்ச்சியும் நரித் தந்திரமும் ஆகும்.
 
முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்ற வழிகேடரை ஒரு வஹ்ஹாபி என்ற அளவுதான் மக்கள் கணித்துள்ளார்களே யன்றி அவர் எத்தகையவர் என்பதை சரியாக புரியாமல் இருக்கின்றார்கள்.
 
இதுவரை நான் சொல்லிவந்த அவருடைய அட்டூழியங்கள் மூலமும் இதன் பிறகு நான் சொல்லப் போகின்ற அவருடை ய அட்டூழியங்களின் மூலமாகவும் தான் அவர் எத்தகைய வழிகேடர் என்பதும் மாரக்கத் துரோகி என்பதும் தெரிய வரும்.
 
அவருடைய அட்டூழியங்களில் பின்வரும் விஷயமும் ஒன்றுதான்.
 
நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் காபிர்களுடன் செய்து கொண்ட “ஹுதைபிய்யஹ” ஒப்பந்தம் இஸ்லாத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் ஒப்பந்தமாகும்.
 
இவ்வொப்பந்தம் நபி ஸல் அவர்களின் தலைமையில் செய்யப்பட்ட ஒப்பந்தமாகையால் அதில் பொய், அநீதி, பாரபட்சம் போன்ற எவ்விதத்தில்லுமுல்லுகளும் இருக்கவில்லை, இருப்பதற்கு நியாயமுமில்லை. அது அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் பொறுத்தமான முறையில் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.
 
இவ்வொப்பந்தம் பற்றி வழிகேடர் நஜ்தி ஸாஹிபு குறிப்பிடுகையில் ” நான் ஹுதைபிய்யஹ் உடன் படிக்கையைப் பார்த்தேன் அதில் பொய் இருப்பதைக் கண்டேன்” எனக் கூறியுள்ளார்.
 
நபி (ஸல்) அவர்களைப் பொய்யர் என்று அல்லது அநீதியாளர் என்று வெளிப்படையாகச் சொன்னவனும், சூசகமாகச்சொன்னவனும்,மனதில் அவ்வாறு நினைத்தவனும் காபிர் ஆகிவிட்டான் என்று பிக்ஹுடைய இமாம்களான “புகஹாக்கள்”எழுதியுள்ளார்கள்.
 
நஜ்தி ஸாஹிபு இவ்வாறு சொன்னது மட்டுமின்றி தனது ஆதரவாளர்களையும் அவ்வாறு சொல்லுமாறு பணித்து வந்தார். இதற்கமைய அவர்கள் “ஹுதைபிய்யஹ் உடன் படிக்கைய்யில் பொய் உள்ளது” என்ற செய்தியை பகிரங்கப்படுத்தினர்.
 
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல் ஹுதைபிய்யஹ் உடன் படிக்கையில் ஒரு சில பொய்கள் உள்ளன என்று அவர் சொன்னதை வைத்துக் கொண்டு அவருடைய வால்களும் கூலிகளும் பல பொய்கள் என்று மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்தனர்.
 
அவ்வாறு இவர்கள் மிகைப்படுத்திச் சொன்னது நஜ்தி ஸாஹிபுக்குசொல்லொண்ணா மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் அவ்வாறு சொல்லித் திரிபவர்களை அழைத்து வாழ்த்துக் கூறி உட்சாகப்படுத்தினார்.
 
ஒரு சமயம் அவருடைய கூலிகளில் ஒருவன் பிரசங்கம் நிகழ்த்திய நேரம் தனது கையிலிருந்து தடியைக் காண்பித்து “அஸாய ஹாதிஹீ கைறுன் மின் முஹம்மத்” (எனது கையிலிருக்கும் இத்தடி முஹம்மதை விட சிறந்தது) என்று கூறினார்.
 
அவனிடம் காரணம் கேட்கப்பட்ட பொழுது “எனது கைத்தடியால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களை அடித்துக் கொள்ள முடியும். இத்தகைய பிரயோசனங்கள் இக்கைத்தடியில் இருக்கின்றன. எனினும் முஹம்மது மரணித்து விட்டார். அவரால் எவ்வித பிரயோசனமும் இல்லை. அவர் ஒரு ‘தாரிஷ்'(தூதன்) தான் அவர் வந்து போய்விட்டார். அவரின் கதை முடிந்த கதை.” என்று விளக்கமளித்தார்.
 
இவனுக்கு மறுப்பெழுதிய ‘ஸுன்னத் வல் ஜமாஅத்’ உலமாக்கள் இந்த வார்த்தைகளால் இவன் காபிராகி விட்டான் என திட்டவட்ட மாகக் கூறியுள்ளார்கள்.
 
இன்னும் இவருடைய மார்க்க விரோதங்களிலும் ,வழிகெட்ட கொள்கையிலும் உள்ளதுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை “மௌலானா = ஸெய்யிதுனா” என்றழைப்பது “ஷிர்க்” என்றுஇவர் சொல்லியிருப்பதும் ஆகும்.
 
ஒருவன் இன்னொருவனை “மௌலானா” என்றோ “ஸெய்யிதுனா” என்றோ அழைப்பானாயின் அவ்வாறு அழைத்தவன் காபிர் ஆகி விட்டான் என்று வழிகேடர் நஜ்தி ஸாஹிபு கூறியிருக்கிறார்.
 
“மௌலானா – ஸெய்யிதுனா” என்ற இரண்டு சொற்களும்”எங்கள் தலைவர்” என்று பொருள் வரும்.
 
இந்த நஜ்தி ஸாஹிபு அல்லாஹ்வை மட்டும்தான் அவ்விரு சொற்களைக் கொண்டு அழைக்கலாமென்று நம்பிக்கை உள்ளவராக இருந்தார். இதனால் அல்லாஹ் அல்லாத ஒருவனை அவ்வாறு அழைத்தல் “ஷிர்க்” இனை வைத்தலை ஏற்படுத்திவிடும் என்று கூறினார்.
 
இந்த வழிகேடர் திருக்குர்ஆனையும் திருநபியின் நிறைமொழியையும் சரியாக ஆராவில்லை என்றோ, அல்லது திருக்குர்ஆனை ஒரு தடவையாயினும் ஓதவில்லை என்றேதான் நாம் கூறவேண்டும்.
 
ஏனெனில் நஜ்திஸாஹிபுஒரு அறபி. அவர் மதீனஹ் நகரில் பல வருடங்களாக ஓதி உள்ளார். அறபு மொழியில் உள்ள திருக்குர்ஆனை ஓதும் பொழுது அதனுடைய அர்த்தம் மேலோட்டமாகவேனும் புரியாமற் போயிருக்காது.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி யஹ்யா (அலை) அவர்களைப் பற்றி கூறுகையில் “ஸெய்யித்” என்று அவர்களைக்குறிப்பிட்டுள்ளான்.
 
இன்னும் யூஸுப் ஸுலைஹாவின் வரலாற்றில் அவன் தனது படைப்புக்கு “ஸெய்யித்” என்ற சொல்லை உபயோகித்துள்ளான்.
 
ஒரு சமயம் நபி ஸல் அவர்கள் “அன்ஸார்” களைப் பார்த்து “கூமூ லிஸெய்யிதிகும்”(உங்களுடைய தலைவர்களுக்கு எழுந்து நில்லுங்கள்) என்று சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸில் நபி தோழர் ஹஸ்றத் சஃதிப்னு மஆத் (றழி) அவர்கள் ஸெய்யித் என்று நபி ஸல் அவர்களால் சொல்லப்பட்டுள்ளார்கள்.
 
அலீ (றழி) அவர்களின் அன்பு மகனும் நபி ஸல் அவர்களின் அருமைப் பேரருமான ஹஸன் (றழி) அவர்கள் பற்றிக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ” இன்னப்னீ ஹாதா ஸெய்யிதுன்” (எனது இந்த மகன் ஸெய்யித்)என்று கூறினார்கள்.
 
ஆதாரம் – புஹாரி பாகம் – 29
 
மேலே கூறப்பட்ட விபரங்களிலிருந்து அல்லாஹ் அல்லாதவர்களுக்கு “மௌலானா – ஸெய்யிதுனா” போன்ற சொற்களை உபயோகிக்கலாம் என்பது தெளிவாகிறது.
 
“மௌலானா – ஸெய்யிதுனா” என்ற இவ்விரு சொற்களும் “எங்கள் தலைவர்” என்ற ஒரே அர்த்தத்தை கொண்டதாக இருப்பதால் “ஸெய்யித்”என்று சொல்வதற்கு கூறிய ஆதாரங்களைக் கொண்டு “மௌலானா” என்று சொல்வது கூடும் என்பதும் புலனாகின்றது.
 
நபி (ஸல்) அவர்களின் வம்சத்தினர் உலகின் எக்கோணத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் ஸெய்யிதுகள், சாதாத்துமார்கள் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழிகேடர் நஜ்தி ஸாஹிபுவும்அவரின் கூலிகளும்தான் அவ்வாறு அழைக்கக் கூடாதுஎன்று கூறிவருகிறார்கள்.
 
இதுவரை வழிகேடர் நஜ்தி ஸாஹிபுசெய்த மார்க்க துரோகங்கள், அட்டூழியங்கள் போன்றவற்றில் ஒரு சிலதை மட்டும் மேலே எழுதியுள்ளேன்.
 
இன்னும் இவர் செய்த அராஜக மார்க்க துரோகங்களும், அட்டூழியங்களும் அநேகமிருக்கின்றன. அவை அவருக்கு இமாம்களால் மறுப்பாக எழுதப்பட்ட விரிவான நூற்களில் விளக்கமாக உள்ளன. மேலதிக விபரம் தேவையானோர் அந்நூல்களைப் பார்த்துக் கொள்ளவும்.
 
இறந்த ஆண்டு சபித்த இழுவுடையான். 
 
நஜ்தி ஸாஹிபு சஊதி அரேபியாவிலுள்ள புனித மதீனா நகரின் கிழக்கே உள்ள “நஜ்து” எனும் ஊரில் “தமீம்” வம்சத்தில் ஹிஜ்ரி 1111ம் ஆண்டு அறிஞர் அப்தில் வஹ்ஹாப் அவர்களுக்கு மகனாகப்பிறந்தார்.
 
திரு மதீனா நகரில் பல்லாண்டு கல்வி கற்று பல்வேறு பித்னாக்களையும், பித்தலாட்டங்களையும் செய்து விட்டு ஹிஜ்ரி 1206இல் இறந்து விட்டார்.
 
“பதா ஹலாகுல் ஹபீத்”بدا هلاك الخبيث என்ற வசனம் இவர் இறந்த ஆண்டைக் குறிக்கும்.
 
இதன் அர்த்தம் “கெட்ட வனின் அழிவு வெளியாகி விட்டது” என்பதாகும்.
 
இந்த வசனத்தில் வந்துள்ள அறபு எழுத்துக்களுக்கு “அப்ஜத்” கணித முறைப்படி கணக்கெடுத்தால் அவர் இறந்த ஆண்டு வரும்.
 
“பதா ஹலாகுல் ஹபீத்” என்ற வசனத்தில் 13 எழுத்துக்கள் உள்ளன. அவையும் அவைக்கான எண்ணும் பின் வருமாறு.
 
1. ب – பே – 02
 
2. د– தால் – 04
 
3. ا– அலிப் – 01
 
4. ه– ஹே – 05
 
5. ل– லாம் – 30
 
6. ا– அலிப் – 01
 
7. ك– காப் – 20
 
8. ا- அலிப் – 01
 
9. ل– லாம் – 30
 
10. خ – கே – 600
 
11. ب– பே – 02
 
12. ي– யே – 10
 
13. ث– தே – 500
 
மொத்தம் 1206 இதுதான் வழிகேடர் இறந்த ஆண்டு.
 
வழிகேடர் நஜ்தி ஸாஹிபு இறந்த பொழுது அவருக்கு நான்கு ஆண்குழந்தைகள் இருந்தனர். தந்தையின் மரணத்தின் பின் இவர்கள் வஹ்ஹாபிஸ வழிகேட்டைப் பரப்பினார்கள்.
 
இவர்கள் “அவ்லாதுஷ் ஷெய்க்” ஷெய்குடைய பிள்ளைகள் என அழைக்கப்பட்டார்கள். இன்னும் அவருடைய சந்ததிகள் அவ்வாறுதான் அவருடைய ஆதரவாளர்களினால் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
 
அவர்கள் அப்துல்லாஹ், ஹசன், ஹுஸைன், அலீ ஆகியோர்களாவர். அவரின் மூத்த மகன் தந்தை வழி சென்று வஹ்ஹாபிஸ வழிகேட்டைப் பரப்பும் பணியில் இறங்கினார்.
 
இவனுக்கு ஆண் மக்கள் பிறந்தனர். ஒருவன் சுலைமான், மற்றவர் அப்துர் றஹ்மான்.
 
சுலைமான் என்பவர் தந்தையை விட கொடியவனாக இருந்தான். இவன் ஹிஜ்ரி 1233ல் அரசர் இப்றாஹீம் பாஷா அவர்களால் கொலை செய்யப்பட்டான்.
 
அவனுடைய தம்பி அப்துர் றஹ்மானைக் கொலை செய்யாமல் “மிஸ்ர்” நாட்டுக்கு அரசர் அனுப்பி வைத்தார். அவன் சில காலம் அங்கு வாழ்ந்து விட்டு அங்கேயே இறந்து விட்டான்.
 
நஜ்து ஸாஹிபுடைய இரண்டாவது மகன் ஹஸன் என்பவன் தந்தையைப் போலவே வஹ்ஹாபிஸ சேவைகள் செய்து விட்டு மரணித்து விட்டான்.
 
இவனுடைய மகன் அப்துர் றஹ்மான் என்பவன் சில காலம் மக்காவில் நீதிபதியாக இருந்து விட்டு இறந்து விட்டான். இவனுக்கு அப்துல்லதீப் என்று ஒரு மகன் இருந்தான்.
 
நஜ்து ஸாஹிபுடைய மூன்றாவது மகன் ஹுஸைன் என்பவன் தனது சகோதரர்கள் போல் வஹ்ஹாபிஸப்பணி செய்து இறந்தான்.
 
நஜ்து ஸாஹிபுவின் நாலாவது மகன் பற்றிய தகவல் கிடைக்க வில்லை.
 
கொள்கையும் இரத்த பாசமும்
 
அறிஞர் அப்துல் வஹ்ஹாப் அவர்களும் மகன் சுலைமான் அவர்களும் “ஸுன்னத் வல் ஜமாஅத்”கொள்கையுடைய வர்களாயும், மற்ற மகன் முஹம்மத் வழிகெட்ட கொள்கையுடையவனாக இருந்தாலும் அவர்கள் தந்தையும் மக்களும்தான். அவர்களுக்கிடையில் இரத்த பாசம் நிச்சயமாக இருக்கவே செய்யும்.
 
எனினும் கொள்கை வேற்றுமை இவர்களுக்கிடையில் இரத்த பாசத்தை பறக்கச் செய்தது. தந்தை மகன் என்று பார்க்காமலும்வழிகேடன் முஹம்மதை எதிர்க்கத்தொடங்கினார்கள். அவனை கொண்று விடுவதற்கும் முயன்றார்கள்.
 
ஒரு சமயம் தந்தை அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது மகன் முஹம்மதை உரிமையோடழைத்து பதின் முறை புத்திமதி கூறியும் அவன் கேட்கவில்லை. அதேபோல் சகோதரன் சுலைமான் சொல்லியும் அவன் கேட்கவில்லை.
 
தான் கொண்டதே கொள்கை என்ற அடிப்படையில் தந்தை சொல் மதிக்காமல் சகோதரன் சொல் பேணாமலும் தனது கெட்ட தனிவழிப் போக்கில் போய்க்கொண்டிருந்தான்.
 
சகோதரனின் மார்க்க ரீதியாக அட்டூழியத்தை பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் கோபமுற்ற சகோதரன் சுலைமான் அவனைப் பகிரங்க விவாதத்துக்குஅழைத்து விவாதித்தார்.
 
ஒரு தடவை சுலைமான் வழிகேடன் முஹம்மதை அழைத்து இஸ்லாத்தின் “றுக்ன்” தூன் எத்தனை என்று கேட்டார். அதற்கவன் ஐந்து என்று பதில் கூறினான்.
 
அதற்கு சுலைமான் அவனை நோக்கி “உன்னிடம் இஸ்லாத்தின் தூன் ஆறல்லவா? ஏன் ஐந்து என்று சொல்கிறாய்?” என்று வினவினார்.
 
அதற்கவன் “நான் அவ்வாறு சொன்னதற்கான ஆதாரம் என்ன?” என்று திருப்பிக்கேட்டான்.
 
“உன்னைப் பின்பற்றாதவர்களெல்லாம் “முஷ்ரிக்” ​இணைவைத்தவர்களென்று சொல்கிறாயே, இது ஆறாவது தூணா? இல்லையா?” என்றுகேட்டார். அதற்கு அவன் பதில் கூற முடியாமல் தலை குனிந்து நின்றான்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments