தொடர்- 05 …
வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்!
வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர்.
இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது.
சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான்.
இதை கேட்ட சுலைமான் “ நீ சொல்வது போல் றமழான் மாத்ததின் ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் பேர் வீதம் முப்பது இரவுகளுக்கும் முப்பது இலட்சம் பேரும், இறுதி இரவான முப்பதாம் இரவுக்கு முந்திய இருபத்தொன்பது இரவுகளுக்கும் விடுதலையான இருபத்தொன்பது இலட்சம் பேரும் ஆக மொத்தம் ஐம்பத்தொன்பது இலட்சம் பேர்களையும் முப்பது நாட்களையும் கொண்ட றமழான் மாத ஒன்றில் நரகிலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்றான் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கவன் “ஆம்” என கூறிக்கொண்டான்.
வழிகேடன் முஹம்மது ஒப்புக் கொண்டபின் சுலைமான் பின்வருமாறு கூறலானார்.
‘உன்னை பின்பற்றாதவர்கள் அனைவரையும் நீ “முஷ்ரிக்” இணைவைத்தவர்கள் என்று கூறுகிறாய். உலகிலே இதுவரையும் உன்னைப் பின்பற்றியவர்களென்று ஒரு இலட்சம் பேர் கூட இல்லை. உன்னைப் பின்பற்றுவர்கள் மட்டும் தான் சுவர்க்கம் நுழைவர் என நீ சொல்கிறாய். இப்போது உன்னைப் பின்பற்றுவோர் ஒரு இலட்டசம் பேர் வைத்துக் கொள்வோம். அவர்கள் மட்டும்தான் சுவர்க்கம் நுழைகிறார்கள் என்றால் பாக்கியுள்ள ஐம்பத்தெட்டு இலட்சம் பேர்களும் யார்? அவர்கள் நரகிலிந்து வெளியேறியபின் எங்கே செல்வார்கள்?
“அவர்கள் அனைவரும் விசுவாசிகளாக இருந்ததினால்தானே நரகிலிருந்து றமழான் இரவுகளின் பொருட்டால்விமோசனமடைகிறார்கள்? நீ சொல்வது போல் உன்னைப் பின்பற்றாத அவர்கள் அனைவரும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களென்று வைத்துக் கொண்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? றமழான் மாத இரவுகளின் பொருட்டால் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களும் விடுதலையாவார்கள் என்றும் நீ சொல்கிறாயா? “முஷ்ரிகீன் இணைவைத்தவர்கள் நரகில் நிரந்தரமாகவே தங்கிவிடுவார்கள் என்றும்; இணைவைத்தலொன்றே இறைவனால் மன்னிக்கப்படமுடியாத மாபெரும் குற்றமாகுமென்றும் திருக்குர்ஆனும், திருநபியின் நிறைமொழியும் கூறிக் கொண்டிருப்பதால் நரகிலிருந்து விடுதலை பெறும் அனைவருமே விசுவிசிகளாகவே இருப்பர். என்பது நிரூபனமாகின்றதல்லவா?
“எனவே, உனது கூற்றுப்டி உன்னைப்பின்பற்றாத 58 இலட்சம் பேர்களும் முஷ்ரிக்குகள் அல்லவா? “முஷ்ரிக்குகள்” நரகிலிருந்து எவ்வாறு எவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள்?
அடுக்கடுக்கான –நியாய பூர்வமான அவரது வினாக்களை எதிர்கொண்ட வழிகேடன் முஹம்மத் பதில் கூற முடியாமல் வாயடைத்துத் தலை குனிந்தான்.
அண்ணனுக்கும் தம்பிக்குமிடையில் நடைபெற்ற அறிவுபூர்வமான மற்றொரு விவாதம் வருமாறு.
“நீ கூறி வருகின்ற கொள்கையை உனக்கு முன் யாராவது கூறியிருக்கின்றனரா?என அறிஞர் சுலைமான் கேட்டார்.
அதற்கவன் “ஆம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் கூறியுள்ளாரே என்றார்.
இப்னு தைமிய்யஹ்வைத் தவிரவேறு எவரேனும் கூறியிருக்கிறனரா? என அறிஞர் சுலைமான் மீண்டும் கேட்டார்.
“இல்லை” என வழி கேடன் இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறினார்.
அப்பொழுது அறிஞர் சுலைமான் “உனக்கு விசுவாசமான ஒருவர் உன்னிடம் வந்து, உன்னைக் கொலை செய்வதற்காக ஒரு படையினர் மலையின் மறு புறத்தே மறைந்து நிற்கின்றனர் என்று சொன்னால் அதை நீ நம்புவாயா? என்று கேட்டார்.
அதற்கவன் “நிச்சயமாக நம்புவேன்” என்றார்.
அவனது நம்பிக்கை உறுதிப்படுத்திக் கொண்ட அறிஞர் சுலைமான் “சரி அவனது பேச்சை நம்பிய நீ ஆயிரம் போர் வீரர்களை ஆயுதபாணிகளாக மலையின் மறுபுறத்துக்கு அனுப்பி வைத்தாய் என வைத்துக் கொள்வோம். அப்போர் வீரர்கள் அங்கு சென்று வந்து அங்கு படையுமில்லை. பட்டாளமுமில்லை. என்று கூறுகின்றனர். அந்த நம்பிக்கையாளன் சொன்னது பொய்யான தகவல் என்று சொல்கின்றனர். நீ எதை ஏற்பாய். ஆயிரம் போர் வீரர்களும் சொல்வதைக் கேட்பாயா? அல்லது ஒரேயொரு நம்பிக்கைக்குரியவர்என நீ மட்டும் கருதும் ஒருவன் சொல்வதை ஏற்பாயா? எனக் கேட்டார்.
அவரின் கேள்விக்கு “ஆயிரம் பேரின் கூற்றைத் தான் நம்புவேன். தனி நபரின் கூற்றைத் ஏற்க முடியாது”என்று வழிகேடன் முஹம்மத் பதிலளித்தான்.
அவனது பதிலைக் கேட்டு திருப்தியுற்ற அறிஞர் சுலைமான் அவனிடம் “நீ சொல்லி வருகின்ற புதிய கொள்கையை உனக்கு முன் சொன்னவர் இப்னு தைமிய்யஹ் மட்டும் தான் எனினும், இப்னு தைமிய்யஹ்வுக்கு முன்னர் தோன்றியவர்களும், பின்னர் தோன்றியவர்களும் அவருக்கு மாறாகத்தானே சொல்லியுள்ளனர். அது மட்டுமா? அவருக்குப் பின்னால் தோன்றிய தலை சிறந்த இமாம்களும், அறிஞர்களும் அவருக்கு எதிர்ப்பாக பல நூல்களையும் எழுதியிருக்கின்றனர்.
“இந்நிலையில் ஒரேயொரு இப்னுதைமிய்யஹ்வை நம்ப வேண்டுமா? அல்லது அவருக்கு மாறாகக் கருத்துக்கூறிய பல்லாயிரம் பேர்களை நம்ப வேண்டும்? எது நியாயம்? என்று கேட்டார்.
இதற்கும் அவனால் பதில் கூற இயலவில்லை. வழிகேடன் முஹம்மத் தலைகுனிந்து நின்றான்.
வஹ்ஹாபிஸ வழிகேடன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் புதிதாக ஏற்படுத்திய கொள்கைகள் பற்றிஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
சுருங்கக் கூறினால்; வஸீலத் தேடுதல், கப்றுகளை ஸியாரத் செய்தல், ஸியாரத் செய்வதற்காகப் பிரயாணம் செய்தல், மவ்லித் கத்தம்- பாதிஹஹ்- தல்கீன் போன்றவை ஓதுதல், கந்தூரி கொடுத்தல், தலாயிலுல் கைறாத் எனும் ஸலவாத் ஓதுதல், வெள்ளிக்கிழை ி் ஸலவாத் ஓதுதல் ் பிரமைஇரவில் றாதிப் செய்தல், பாங்கு சொல்வதற்கு முன் அல்லது பின் ஸலவாத்துச் சொல்லுதல், கொடியேற்றுதல், கப்றை முத்தமிடுதல் , “ கஸீத்துல் புர்தஹ் கஸீததுல் வித்ரிய்யஹ் என்பன ஓதுதல், கப்றை போர்வையால் போர்த்துதல், மீலாத் விழா நடத்துதல் என்பன போன்ற விஷயங்கள் இஸ்லாமிய சன்மார்க்கத்திற்கு முரணானவை என்றும் “ஷிர்க்” கானவை என்றும் அவன் சொன்னான்.
இந்த வழிகேடனைப் பின்பற்றி இவனுடைய வழி கேட்டைப் பரப்புவதற்காகப் பசுத்தோல் போர்த்திய புலிகளாக பல இயக்கங்களின் பெயரில் வருபவர்கள் அனைவரும் வழி கேடன் இப்னு அப்தில் வஹ்ஹாபின் சிஷ்யர்ளேயாவர். இவர்கள் வழிகேடர்களும் வழிகெடுப்பவர்களும் என்பதில் ஐயமில்லை
கேள்வி:-
இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான கருத்துக்களை கூறி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்த நஜ்திசாஹிபுவை பிரசித்தி பெற்ற தலை சிறந்த இமாம்களும், அறிஞர்களும் பகிரங்கமாக எதிர்திருந்தும்கூட மக்கள் அவர்களுடைய கருத்துக்குச் செவிசாய்க்காமல் வழிகேடரைப் பின்பற்றி அவர் வழியிற் சென்றதற்கான காரணமென்ன?
பதில்:-
நஜ்தி சாஹிபு வழி கேடராக இருந்தாலும் மிகக் கூரிய புத்திள்ளவராகவும், நரித்தந்திரமுடையவராகவும் இருந்தார் என ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
அவர் சொல்வது பகிரங்க வழிகேடாக இருந்தும், அவரை உலமாக்கள் எதிர்த்திருந்தும் மக்கள் அவரைப் பின்பற்றக் காரணம் அவரின் கூரிய புத்தியாலும், நரித்தந்திரத்தாலும் ஏற்பட்ட அவரின் நடவடிக்கைகளேயாகும்.
ஏனெனில் அவர் தனது வழிகேட்டைப் பரப்புவதை விட மக்களை கவர்ந்து கொள்வதிலேயே முழுக்க கவனமெடுத்து வந்தார். இதுதான் அவர் செய்த மிகத் தந்திரமான வேலையாகும்.
தனது கொள்கையைப் பரப்புவதை விட மக்களை கவர வேண்டுமென்று அவர் முடிவெடுத்தார். இதற்கு காரணமென்னவெனில் தான் கூறும் கொள்கை புதிய கொள்கையாகியிருப்பதால், பழையகொள்கையில் ஊறிப்போய் இருப்பவர்கள் தான் கூறும் புதிய கொள்கையை ஜீரணிக்கமுடியாமல் எதிர்க்கத் தொடங்கி விடுவார்களென அவர் கருதியதேயாகும்.
இதனால் மக்களைக் கவர்வதற்காக அவர் எடுத்த நடவடிக்கை யாதெனில் கிராமப்புறங்களுக்குச் சென்று மார்க்க அறிவும், உலக அறிவுமற்ற பாமரர்களைக் கண்டு அவர்களுடன் தேனையொத்த வார்த்தைகள் கொண்டு உரையாடி முதலில் அவர்களைத் தொழுகைக்கு அழைத்தார்.
அவருடைய இனிமையான பேச்சால் கவரப்பட்ட பாமரர்கள் நல்ல விஷயத்துக்கு அழைக்கும் வரை ஆதரிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் அவரை அணுகி அவருக்கு ஆதரவு வழங்கினர்.
தனது தவறான கொள்கையை வெளிப்படுத்தாமல் அந்த நஞ்சை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தன் பக்கம் மேலும் மக்களை நெருங்கச் செய்வதற்காக ஜூம்அஹ் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற விஷயங்களைக் கடைப்பிடிக்குமாறும், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை போன்ற தீயசெயல்களை விட்டு விடுமாறும் போதித்து வந்தார்.
இவர் தனது வழிகேட்டை மறைத்துக்கொண்டு நல்ல விஷயங்களை மட்டும் மக்கள் மத்தியில் சொல்லி முதலில் அவர்களை தன் வசப்படுத்திக் கொண்டான்.
இவ்வாறு மக்களைக் கவர்ந்து தானெதைச் சொன்னாலும் அதையவர்கள் நம்பக் கூடிய நிலையை ஏற்படுத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தனது வழி கேடான கொள்கையை அவர்களிடம் சொல்லத் தொடங்கினார்.
நாட்டுப்புற மக்கள் ஒன்றும் தெரியாதவர்களாயிருந்த காரணத்தாலும், சிந்திக்குமாற்றல் இல்லாதவர்களாக இருந்ததன் காரணத்தாலும், அவர் சொல்வது சரியா பிழையா என பகுத்தறியும் ஆற்றல் அவர்களுக்கு இல்லாததினாலும் அவ்ழிகேடர் சொல்வதையெல்லாம் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள்.
வழிகேடர் நஜ்தி ஸாஹிபு மக்களைத் தன்வசப்படுத்துவதற்கு கையாண்ட உபாயம் கிராமப் புறத்தில் வாழ்ந்த ஒன்றுமறியாத “அவாம்” பாமரர்களை தன் வசப்படுத்தியதேயாகும்.
இவர் படித்தவர்களையும், சிந்தனையாளர்களையும், பட்டணத்தில் வாழ்ந்தவர்களையும் முதலில் அணுகிஇருந்தால் அவர் இந்தஅளவு முன்னேற்றம் கண்டிருக்க மாட்டார். மாறாக அவரை அவர்கள் முளையிளேயே கிள்ளியெறிந்திருப்பார்கள்.
“அவாம்” என்னும் பாமரர்கள்குறிப்பாக கிராமப் புறங்களில் வாழும் பாமரர்கள் ஒருவனின் உடலைக் கொண்டும், உடையைக் கொண்டும் அவனுடைய பேச்சுத் திறனைக் கொண்டும்தான் அவனின் அறிவை எடை போடுகின்றனர்.இது படிப்பறிவற்ற கிராமப் புறமக்களின் வழக்கமாகும்.
“அன்னாஸ் பில்லிபாஸ்” என்று அறபியில் ஒரு பல மொழி யுண்டு. உடையை கொண்டுதான் மனிதர்கள் எடைபோடப்படுகின்றனர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
மோசமான வேசம் நாசமானது வேதம்
ஒன்றுமே தெரியாத ஒரு முழு மடையன் அடர்ந்த தாடியும் பெரிய தலைப் பாகையும், நீண்ட ஜுப்பாவும், ஒருகையில் நீண்ட தஸ்பீஹும், மறுகையில் அஸாவும் எடுத்துக் கொண்டால் போதும்.
இவனின் வேஷத்தைக் கொண்டு இவனைப் பெரிய அல்லாமஹ் என்றும், அறஞர் திலகம் என்றும், இவனுக்குள்தான் குர்ஆன் ஹதீஸ் எல்லாம் அடங்கியுள்ள தென்றும் “அவாம்” பாமரர்கள் கணித்து விடுகின்றனர்.இத்தனைக்கும் அவன் முழு மடையன் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த அவாம்கள் “சூரத்” உருவத்தில் கோலத்தில் மயங்கி விடுகிறார்கள்.
இதற்கு மாறாக இமாம் புஹாரி, இமா ஷபிஈ போன்ற மார்க்க ஞானமும், இறைஞானமும் நிறையப் பெற்ற ஒரு இமாம் சாதாரண உடையில் இருக்கும் பொழுது அவரை ஒன்றும் தெரியாத முழு மடையனென்று கணித்து விடுகின்றனர். இது பாமர மக்களின் நிலை.
வழிகேடர் நஜ்தி ஸாஹிபு பாமர மக்களைக் கவரும் வழியைத் தெரிந்து வைத்திருந்ததால் தனது உடல் வேஷத்தைக் கொண்டும், தேனொழுகும் தெவிட்டாத வார்த்தைகளைக் கொண்டும் பாமர மக்களை முதலில் கவர்ந்துதனக்கென்று பெரும் கூட்ட மொன்றைத் தயார் செய்த பிறகுதான் தனது வழிகேட்டைத் தொடங்கினார்.
இவர் ஒரு பகிரங்க வழிகேடராயிருந்தும் இவரைப் பல அறிஞர்கள் எதிர்த்திருந்தும் இவரின் பக்கம் மக்கள் திரும்பக் காரணம் பாமர மக்களைத் திருப்பக் கையாண்ட நரித்தந்திர நடவடிக்கை அணுகு முறையும் தரித்துக் கொண்ட வேஷமுமேயாகும்.
“அவாம்” எனும் பாமர மக்கள் ஒருவனின் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அறிவிழந்து ஏமாந்து வழிகேட்டையடையும் நிலை தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபின் வெளிவேஷத்தைக் கண்டு மக்கள் அன்று ஏமார்ந்தது போலவே இன்றும் ஏமாறுவோர் நம்மத்தியில் இருக்கின்றார்கள். அறிவும் நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள காலமாக இக்காலமிருந்தும் பாமர மக்களின் இப்பழங்கால நிலை மாறவே இல்லை.
மார்க்க அறிவோ, இறை ஞானமோ அறவேயில்லாதஅறபு நட்டிலே மலசல கூடம் கழுவுதல், பாதைச் சுத்திகரிப்பு வேலைகளைச் செய்யும் ஒரு அறபி மாயவலயில் அகப்பட்டு இலங்கைக்கு வரும் போது அவனுடைய தாய் நாட்டின் தேசிய உடையில் நீண்ட ஜுப்பாவும் தலையில் வெள்ளைச் சால்வையும் அதற்கு மேல்”இகால்” எனும் கறுப்பு வளையமும் அணிந்து கையில் நீண்ட தஸ்பீஹும் எடுத்து வருகின்றான்.
இந்த உடையமைப்பு அறபு நாடுகளைப் பொறுத்த வரையில் ஆலிமும் ஜாஹிலும் ஆண்டியும் அரசனும் முதலாளியும் தொழிலாளியும் அணியும் தேசிய உடையாகும். இந்த உடையமைப்பானது நமது இலங்கையை பொறுத்தவரை உலமாக்களும், ஷெய்குமார்களும் அணியும் உடையாக மக்களால் கணிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த உடையமைப்பில் அறபு நாட்டிலிருந்து வருகின்ற ஒரு பாமரனை” குர்ஆனும், ஹதீஸும் தெரியாத ஜாஹிலை மடையனை இங்குள்ள பாமர்ரகளும், படித்தவர்களில் ஒரு சிலரும் எல்லாம் கற்றறிந்த மகா மார்க்க மேதை என்றெண்ணி அவனுடைய கையிலும், காலிலும் விழுந்து முத்தமிடுகின்றனர். அவன் சாப்பிட்டு கைகழுவிய நீரில் “பறகத்” அருள் உண்டென எண்ணி அதை பகிதிரசமாகச் சுவைத்து அருந்துகின்றனர். அவனுக்கு கை, கால், பிடித்து விடுகின்றனர். இத்தனையும் போதாதென்று பள்ளிவாயளுக்கு அவனை அழைத்துச் சென்று மக்கள் மத்தியில் எழுந்து நின்று நல்லுரையாற்றுமாறும் அந்த மடையனைக் கேட்டுக் கொள்கின்றனர்.
அவனோ சாதாரணமாகப் பேசுவதற்குக் கூட தெரியாதவன். அறபு நாட்டில் “பலதிய்யஹ்” பட்டினசபை, நகர சபை போன்றவற்றில் மல கூடம் கழுவுதல் போன்ற வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாமரன்.
எனினும் இந்த மடையர்களெல்லாம் தன்னை ஒருபெரும் அறிவாளியென்று கருதி இவ்வாறெல்லாம் செய்யும் போது தனக்கு எதுவும் தெரியாது எனச்சொன்னால் தனது ஜுப்பாவுக்கும், தலைப் பாகைக்கும் கௌரவமில்லாமற் போய்விடுமென்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் ஹதீஸ் என்று கூறித் தானும் வழிகெட்டு இருப்பவர்களையும் வழிகெடுத்து விட்டுச் செல்கின்றான்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றவர்கள் இத்தகைய ஆசாமிகள்தான் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
எனவே ஒருவனின் உடலையும், உடையையும் கண்ணுற்று ஏமாந்து வழிகேட்டின் பக்கம் போகாமல் அத்தகையவனைத் துருவி ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அவனைப் பின் பற்ற வேண்டும். என்பதைக் குறிப்பாக பாமரர்கள் படிப்பறிவற்ற ஜனங்கள் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
இதில் அதிசயமென்னவெனில் அறபு நாட்டிலிருந்து மக்களை மடையர்களாக்குவதற்காக இங்கு வருகின்ற முழு மடையர்களின் உடலையும், உடையையும் கண்டு அறபுக் கல்லூரிகளில் படித்துக் கொடுக்கின்ற “ஹஸ்றத்” மார்களிற் சிலர் கூட ஏமார்ந்து போவதும் அம்மடையர்களை விலையுயர்ந்த பென்ஸ் லான்ஸர் போன்ற கார்களில் ஏற்றிக் கொண்டு சுற்றித்திரிவதுமாகும்.
முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்னும் நஜ்தி சாஹிபு இஸ்லாத்திற்கு முரணான பல கருத்துக்களைக் கூறினாலும் அவருடைய கருத்துக்கள் யாவும் நான்கு அடிப்படைக்குள் அடங்கியதாகவே இருக்கும்.
01 அல்லாஹ்வை அவனுடைய சிருஷ்டிக்கு ஒப்பாக்குதல். தஷ்பீஹுல்லாஹி பிகல்கிஹி” என்று அறபியில் கூறப்படும்.
02 அல்லாஹ் றப்பாக இருப்பதையும், இலாகாக இருப்பதையும் தவ்ஹீத் செய்தல் இது “தவ்ஹீதுல் உலாஹிய்யத் வர்று பூபிய்யத்”என்று அறபியில் சொல்லப்படும்.
03 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தாதிருத்தல் இது “அதமு தவ்கீரின் நபிய்யி” எனப்படும்.
04 ஹிஜ்ரி 500க்குப் பின்னுள்ள முஸ்லிம்கள் முஃமின்கள் அனைவருமே காபிர்கள் எனக் கூறுதல். இது “தக்பீறுல் முஸ்லிமீன்” என்று கூறப்படும்.
நஜ்து சாஹிபுவின் எந்தக்கூற்றாக இருந்தாலும் அது மேற்குறிப்பிட்ட இன்னான்கு அடிப்படைகளில் ஒன்றிலடங்கினதாவே இருக்கும்.
இன்னான்கு அடிப்படைகளிலும் “இப்னுதைமிய்யஹ்” என்பவரையே முழுக்க முழுக்க வழிகேடர் நஜ்தி சாஹிபு பின்பற்றியுள்ளார்.
இப்னு தைமிய்யஹ் நஜ்தி சாஹிபை விட அறிவும், ஆராய்ச்சியும் கூடியவர். நன்கு படித்த திறமைமிக்கவர்.அவர் இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானவராக இருந்தது அவரின் தலை விதியேயாகும்.
இவர் (இப்னு தைமிய்யஹ்) மேலே கூறப்பட்ட நான்கு அடிப்படைகளில் முதலாம் அடிப்படைக்கு “கறாமிய்யஹ்” எனும் வழிகெட்ட கூட்டத்தையும், ஹன்பலி மத்ஹபைபின்பற்றியவர்களில் “முஜஸ்லிமஹ்” எனும் சடவாதி களையும் பின்பற்றியுள்ளார்கள்.
இவர் இரண்டாம் அடிப்படைக்கு இவருக்கு முன் வந்த எவரையும் பின்பற்றவில்லை. எனினும் இந்த இரண்டாவது அடிப்படையைத்தானாகவே கற்பனை செய்து கற்பித்துக் கொண்டார்.
இவ்வாறு கற்பனை செய்து ஏற்படுத்திக் கொண்ட இரண்டாவது அடிப்படையிலிருந்து தான் இவரின் மூன்றாவது அடிப்படை பிரிந்து வருகின்றது.
இவர் தனது நாலாவது அடிப்படையில் மேலே கூறிய “கறாமிய்யஹ் முஜஸ்லிமஹ்” என்னும் இரு கூட்டங்களையும் “ஹுலூலிய்யஹ்” எனும் வழிகெட்ட கூட்டத்தையும் பின்பற்றினர்.
எனவே வழிகேடர் நஜ்தி சாஹிபு தனக்கு முன் வாழ்ந்த இப்னு தைமிய்யஹ் என்ற வழிகேடரைத்தான் முழுக்க முழுக்க பின் பற்றி வஹ்ஹாபிஸத்தை ஈன்ரெடுத்தார் என்பது தெளிவாகிவிட்டது.
(முற்றும்)
==**==**==**==**==**==