அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் ஈழத்தின் சொற்கொண்டல், ஷம்ஸுல் உலமா, அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அன்னவர்களால் தொகுக்கப்பட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” நூல் அறிமுக விழாவும், காத்தான்குடி- 5 அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியில் கல்வி கற்று “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டம் பெற்று வெளியேறும் உலமாஉகளுக்கான “17வது மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டமளிப்பு விழாவும் கடந்த 11.09.2020 (வெள்ளிக்கிழமை) இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்பு நிகழ்வும், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து வான்மறை மறுக்கு வஹ்ஹாபிஸம் நூல் மாதிரி வடிவம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வும், அல் ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் மஸார் தரிசன நிகழ்வும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ MSA. ஷாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் “கிறாஅத்”துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொறியியலாளர் MM. மன்ஹல் அவர்களினால் தலைமையுரையும் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்களினால் நூல் அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து ஷம்ஸ் டிவி குழுவினரால் தயாரிக்கப்பட்ட நூலாசிரியருக்கான வாழ்த்துச் செய்தியின் காணொலி திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அதிதிகளுக்கு அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பொற்கரங்களால் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” நூல் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் அவர்களினால் நூல் விமர்சன உரையும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இறைஞானப் பாடகர் MFM. பிஹாம் அவர்களினால் இஸ்லாமிய கீத நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன அவர்களினால் சிறப்புரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கௌரவ முன்னால் அமைச்சர் பஷீர் ஷேகு தாஊத் அவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுக்காக வருகை தந்திருந்த அதிதிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து “17வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழா” நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் இம்முறை “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டம் பெற்று வெளியேறும் 10 மௌலவீமார்களுக்கான நற்சான்றிதழ் அதி சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியேறும் மௌலவீமார்கள் சார்பில் மௌலவீ HM. அப்துர் றஷீத் றப்பானீ அவர்களினால் கன்னி உரையும், அவர் எழுதிய “அல் அஹ்காமுஷ் ஷர்இய்யஹ்” நூல் ஷெய்குனா அன்னவர்களுக்கும், அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி உஸ்தாதுமார்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்று இறுதியாக அதிபர் MACM. நியாஸ் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
இந்நிகழ்வில் சங்கை்குரிய உலமாஉகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பஷீர் ஷேகு தாஊத் அவர்களும், கௌரவ ஸெய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களும், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறீ அவர்களும், காத்தான்குடி நகரசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஜனாப் முபிஸால் அபூபக்கர், Mr. சுமேத வீரவர்த்தன அவர்களும் மற்றும் கல்விமான்கள், ஊடகவியளாளர்கள் உற்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.