தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தேள்:
இது விடம் – விஷம் நிறைந்த ஓர் உயிரினம். இதில் பல்வகை நிறமுள்ளதும், பல்வகை உடலமைப்புள்ளதும் உண்டு.
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «دَخَلَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي، فَقَامَ إِلَى جَنْبِهِ، فَصَلَّى بِصَلَاتِهِ، فَجَاءَ عَقْرَبٌ حَتَّى انْتَهَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ تَرَكَتْهُ، فَذَهَبَتْ نَحْوَ عَلِيٍّ، فَضَرَبَهَا بِنَعْلِهِ حَتَّى قَتَلَهَا، فَلَمْ يَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهَا بَأْسًا»
ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்த நேரம் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் நின்று அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். அப்போது அங்கு வந்த ஒரு தேள் நபீ அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் அருகில் போன போது அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கம் வந்தது. அலீ அவர்கள் தங்கள் பாதணியால் அடித்து அதைக் கொன்றார்கள். அதைக் கொன்றதை பெருமானார் ஆட்சேபிக்கவில்லை.
இதன் மூலம் தேளைத் தேடிச் சென்று கொல்லாமல் மனிதர்கள் வாழுமிடத்திற்கு வந்தால் அதைக் கொல்வது ஆகுமென்பது தெளிவாகின்றது.
ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத்
அறிவிப்பு: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா
عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتَلَ عَقْرَبًا وَهُوَ يُصَلِّي»
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு தேளை அடித்துக் கொன்றார்கள்.
ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தப்றானீ
அறிவிப்பு: முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அபீ றாபிஃ
عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَدَغَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقْرَبٌ وَهُوَ فِي الصَّلَاةِ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الْعَقْرَبَ، مَا تَدَعُ الْمُصَلِّيَ وَغَيْرَ الْمُصَلِّي، اقْتُلُوهَا فِي الْحِلِّ وَالْحَرَمِ»
ஆயிஷா நாயகி அறிவிக்கின்றார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தொழுதுகொண்டிருந்த வேளை அவர்களைத் தேள் தீண்டியது. அப்போது, அல்லாஹ் தேளை சபிப்பானாக! அது தொழுகின்றவனையும் விடாது. தொழாதவனையும் விடாது. ஆகையால் அதை “ஹறம்” எல்லையிலும், அதற்கு வெளியேயும் கொன்று விடுங்கள் என்று பெருமகனார் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: ஸுன்ன இப்னு மாஜஹ்
அறிவிப்பு: ஆயிஷா நாயகி.
روى الحافظ أبو نعيم فى تاريخ إصبهانَ والمستغفري فى الدعوات والبهيقي فى الشُّعَب عن علي رضي الله عنهم قال ‘ لَدَغَتِ النَّبيَّ عقربٌ وهو فى الصّلاة، فلمّا فَرَغَ من صلاته قال لعن الله العقرب ما تَدَعُ مصلّيا ولا غيرَه، ولا نبيّا ولا غيره، إلّا لَدَغَتْهُ وَتَنَاوَلَ نَعلَه فقتلها به، ثمّ دعا بماءٍ ومِلحٍ فجعلَ يمسحُ عليهما ويقرأ قل هو الله أحد والمعوِّذتين،
அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்த நேரம் அவர்களை ஒரு தேள் கடித்தது. தொழுது முடிந்த பின், அல்லாஹ் தேளை சபித்து விடுவானாக! அது தொழுகின்றவனையும் விடாது. தொழாதவனையும் விடாது. நபீயையும் விடாது. நபீ அல்லாதவரையும் விடாது. எவராயினும் அவரைத் தீண்டவே செய்யும் என்று தங்களின் செருப்பால் அதை அடித்துக் கொன்றார்கள். பின்பு நீரும், உப்பும் வரவழைத்து அவ்விரண்டைக் கொண்டும் தேள் கொட்டிய இடத்தில் தடவி குல்ஹுவல்லாஹ், குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊதுபிறப்பின்னாஸ் ஆகிய மூன்று சூறாக்களையும் ஓதினார்கள். அதாவது ஓதித்தடவினார்கள்.
ஆதாரம்: அல்ஹாபிள் அபூ நுஐம் பைஹகீ
அறிவிப்பு: அலீ றழியல்லாஹு அன்ஹு
விஷமுள்ள எதுவாயினும் மேற்கண்டவாறு செய்யலாமென்று நான் கருதுகிறேன். இது எனது கருத்து.
وفى تاريخ نيسابور عن الضّحّاك بن قيس الفَهْرِي قال: قام رسول الله صلّى الله عليه وسلّم من اللّيلة يَتَهَجَّدُ، فَلَدَغَتْهُ عقربٌ فى إصبعه، فقال رسول الله صلّى الله عليه وسلّم لَعَنَ الله العقرب ما تكادُ تَدَعُ أحدا، ثمّ دعا بماء فى قَدح وقرأ عليه قل هو الله أحد ثلاث مرّات، ثمّ صبّه على إصبعه، ثمّ رؤي بعد ذلك على المنبر عاصبًا إصبعَه من لَدْغة العقرب،
ளஹ்ஹாக் இப்னு கைஸ் பின்வருமாறு கூறுகிறார்கள். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “தஹஜ்ஜுத்” வணக்கத்திற்காக இரவில் எழுந்தார்கள். அவ்வேளை அவர்களின் கால் விரலில் தேள் கடித்தது. அப்போது அவர்கள் அல்லாஹ் தேளை சபித்துவிடுவானாக! அது ஒருவரையும் விட்டு வைக்காது என்று அருளினார்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவருமாறு கூறி அதில் குல்ஹுவல்லாஹ் அத்தியாயத்தை மூன்று தரம் ஓதி அந்த நீரை தேள் கடித்த விரலில் ஊற்றினார்கள். அதன் பிறகு அந்த விரலில் “பென்டெஜ்” துணியால் கட்டியவர்களாக “மின்பர்” பிரசங்க மேடையில் நின்றார்கள்.
ஆதாரம்: தாரீகு நைஸாபூர்
அறிவிப்பு: ளஹ்ஹாக்
فى تاريخ شيخنا اليافعي رحمه الله تعالى فى حوادثَ سنة تسعٍ وخمسمأة، ذكر أنّ بعض الملوك قال له مُنَجِّمُوه إنّه يموت فى السّاعة الفلانيّة فى اليوم الفُلانيّ فى الشّهر الفلانيّ مِن سنةِ كذا، مِن عقربٍ تلدغُه، فلمّا كانت الساعة المذكورة تجرّد من جميع ثِيابِه، سِوَى ما يستُرعورتَه وركب فرسا بعد أن غسله ونظَّفَه وسَرَحَ شَعرَه ودخل به البحرَ، حَذَرًا ممّا ذكر له مُنجّموه، فبينما هو كذلك عَطِسَتِ الفرسُ، فخرجَ من أنفه عقربٌ فلدغته فمات، فما أغناه الحذرُ عن القدر،
இமாம் யாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “தாரீக்” என்ற நூலில் ஹிஜ்ரீ 509ம் வருடம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கூறியுள்ளார்கள்.
ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். சாத்திர காரர்களும், குறி சொல்பவர்களும் சேர்ந்து அரசனிடம் சென்று அரசே! நீங்கள் இன்ன ஆண்டில், இன்ன மாதத்தில், இன்ன நாளில், இன்ன நேரத்தில் ஒரு தேளால் தீண்டப்பட்டு மரணிப்பீர் என்று கூறினார்கள்.
அவர்களின் செய்தி கேட்டு பயந்த அரசன் அந்த நிகழ்விலிருந்து தான் தப்பிக் கொள்வதற்காக சில ஏற்பாடுகள் செய்தான்.
சாத்திர காரர்களும், குறி காரர்களும் சொன்னது போல் குறித்த நாள் வந்த போது தனது குதிரையை தயார் செய்யுமாறு படைகளைப் பணித்தான். அவர்கள் அக்குதிரையை “செக்” பண்ணி சோதித்து, ஏதாவது விசமுள்ள உயிரினம், தேள் உள்ளதா என்று ஆய்வு செய்து, குதிரையை கழுவிச் சுத்தம் செய்து, அதன் முடிகளையும் ஆய்வு செய்து தயார் படுத்தினார்கள்.
அரசன் தனது உடைகளில் தேள் இருக்கலாமென்று அதையும் சோதனை செய்து, அனைத்து உடைகளையும் அகற்றி தனது மானத்தை மறைக்கும் அளவு மட்டும் உடை உடுத்து தயாரானான். தேளுக்குப் பயந்து இத்தனை ஒழுங்குகளும் செய்து குதிரையில் கடலில் இறங்கினான்.
நடந்தது என்ன? குதிரை ஒரு தரம் தும்மியது. அவ்வளவுதான். அதன் மூக்கிலிருந்த ஒரு தேள் வெளியாகி அரசன் மீது பாய்ந்து அவனைத் தீண்டியது. அரசன் அவ்விடத்திலேயே உயிர் துறந்தான். மரணப் பிடியிலிருந்து எவராலும் தப்ப முடியாதென்பதற்கு இந் நிகழ்வு மறைக்கவும், மறக்கவும் முடியாத ஒரு சான்றாகும்.
عن معروف قال: بلغنا أن ذا النون المصري خرج ذات يوم يريد غسل ثيابه، فإذا هو بعقرب قد أقبل عليه كأعظم ما يكون من الأشياء، قال: ففزع منها فزعا شديدا واستعاذ بالله منها فكفى شرها فأقبلت حتى وافت النيل، فإذا هي بضفدع قد خرج من الماء فاحتملها على ظهره وعبر بها إلى الجانب الآخر، فقال ذو النون: فاتزرت بمئزري ونزلت في الماء ولم أزل أرقبها إلى أن أتت إلى الجانب الآخر فصعدت، ثم سعت وأنا أتبعها إلى أن أتت شجرة كثيرة الأغصان كثيرة الظل، وإذا بغلام أمرد أبيض نائم تحتها وهو مخمور، فقلت: لا قوة إلا بالله أتت العقرب من ذلك الجانب للدغ هذا الفتى، فإذا أنا بتنين قد أقبل يريد قتل الفتى فظفرت العقرب به ولزمت دماغه حتى قتلته ورجعت إلى الماء وعبرت على ظهر الضفدع إلى الجانب الآخر. فأنشد ذو النون يقول:
يا راقدا والجليل يحفظه- من كل سوء يكون في الظلم كيف تنام العيون عن ملك
تأتيك منه فوائد النعم قال: فانتبه الفتى على كلام ذي النون فأخبره الخبر، فتاب ونزع لباس اللهو ولبس أثواب السياحة وصاح ومات على تلك الحالة.،
சுருக்கம்: இறைஞானி மஃறுபுல் கர்கீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். எனக்கு இறைஞானி துன்னூனுல் மிஸ்றீ பற்றி ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது துன்னூன் அவர்கள் தங்களின் துணிகளைக் கழுவுவதற்காக நைல் நதிக்கு வந்தார்கள். அப்போது அங்கு பயங்கரத் தேள் ஒன்றைக் கண்டு கடுமையாகப் பயந்து போனார்கள். அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். அதன் தீமையிலிருந்து பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
அங்கு வந்த தேள் நைல் நதி நீரிடம் வந்தது. அவ்வேளை எதிர்பாராமல் நீரிலிருந்து ஒரு தவளை வெளியே வந்ததும் குறித்த தேள் அதன் முதுகில் ஏறி அமர்ந்தது. அந்த தவளை தேளைச் சுமந்து கொண்டு மறு கரைக்குச் சென்றது. நான் அதைத் தொடர்ந்து பார்க்க வேண்டுமென்பதற்காக நதியில் நானும் இறங்கி அதைத் தொடர்ந்து சென்றேன். மறு கரைக்கு அது போகும் வரை மிகக் கவனத்தோடு நானும் அதைத் தொடர்ந்தேன். மறு கரையில் அடர்த்தியான பெரிய மரமொன்று நின்றது. அது நிழலுள்ள மரமாகவும் இருந்தது. அதன் கீழே வெள்ளை நிறமான, முகத்தில் முடி முளைக்காத ஒரு இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது எனக்கு இந்த நிகழ்வு வியப்பாக இருந்ததால் நான் “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” உறங்கிக் கொண்டிருந்த வாலிபனைத் தீண்டுவதற்கே தேள் இங்கு வந்துள்ளதென்று நினைத்தேன். அவ்வேளை எங்கோ இருந்து ஒரு மலைப்பாம்பு இளைஞனைத் தீண்டுவதற்காக வந்ததைக் கண்டேன். அப்போது தேள் அந்தப் பாம்பைத் தீண்டி அதன் மூளையை எடுத்துக் கொண்டு வந்தது போல் தவளையின் முதுகில் ஏறி மறு கரைக்கு வந்தது.
அப்போது இறைஞானி துன்னூன் பின்வருமாறு பாடினார்.
இருளில் ஏற்படுகின்ற தீமையிலிருந்து அல்லாஹ் பாதுகாக்கும் நிலையில் உறங்கிக் கொண்டிருப்பவனே! அருள் செய்யும் அரசனிடமிருந்து நற் பயன்கள் வரும். நீ எவ்வாறு தூங்கிக் கொண்டிருப்பாய்? என்று பாடி முடித்தார்கள்.
அவர்களின் பாடலைக் கேட்ட இளைஞன் விழிப்புணர்வு பெற்று வீண் விளையாட்டுக்கான தனது உடைகளைக் கழட்டி விட்டு, பாவ மன்னிப்புக் கேட்டு அவ்விடத்திலேயே உயிர் துறந்தான்.
இந்த அற்புத வராலாறின் மூலம் ஒரு மனிதனை அல்லாஹ் காப்பாற்ற நாடினால் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்ற பாடம் கிடைக்கிறது.
தேள் என்பதும், கொடுக்கான் என்பதும் ஒன்றுதான். கொடுக்கானில் பெரிய அளவிலானது தேள் என்று அழைக்கப்படுகின்றதென்று நான் நினைக்கிறேன்.
குறிப்பு: தேள் கடித்தால் பழைய செருப்பால் கடித்த இடத்தில் அடித்தால் கடும் வலி குறைந்து விடும். அந்த இடத்தில் உப்புக் கல் ஒன்று வைத்துக் கட்டி விட வேண்டும்.