Friday, May 17, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வத்வாத் - وَطْوَاطْ (வெளவால் - வவ்வால்)

வத்வாத் – وَطْوَاطْ (வெளவால் – வவ்வால்)

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
طائر يقال له بالفارسيّة بالواية – قال بَلْيَانَاسُ إن غرِقَ الوَطْوَاطُ فى ماءٍ ومات، فَمَنْ شَرِبَ من ذلك الماء لَمْ يَنَمْ البتَّةَ،
வவ்வால் என்பது பறவை இனத்தைச் சேர்ந்தது. பாரசீக மொழியில் “பால்வாயா” என்று சொல்லப்படும்.
 
பல்யானாஸ் அல்லது பல்யானூஸ் என்பவர் ஒரு விலங்கியல் மேதை. வெளவால் நீரில் மூழ்கி இறந்தால் அந்த நீரைக் குடித்தவன் ஒரு போதும் உறங்கமாட்டான் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல்யானூஸ் குறிப்பிடுகையில்
وَإِنْ أُخِذَ وَطْوَاطٌ وَعُلِّقَ فى عُنُقِهِ شَعْرُ إِنْسَانٍ وَأُرْسِلَ حتّى يطير لا ينام ذلك الإنسان حتّى يموتَ ذلك الوطواطُ أو يُؤْخَذَ الشعرُ مِن عُنُقِه،
ஒரு வவ்வாலை பிடித்து அதன் கழுத்தில் மனிதனின் முடியை கொழுகி அதைப் பறக்கவிட்டால் அந்த வவ்வால் சாகும்வரை முடிக்குரியவன் தூங்கமாட்டான் அல்லது அந்த முடியை எடுக்கும் வரை சாகமாட்டான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
خَوَاصُّ أَجْزَائِهِ
அதன் உறுப்புக்களின் விஷேஷங்கள்.
رَأْسُهُ تُجْعَلُ فِى حشو مِخَدَّةٍ فمن وضع رأسه عليها نام،
அதன் தலையை தலையைணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்து உறங்கினால் உறக்கம் வரும். அறவே உறக்கம் வராதவர்கள் இந்த முறையை கையாளலாம்.
 
அதன் மூளையை தேனுடன் கலந்து சுறுமாவாக போட்டு வந்தால் கண்ணிலிருந்து நீர் வடிதல் நின்று விடும்.
 
الضب உடும்பு
حَيَوَانٌ بَرِّيٌّ
நிலத்தில் வாழும் உயிரினம். حَيَوَانٌ بَحْرِيٌّ أَوْ مَائِيٌّ நீரில் வாழ்வதுமல்ல. கடலில் வாழ்வதுமல்ல. يُقَالُ لَا أَفْعَلُ حَتَّى يَرِدَ الضَّبُّ அறபு மக்கள் ஏதாவதொன்றை செய்யமாட்டேன் என்று சொல்லும் போது மேற்கண்டவாறு சொல்வார்கள். இதன் பொருள் உடும்பு நீருள்ள இடத்திற்கு வரும் வரை இன்னதை செய்யமாட்டேன் என்று சொல்வார்கள். ஏனெனில் உடும்பு வாழ்க்கையில் ஒரு தரமேனும் நீர் அருந்தாது. அல்லாஹ்வின் படைப்பின் வியப்புத்தான் என்னே! ஸுப்ஹானல்லாஹ்!
 
உடும்பு சுமார் 700 ஆண்டுகளுக்கும் அதிக காலம் வாழும். இன்னுமது நாற்பது நாளில் ஒரு தரம் ஒரு சொட்டு சலம் மட்டும் கழிக்கும். உடும்புக்கு பல் விழுவதில்லை.
 
يعيش سبعمأةِ سنةٍ فَصَاعِدا، وإنّه يبُول فى كلّ أربعين يوما قطْرَةً، لا تسقُطُ له سِنٌّ، وإنَّ أسنانَه قِطْعَةٌ وَاحِدَةٌ لَيْسَتْ مُفَرَّقَةً،
ஏனெனில் அதன் பற்கள் எல்லாம் சேர்ந்து ஒரு துண்டாகவே இருக்கும். இதனால் அது விழுவதாயின் ஒன்று இரண்டு விழாது. முழுத்துண்டுமே விழ வேண்டும்.
 
لِلضَّبِّ ذَكَرَانِ، وَلِلْأُنْثَى فَرْجَانِ، قَالَ الشَّيْخُ عَبْدُ الْقَادِرِ الضَّبُّ دُوَيْبَةٌ عَلَى حَدِّ فَرْخِ التِّمْسَاحِ الصَّغِيْرِ وَذَنَبُهُ كَذَنَبِهِ، وَهُوَ يَتَلَوَّنُ أَلْوَانًا بِحَرِّ الشَّمْسِ،
ஆண் உடும்புக்கு இரண்டு ஆண்குறியும், பெண் உடும்புக்கு இரண்டு பெண் குறியும் உள்ளன. ஷெய்கு அப்துல் காதிர் பின்வருமாறு சொல்கிறார்கள். உடும்பு சின்ன முதலையின் தோற்றத்தைக் கொண்ட ஓர் உயிரினம். உடும்பின் வால் முதலையின் வால் போன்றிருக்கும். உடும்பு சூரியனின் சூட்டுக்கேற்றவாறு பல நிறம் கொள்ளும் தன்மையுள்ளது.
 
فى كتاب العُقُوْبَاتِ لأبي الدنيا رحمه الله عن أنس قال إنَّ الضَّبَّ لَيَمُوْتُ فِى جُحْرِهِ هُزَالًا من ظُلم بني آدم، ولمّا سُئل أبو حنيفة عن ذكر الضَّبِّ قال إنّه كَلِسَانِ الْحَيَّةِ أصلٌ واحد له فرعان، وإذا أرادت الضبة أن تُخْرِجَ بَيْضَها حَفَرَتْ فى الأرض حُفرة ورمت فيها البيضَ، وطمثها بالتراب، وَتَتَعَاهَدُها كل يوم حتى يخرج، وذلك فى أربعين يوما، وهي تَبِيْضُ سبعين بَيْضَةً وأكثر، وَبَيْضُهَا كَبَيْضِ الحَمَام،
அபுத்துன்யா அவர்களின் அல்உகூபாத் என்ற நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
 
ஆதமுடைய மக்கள் – மனிதர்கள் உடும்புக்குச் செய்கின்ற அநீதியால் அவை வெளிவரப் பயந்து பொந்திலேயே உணவின்றிக் கிடந்து மெலிந்து செத்துப் போகின்றன.
 
அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உடும்பின் உடும்பு பற்றி – ஆண்குறி பற்றிக் கேட்கப்பட்ட போது அது பாம்பின் நாக்குபோல் ஒரு கம்பில் இரண்டு கிளைகள் போன்றது என்று கூறினார்கள். உடும்பு தனது முட்டையை வெளியாக்க விரும்பினால் மண்ணில் ஒரு குழி தோண்டி அதில் முட்டையிட்டு மண்ணால் மூடிவிடும். குஞ்சுகள் வெளிவரும் வரை அவற்றைக் கவனித்துக் கொள்ளும். நாற்பது நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். முட்டையிடுவதாயின் 70 முட்டைகள் இடும். அதற்கு மேலும் இடும். அதன் முட்டை புறா முட்டை போல் இருக்கும். அது மறதி அதிகமுள்ளது. இதனால் வழி தேடி தடுமாறும். ஆயுள் நீளமானது. அதன் இயற்கை நாய் போல் தனது மலத்தையும் சாப்பிடும் பழக்கமுள்ளது.
 
وفى طبعه النسيانُ وعدمُ الهداية، طويل العمر، ومن طبعه أنّه يأكل رجيعه، وهو طويل الدّم بعد الذبح، يقال إنّه يمكث بعد الذبح ليلة،
அது தனது கழிவை தானே உண்ணும் சுவாபமுள்ளது. அறுத்த பின்னும் இரத்தம் நீண்ட நேரம் ஓடிக் கொண்டிருக்கும். சில நேரம் அறுத்த பின்னும் ஓர் இரவு வரை இருக்கும்.
 
சட்டம் الحكم
يحل أكل الضب بالإجماع، عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قيل له أَحَرَامٌ هُوَ؟ قال: لا، ولكنّه لم يكن بأرض قومي، فأجدني أُعَافِهِ،
 
மார்க்க சட்டம்:
உடும்பு சாப்பிடுவது எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி ஆகுமானதாகும். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் உடும்பு சாப்பிடுவது ஹறாமா? விலக்கப்பட்டதா? என்று கேட்கப்பட்ட போது இல்லை. என்னுடைய கூட்டத்தாரின் பகுதியில் – நிலத்தில் அது இல்லை. இதனால் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்
அறிவிப்பு: இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா
 
எனது நண்பர்களில் ஒரு குழு இருந்தது. அவர்களில் சிலர் மரணித்துவிட்டனர். இன்னும் சிலர் உயிரோடு உள்ளார்கள்.
 
இவர்கள் என்மூலமும், வைத்தியர்கள் மூலமும் உடும்பிலுள்ள விஷேட தன்மைகளை அறிந்து ஒரு மாதத்தில் நாலு நாள் எவ்வளவு செலவிட்டேனும் உடும்பு இறைச்சி சாப்பிடுவார்கள். அந்தக் குழுவில் எட்டுப்பேர்கள் இருந்தார்கள். ஒரு மாதத்தில் நாலு வாரம் கடற்கரைக்குச் சென்று உடும்பு இறைச்சி பொரித்தும், அதில் சூப் செய்தும், கறி ஆக்கியும் சாப்பிடுவார்கள். நான் அறிந்தவரை பத்து வருடங்களுக்கு மேலாக இவ்வாறு செய்திருப்பார்கள்.
 
இவர்களின் நோக்கம் உடும்பு சாப்பிட்டு உடலுக்குச் சக்தியையும், காம உணர்வையும் ஏற்படுத்தி சிற்றின்ப போதையில் மயங்கிக் கிடப்பதேயாகும். உடும்பு இறைச்சி ஆகுமானதாயிருந்தாலும் அதில் காம, சிற்றின்ப உணர்வை ஏற்படுத்தும் தன்மை அதிகமாயிருப்பதால் ஒரு மாதத்தில் ஒரு தரம் சாப்பிடுங்கள் என்று பல முறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
 
இறுதியில் அவர்களுக்குப் பயங்கர நோய் ஏற்பட்டு “இன்ஜக்ஷன்” பாய்ச்சி சுகப்படுத்த வேண்டிய நோயாயிருந்ததால் அவர்களுக்கு உடலின் எந்த இடத்திலும் ஊசி ஏற முடியாத நிலை ஏற்பட்டு கடைசியாக பயங்கர நோயாலேயே சிலர் மரணித்துவிட்டார்கள்.
 
எனவே, இதன் பிரயோஜனங்களை அறியும் இளைஞர்கள் ஒரு மாதத்தில் ஒரு தரம் சாப்பிடுவதால் பயங்கரத் தாக்கம் ஏற்படாதவகையில் தப்பிக் கொள்ளலாம். சிற்றின்பத்திற்காக மட்டும் பாவிப்பவர்கள் கப்றுக்குள் போக வேண்டிய வேலையில் இறங்க வேண்டாமென்று உடும்பு இறைச்சி பாவிப்பவர்களுக்கு “வஸிய்யத்” செய்கிறேன்.
 
முக்கிய குறிப்பு: தலைப்பில் நான் எழுதிய பல்யானூஸ் சொன்ன விடயத்தை எவருக்கும் அநீதியாகவோ, பகடியாகவோ பயன்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு பயன்படுத்தினால் அல்லாஹ் அவனைத் தண்டிப்பான். எச்சரிக்கை! “டேன்ஜர்”!
 
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உடும்பு இறைச்சி சாப்பிடாமல் விட்டதற்கு கூறிய காரணம் உண்மையானதாயிருந்தாலும் அதனுள்ளே ஒரு தத்துவம் மறைந்திருக்குமென்று நான் எண்ணுகிறேன். அதை அடுத்த தொடரில் குறிப்பிடுவேன். இன்ஷா அல்லாஹ்!
 
எனது கட்டுரைகளை நுகர்கின்ற எவராயினும் எனக்காக ஒரு நொடி நேரம் இரு கரமேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments