كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
அனைத்து ஆத்மாக்களும் மரணத்தைச் சுவைத்தே தீரும். (திருமறை )
அப்ளலுல் உலமா கலாநிதி அல்ஹாஜ் தைக்கா ஷுஐப் ஆலிம் ஹழ்றத் (MA, PhD, BA Hons) அவர்கள் “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இலங்கைத் திரு நாட்டில் இறை பொருத்தத்தை மட்டுமே நாடி இஸ்லாமிய மார்க்கப்பணி செய்ய வந்த அல் ஆலிமுல் அரூஸ் (மாப்பிள்ளை லெப்பை ஆலிம்) ஸெய்யித் முஹம்மத் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் பரம்பரையில் தோன்றிய தைக்கா ஷுஐப் ஆலிம் ஹழ்றத் (MA, PhD, BA Hons)
(نَوَّرَ اللهُ مَرْقَدَهُ وَعَطَّرَ قَبْرَهُ بِعَطُوْرَاتِ الْعَفْوِ وَالرِّضْوَانِ وَأَسْكَنَهُ الْفِرْدَوْسَ مَعَ أَشْرَفِ الْمَخْلُوْقَاتِ وَأَكْرَمِ الْمَوْجُوْدَاتِ)
அவர்களின் பிரிவால் துன்புறும் அன்னாரின் குடும்பத்தினர், முரீதுகள், முஹிப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களின் இழப்பு இலங்கை நாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலும் கூட ஸுன்னத் வல்ஜமாஅத் சத்தியக் கொள்கை சார்ந்தோருக்கு ஒரு இழப்பாகும்.
مَوْتُ الْعَالِمِ مَوْتُ الْعَالَمِ
ஒரு “ஆலிம்” அறிஞனின் மரணம் அது “ஆலம்” அகிலத்தின் மரணமாகும்.
ஸூபிஸ வழி நடக்கும் அன்பர்களே!
اَلْعَارِفُ طَيَّارٌ وَالْعَابِدُ سَيَّارٌ
அல்லாஹ்வை அறிந்த ஞானி அவனளவில் பறந்து செல்கிறார். அவனை வணங்கும் வணக்க சாலி நடந்து செல்கிறார் என்ற தத்துவத்தையும்,
مَوْتُ الْوَلِيِّ اِنْتِقَالُهُ مِنْ بَيْتٍ قَدِيْمٍ إِلَى بَيْتٍ جَدِيْدٍ
ஒரு வலீயின் மரணம் என்பது அவர் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்வதாகும் என்ற தத்துவத்தை மனதில் பதித்து அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறையோன் அன்னாரின் தூய்மையான மாரக்கப்பணிகளை “கபூல்” செய்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிமயமாக்குவானாக! ஆமீன்!
என்றும் நித்திய ஜீவன் அல்லாஹ் மாத்திரமே! அவனுக்கு என்றும் மரணமில்லை. மனிதனின் இறப்பும், பிறப்பும் அவன் “தஜல்லீ”யே அன்றி வேறில்லை.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
16.06.2021