Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நான் கொலை செய்யப்பட்டால் என் கொலைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீயும்,...

நான் கொலை செய்யப்பட்டால் என் கொலைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீயும், எனக்கும், எனது ஸூபிஸ சமுகத்திற்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களை கொலை செய்ய வேண்டுமென்றும் “பத்வா” தீர்ப்பு வழங்கிய உலமா சபையின் “முப்தீ” நீதிவான்களுமேயாவர்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

விடயத்திற்கு வருமுன் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அவர்களிடமும், அதன் உறுப்பினர்களான சட்டத்தரணிகளிடமும் நான் ஒரு கேள்வி கேட்டு விடயத்திற்கு வருகிறேன்.

கௌரவ சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அவர்களே! சட்டத்தரணிகளே!

ஒருவன் இன்னொருவனிடம் நேரில் நான் உன்னைக் கொலை செய்வேன் என்று சொன்னால், அல்லது தனது உண்மையான பெயர் முகவரியுடன் அவனுக்கு கடிதம் அனுப்பினால் இவ்விரண்டிற்கும் சாட்சிகளுமிருந்தால் அவனுக்கான சட்டம் என்ன? இதற்கான பதிலை இலங்கை வாழ் சட்டத்தரணிகள் எனது முகவரிக்கு பெருமனதுடன் அறிவிக்குமாறும், அல்லது பொது மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பொது சனத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவிக்குமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை அரசு எனக்கான உரிமைகளில் எதையும் பறிக்காமலும், தடை செய்யாமலும் இருக்கும் நிலையில் ஏதோ ஒரு சங்கம் அரசின் அங்கீகாரமின்றி என்னையும், எனது ஆதரவாளர்களையும் மதம் மாற்றி வைத்து விட்டு எங்களின் உரிமைகளை குறிப்பாக மத உரிமையை பறித்தும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று முஸ்லிம்களைத் தூண்டியும் வருகிறது.

இதனால் நானும், எனது ஸூபிஸ சமுகமும் 1979ம் ஆண்டு முதல் இன்று வரை ஒடுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், மத உரிமைகள் மறுக்கப்பட்டும் கண்ணீர் வடித்து வாழ்ந்து வருகிறோம். இது தொடர்பாக பல நடவடிக்கைகளும் எடுத்திருக்கிறோம். எடுத்துக் கொண்டுமிருக்கிறோம். இதுவரை தீர்க்கமான முடிவொன்றும் எமக்கு கிடைக்கவில்லை.

பல்லாயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட ஸூபிஸ சமுகம் சுமார் 42 ஆண்டுகளாக அனுபவித்து வரும் இன்னல்களையும், இடுக்கண்களையும் முஸ்லிம் அறிஞர்களும், அரசியல் வாதிகளும், மற்றும் பொது நலன் விரும்பிகளும், இன்னும் ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்து பொந்துகளெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியவர்களும் இவ்விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது மனதைப் புண்படுத்துகிறது. இவர்கள் மறுமையில் இது பற்றி வசாரிக்கப்படுவர். அல்லாஹ்வின் கேள்விகளுக்கு பதில் கூற இன்னோர் தயாராக இருக்க வேண்டும்.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

நீங்கள் எனக்கு எதிராக வழங்கிய “பத்வா”வில் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலை ஆதாரமாக எடுத்துள்ளீர்கள். இந்நூல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியான கொள்கையென்று சுருதிப் பிரமாணங்கள் மூலமும், யுக்திப் பிரமாணங்கள் மூலமும் நிறுவப்பட்ட நூல் என்பது பரவலாகவும், பகிரங்கமாகவும் அறிஞர்கள் அறிந்த நூலாகும். இந்நூலை நீங்கள் ஆதாரமாக எடுத்ததன் மூலம் இதைச் சரியான நூலென்று ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பது தெளிவாகிறது. இதைச் சரியான நூலென்று ஏற்றுக் கொண்டவன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை நூறு வீதம் ஏற்றுக் கொண்டவனேயாவான். இது காகம் கறுப்பு நிறமென்றும், பால் வெள்ளை நிறமென்றும் ஏற்றுக் கொண்டது போலாகும். உண்மையும், எதார்த்தமும் இவ்வாறிருக்கும் நிலையில் அகில இலங்கை உலமா சபைகளின் தாய்ச்சபையின் நீதிவான்களான நீங்கள் இதைச் சரியான நூலென்று ஏற்று அதிலிருந்து ஆதாரம் எடுத்திருப்பது சிரிக்க வேண்டியது மட்டுமன்றி சிந்திக்க வேண்டியதுமாகும். இல்லையா?
وكم من عالم زيَّنَه لباسُه وشكلُه، وعظّمه طول لحيته وقميصُه، حتّى يظنّه من اغترّ بها أنّه علّامة زمانِه وفهّامة دهره، ولكن ليس على رأسِه مُخٌّ ولا شيء،
ரிஸ்வீ முப்தீ அவர்களே!

இந்நூலை ஆதார நூலாக எடுத்துள்ள நீங்கள், சரியான நூலென்றும் ஏற்றுள்ள நீங்கள் உங்கள் “பத்வா”வை உடனடியாக வாபஸ் பெறுங்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்று சொல்லப் போகிறீர்களா? அவ்வாறாயின் அதை ஆதார நூலாக எடுத்ததேன்? நான் கேட்பது நியாயமான கேள்வியென்று உங்களுக்கு விளங்குகிறதா? இல்லையா? உங்களுக்கு விளங்காது போனாலும் இது பொது மக்களுக்கு நன்றாக விளங்கும். உங்களின் நாடகத்தை பொது சனம் விளங்க வேண்டுமென்பதற்காக இதை எழுதுகிறேன். நீங்கள் பொது மக்களை ஏமாற்றுவது போல் எங்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம். எங்களுக்கும் திருக்குர்ஆனும் தெரியும், நபீ பெருமானின் பொன் மொழிகளும் தெரியும்.

உங்களுடன் நான் விவாதிக்க நீங்கள் தகுதியற்றவர்கள். உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சுத்த சூனியமாகும். நீங்கள் இதை என்னிடம் கற்றுக் கொள்வது அல்லது விஷயமறிந்த ஒருவரிடம் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.

ஆயினும் நீங்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உங்களை என்னிடம் வருமாறு அழைக்கிறேன்.

“அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் இந்நூலையும், இன்னுமிதைவிடச் சிறந்த, “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை தெள்ளத் தெளிவாகக் கூறும் நூல்களிற் சில நூல்களையும் உங்களிடம் தருகிறேன். பகிரங்கமான ஓர் இடத்தில் பெரும் கூட்டமொன்றையும் கூட்டித் தருகிறேன். அவர்கள் முன்னிலையில் நான் தரும் நூல்களை வாசித்து அவற்றில் கூறப்பட்ட விளக்கத்தை அவர்கள் மத்தியில் உங்களால் கூற முடியுமா? இதற்கு நீங்கள் தயாரா? நீங்கள் இதற்கு உடன்பட்டால் உங்களின் பதில் பறந்து வரட்டும்.

ஒரு சமயம் இஸ்லாமிய யுத்தமொன்று நடந்த வேளை தன்னை “ஸஹாபீ” நபீ தோழர் என்று நடித்த ஒருவர் யுத்த களத்தில் கடும் போர் செய்து எதிரிகளை வெட்டி வீழ்த்தினார். கொன்றொழித்தார். இவரின் இந் நிலையைக் கண்ட உண்மையான நபீ தோழர்கள் பெருமானாரிடம் வந்து அவர் பற்றி வியந்து பாராட்டிப் பேச நபீ பெருமானோ

أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، إِنَّ اللهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّيْنَ بِالرَّجُلِ الْفَاجِرِ
“நிச்சயமாக அல்லாஹ் இஸ்லாம் எனும் சத்திய மார்க்கத்தை கெட்ட மனிதர் ஒருவரைக் கொண்டு பலப்படுத்துவான். இவர் நிச்சயமாக நரகவாதி” என்றார்கள். இதைக் கேட்ட நபீ தோழர்கள் வியந்து வியர்த்துப் போனார்கள். புகழ்ந்துரைக்க வேண்டிய பெருமானார் இகழ்ந்துரைக்கிறார்களே என்று வியப்பிலாழ்ந்தனர். யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் அவர் – நபீ பெருமானார் நரகவாசியென்று இழித்துரைக்கப்பட்டவர் எதிரிகளின் வாள் வெட்டுக்கு இரையாகி வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு பெருமானார் சொன்னது போல் நரகவாதியானார். அவர் போன்றவரே நீங்களென்று பொது சனம் அறிந்து கொள்ளட்டும். விரைந்து வாருங்கள். உங்கள் மூலம் இந்த ஞானத்தை உறுதி செய்ய அல்லாஹ் நாடிவிட்டான் போலும். அல்ஹம்துலில்லாஹ்! இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? ஏற்றுக் கொள்வீர்களாயின் “பத்வா”வை எந்தவொரு நிபந்தனையுமின்றி உடனே வாபஸ் பெறுங்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் அந்த நூலை உங்களின் “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்தீர்கள்? என்பதற்கான சுருக்கமான பதில் கூறுங்கள். வளவளவென்று பேசியும், எழுதியும் காலம் கழிக்காதீர்கள். இது எனது கேள்விகளில் ஒன்று.

இந்த நூலில் அறபு மொழியில் எழுதப்பட்டுள்ள இவ்விடயம் பொது மக்களுக்கும், குறித்த நூல் தம்மிடமில்லாத உலமாஉகளுக்கும் தெரியாதிருக்கலாம் என்பதற்காக – அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நோக்குடன் குறித்த நூலில் இடம்பெற்ற வாசகங்களை இங்கு எழுதுகிறேன்.

قال الشّيخ محمد بن فضل الله فى كتابه ‘ التحفة المرسلة ‘مع شرحها، (هذا الكتاب استدلّ به العُميان للإفتاء برِدّتِي ورِدَّةِ من صدّق قولي، فالعجب كلّ العجب من المفتي وأعوانه الّذين اختاروه للإستدلال وجمعوه من العلماء والمكتبات، وهذا الكتاب ‘ التحفة المرسلة ‘ كتاب مملوء بوحدة الوجود ومختوم بها، فإن كان المفتى عاقلا وحاذقا وأعوانِه عقلاء وحاذقين لَمَا استدلّوا بهذا الكتاب، ولكنّ حَماقتَهم حَجَبتْ عُقولَهم وجعلهم حائرين، وأمّا الإستدلال بهذا الكتاب لِرِدَّةِ وإبطال عقيدة وحدة الوجود فحماقة خالصة صافية، وهو كاستعانة رجل بأعدَى عدوّه)
குறித்த நூலின் வாசகங்கள் இதோ.

اعلموا أنّ ذلك الوجود ليس له شكلٌ ولا حدّ ولا حصرٌ، يعنى أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا فى صفاته الحقيقيّة كلّها، لأنّ ذلك الوجود كما أنّه من حيثُ هُو هُوَ أي من غير اعتبار شيءٍ مَّا معه من صفة ولا اسمٍ مُطلقٌ غيرُ محدود، كذلك صفاته الحقيقية منبسطةٌ أي غير مخصوصةٍ بمَحَلٍ خاصٍّ من الذّات غيرُ محدودةٍ، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر بنفسِه وتجلّى بأسمائه وصفاته بالشّكل أي بالأثر والحدّ، يعنى أنّ ذلك الوجود ظهر وتجلّى فى الخارج بصُور المخلوقات على نفسه وعلى غيره مدركا لنفسِه ولغيره من المخلوقات المدركة كالثّقلين والملائكة، ولم يتغيّر بسبب هذا الظُّهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه من عدم الشّكل وعدمِ الحدّ، إذ ظهورُ أثرِه كذلك لا يلزم منه شيء من المذكورات المنفيّة، بل هو الآن إلى الأبد كما كان عليه فى الأزل،
மேலே உள்ள அறபு மொழி வரிகள் உலமா சபை தனது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்த நூல்களில் ஒன்றான “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலில் அதன் ஆசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் எழுதிய வரிகளாகும்.

இந்த நூலில் இருந்து தமக்குச் சாதகமான ஒன்றை எடுத்துக் கொண்டு தமக்குப் பாதகமான மேற்கண்ட வரிகளை முப்திகள் விழுங்கிவிட்டார்கள். எழுதாமல் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணம் இந்த வரிகள் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அப்பட்டமாகக் கூறும் வரிகளாகும். இது என்ன இருட்டடிப்பா? இல்லையா? இதை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் தனது நெஞ்சில் சுட்டு விரலால் குத்தி சதியா? இல்லையா? என்று கேட்க வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

குறித்த நூலில் இருந்து அவர்கள் எடுத்த ஆதாரம் அவர்களின் “பத்வா” அறபுப் பகுதி 28ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. இந்த வசனம் எனக்கு எதிரானதென்று அவர்கள் நினைத்து எழுதினாலும் கூட அது எனக்கு எதிரானதல்ல. நேரம் வரும் போது விளக்கி வைப்பேன்.

மேற்கண்ட வரிகளுக்கான சுருக்கம்:

அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் எழுதிய வரிகளின் விளக்கம்.

(நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் “வுஜூத்” – “தாத்”திற்கு எந்த ஓர் உருவமும், வரையறையும், கட்டுப்பாடும் கிடையாது. அதாவது உள்ளமை என்ற மெய்ப் பொருளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும், எந்த ஓர் உருவமும், எந்த ஓர் எல்லையும் கிடையாது. அதன் பெயர், அதன் தன்மை என்பவற்றைக் கவனியாமல் அது அதுவென்ற வகையில் அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அவ்வாறுதான் அதன் எதார்த்தமான தன்மைகளுமாகும்)

(மேற்கண்ட நிலை பரிசுத்த நிலை – “தன்ஸீஹ்” நிலையென்று சொல்லப்படும். குறித்த அந்த “தாத்” அல்லது “வுஜூத்” எனும் உள்ளமை அவ்வாறு பரிசுத்த நிலையில் இருப்பதுடன் அது தனது “தாத்” உள்ளமை கொண்டு கட்டுப்பாட்டிலும், உருவத்திலும் தனது திரு நாமங்கள் கொண்டு வெளியாகியுள்ளது. மனு, ஜின்கள், மலக்குகள் போன்று. இவ்வாறு அந்த “தாத்” மெய்ப் பொருள் பல கோடி சிருட்டிகளாக வெளியானாலும் கூட அதன் முதல் நிலையிலிருந்து மாறுபாடவோ, அழியவோ இல்லை. அது படைப்பாக வெளியாகுமுன் எவ்வாறிருந்ததோ அவ்வாறே படைப்புக்களாக வெளியான பின்னும் உள்ளது)

இது பற்றியே – இவ்விரு நிலைகள் பற்றியே அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments