Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை...

المُنْكِرَ لوحدةِ الوجود مُثبِتٌ لكثرة الوجود “வுஜூத்” ஒன்று என்பதை மறுப்பவன் “வுஜூத்” அதிகம் என்று நம்புகிறான்.

தொடர் 05

அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.

“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.

படைப்பு என்பது இல்லவே இல்லை. அது இருப்பதாகத் தோற்றுவது மாயையேயாகும்!

“ஷரீஆ”வின் புதிய குரல் “வுஜூத்” இரண்டு என்று கூறுகிறது.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

قال الشّيخ ابن عطاء الله السِّكندري رضي الله عنه فى كتابه ‘ الحكم ‘ الموصوف بأنّه كان أن يكون قرآنا، اَلْكَوْنُ كُلُّهُ ظُلْمَةٌ، وَإِنَّمَا أَنَارَهُ ظُهُوْرُ الْحَقِّ فِيْهِ، اَلْمُرَادُ بِالظُّلْمَةِ اَلْعَدَمُ، أي كلُّه عدمٌ، لأنّ وجودَهُ غيرُ ذاتيٍّ، وهو العَمَى المُشارُ إليه بحديثِ كنتُ فى عَمًى فأحببتُ أن اُعرفَ فخلقتُ الخلقَ، فَبِيْ عَرَفُوْنِيْ، أي كنتُ فى عدمِ الخلقِ وانْفِرادٍ، فأحببتُ أن اُعرفَ، ووقع فى بعض العبارات وهو الآن على ما عليه كان، من الإنفراد والوجود الذّاتيِّ، فإنّ وجودَ غيرِه مُفاضٌ منه، وليس ذلك غيرا محضا، فإنّه نشأ عنه كالظِّلِّ بالنسبة للأشجار، والقائلون بوحدة الوجود يريدون بذلك مُشاهدةَ الحقِّ فى كلِّ شيء وسَرَيَانَ سِرِّهِ فى الكلِّ، فإنّ كلَّ ما عداه وجودُه لا من ذاتِه بل من الله تعالى، وكلُّ ما يكون وجودُه غيرَ ذاتيٍّ وجودُه عدمٌ، فلا موجودَ فى الحقيقة إلّا الله تعالى، ومن ذَاقَ هذا الأمرَ غَابَ عن كلِّ ما سواه، لكن وقع من بعضهم عند بيان المراد التَّعبيرُ بما يُوهِمُ الحلولَ والاتِّحادَ لِضِيْقِ الْعِبَارَةِ، فأدَّى لِقَتْلِه، وحديث فى عَمًى رواه الترمذيُّ عن أبي رزين العقيلي قال قلتُ يا رسولَ الله أين كانَ ربُّنا قبل أن يخلق خلقَه، قال كان فى عَمَاءٍ، فسّر التّرميذيُّ هذا الحديث بأنّ المرادَ منه أنّه تعالى لم يكن معه شيءٌ أي كان فى الأزل فى سِترِ وعدمِ الظهور، كما يدلُّ له الحديث الآخر ‘ كنت كنزا لا اُعرفُ فخلقتُ الخلقَ وتجلّيتُ إليهم بالنِّعمِ، فبي عرفوني، (تقريب الأصول، ص 145، للإمام الشّيخ زيني دحلان)

இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ நாயகமவர்களின் முதலாவது கலீபா அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் முர்ஸீ அவர்களின் முதலாவது கலீபா தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் சிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஹிகம்” எனும் நூலில் எழுதிய தத்துவ வசனம் ஒன்றுக்கு தங்களின் “தக்ரீபுல் உஸூல்” என்ற நூலில் விளக்கம் எழுதிய இமாம் ஸெய்னீ தஹ்லான் அவர்களின் அறபு வரிகளே மேற்கண்ட வரிகளாகும்.

அறபு வரிகளுக்கான சுருக்கமான தமிழாக்கம்:

திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டதென்று அதிக மேதைகளால் புகழப்பட்ட இப்னு அதாயில்லாஹ் அவர்களின் “ஹிகம்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

اَلْكَوْنُ كُلُّهُ ظُلْمَةٌ، وَإِنَّمَا أَنَارَهُ ظُهُوْرُ الْحَقِّ فِيْهِ،

இவ்வசனத்தின் பொருள்:

“கவ்ன்” என்ற சொல் அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். (இத்தகைய படைப்பு எல்லாமே இருளாகும். அந்த இருளை ஒளியாக்கி – வெளிச்சமாக்கி வைத்தது அதில் அல்லாஹ் வெளியாகியிருப்பதேயாகும்.) இதுவே இப்னு அதாயில்லாஹ் அவர்களின் வசனமாகும்.

இவ்வசனத்திற்கு இமாம் ஸெய்னீ தஹ்லான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “தக்ரீபுல் உஸூல்” எனும் நூலில் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளார்கள்.

(படைப்பு எதுவாயினும் அது இருள் என்று சொல்லியுள்ளார்கள். இருள் என்றால் “இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்றால் இருள் என்பது இல்லாத ஒன்றாகும். அதாவது அதற்கு “வுஜூத்” உள்ளமை இல்லை. இதை இன்னும் சற்றுத் தெளிவாகச் சொல்வதாயின் இருள் என்பது கண் பார்வைக்கு தோற்றினாலும் கூட அதற்கு உள்ளமை இல்லை. அதாவது அவ்வாறு ஒன்றில்லை என்பதேயாகும்.

படிப்பறிவும், பரவலான அறிவும் உள்ளவர்களுக்கு இவ் உண்மை தெரிந்தாலும் கூட மற்றவர்களுக்கு இது தெரிவதில்லை. எதார்த்தம் என்னவெனில் இருள் என்பது கண் பார்வைக்குத் தெரிந்தாலும் – தோற்றினாலும் கூட அப்படியொன்று எதார்த்தத்தில் இல்லை என்பதே சரியான முடிவாகும். இதன் மூலம் ஓர் உண்மை தெளிவாகிறது. இருள் என்பது “அதமீ” இல்லாத ஒன்றென்பதும், அதற்கு “வுஜூத்” இல்லையென்பதும் தெளிவாகிறது.

“வுஜூத்” இல்லாத ஒன்றாயினும் அது பார்வைப்புலனுக்குத் தெரியத்தான் செய்யும். இருள் தெரிவது போன்றும், கானல் நீர் தெரிவது போன்றுமாகும். இருளுக்கு “வுஜூத்” உள்ளமை இல்லாதிருப்பது போல் கானல் நீருக்கும் உள்ளமை இல்லை. “வுஜூத்” இல்லாத ஒன்று பார்வைப் புலனுக்கு தோற்றவே செய்யும். இதனால் அதற்கு “வுஜூத்” உண்டு என்று கொள்ள முடியாது.

அல்லாஹ்வுக்கு – அவனுடைய உள்ளமைக்கு “அமா” நிலையென்று ஒரு நிலை உண்டு. அது அவன் படைப்புகளைப் படைப்பதற்கு முன்னிருந்த நிலையாகும். “அமா” என்றால் குருடு. இவ்விடத்தில் குருடு என்றால் அறியப்படாத நிலையைக் குறிக்கும். அதனால் அவ்வாறு வசனம் பாவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் ஹதீது – நபீ மொழி இந்நிலை தொடர்பாக அருளப்பட்டதேயாகும்.

كنتُ فى عَمًى فأحببتُ أن اُعرفَ فخلقتُ الخلقَ، فَبِيْ عَرَفُوْنِيْ،
இன்னுமோர் அறிவிப்பில் பின்வருமாறும் இந்த நபீ மொழி வந்துள்ளது.
عن أبي رزين العقيلي قال قلتُ يا رسولَ الله أين كانَ ربُّنا قبل أن يخلق خلقَه، قال كان فى عَمَاءٍ،

இந்த நபீ மொழியை அபூ றஸீன் அல் உகைலீ அறிவிக்க இமாம் துர்முதீ அவர்கள் தங்களின் “ஸுனனுத் துர்முதீ”யில் பதிவு செய்துள்ளார்கள்.

அபூ றஸீன் றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு செல்கிறார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், அல்லாஹ் தனது படைப்பை படைக்கு முன் எங்கே இருந்தான்? என்று கேட்டேன். அப்போது அவன் கீழும், மேலும் ஆகாயமில்லாத “அமா”வில் இருந்தான் என்றும், தனது “அர்ஷ்” எனும் சிம்மாசனத்தை நீரின் மேல் படைத்தான் என்றும் சொன்னார்கள். இதன் சுருக்கம் என்னவெனில் அவன் மட்டுமே இருந்தான் என்பதாகும்.

இந்த நபீ மொழிக்கு விளக்கம் சொன்ன இமாம் துர்முதீ அவர்கள் அல்லாஹ் படைப்பை படைக்கு முன் எதுவுமின்றியும், தனித்தவனாயும், அறியப்படாதவனாயும் இருந்தான் என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள். இவ்வாறிருந்த அல்லாஹ் அறியப்பட வேண்டுமென்று விரும்பி படைப்பை படைத்தான் என்றும், மனிதர்கள் என்னைக் கொண்டே என்னை அறிந்தனர் என்றும் அல்லாஹ் கூறியதாக கூறியுள்ளார்கள்.

இந்த நபீ மொழி இன்னோர் அறிவிப்பில் كُنْتُ كَنْزًا مَخْفِيًّا நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன் என்றும் வந்துள்ளது.

இன்னும் சில அறிவிப்பில் وَهُوَ الْآنَ عَلَى مَا عَلَيْهِ كَانَ – அவன் படைப்புகளைப் படைக்குமுன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே படைப்புகளைப் படைத்த பின்னும் உள்ளான் என்றும் வந்துள்ளது. فَبِيْ عَرَفُوْنِيْ என்னைக் கொண்டே என்னை அறிந்தனர் என்ற வசனம் ஆழமான கருத்துக்களை உள் வாங்கிய ஒரு வசனமாகும். இதன் சுருக்கமான பொருள் அவன் படைப்பாக வெளியானதினால்தான் படைப்பு அவனை அறிந்து கொண்டது. நூல் தானே பஞ்சு உண்டென்பதைக் காட்டித் தருகிறது. நகைதானே தங்கம் உண்டென்பதை காட்டித் தருகிறது.

இதற்குப் பொருத்தமான திருக்குர்ஆன் வசனமும் ஒன்று உண்டு. அது وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ என்பதாகும். இத்திரு வசனத்திற்கு இரண்டு விதமாக பொருள் கூறலாம். ஒன்று அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவன் என்றும், இரண்டு அல்லாஹ் சகல வஸ்த்து கொண்டும் அறியப்பட்டவன் என்றும் இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். முந்தின பொருள் “ஷரீஆ” வழி கூறும் பொருளாகும். பிந்தின பொருள் “ஹகீகா” வழி கூறும் பொருளாகும். பிந்தின பொருள் “வஹ்ததுல் வுஜூத்” ஞான அடிப்படையில் உள்ளதாகும்.

திரு வசனத்திலுள்ள عَلِيْمٌ என்ற சொல்லுக்கு مَعْلُوْمٌ அறியப்பட்டவன் என்ற பொருளும் கூற முடியும் என்று மொழியிலக்கணச் சட்டம் கூறுவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதன்று.

இதன்படி எந்த ஒரு வஸ்த்தாயினும் அது அல்லாஹ்வையே காட்டுகின்றது என்ற உண்மை தெளிவாகும். இதே கருத்தை وَفِى كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ – تَدُلُّ عَلَى أَنَّهُ وَاحِدٌ ஒவ்வொரு வஸ்த்திலும் அல்லாஹ் ஒருவன் என்று காட்டும் ஆதாரம் உண்டு என்று ஒரு கவிஞர் கூறியுள்ளார்.

அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் “வுஜூத் ஹகீகீ” எதார்த்தமான உள்ளமை என்று சொல்லப்படும். அந்த எதார்த்தமான “வுஜூத்” உள்ளமையின் “தஜல்லீ” வெளிப்பாடுதான் சிருஷ்டியாகும். படைப்பாகும்.

அல்லாஹ்வுடைய உள்ளமையின் வெளிப்பாடு தான் படைப்பு என்றால் அந்த வெளிப்பாடு அந்த உள்ளமை தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்று விளங்கிக் கொள்ளவும், நம்பிக் கொள்ளவும் வேண்டும். படைப்பு அல்லாஹ்வுடைய உள்ளமையின் வெளிப்பாடாயிருந்தாலும் கூட அதற்கு “வுஜூத் ஹகீகீ” இல்லை என்றும், அது அந்த உள்ளமையின் வெளிப்படாயிருப்பதால் அதற்கு “வுஜூதுன் இழாபிய்யுன்” وُجُوْدٌ إِضَافِيٌّ என்றும், “வுஜூதுன் இஃதிபாரிய்யுன்” وُجُوْدٌ اِعْتِبَارِيٌّ என்றும் சொல்லப்படுமேயன்றி “வுஜூத் ஹகீகீ” وُجُوْدٌ حَقِيْقِيٌّ என்றும், “வுஜூத் முஸ்தகில்” وُجُوْدٌ مُسْتَقِلٌّ என்றும் சொல்லப்படமாட்டாது. இதனால்தான் மேலே நான் எழுதிக் காட்டிய அறபு வசனத்தில் فإنّ وجود غيره مفاض منه படைப்புக்கு சுயமான “வுஜூத்” இல்லாததினால்தான் அதற்கு “முபாழ்” சொரியப்பட்ட “வுஜூத்” என்று சொல்லப்படுகின்றது.

யாராவது ஒருவன் அல்லாஹ்வுக்கு “வுஜூத்” உள்ளமை உண்டு என்றும், அது “வுஜூத் ஹகீகீ” எதார்த்தமான சுயமான உள்ளமை என்றும், அதேபோல் படைப்புக்கு உள்ளமை உண்டு என்றும், அதுவும் “வுஜூத் ஹகீகீ” எதார்த்தமான, சுயமான உள்ளமை என்றும் நம்புவானாயின் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்த “முஷ்ரிக்” ஆகிவிடுவான். “ஷரீஆ” குரல் போன்று.

இதற்கு மாறாக படைப்பிற்கு சுயமான, எதார்த்தமான “வுஜூத்” இல்லையென்றும், அது அல்லாஹ்வின் உள்ளமையின் வெளிப்பாடு என்றும் நம்புவானாயின் அவனின் நம்பிக்கை சரியானதேயாகும். ஆனால் அல்லாஹ்வின் உள்ளமைக்கு வேறான தனித்த உள்ளமை படைப்புக்கு உண்டு என்று நம்பினவன் “முஷ்ரிக்” என்பதில் சந்தேகமே இல்லை.

எனவே, اَلْخَلْقُ لَمْ يَشُمَّ رَائِحَةَ الْوُجُوْدِ படைப்பு என்பது உள்ளமையின் மணத்தைக் கூட நுகரவில்லை என்ற ஸூபீ மகான்களின் தீர்க்கமான முடிவின் படி உள்ளமை என்பது ஒன்றே ஒன்றுதான் என்றும், அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதென்றும், படைப்பு என்பது عَدَمٌ مَحْضٌ அறவே இல்லாததென்றும் நம்ப வேண்டும். அது இருப்பதாகச் சொல்வது ஏமாற்றுதலாகும். وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட்டது என்ற அல்லாஹ்வின் அருள் வாக்கு மேற்கண்ட கருத்தையே சுட்டிக் காட்டுகிறது.

படைப்புக்கு சுயமான “வுஜூத்” இல்லையென்றாலும் கூட அல்லது படைப்பே இல்லையென்றாலும் கூட ஒருவனுக்கு தன்னுணர்வு இருக்கும் வரையும், படைப்பு என்ற உணர்வு இருக்கும் வைரயும் “ஷரீஆ”வைப் பேணிச் செயல்படுவது அவனின் கடமையாகும். இது குறித்தே பின்வரும் பாடல் மூலம் சுட்டிக் காட்டுகிறார்கள் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள். வியந்து கூறுகிறார்கள்.

اَلرَّبُّ رَبٌّ وَالْعَبْدُ عَبْدٌ – يَا لَيْتَ شِعْرِيْ مَنِ الْمُكَلَّفُ
إِنْ قُلْتَ عَبْدٌ فَالْعَبْدُ مَيْتٌ – أَوْ قُلْتَ رَبٌّ أَنَّى يُكَلَّفُ

فَبِيْ عَرَفُوْنِيْ

“என்னைக் கொண்டே என்னை அறிந்தனர்” என்ற வசனத்தில் விஷேட நுட்பமொன்று உண்டு. அடுத்த தொடரை வாசிக்கவும்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments