தொடர் 07
அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உண்டு.
“வுஜூத்” என்பது ஒன்றேதான். அது இரண்டில்லை.
اعلم أنّ مُطلق الذّات هو الأمر الّذي تَسْتَنِدُ إليه الأسماءُ والصّفاتُ فى عينِها لا فِى وجودِها، فكلُّ اسمٍ أو صفةٍ استندَ إلى شيءٍ فذلك الشـيءُ هو الذَّاتُ، سواءٌ كان معدوما كالعَنْقَاءِ فافهم، أو موجودا، والموجودُ نوعان، نوعٌ موجودٌ محضٌ، وهو ذاتُ الباري سبحانه وتعالى، ونوعٌ موجودٌ مُلْحَقٌ بالعَدَمِ، وهو ذاتُ المخلوقات،
واعلم أنّ ذاتَ الله سبحانه وتعالى عبارةٌ عن نفسِه الّتي هو بها موجودٌ، لأنّه قائمٌ بنفسِه، وهو الشـيء الّذي استحقَّ الأسماء والصّفات بهُوِيَّتِه، فيتصوَّرُ بكلِّ صورةٍ يقتضيها منه كلُّ معنًى فيه، أعني اتّصفَ بكلِّ وصفٍ يطلبُه كلُّ نعتٍ، واستحقَّ لوجودِه كلُّ اسمٍ دلَّ على مفهومٍ يقتضيه الكمالُ، ومِن جُملة الكمالات عدمُ الانتِهاءِ ونفيُ الإدراكِ، فحُكِمَ بأنّها لا تُدركُ، وأنّها مدرِكةٌ له لاستحالةِ الجهلِ عليه،
ஷரீஆ கவுன்ஸிலின் பீடாதிபதி அவர்களே!
நீங்கள் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்கிறீர்கள். உங்களின் இக் கூற்றின் மூலம் நீங்கள் “குப்ர்” எனும் இணை வைத்தலைச் சரி கண்டுள்ளீர்கள். அவனுக்குத் தனி உள்ளமை என்றும், படைப்புக்கு தனி உள்ளமை என்றும் கூறுகிறீர்கள். இதன் மூலமும் நீங்கள் “ஷிர்க்” எனும் இணை வைத்தலைச் சரி காண்கிறீர்கள்.
உங்களின் இறை கொள்கையும், நம்பிக்கையும் யஹூதீ, நாஸாறாக்களின் கொள்கையை விட மிகப் பயங்கரமானதாக நான் காண்கிறேன்.
நீங்கள் திறமையுள்ள ஒரு மௌலவீ என்று நான் கேள்விப்பட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரிடமும் உங்களைப் பாராட்டிப் பேசியுமுள்ளேன்.
நீங்கள் ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்ள விரும்பினால், சரியான “தவ்ஹீத்” கொள்கையை அறிய விரும்பினால் என்னோடு தொடர்பாக இருந்து கொள்வது உங்கள் மீது கடமையாகும். தூர நின்று என்னைத் தூற்றி எப்பயனையும் பெற மாட்டீர்கள். என்னை நெருங்குங்கள். அல்லது என் போன்ற ஒருவரை நெருங்குங்கள். அல்லது என்னை விட அறிவில் சிகரம் சென்ற ஒருவரை அனுகுங்கள். உங்கள் “கல்பு” திறக்கப்படும்.
مَبلغ علمي فيك أنّك محجوب بالحُجب الظّلمانيّة، ومملوء بالخطرات الشيطانيّة، والأخلاق الدنيّة، والظُّملة الغيريّة، والأنّيّة والأنانيّة، ملكتك وأحاطت بكلّ عُضوٍ من أعضاء بدنك، وغطّت قلبك، وحجبتك عن رؤية الحقّ فى مظاهر الخلق،
فطهِّر فلبك أوّلا عن النّجاسات الغيريّة والأدناس النفسانيّة، والخطرات الشيطانيّة، وزكِّ سُويدائك من سوء الظّنِّ بأحد من المتصوّفين، الّذين وُلدوا للهِ وعاشوا للهِ وماتوا لله، وطالع كتب الصوفيّة الصافية، وكتب المحقّقين والمدقّقين من الصوفيّة،
وها أنا اُقدِّمُ إليك قصيدة من قصائد بحر الحقائق والدّقائق سيّدي وسندي شعيب أبى مدين المغربي قدّس سرّه، وانشدها دبر صلاة العشاء وصلاة الفجر، ربّما يأتيك فى المنام ويداويك،
اَللهَ قُلْ وَذَرِ الْوُجُوْدَ وَمَا حَوَى
إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كَمَالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ
عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ
فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
وَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا
شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِيْ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا
فِى الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
اعتبر واتّعظ، ولا تكن من العُميان،
الراغب لك الهداية،
عبد الرؤوف عبد الجواد
இவர்கள் ஸூபீகளாயிருந்தும் கூட எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்ற விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!