தொடர்: 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً
உங்களில் சிலரை சிலருக்கு குழப்பமாக ஆக்கினோம். (திருக்குர்ஆன் 25-20)
نقل الجلال السيوطي رحمه الله فى كتابه ‘ التحدّث بالنعمة ‘ وممّا أنعم الله به عليّ! أَنْ أَقَامَ لِيْ عَدُوًّا يُؤْذِيْنِيْ ويَمْزِقُ فى عِرْضِيْ ليكونَ لِي اُسْوَةٌ بالأنبياء والأولياء،
இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸூயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அத்தஹத்துது பின் நிஃமதி” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ் எனக்குச் செய்த அருட்களில் ஒன்று எனக்கு ஓர் எதிரியை ஏற்படுத்தி அவனை எனக்கு வேதனை செய்யக் கூடியவனாகவும், எனது மானம், மரியாதையை கீறிக் கிழிப்பவனாகவும் ஆக்கி வைத்ததேயாகும். இதில் எனக்கு நபீமார், வலீமார்களின் முன்மாதிரி உண்டு) என்பதாக.
மேற்கண்ட இந்த மகானுக்கு ஓர் எதிரி இருந்து கொண்டு வேதனை செய்வதை அல்லாஹ் தனக்குச் செய்த அருளாக அவர்கள் கணித்து அவ்வாறு கூறியுள்ளார்கள். இவரின் மனோ பக்குவத்தை என்னென்று வர்ணிப்பது? இப்படியொருவர் இக்காலத்திலிருந்தால் அடியார்களின் கரம் உயராமலேயே இறையருள் இறங்கும்.
அல்ஹம்துலில்லாஹ்! அவர்களுக்கு ஓர் எதிரிதான் இருந்தான். ஆனால் என்மீது இரக்கமுள்ள அல்லாஹ் எனக்கு உலமாஉகளிலும், மற்றவர்களிலும் பல்லாயிரம் எதிரிகளைத் தந்துள்ளான். இது அல்லாஹ் எனக்குச் செய்த அருளாகவே நான் கருதுகிறேன். பொது மக்கள் என்னை எதிர்ப்பதை விட மார்க்கம் கற்ற பெரும் பெரும் உலமாஉகள் எதிர்ப்பதை மா பெரும் அருளாக நான் கணிக்கிறேன்.
ஏனெனில் எம் பெருமானார் ஏந்தல் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை எதிர்த்தவர்கள் கூட என்னை எதிர்ப்பவர்கள் போல் அபூ ஜஹ்ல், அபூ லஹப், உத்பா, ஷைபா போன்ற பெரும் தலைவர்களாகவே இருந்தார்கள்.
இறைஞானி ஒருவரிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றைச் சொல்லலாமா? என்று ஒருவர் கேட்ட போது ஆம், சொல்கிறேன் என்று பின்வரும் நிகழ்வைக் கூறினார்கள்.
(நான் கப்பலொன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கப்பல் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. பயணிகள் அழுது சலித்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். நானும் “முறாகபா” தியானத்திலிருந்து என் மனதால் அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது உடைமைகளையும், எனது தலைவிரிக் கோலத்தையும் கண்ட பயணிகளில் ஒருவன் நான் நித்திரை செய்வதாக எண்ணி என்னிடம் வந்து அடே மூதேவி! இத்தருணத்தில் உறங்குகிறாயே உனக்கு அறிவில்லையா? என்று கேட்டு எனது தலை முடியையும், தாடியையும் பிடித்து குலுக்கினான்)
இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை. ஏனெனில் கப்பலில் பயணித்த பல நூறு பேர்களில் நான் மட்டுமே அவனின் பார்வையில் இழிவானவனாகத் தோற்றியிருக்கிறேன் என்றார்கள்.
இதன் மூலம் ஒருவனை மற்றவர்கள் இழிவு படுத்துவது ஸூபீ மகான்களிடம் பெரும் பாக்கியமான ஒன்றாகும் என்பது விளங்கப்படுகின்றது.
قَالَ بَعْضُ الْعَارِفِيْنَ، لَا يَكُوْنُ الصِّدِّيْقُ صِدِّيْقًا حَتَّى يَشْهَدَ سبعون صِدِّيْقًا بِأَنَّهُ زِنْدِيْقٌ
இறைஞானிகளில் ஒருவர் அல்லது பலர் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(ஒருவர் “சித்தீக்” என்ற அதியுயர் ஞானப் பதவியை பெறுவதாயின் அவரை எழுபது “சித்தீக்”குகள் “சிந்தீக்” என்று சொல்ல வேண்டும்) என்று.
இவ்வசனம் ஆழமான தத்துவத்தை உள்வாங்கிய வசனமாகும். இதை விளக்கமாக எழுதினால் விடயம் நீண்டுவிடுமென்பதால் சுருக்கமாக எழுதுகிறேன்.
“சித்தீக்” என்ற சொல் இறைஞானப் படித்தரங்களில் மிக விஷேடமான படித்தரம் பெற்ற ஒருவரைக் குறிக்கும் சொல்லாகும். இந்தப் படித்தரத்தை “சித்தீகிய்யத்” என்று இறைஞானிகள் கூறுவர். இது உயர் பதவியைக் குறிக்கும்.
“சிந்தீக்” என்ற சொல் பாரசீகச் சொல். இது “குப்ர்” எனும் நிராகரிப்பை மனதில் மறைத்து வைத்துக் கொண்டு “ஈமான்” விசுவாசத்தை வெளிப்படுத்தும் நயவஞ்சகனைக் குறிக்கும் சொல்லாகும்.
மேற்கண்ட வசனத்தின் சுருக்கமான கருத்து என்னவெனில் ஒருவர் “சித்தீக்” எனும் உயர் பதவியைப் பெறுவதாயின் அப்பதவியிலுள்ள எழுபது பேர் அவரை “சிந்தீக்” என்று சொல்ல வேண்டும் என்பதாகும்.
இவ்வசனம் மிக ஆழமான கருத்தை உள்வாங்கிய வசனமாதலால் இதை உரிய விளக்கமின்றி சுருக்கமாக எழுதினால் நான் சொல்ல நினைக்கும் கருத்தை அனைவரும் சரியாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதற்காக எழுதவில்லை.
எனினும் ஒரு விடயத்தை இங்கு சூசகமாக எழுதுகிறேன். இன்று என்னை எழுபது பேர்களல்ல எழுபதாயிரம் பேர் “முர்தத்” என்று சொன்னாலும் கூட நான் “முர்தத்” ஆகமாட்டேன். நான் அவ்வாறு ஆகுவதாயின் அவ்வாறு சொல்கின்ற எழுபது பேர்களோ, எழுபதாயிரம் பேர்களோ அவர்கள் அனைவரும் உண்மை “முஃமின்” விசுவாசிகளாயிருத்தல் அவசியம்.
இன்று என்னை எத்தனை ஆயிரம் பேர் “முர்தத்” என்று சொன்னாலும் கூட அவ்வாறு சொல்பவர்களில் ஒருவர் கூட உண்மை “முஃமின்” விசுவாசியாக இல்லாத நிலையில் நான் “முர்தத்” ஆக முடியாது. நான் “முர்தத்” ஆவதாயின் என்னை அவ்வாறு சொல்வோர் அவைரும் “முஃமின்” விசுவாசியாக இருக்க வேண்டும். என்னை அவ்வாறு சொல்பவர்களில் ஒருவர் கூட விசுவாசியில்லாத நிலையில் நான் எவ்வாறு “முர்தத்” ஆக முடியும்? “ஈமான்” விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனை விசுவாசியென்று சொல்ல முடியுமா? முடியாது.
நான் அறிந்தவரை என்னை இன்று “முர்தத்” என்று சொல்பவர்களில் ஒருவர் கூட “முஃமின்” விசுவாசி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தலைப்பிற்குரிய தொடர்:
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَشَدُّ النَّاسِ بَلَاءً اَلْأَنْبِيَاءُ ثُمَّ الْعُلَمَاءُ ثُمَّ الصَّالِحُوْنَ
மனிதர்களில் கடும் சோதனைக்குள்ளானவர்கள் நபீமார்கள். அதையடுத்து உலமாஉகள், அதையடுத்து நல்லடியார்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம், அல்ஹாகிம் (அல்முஸ்தத்றக்)
أَوْحَى اللهُ إِلَى عِيْسَى عَلَيْهِ السَّلَامُ لَا يَفْقِدُ نَبِيٌّ حُرْمَتَهُ إِلَّا فِى بَلَدِهِ،
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு “வஹீ” அறிவித்தான். “எந்த ஒரு நபீ ஆயினும் அவர் தனது கௌரவத்தை தான் பிறந்த ஊரிலேயே முதலில் இழப்பார்” என்று.
எம் பெருமானார் அவர்கள் முதலில் தங்களின் கௌரவத்தை இழந்ததும், நபீமாரில் அதிகமானோர் தமது கௌரவத்தை முதலில் இழந்ததும், அவ்லியாஉகளில் 90 வீதமானோர் இழந்ததும், ஏன் இந்தக் காத்தநகர் அப்துர் றஊப் இழந்ததும் தாம் பிறந்த ஊரிலேதான். நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “வஹீ” அறிவிப்பு உண்மையாகிவிட்டது.
قَالَ الجلالُ السُّيوطي رحمه الله واعلم أنّه ما كان كَبِيْرٌ فى عَصْرٍ قَطُّ إلّا كان له عَدُوٌّ مِنَ السَّفَلَةِ، إذِ الْأشرافُ لم تزل تُبْتَلَى بالأطْرَافِ
இமாம் ஜலாலுத்தீன் ஸூயூதீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“எந்த ஒரு காலத்தில் எந்த ஒரு பெரியார் எங்கு இருந்தாலும் அவருக்கு மனிதர்களில் கீழ்த்தரமான ஒருவன் எதிரியாகவே இருப்பான். ஏனெனில் கௌரவத்திற்குரியோர் கீழ்த்தரமானவர்களால் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்” என்று.
இவ் உண்மையை நாம் இன்று நாடெங்கும் பரவலாக காண்கிறோம். ஓர் ஊரில் ஒரு பெரிய மனிதன் இருந்தால் அவரை முதலில் எதிர்ப்பவன் அவ் ஊர்வாசிகளில் தரக் குறைவானவனாகவே இருப்பான். தரமானவர்கள் இவ்வாறான இழி செயல்கள் செய்யமாட்டார்கள்.
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸ் என்பவன் எதிரியாக இருந்தான். நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஹாம்” என்பவனும், இன்னும் சிலரும் எதிரிகளாக இருந்தனர். நபீ தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஜாலூத்” என்பவனும், இன்னும் சிலரும் எதிரிகளாக இருந்தனர். நபீ ஸுலைமான் அலைஹிஸ்லாம் அவர்களுக்கு “ஸகர்” என்பவன் எதிரியாயிருந்தான். நபீ ஈஸா அலைஹிஸ்லாம் அவர்களுக்கு அவர்களின் முதல் வாழ்வில் “புக்து நஸ்ர்” என்பவன் எதிரியாக இருந்தான். அவர்களின் இரண்டாம் வாழ்வில் “தஜ்ஜால்” எதிரியாக இருப்பான். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “நும்றூத்” என்பவன் எதிரியாயிருந்தான். நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “பிர்அவ்ன்” எதிரியாயிருந்தான். இவ்வாறு நபீமார்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் எதிரி இருந்தே வந்துள்ளான். இறுதித் தூதர் முஹம்மத் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் வரை இவ்வாறே இருந்து வந்துள்ளது.
எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “அபூ ஜஹ்ல்” எதிரியாயிருந்தான்.
பெருமானார் அவர்களின் தோழர்கள்:
وكان لابن عمر عدوٌّ يَعْبَثُ به كُلَّمَا مرَّ عليه، ونسَبُوْا عبدَ الله بن الزُّبير إلى االرِّياء والنِّفاقِ فى صلاتِه، فصبُّوا على رأسِه ماءًا حميما، فَزَلَعَ وجهُه ورأسُه وهو لا يشْعُرُ، فلمّا سلّم من صلاتِه فقال ما شأني؟ فذكروا له القِصَّةَ، فقال حسبُنَا اللهُ ونِعْمَ الوكيلُ، ومكثَ زمانا يتاَلَّمُ من رأسِه ووجهه،وكان لابن عبّاس رضي الله عنهما نافِعُ بن الأزرق كان يؤذيه أشدّ الأذى، ويقول إنّه يُفسِّرُ القرآنَ بغير علمٍ، وكان لسعد بن أبي وقّاص جَهَلَةٌ مِن جُهَّالِ الكوفة، يُؤْذُونَه مع أنّه مشهود له بالجنّة، وشَكَوهُ إلى عمر بن الخطّاب وقالوا إنّه لا يُحسن أن يصلِّيَ،
மேற்கண்ட மகான்கள் யாவரும் “அஸ்ஹாபுன் நபீ” நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்களாவர். இதற்கு முன் கூறப்பட்டவர்கள் நபீமார்களாவர். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இறைவனின் விருப்பம் எதுவோ அதுவே எமது விருப்பமாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் எதிரிகள் நபீமாரை விடவுமில்லை. நபீ தோழர்களை விடவுமில்லை என்பது தெளிவாகிறது. இவர்களே எதிர்க்கப்பட்டிருக்கும் நிலையில் நாம் எம்மாத்திரம்?
மேற்கண்ட அறபு வரிகளுக்கான மொழியாக்கம்.
நபீ தோழர் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு எதிரி இருந்தான். அவன் எங்கு எப்போது அவர்களைக் கண்டாலும் நையாண்டி பண்ணுவான்.
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னுஸ் ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை முகத்துதி உள்ளவர் என்றும், தொழுகையில் நயவஞ்சகத்தனம் உள்ளவர் என்றும் எதிரிகள் கூறினார்கள். ஒரு சமயம் அவர்கள் தொழுது கொண்டிருந்த வேளை அவர்கள் மீது கொதி நீர் – கடுஞ்சூடான நீரைக் கொட்டினார்கள். அதனால் அவர்களின் முகமும், தலையும் தோலுரிந்து போயின. ஆயினும் அவர்கள் அதை உணரவில்லை. தொழுது முடிந்ததும் எனக்கு என்ன நடந்ததென்று வினவினார்கள். விபரம் அவர்களுக்கு சொல்லப்பட்ட போது “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்” என்று சொன்னார்கள். தங்களின் தலையிலும், முகத்திலும் ஏற்பட்ட சூட்டுக் காயங்களோடு சில காலம் வேதனையுடன் வாழ்ந்து “வபாத்” ஆனார்கள்.
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹூமா அவர்களுக்கு “நாபிஉ இப்னுல் அஸ்றக்” என்பவன் கடுமையான தொல்லை கொடுத்து வந்தான். அறிவில்லாமல் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறார் என்று அவர்களைப் பற்றி தப்பான கதைகளை பரப்பி வந்தான்.
நபீ தோழர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு “கூபா” நகர் வாசிகளில் சில மடையர்கள் எதிரிகளாக இருந்து கடும் வேதனை செய்தார்கள். இவர்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்டவர்கள் என்பதையும் கருத்திற் கொள்ளாமல் வேதனை செய்தார்கள். ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவருக்கு தொழக் கூடத் தெரியாது என்று பொய் சொல்லியும் வந்தார்கள்.
இதுவரை நபீமாரில் பலரும், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்களிற் பலரும் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் எழுதினேன்.
இமாம்களில் “முஜ்தஹித்” பட்டம் பெற்ற பெரும் மகான்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றி ஆராய்வோம்.
தொடரும்…