Monday, May 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு புத்திக் காரன் பைத்தியக் காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டால்…!

ஒரு புத்திக் காரன் பைத்தியக் காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டால்…!

قال سيّدي عليّ بن وَفَا أرأيتَ لو أنكر المجانينُ على رجل عاقلٍ مخالفَتَه لأمرِهم وجُنُونِهم، أينبغي له أن يُوافِقَهم على جُنونهم، فَيَتَجَنَّنَ مِثلَهم ويَتْرُكَ عقلَه حتّى يألفُوه، وهو يُمكنُه الفرارُ بعقله؟
أوْ أرأيتَ الإنسانَ الكائنَ بين الذِّئابِ الضَّواري إذا لم يَرضَوه أن يُقيمَ بينهم، إلّا أن يمشـيَ على يديه ورجليه، مُكِبًّا على وجهه، أو حتّى يَعْوِيَ كَعَيِّهِمْ، أَيَنْبَغِيْ له أن يفعل ذلك لِيُقِيْمَ بينهم ويألفُوه مع أنّه يُمكنُه الفرارُ منهم، والإقامةُ على طريقة الإنسانيّة ، لا واللهِ لا يَنْبغِي للقادر على الخير أن يَنْسَلِخَ منه ليُرْضِيَ أهلَ الشَّرِّ، فالله ورسولُه أحقُّ أن يُرضُوه إن كانوا مؤمنين، (اليواقيت، ج أول، ص 18 )
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இமாம் அலீ வபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு புத்திக் காரன் பைத்தியக் காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டானாயின் அவன் அவர்கள் போலன்றி புத்தியானவனாகவே எல்லா வேலைகளையும் செய்வான். ஆகையால் அவனின் நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்காது. வித்தியாசமாகவே அவர்களுக்கு விளங்கும். இதனால் அவர்கள் அவனுக்கு தொல்லைகள் கொடுப்பார்கள். அவனும் இவ்வாறான கட்டத்தில் அவர்கள் போல் பைத்தியக் காரனாக நடித்தால் அவர்களின் தொல்லை முற்றாக இல்லாமற் போய்விடும். அல்லது குறைந்து விடும். இவ்வாறான கட்டத்தில் அவன் அவர்கள் போல் நடிப்பதைவிட அவன் புத்திக்காரனாயிருப்பதால் தனது புத்தியைப் பயன்படுத்தி அவர்களை விட்டும் வெளியேறுவதே சிறந்ததாகும்.

இது ஓர் உதாரணம். பைத்தியக் காரர்கள் என்பது வஹ்ஹாபிகளையும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பவர்களையும் குறிக்கும். இவர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட புத்திக் காரன் என்பது ஸூபிஸ வழி செல்லும் ஒரு ஸுன்னீயைக் குறிக்கும்.
இந்தப் பைத்தியகாரர்களின் மத்தியில் மாட்டிக் கொண்ட ஸூபிஸ வழி செல்லும் ஒரு ஸுன்னீ அந்தப் பைத்தியக் காரர்கள் போல் தானும் நடித்து வாழ்வதாயின் அவர்களின் தீமையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும். அவ்வாறு நடிக்காமல் வஹ்ஹாபிகளை எதிர்த்துக் கொண்டு அவன் வாழ்ந்தால் அவர்களால் – அந்தப் பைத்தியக் காரர்களால் ஏற்படுகின்ற இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்.
 
இவ்வாறான சூழ்நிலையில் புத்திக் காரனான ஸூபிஸ வழி வாழும் ஸுன்னீ தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள “அக்ல்” என்ற புத்தியைப் பயன்படுத்தி அவர்களை விட்டும் வெளியேறுவதா? அல்லது அவர்கள் போல் தானும் நடந்து வாழ்வதா?
 
இதற்கான, புத்தியான வழி என்னவெனில் அவர்கள் போல் அவனும் நடித்து வாழாமல் அவன் அவர்களை விட்டும் வெளியேறி ஸூபிஸ, ஸுன்னீ வழியிற் செல்வோருடன் சேர்ந்து கொள்வதே சிறந்ததாகும்.
 
அவர்களுக்கு மத்தியில் அவர்கள் போல் வாழ்வதாயின் ஸூபிஸ வழியையும், ஸுன்னீ வழியையும் எதிர்க்க வேண்டும். அவ்லியாஉகளை ஏச வேண்டும். ஸுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளை எதிர்க்க வேண்டும். கப்றுகளை உடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் போல் யஹூதீ, நஸாறாக்கள் போல் வாழ வேண்டும்.
 
இன்னுமோர் உதாரணம். புத்தியுள்ள ஒருவன் சிங்கம், கரடி, புலி போன்ற பயங்கர மிருகங்கள் வாழும் ஒரு காட்டில் மாட்டிக் கொண்டானாயின் அவன் அவர்களின் தீமையிலிருந்து தப்பிக் கொள்வதற்கு இரண்டு வழிகளில் ஒன்றை அவன் கையாள வேண்டும்.
 
ஒன்று: அவனும் அந்த மிருகங்கள் போல் நடிக்க வேண்டும் – வேஷம் போட வேண்டும். அதாவது மிருகங்கள் போல் நாலு காலில் நடக்க வேண்டும். அவற்றைப் போல் சத்தமிட வேண்டும். சிங்கம் போல் கர்ஜிக்க வேண்டும். நரிபோல் ஊளையிட வேண்டும். யானை போல் பிளிற வேண்டும். உடலமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். மலம் சாப்பிட வேண்டும். மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடவும் வேண்டும்.
 
இரண்டு: இவ்வாறெல்லாம் செய்து மிருகங்கள் போல் வாழாமல் அவன் புத்திக்காரனாயிருப்பதால் தனது புத்தியைப் பயன்படுத்தி அவர்களின் அட்டூழியத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் தப்பிக் கொள்வதற்கான வழிகளைத் திறந்து கொள்ள வேண்டும்.
 
இவ்விரு வழிகளில் இரண்டாவது வழியே புத்தியுள்ள மனிதனுக்குச் சிறந்த வழியாகும். ஏனெனில் முதலாவது உதாரணத்தில் குறிப்பிட்டவாறு புத்தியுள்ள ஒருவன் பைத்தியக் காரர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் போல் நடித்து வாழ்வதும், இரண்டாவது உதாரணத்தில் குறிப்பிட்டவாறு புத்தியுள்ள ஒருவன் பயங்கர மிருகங்கைளத் திருப்திப்படுத்துவதற்காக அவைபோல் நடித்து வாழ்வதும் கூடாது.
 
பைத்தியகாரர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அவர்களின் தீமையிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும் புத்தியுள்ள ஒருவன் அவர்கள் போல் நடிப்பது புத்திக்காரனின் பண்பல்ல. இதேபோல் பயங்கர மிருகங்ளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அவற்றின் தீமையிலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும் புத்தியுள்ள ஒருவன் அவைபோல் நடிப்பதும் புத்திக் காரனின் பண்பல்ல.
 
எனவே, மேற்கண்ட இரு உதாரணங்கள் மூலம் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் முதலாம் உதாரணத்தில் பைத்தியக்காரர்கள் என்று இறைஞானி அலீ இப்னு வபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்ட வஹ்ஹாபிகள் போன்ற கொள்கைக் குருடர்கள், இரண்டாம் உதாரணத்தில் மிருகங்கள் என்று குறிப்பிட்ட “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் எதிரிகள் மத்தியில் மாட்டிக் கொண்ட ஒரு புத்திக்காரனான ஸூபிஸ வழி நடக்கும் ஸுன்னீ எக்காரணம் கொண்டும் பைத்தியகாரர்கள் போல் தானும் நடித்து வாழாமலும், மிருகங்கள் போல் நடித்து வாழாமலும் தனது புத்தியைப் பயன்படுத்தி அவர்களின் காற்றுக் கூடப் படாமல், நிழற் கூடப் படாமால் ஒதுங்கி வாழ்வதே சிறந்தது என்பதாகும்.
 
1979ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பைத்தியக் காரர்களும், மிருகங்களும் புத்திக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தே வந்தனர். அடித்தனர், வீடுகளை எரித்தனர், கடைகளை உடைத்தனர், கொள்ளையடித்தனர், இன்னும் பல இன்னல்கள் செய்தனர்.
 
ஆனால் 2019ம் ஆண்டிற்குப் பிறகு பைத்தியகாரர்களும், மிருகங்களும் இருந்தாலும் கூட அல்லாஹ் அவர்களுக்கு நல்வழியைக் காட்டிவிட்டான் போலும். மனித இதயங்களையும் வழங்கிவிட்டான் போலும். அல்ஹம்து லில்லலாஹ். لكم دينكم ولي دين
(2019ம் ஆண்டுதான் மனிதனைப் பைத்தியமாக்கும் வழிகேடு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது)
 
மேற்கண்ட அறபு வசனங்களில் வந்துள்ள أَرَأَيْتَ என்ற சொல்லுக்கு நீ கண்டாயா? என்ற பொருள் சாதாரணமாக அறபு மொழி தெரிந்த அனைவரும் குறித்த பொருளுக்கு பயன்படுத்துகின்ற சொல்தான்.
 
எனினும் அறபு மொழி நடையில் இச் சொல் “நீ எனக்குச் சொல்” أَخْبِرْنِيْ என்ற பொருளுக்கு பயன்படுத்துவதுண்டு. இங்கு இதே பொருளைக் கொள்வது நல்லது.
 
تَجَنَّنَ
என்ற சொல்லுக்கு أَرَى مِنْ نَفْسِهِ أنّه مجنون தான் ஒரு பைத்தியம் என்று மற்றவர்களுக்கு காட்டினான் என்று பொருள் வரும். அதாவது வைத்தியக் காரனாக நடித்தான் என்று பொருள்.
يَأْلَفُ
என்ற சொல்லுக்கு اَنِسَ به وأحبّه ஒருவருடன் நெருங்கியிருந்தான். ஒருவனை விரும்பினான் என்று பொருள் வரும்.
 
اَلِفَ يَالَفُ اَلْفًا
الذِّئَاب – جمع ذِئْبٍ : الضواري
عَوَى – يَعْوِيْ – عُوَاءً – الذِّئب صوَّتَ أو مدَّ صوتَه
اِنْسَلَخَ – من ثِيابِه تحرَّدَ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments