Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நபீமாரில் அதி சிறப்புக்குரிய நபீ விசுவாசிகளின் இதயத்தில் வாழும் இறுதி நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்...

நபீமாரில் அதி சிறப்புக்குரிய நபீ விசுவாசிகளின் இதயத்தில் வாழும் இறுதி நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அண்மையில் யாரோ ஒருவர் நபீகட்கரசர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் சிறந்தவர்கள் என்று பேசியுள்ளார்.
 
இவரின் கசப்பான, உண்மைக்குப் புறம்பான பேச்சைத் தொடர்ந்து இவர் பற்றிப் பொது மக்களும், படித்தவர்களும், மற்றும் நபீ பெருமானின் காதலர்களும் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள். இவர் சல்மான் றுஷ்தியின் மறு உருவமோ என்று கூட சந்தேகம் கொள்கிறார்கள்.

இவர் கலப்பில்லாத வஹ்ஹாபிஸக் கொள்கை உடையவர் என்றும், தமிழ் நாட்டிலும், இலங்கை நாட்டிலும் வஹ்ஹாபிஸ வழி கேடு பரவுவதற்கு இவர்தான் பிரதான காரணி என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
 
இது மட்டுமல்ல. இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படியொரு கீழ்த்தரமான கருத்தைக் கூறியவர் இவர் மட்டும்தான் என்றும் சொல்கிறார்கள்.
 
இதேபோல் பன்றியின் இறைச்சை மட்டும்தான் சாப்பிடக் கூடாதேயன்றி அதன் ஈரல், குடல், மூளை போன்றவற்றை சாப்பிடலாம் என்று சொன்ன முதல் மனிதனும் இவர்தான் என்றும் முச்சந்திகளில் நின்று முளங்குகிறார்கள்.
 
இன்னுமிதேபோல் நானிலம் போற்றும் நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷா எஜமான் அவர்களை உலக மக்களில் மிகக் கீழ்த்தரமாக திட்டித் தீர்த்தவரும் இவர்தான் என்று சந்திகளில் சத்தமிடுகிறார்கள்.
 
இன்னுமிதேபோல் திருக்குர்ஆனையும், திரு நபீயின் அருள் மொழிகளையும் விளங்குவதற்கு இமாம்கள் தேவையில்லை என்று சொன்ன முதல் மனிதன் இவர்தான் என்றும் சொல்கிறார்கள்.
 
இன்னுமிதேபோல் “மத்ஹப்”கள் தேவையில்லை என்றும், அவை வழி கேடு என்றும் சொன்னவர் இவர்தான் என்றும் சீறுகிறார்கள்.
 
இன்னுமிதேபோல் ஸூபிஸமுமில்லை, ஸூபீகளுமில்லை என்று சொன்ன முதல் மனிதன் இவர்தான் என்றும் குமுறுகிறார்கள்.
 
இவ்வாறு “ஷரீஆ” சட்டங்களிலும், திருக்குர்ஆன், ஹதீதுகளின் விளக்கங்களிலும் புதிய கருத்துக்கள் கூறியவர் இவர்தான் என்றும் எரிகிறார்கள்.
 
பொது மக்கள் பேசுவதை ஆதாரமாகக் கொண்டு இவரை எடை போடாமலும், எதிர்க்காமலும் இவரின் பேச்சை நானும் என் காதால் கேட்ட பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்காக 10.10.2022 முதல் 22.10.2022 வரை தமிழ் நாட்டில் இருந்தும், அதன் பிறகு 31.10.2022 வரை இலங்கை நாட்டில் இருந்தும் இவரின் பேச்சுக்களை என் காதால் கேட்ட பிறகுதான் இக்கட்டுரை எழுத எழுதுகோலை எடுத்தேன்.
 
இவர் தொடர்பாக எனது கருத்தை எதிர் பார்க்கின்ற, இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த எனது “முரீத்” சிஷ்யர்கள், “முஹிப்பீன்” நேசர்களுக்காகவும், மற்றும் நான் கூறிய ஸூபிஸ ஞானத்தை தலை கீழாய்ப் புரிந்ததினாலோ, அல்லது வஹ்ஹாபிகளின் தூண்டுதலினாலோ, அல்லது தமது மன முரண்டினாலோ எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று உயிரற்ற “பத்வா” வழங்கிய அறிவிலிகளான முல்லாக்களின் “பத்வா”வை குப்பையில் தூக்கியெறிந்துவிட்டு என்னையும், எனது ஆதரவாளர்களையும் முஸ்லிம்களாகப் பார்க்கின்ற முஸ்லிம்களுக்காகவும் இவர் – இந்த மகான் தொடர்பாக நான் கூறும் கருத்து இப்னு தைமிய்யா தொடர்பாக இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் கூறியுள்ள கருத்தேயாகும். இதன் விபரம் பின்னால் எழுதப்பட்டுள்ளது.
 
இந்த மகான் ஓர் ஆய்வாளரும், திறமையுள்ளவரும், சிந்தனையாளரும், செல்வந்தரும், பேச்சாளரும் என்பதை நான் அறிவேன். எனினுமிவர் “வஹ்ஹாபிஸம்” எனும் வழிகேடான கொள்கையை சரி கண்டு அதை ஏற்றுக் கொண்ட முழு வஹ்ஹாபீயாக இருந்தாலும் கூட இவர் இலங்கை நாட்டிலுள்ள வஹ்ஹாபீகள் போல் சந்தர்ப்ப சூழலுக்கேற்றவாறும், தனது சுய நலத்திற்கேற்றவாறும் தடம் புரளாமலும், திசை மாறிப் பறக்காமலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவராவார். இந்த வகையில் இவரை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் இலங்கை நாட்டு வஹ்ஹாபிகளிற் பலர் மீலாத் விழா “பித்அத்” என்றும், “மத்ஹப்”கள் “பித்அத்” என்றுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆயினுமிவர்கள் தமது வாசிக்காக தற்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ஹாபிகளுடன் சேர்ந்து கொண்டு மீலாத் விழா கொண்டாலாம், மத்ஹப்களைப் பின்பற்றலாம் என்று தடம் புரண்டு “பத்வா” கொடுக்கிறார்கள். இவர்களை நான் உலமாஉகள் என்று சொல்லமாட்டேன். யாரும் சொல்வதும் கூடாது. இவர்கள் அனைவரும் “துன்யாதாரி”களேயாவர்.
 
இவர் கொள்கையில் “ஸுன்னீ”யாகவும், ஸூபீயாகவும் இருப்பாராயின் இவர்தான் இக்கால “ஷெய்குல் இஸ்லாம்” ஆக ஒளிர்வார். பல நாடுகளிலும் இவர் வழி செல்பவர்கள் இருப்பார்கள். அதாவது இவருக்கு பல்லாயிரம் முரீது – சிஷ்யர்கள் இருப்பார்கள். இவருக்காக முன் கூட்டியே “தர்ஹா”வும் கட்டி வைத்திருப்பார்கள். இதுவே எதார்த்தம். இது எனது கருத்து. இவரையும், இவர் போன்றவர்களையுமே ஸூபிஸ மகான்கள் أَضَلَّهُمُ اللهُ على علمٍ அல்லாஹ் அறிவைக் கொடுத்து அவர்களை வழி கெடுத்துவிட்டான் என்று வர்ணிக்கிறார்கள். மலை உச்சியிலிருந்து மாங்காய்ப் பால் குடிக்க வேண்டிய மகான் சாக்கடையில் விழுந்து கிடப்பது இவரின் “நஸீப்” விதி என்றால் அது பிழையாகாது.
 
النصيب يصيب ولو كان بين جبلين – النصيب لا يصيب ولو كان بين شفتين
நக்குண்பதற்கும் “நஸீப்” பாக்கியம் வேண்டும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக் காட்டாவார்.
 
இவர் நாகூர் நாயகம் எஜமான் காலடி சென்று நாற்பது நாட்கள் தங்கியிருந்து மனமுருகி அவர்களிடம் கெஞ்சிக் கேட்பாராயின் இவரின் “நஸீப்” விதியை மாற்ற அவர்களால் முடியும். “அல்லாஹு அக்பர்”
 
இவர் குறித்து எனது கருத்து இப்னு தைமிய்யா குறித்து இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய கருத்தேயாகும். இதோ அவர்களின் கருத்து.
 
سئل نفع الله به، بما لفظه لابن تيميّة إعتراضٌ على متأخّرى الصوفيّة، وله خوارقُ فى الفقه والأصول، فما محصّل لذلك، فأجاب بقوله،
ابن تيميّة عبدٌ خذله الله وأضلّه وأعماه وأصمّه وأذلّه، وبذلك صرّح الأئمّة الّذين بيّنوا فسادَ أحواله وكَذِبَ أقواله، ومن أراد ذلك فعليه بمطالعة كلام الإمام المجتهد المتَّفَقِ على إمامته وجلالته وبُلوغِه مرتبةَ الإجتهاد أبى الحسن السبكي، وولده التاج، والشّيخِ الإمامِ العِزِّ بن جماعة، وأهلِ عصرهم وغيرِهم من الشافعيّة والمالكيّة والحنفيّة،
ولم يقصـر اعتراضَه على متأخّرى الصوفيّة، بل اعترض على مِثلِ عمر بن الخطّاب وعليّ بن أبي طالب رضي الله عنهماكما يأتي،
والحاصل أَنْ لا يُقام لكلامه وزنٌ، بل يُرمى فى كلّ وَعْرٍ وحزن، ويُعتقد فيه أنّه مُبْتَدِعٌ ضالٌّ ومُضِلٌّ جاهلٌ غالٍ، عامله الله بعَدْلِه، وأجارنا من مِثلِ طريقته وعقيدتِه وفعلِه آمين،
 
வழிகேட்டின் தந்தை இப்னு தைமிய்யஹ் பற்றி ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூல் 86ம் பக்க ஆரம்பத்திலிருந்து 87ம் பக்கம் முடியும் வரை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள்.
 
அவை யாவையும் அறபு மொழியிலும் எழுதி தமிழிலும் மொழியாக்கம் செய்தால் இப்பிரசுரம் பல பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாகிவிடும். ஆகையால் சுருக்கமாக எழுதியுள்ளேன். மேலதிக விளக்கம் தேவையானோர் குதர்க்கம் பண்ணவோ, விவாதம் செய்யவோ என்னிடம் வராமல் அறிவைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் வருமாறு அன்பாயும், பணிவாயும் கேட்டுக் கொள்கிறேன்.
 
இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூலில் அவர்கள் எழுதியுள்ளவற்றில் மிக முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு தருகின்றேன்.
 
கேள்வி: இமாம் இப்னு ஹஜர் அவர்களே! இப்னு தைமிய்யஹ் என்பவர் பின்னோர்களான ஸூபீகளை ஆட்சேபித்துள்ளதுடன் “பிக்ஹ்” என்ற சட்டக் கலையிலும் பல தவறுகள் செய்துள்ளார். இவர் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் “பத்வா” மார்க்கத் தீர்ப்பு என்ன?
 
பதில்: (இப்னு தைமிய்யஹ் என்பவர் அல்லாஹ் கீழ்த்தரமாக்கிய, வழி கெடுத்த, குருடாக்கிய, செவிடாக்கிய அல்லாஹ்வின் ஓர் அடியானாவார்.
 
இவ்வாறுதான் அவரின் கெட்ட நிலைமைகளையும், அவரின் பொய், புரட்டுகளையும் விவரித்த பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.
 
யாராவது இவரின் பொய், புரட்டுகளை அறிய விரும்பினால் எல்லா இமாம்களாலும், அறிஞர்களாலும் “முஜ்தஹித்” என்று போற்றிப் புகழப்பட்ட இமாம் அபுல் ஹஸன் அஸ் ஸுப்கீ றஹிமஹுல்லாஹ், அவர்களின் மகன் இமாம் தாஜுத்தீன் அஸ் ஸுப்கீ றஹிமஹுல்லாஹ், அஷ்ஷெய்குல் இமாம் அல் இஸ்ஸுப்னு ஜமாஅஹ் றஹிமஹுல்லாஹ் ஆகியோர்களினதும், அவர்கள் காலத்தைச் சேர்ந்த ஷாபிஈ, மாலிக், ஹனபீ மத்ஹபுகளைப் பின்பற்றிய இமாம்களினதும் நூல்களை வாசித்தறிந்து கொள்ள வேண்டும். இம் மூன்று மத்ஹபுகளும் குறிப்பாக கூறப்பட்டதற்கான காரணம் இவரை எதிர்த்தவர்களில் அநேகர் இம் மூன்று மத்ஹபுகளையும் சேர்ந்தவர்களாக இருந்ததேயாகும்.
 
இப்னு தைமிய்யஹ் என்பவர் ஸூபீகளில் பின்னோர்களான மகான்களை ஆட்சேபித்ததோடு நின்றுவிடாமல் பெருமானாரின் கலீபஹ்களான ஸெய்யிதுனா உமர், ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களையும் ஆட்சேபித்துள்ளார்.
 
சுருக்கம் என்னவெனில் (இப்னு தைமிய்யஹ்வின் பேச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை, அவரின் பேச்சு சாக்கடையில் எறியப்பட வேண்டியதாகும். அவர் பற்றிய சுருக்கம் என்னவெனில் அவர் ஒரு “பித்அத்” காரர், வழி தவறியவர், வழி கெடுப்பவர், வரம்பு மீறிய அறிவிலி என்பதாகும். அல்லாஹ் அவர் விடயத்தில் தனது நீதியை நிலை நாட்டுவானாக! அவரின் கொள்கையில் இருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக!) மேலே எழுதிய அறபு பந்திகளின் தமிழாக்கம் இதோடு முடிவடைகிறது.
 
இப்னு ஹஜர்
 
இவர்கள் அஹ்மத் இப்னு முஹம்மத், இப்னு அலீ, இப்னு ஹஜர் அல்ஹைதமீ, அஸ்ஸஃதீ, அல் அன்ஸாரீ, ஷிஹாபுத்தீன் ஷெய்குல் இஸ்லாம், அபுல் அப்பாஸ் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
 
இவர்கள் “மிஸ்ர்” நாட்டின் “அபுல் ஹைதம்” பிரதேசத்தில் ஹிஜ்ரீ 909ல் பிறந்து 974ல் (கி.பி 1503-1566) மரணித்தார்கள்.
 
இவர்கள் “பிக்ஹ்” சட்டக்கலை ஆய்வாளரும், பல்கலை எழுத்தாளருமாவார்கள். கெய்ரோ அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் படித்துள்ளார்கள். திரு மக்கா நகரில் மரணித்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஸஊதி நாடு வஹ்ஹாபிஸம் பிறந்த நாடாகவும், அது வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பதால் அங்கு அவர்களுக்கு “தர்ஹா” இல்லாமற் போயிற்று.
 
இலங்கை நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் அறபுக் கல்லூரிகளில் பல்லாண்டுகள் கல்வி கற்று வெளியாகும் மௌலவீ ஒருவர் தனது கல்லூரி வாழ்வில் ஆயிரம் தரமேனும் இவர்களின் பெயர் சொல்லியிருப்பார் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும். வெளியாகும் மௌலவீ மட்டுமல்ல உஸ்தாதுமாரும் இவ்வாறுதான்.
 
“இப்னு ஹஜர்” என்றால் “கல்லின் மகன்” என்று பொருள். அறபுக் கல்லூரிகளில் எமக்கு கற்றுத் தந்த உஸ்தாதுமார் “கல்லை உடைத்தாலும் இப்னு ஹஜரின் சொல்லை உடைக்க முடியாது” என்று எம்மிடம் கூறியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடற்குரியதாகும். இவ்வாறு கற்றுத் தந்த உஸ்தாதுமார்களிற் சிலர் இப்போது வஹ்ஹாபிஸத்திற்கு வால் பிடித்துக் கொண்டு இப்னு ஹஜர் என்றால் யார் என்று வால் முறுக்குவது விந்தையாக உள்ளது.
 
இவர்கள் “வபாத்” மறைந்து 469 வருடங்கள் கடந்து விட்டன. இவர்கள் உலகப் புகழ் பெற்ற இறைஞான மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றியும், அவர்களின் நூல்களை வாசிப்பது, கற்றுக் கொள்வது பற்றியும் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் பல இடங்களில் கூறியுள்ளார்கள் என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
 
இவர்கள் பல்கலைகளிலும் 20க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய மகான் ஆவார்கள். நூல்களின் பெயர்கள் தேவையானோர் எம்மோடு தொடர்பு கொண்டால் தரப்படும்.
 
இவர் – இந்த வஹ்ஹாபீ மகான் தனது உரை ஒன்றில், (எமது உயிரிலும் மேலான, நபீகட்கரசரான, தரணி போற்றும் தாஹாவான, முழுவுலகின் முழுமதியான, اَلْمَظْهَرُ الْأَتَمُّ “அல்மள்ஹறுல் அதம்மு” சம்பூரணக் கண்ணாடி என்று வர்ணிக்கப்படுபவர்களான, تَاجُ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنْ அனைத்து நபீமார், றசூலுமாரின் கிரீடமான, மானும், உடும்பும் ஸலாமுரைத்த மனுகுல மாணிக்கமான, سَعَتِ الشَّجَرُ “ஸஅதிஷ் ஷஜரு” மரத்தைப் பார்த்து என் காலடிக்கு வா என்று சொன்னதும் அது அவர்களின் காலடி வந்த கருணை மிகு நபீயுமான, نَطَقَ الْحَجَرُ “நதகல் ஹஜரு” கையிலிருந்த கல் பேசியவர்களுமான, رُوْحُ كُلِّ خَلْقٍ “றூஹு குல்லி கல்கின்” கற் கரடு புற் பூண்டு முதலான அனைத்து படைப்புகளினதும் உயிரானவர்களான, شُقَّ الْقَمَرُ “ஷுக்கல் கமறு” சந்திரனைப் பார்த்து வா என்றழைத்த போது அது இரண்டாகப் பிழந்து அவர்களின் காலடி வந்தவர்களுமான, சந்திரத் தரையில் ஏற்பட்ட வெடிப்புக்கு காரணமானவர்களுமான முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே சிறந்தவர்கள்) என்று கூறியுள்ளார். நபீகட்கரசரை இரண்டாமிடத்தில் பார்க்கிறார்.
 
இவரின் இக்கூற்று சர்வதேச மட்டத்தில் ஒரு புரளியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகால வரை இஸ்லாமிய அறிஞர்களாலோ, பிற மத அறிஞர்களாலோ இப்படியொரு கருத்து கூறப்படவே இல்லை. அப்புஹாமியும், அருணாச்சலமும், அந்தோனியும் புகழ்மாலை சூடிய எம்பிரானுக்கு இவர் இகழ் மாலை சூடியிருப்பது இவர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 
இவ்வாறு கூறிய மகானிடம் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இவர் சீறி எழாமல் சரியான பதில் தருவார் என்று நம்புகிறேன்.
 
கேள்வி ஒன்று: அறிஞர் மகானே! “நபீ பெருமான் அவர்களின் சத்தத்தை விட உங்களின் சத்தத்தை உயர்த்தாதீர்கள். அவ்வாறு உயர்த்தினீர்களாயின் உங்களின் “அஃமால்” வணக்கங்கள் யாவும் அழிந்து விடும்” என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான். (49-02)
 
ஒருவன் செய்கின்ற எந்தப் பாவமாயினும் அதனால் அவன் முன்னர் செய்த எந்த ஓர் “அமல்” வணக்கமும் அழிந்து போவதில்லை. அவன் செய்கின்ற பாவத்திற்கு தண்டனை, அல்லது மன்னிப்பு உண்டேயன்றி அதனால் அவன் செய்த எந்த ஓர் “அமல்” வணக்கமும் அழிந்து போவதில்லை. அது விபச்சாரமாயினும், கொலையாயினும் சரியே. செய்த பாவத்திற்கு தண்டனை உள்ளதேயன்றி செய்த “அமல்” அழிந்து போவதில்லை.
 
ஆயினும் ஒருவன் நபீ பெருமானின் சத்தத்தை விட தனது சத்தத்தை உயர்த்திப் பேசினால் அந்தப் பாவத்தால் அவர் அதற்கு முன்னர் செய்திருந்த எல்லா வணக்க வழிபாடுகளும் அழிந்து விடுமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.
 
இதிலுள்ள இரகசியம் என்னவெனில் ஒருவன் மதம் மாறினால் மட்டுமே அவன் முன்னர் செய்த எல்லா அமல்களும் அழிந்து போகும். வேறெந்தப் பாவத்தைக் கொண்டும் அவன் செய்த வணக்கம் அழிவதில்லை.
 
இதன் மூலம் நபீ பெருமானின் சத்தத்தை விட ஒருவன் தனது சத்தத்தை உயர்த்திப் பேசுவதால் அவன் “முர்தத்” மார்க்கத்திலிருந்து வெளிப்பட்டு விட்டான். “முர்தத்” ஆகிவிட்டான் என்ற உண்மையும், நபீ பெருமானின் சத்தத்தை விட ஒருவன் தனது சத்தத்தை உயர்த்திப் பேசுவது விபச்சாரம், கொலை, களவு போன்ற பாவங்களை விடக் கடுமையான பாவம் என்பதும் தெளிவாகின்றன.
 
நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேலானவர்கள் என்று கூறிய மகானிடம் இவ்வாறு ஒரு சிறப்பு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உண்டா? அவ்வாறாயின் அதற்கான ஆதாரம் என்ன? என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
 
கேள்வி இரண்டு: நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முன்னால் பார்ப்பது போல் பின்னாலும் பார்ப்பவர்கள் என்று நபீ மொழிகள் கூறுகின்றன. நபீ பெருமான் அவர்கள் தமது தோழர்களிடம் إِنِّيْ أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِيْ “நிச்சயமாக நான் உங்களை என் பின்னாலும் பார்க்கிறேன்” என்று கூறியதாக ஹதீதுகளில் வசனங்கள் வந்துள்ளன.
 
இத்தகைய சிறப்பு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்ததா? அதற்கான ஆதாரம் என்ன?
 
கேள்வி மூன்று: நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு சமயம் தங்களின் தலை முடியை களைந்து அதை தோழர் அபூ தல்ஹா றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை اِقْسِمْ பங்கு வைத்துக் கொடுக்குமாறு பணித்தார்கள். தோழர் அவ்வாறே செய்தார்கள்.
 
இவ்வாறு அவர்கள் செய்தது தங்களின் திருமுடியிலுள்ள “பறகத்” அருளை மற்றவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும். இதுவே அவர்களின் நோக்கம் என்பதை பல நபீ மொழிகள் உறுதி செய்கின்றன.
 
இத்தகைய சிறப்பு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முடிகளுக்கு இருந்ததா? எப்போதாவது அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்களா? ஆதாரங்களுடன் விடை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
கேள்வி நான்கு: பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு எத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அனுமதி இருந்தது. அவர்கள் பல மனைவியர்களை வைத்திருந்தார்கள். அவர்கள் எத்தனை பேர் என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அவர்கள் “வபாத்” மரணிக்கும் போது ஒன்பது மனைவியர் இருந்தனர் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
 
இவ்வாறு பல மனைவியர்களைத் திருமணம் செய்யும் சிறப்பு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்ததா? அவர்களுக்கு எத்தனை மனைவியர் இருந்தனர்? அவர்களின் பெயர் விபரங்களுடன் விடை தருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
கேள்வி ஐந்து: பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூக்குச் சிந்தினால் அல்லது உமிழ்ந்தால் அதை தோழர்கள் போட்டி போட்டு தமது கைகளில் எடுத்து தமது உடல்களில் தடவிக் கொண்டார்கள் என்று பல நபீ மொழிகள் கூறுகின்றன.
 
இப்படியொரு சிறப்பு நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்ததா?
 
கேள்வி ஆறு: நபீ இப்ஹாறீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட உலகில் தோன்றிய எந்தவொரு நபீயும் இறைவனின் விஷேட அழைப்பின் பேரில் “மிஃறாஜ்” விண்ணுலகப் பயணம் மேற் கொண்டதாக எங்காவது கூறப்பட்டுள்ளதா? ஏழு வானங்களையும் கடந்து வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட செல்ல முடியாத இடம் சென்று அல்லாஹ்வைக் கண்டதாக, அவனுடன் உரையாடியதாக, தனது விருந்தினரான பெருமானாருக்கு தொழுகையை பரிசாக வழங்கியது போல் பரிசு வழங்கியதாக வரலாறுண்டா?
 
நபீ பெருமானாரை விட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் சிறந்தவர்கள் என்று கூறி இன்று உலகில் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களை வேதனைப்படுத்தியுள்ள நீங்கள் எனது கேள்விகளுக்கான விடைகளை ஆதாரங்களுடன் தருமாறு உங்களை நான் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
 
உங்களின் கொள்கைகளும், கருத்துக்களும் இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோரின் கொள்கைகளைத் தழுவிய கொள்கைகளாகவே நான் பார்க்கிறேன். இது தொடர்பாகவும் உங்களுடன் பேசுவதற்கு நான் விரும்புகிறேன். நீங்கள் தொடர்ந்தால் நானும் தொடர்வேன்.
 
இன்ஷா அல்லாஹ்!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments