தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் அது பருந்தாகாது.
கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி.
01.
طُلَيْحَةُ بْنُ خُوَيْلِدٍ اَلْأَسَدِيِ
துலைஹதுப்னு குவைலிதில் அஸதீ
02.
اَلْأَسْوَدُ الْعَنْسِيْ
அல் அஸ்வதுல் அன்ஸீ
03.
لَقِيْطُ بْنُ مَالِكٍ اَلْأَسَدِيْ
லகீதுப்னு மாலிகில் அஸதீ
04.
مُسَيْلَمَةُ الْكَذَّابْ
முஸைலமதுல் கத்தாப்
05.
سَجَاحْ بِنْتُ الْحَارِثْ بْنِ سُوَيْدٍ التَّمِيْمِيَّةْ
ஸஜாஹ் பின்துல் ஹாரித் இப்னு ஸுவைத் அத்தமீமிய்யா
விபரம்:
முதலாம் நபர்
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “வபாத்” மறைவுக்குப் பின் தன்னை நபீ என்று தனது “பனூ அஸத்” கூட்டத்தாரிடம் கூறி நபித்துவத்தை வாதிட்டான்.
அவ்வேளை “நஜ்த்” பிரதேச வாசிகள் “தை”, “ஙத்பான்” கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவனைப் பின்பற்றினார்கள்.
இவன் அகழ்ப்போரின் போது முஸ்லிம் படைக்கு எதிராகச் செயல்பட்டான். இவன் அதன் பின் இஸ்லாமில் இணைந்து கொண்டான். ஆயினும் தனது தலைவிதிப் படி பின்னர் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டான். இவனை “நஜ்த்”வாசிகளிற் பலர் பின்பற்றினார்கள்.
“நஜ்த்” என்ற ஊர் வஹ்ஹாபிஸ வழிகேட்டின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனின் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
நபித்துவத்தை வாதிட்டவர்களிற் பலர் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனின் குலத்தைச் சேர்ந்தவர்களேயாவர். இக் குலம் “நஜ்த்” எனும் இடத்தைச் சேர்ந்த “பனூ தமீம்” கூட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாம் நபர்:
اَلْأَسْوَدُ الْعَنْسِيْ: عَبْهَلَةُ بْنُ كَعْبٍ بْنِ غَوْثِ الْعَنْسِيْ
அல் அஸ்வதுல் அன்ஸீ: அப்ஹலதுப்னு கஃபிப்னி ஙவ்தில் அன்ஸீயாவான்.
இவன் கடுமையான கறுப்பு நிறமுள்ளவனாயிருந்ததால் اَلْأَسْوَدْ “அல் அஸ்வத்” என்று அழைக்கப்பட்டான். இன்னும் “பர்தா” முகமூடிக் காரன் என்றும் அழைக்கப்பட்டான்.
இவன் எந்நேரமும் தனது முகத்தை மெல்லிய துணியால் மறைத்துக் கொண்டே இருப்பான்.
(இவன் நபித்துவத்தை வாதிட்டு அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளான காரணத்தினால் அவமானம் தாங்க முடியாமல் முகத்தை மறைத்துக் கொண்டான் என்று நான் கருதுகிறேன்)
இவனின் வரலாறை விபரமாக அறிய விரும்புவோர் இமாம் தபரீ றஹமஹுல்லாஹ் அவர்களின் تاريخ الطبري – தாரீகுத் தபரீ எனும் நூலையும், இமாம் இப்னுல் கதீர் றஹிமஹுல்லாஹ் அவர்களின் البداية والنهاية என்ற நூலையும் பார்க்கலாம்.
இவன் ஹிஜ்ரீ 10ம் ஆண்டு, கி.பி 631ல் எமன் நாட்டின் “முத்ஹஜ்” கூட்டத்துடன் இருந்தான்.
இவன் பிரசித்தி பெற்ற மந்திரவாதியாகவும், மாயாஜாலம் செய்பவனாகவும் இருந்தான்.
இவன் சுமார் மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே தன்னை நபீ என்று வாதிட்டுக் கொண்டிருந்தான். எனினும் மக்கள் அவனை ஏற்றுக் கொள்ளாமற் போனதால் அவ்வாறு வாதிடுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டான். ஆயினுமிவன் நபீ என்று வாதிட்ட காலத்தில் மார்க்கத்திற்கு முரணான பல காரியங்கள் செய்தான்.
மூன்றாம் நபர்:
لَقِيْطُ بْنُ مَالِكٍ الْأَزْدِيْ
லகீத் இப்னு மாலிகில் அஸ்தீ
இவன் நபித்துவத்தை வாதிட்டதுடன் “அம்மான்” (ஜோர்தான் நாட்டின் தலநகர்) நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கினான். ஆட்சியாளர்களில் மாற்றம் செய்தான். அந்நாட்டு தலைவரை நாட்டிலிருந்து வெளியேற்றினான்.
ஹிஜ்ரீ 8ம் வருடம் (கி.பி 629)ல் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களான அபூ செய்த் அல் அன்ஸாரீ, அம்றுப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹுமா இருவரையும் “அம்மான்” ஆட்சியாளர்களை புனித இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். ஆட்சியாளர்கள் உடன்படுவார்களாயின் அவர்களுக்குத் தொழுகை பற்றிச் சொல்லிக் கொடுங்கள் என்றும் சொல்லியனுப்பினார்கள். ஆட்சியாளர்கள் பெருமானார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டார்கள். அதோடு “அம்மான்” நாட்டு மக்களும் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டார்கள். பெருமானாரின் மறைவு வரை “அம்மான்” அதிகாரிகளிற் பலர் இஸ்லாம் மார்க்கத்திலேயே இருந்தார்கள். ஆயினும் தான் நபீ என்று வாதிட்ட “லகீத் இப்னு மாலிக் அல் அஸ்தீ” என்பவன் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டான்.
நாலாம் நபர்:
முஸைலமதுல் கத்தாப். இவன் “பனூ ஹனீபா” கூட்டத்தைச் சேர்ந்தவன். இவனின் பெயர் “முஸைலமதுப்னு துமாமா”. இவன் “றஹ்மானுல் யமாமா” என்று அழைக்கப்பட்டான். “யமாமா” மக்களின் “றஹ்மான்” என்பது இதன் பொருளாகும். இவன் அதிகமாக மார்க்கத்துக்கு முரணான வேலைகளும், ஏமாற்று வேலைகளுமே செய்வான்.
இவன் நபீ பெருமானார் அவர்களின் காலத்திலேயே – அவர்கள் உயிரோடிருந்த காலத்திலேயே தன்னை நபீ என்று பிரகடனப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இவனை பலர் பின்பற்றினார்கள். “யமாமா” வாசிகளில் அதிகமானோர் இவனை நபீ என்று நம்பினார்கள். “பனூ ஹனீபா” கூட்டத்தினர் இவனை நபீ என்று நம்பி இவனுக்கு பக்கபலமாக இருந்தார்கள். இவன் தனக்கு “கறாமாத் – முஃஜிஸாத்” இருப்பதாக வாதிட்டான். அல்லாஹ் இவனின் பொய் புரட்டல்களை பகிரங்கமாக்கிய போது இவனை ஊர் மக்களே “கத்தாப்” பொய்யன் என்று பட்டம் சூட்னார்கள். இவன் ஓருவனே தம்மை நபீ என்று வாதிட்டவர்களில் மிகப் பிரபல்யமானவனும், கொடியவனுமாவான். (ஆசியா கண்டத்தில் ஒருவன் தன்னை நபீயாக வாதிட்டால் அவனும் இவன் போன்றே இருப்பான்)
ஐந்தாம் நபர்:
இவள் ஒரு பெண். இஸ்லாமிய வரலாற்றிலேயே தன்னை நபீ என்று வாதிட்ட பெண் இவள் மாத்திரமே ஆவாள். இவள் பிரசித்தி பெற்ற ஒரு “குறி காரி” சாத்திரம் பார்த்து குறி சொல்பவள்.
இவளின் குடும்பத்திற்கும், வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனின் குடும்பத்திற்கும் தொடர்பு உண்டு. இவள் மேலே குறிப்பிட்ட முஸைலமதுல் கத்தாப் என்பவனைத் திருமணம் செய்ததாகவும், மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே அவனுடன் மனைவியாக இருந்ததாகவும் அதன் பின் விவாகரத்துப் பெற்றுக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இவளின் மேலதிக விபரங்கள் எமக்கு கிடைக்கவில்லை.
மேற்கண்ட ஐவரும் “நுபுவ்வத்” தம்மை நபீ என்று வாதிட்டவர்களாவர்.
جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ
“சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்துவிட்டது” என்ற இறைவாக்கின்படி நபித்துவத்தை வாதிட்டவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொய்யர்களாக்கி விட்டான். அழித்து மண்ணுடன் மண்ணாக்கியும் விட்டான். இவ்வாறுதான் அசத்தியவாதிகளின் நிலைகளுமாகும்.
வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனுக்கு நபித்துவத்தை வாதிடும் திட்டம் மனதில் இருந்ததாகவும், அதை வெளியிட அவனுக்கு வாய்ப்புக் கிடைக்காமற் போய் விட்டதென்றும் வரலாற்றாசிரியர்களிற் சிலர் கூறுகின்றனர்.
நபித்துவத்தை வாதிட்ட, நான் மேலே பெயர் குறித்த ஐவரும் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனின் குலவழியைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்றாகும். இதில் பலருக்கு பாடம் உண்டு. அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
சிலர் நபித்துவத்தை வாதிட்டது போல் இன்னும் சிலர் “றுபூபிய்யத்”தையும் வாதிட்டுள்ளார்கள். அதாவது நான் இறைவன் – நான் “றப்பு” என்று சொன்னார்கள். இவ்வாறு சொன்னவர்களில் “பிர்அவ்ன்” என்பவன் பிரசித்தி பெற்றவனாவான். அவன் أنا ربّكم الأعلى நானே உங்களின் பெரிய “றப்பு” இறைவன் என்று கூறினான்.
திமிர் பிடித்த இந்தப் பொய்யனான “றப்”பை – பிர்அவ்னை மெய்யான றப்பாகிய அல்லாஹ் கடலில் மூழ்கச் செய்து அவனை அழித்தான்.
தம்மை “நபீ” என்று வாதிட்ட ஐவரும் “நஜ்த்” என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், குலவழியில் “பனூ தமீம்” குலத்தைச் சேர்ந்தவர்களுமாவர்.
இதே பிரதேசத்தையும், இதே குலத்தையும் சேர்ந்தவன்தான் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனுமாவான். இதனால்தான் இன்று அங்கு அனாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
எனவே, “நஜ்த்” பிரதேசம் பெருமானார் அவர்களின் சாபத்திற்குள்ளான பிரதேசம் என்பது தெளிவாக விளங்கப்படுகிறது.
ஒரு சமயம் நபீ பெருமானார் அவர்களை நேரில் பார்த்து நீங்கள் நீதியில்லாதவர் என்ற பாணியில் يا محمد اتق الله முஹம்மதே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! என்று அவர்களின் முகம் பார்த்து சொன்ன வம்பனும் “நஜ்த்” பிரதேசத்தை சேர்ந்தவனேயாவான். பின்னால் வரும் நபீ மொழியை கவனித்தால் இவ் உண்மை தெளிவாகும்.
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَعَثَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الحَنْظَلِيِّ، ثُمَّ المُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ العَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ، وَالأَنْصَارُ، قَالُوا: يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا، قَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ». فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، نَاتِئُ الجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقٌ، فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ، فَقَالَ: «مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ؟ أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي» فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ، – أَحْسِبُهُ خَالِدَ بْنَ الوَلِيدِ – فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ: ‘ إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا، أَوْ: فِي عَقِبِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ القُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ ‘
அபூ ஸயீத் அல்குத்ரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ அலலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அதை நபீ அலலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ளலீ அல்முஜாஷியீ, உயைனா பின் பத்ர் அல்பஸாரீ, பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அத்தாயீ, பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாதா அல்ஆமிரி றழியல்லாஹு அன்ஹும் ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும், அன்ஸாரிகளும் கோபமடைந்து, “நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டு விடுகிறாரே” என்று கூறினார்கள்.
அதற்கு நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “இவர்கள் “இப்போதுதான் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி யிருப்பதால்” அவர்களுடைய உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.
அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பியிருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன்வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நானே (அல்லாஹ்வுக்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
அப்போது வேறொரு மனிதர் இப்படி குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் பின் அல்வலீத் அவர்கள் தான் என்று நினைக்கின்றேன். அவரை நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள்.
குறை சொன்ன அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து அல்லது இவரின் பின்னே ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடு வதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவழிபாடு புரிபவர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்கள் வாழும் நாட்களை அடைந்தால் “ஆத்” கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, ஹதீது எண்: 3344
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَفِي نَجْدِنَا؟ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَأْمِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَفِي نَجْدِنَا؟ فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةِ: «هُنَاكَ الزَّلاَزِلُ وَالفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»
இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, “இறைவா! எங்களின் “ஷாம்” சிரியா நாட்டிலும், “யமன்” நாட்டிலும் அருள் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அங்கு இருந்தவர்கள் “நஜ்த்” பிரதேசத்திலும் என்றார்கள். அதாவது “நஜ்த்” பிரதேசத்திற்கும் “துஆ” செய்யுங்கள் என்றார்கள். நபீ பெருமானார் அவர்கள் கூறியதை கவனத்திற் கொள்ளாமல் இரண்டாம் முறையும் முதலில் கேட்டது போன்றே கேட்டார்கள். அப்போதும் அங்கு வீற்றிருந்த “நஜ்த்” பிரதேச வாசிகள் மீண்டும் “வபீ நஜ்தினா” எங்களின் “நஜ்த்” பிரதேசத்திலும் என்றார்கள். இரண்டாம் முறையும் பெருமானார் அவர்கள் அவர்கள் கூறியதை கவனத்திற் கொள்ளாமல் இருந்தார்கள். மூன்றாம் முறையும் அவ்வாறே பிரார்த்தனை செய்துவிட்டு, மூன்றாம் முறையும் அவர்கள் அவ்வாறு சொன்னதைக் கருத்திற் கொள்ளாமல்
هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
அங்குதான் குழப்பங்களும், நிலநடுக்கங்களும் ஏற்படும் என்றும், அங்குதான் ஷெய்தானின் கொம்பு வெளிப்படும் என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, ஹதீது எண்: 7094
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குழப்பங்கள் என்று குறிப்பிட்டது மார்க்க விடயத்தில் ஏற்படுகின்ற குழப்பங்களையே தவிர அங்கு ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களையோ, வேறு குழப்பங்களையோ அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் நில நடுக்கங்கள் என்று சொன்னதுமாகும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, மேற்கண்ட இரண்டு நபீ மொழிகள் மூலமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் “நஜ்த்” என்ற பிரதேசம் ஸஊதியின் தலைநகரான “ரியாழ்” என்ற நகரை அண்மித்துள்ள பிரதேசமேயன்றி அது வேறு நாடல்ல என்பதும், அங்கு ஷெய்தானின் கொம்பு வெளியாகும் என்று பெருமானார் குறிப்பிட்டது வஹ்ஹாபிஸத்தை விதைத்த இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனை மட்டுமே குறிக்கும் என்பதுமாகும்.
ஈழத்து வஹ்ஹாபீகளோ, இந்திய வஹ்ஹாபீகளோ எமது விளக்கத்திற்கு மாறாக கையாலும், மடியாலும் போட்டு விளக்கம் சொல்வார்களாயின், மக்களைத் திசை மாற்றுவார்களாயின் எமது கருத்துக்கள் கட்டுரையாக மட்டும் வராது. நூலாகவே வெளிவரும். இன்ஷா அல்லாஹ்!
குறிப்பு: ஆறாவதாக ஒருவன் நபீ என்று வாதிடுவானாயின் அவன் ஆசியா கண்டத்திலிருந்தே வாதிடுவான். ஜாக்கிரதை.