தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اَلشُّهُوْرُ الشَّمْسِيَّةُ
சூரிய மாதங்கள்.
كَانُوْنُ الثَّانِيْ (31 يوما)، شُبَاطْ (28 يوما)، أَذَارْ (31 يوما)، نَيْسَانْ (30 يوما)، اَيَّارْ (31 يوما)، حَزِيْرَانْ (30 يوما)، تَمُوْزْ (31 يوما) آبْ (31 يوما)، اَيْلُوْنْ (30 يوما)، تَشْرِيْنُ الأول (31 يوما)، تَشْرِيْنُ الثاني (30 يوما) كُانُوْنُ الأول (31 يوما)
الشهور القمريّة
சந்திர மாதங்கள்.
محرم (30 يوما)، صفر (29 يوما)، ربيع الأول (30 يوما)، ربيع الثاني (29 يوما)، جمادى الأولى (30 يوما)، جمادى الآخرة (29 يوما)، رجب (30 يوما)، شعبان (29 يوما)، رمضان (30 يوما)، شوال (29 يوما)، ذو القعدة (30 يوما)، ذا الحجّة (29 يوما)،
الأشهر الحرم
சங்கைமிகு மாதங்கள்.
أربعة: ذو القعدة، ذو الحجّة، محرم، رجب، (ثلاثة سرد وواحد فرد) سميت الحرم لأنّ العرب كانت لا تستحل بها القتال، إلا بني خثعم وطي، فإنهم كانوا يستحلون،
சூரிய மாதங்கள்.�
கானூனுத் தானீ (31 நாள்), ஷுபாத் (28 நாள்), அதார் (31 நாள்), நைஸான் (30 நாள்),
ஐயார் – அய்யார் (31 நாள்), ஜெசீறான் (30 நாள்), தமூஸ் (30 நாள்), ஆப் (31 நாள்), ஐலூல் – அய்லூல் (30நாள்), தஷ்ரீன் அவ்வல் (31 நாள்), தஷ்ரீன் தானீ (30 நாள்), கானூன் அவ்வல் (31 நாள்).
சந்திர மாதங்கள்.
முஹர்ரம் (30 நாள்), ஸபர் (29 நாள்), றபீஉனில் அவ்வல் (30 நாள்), றபீஉனித் தானீ (29 நாள்), ஜுமாதல் ஊலா – ஜுமாதல் அவ்வல் (30 நாள்), ஜுமாதல் ஆகிறா – ஆகிர் (29 நாள்), றஜப் (30 நாள்), ஷஃபான் (29 நாள்), றமழான் (30 நாள்), ஷவ்வால் (29 நாள்), துல் கஃதா (30 நாள்), துல் ஹிஜ்ஜா (29 நாள்).
சங்கைமிகு மாதங்கள்.
நான்கு: துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், றஜப்.
இவற்றில் தொடரான மாதங்கள் மூன்று. தனியான மாதம் ஒன்று.
இந் நான்கு மாதங்களுக்கும் சங்கைமிகு மாதங்கள் என்று பெயர் வந்ததற்கான காரணம் அறபு மக்கள் இந் நான்கு மாதங்களிலும் யுத்தம் செய்வது “ஹறாம்” விலக்கப்பட்டதென்று கருதுகிறார்கள். இஸ்லாம் மார்க்கமும் இவ்வாறுதான் சொல்கிறது.
ஆயினும் அறபு மக்களில் “பனூ அத்அம்”, “தை” என்ற வமிசத்தைச் சேர்ந்தவர்கள் தவிர. இவர்கள் “ஹலால்” என்று சொல்வர்.
இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் பெண்களில் காத்தான்குடியில் வாழ்ந்த முஸ்லிம் பெண்கள், குறிப்பாக வயது முதிர்ந்த மூதாட்டிகள் மார்க்கம் கற்றவர்களாகவும், வலீமார் பக்தைகளாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதற்கு வருடத்தில் வருகின்ற 12 மாதங்களில் சில மாதங்களுக்கு வலீமாரின் நினைவு தினங்களைப் பெயர்களாக வைத்திருந்தது மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும்.
ஆயினும் நவீன மார்க்க வாதிகளின் வருகையின் பின் மூதாட்டிகளும் மரணித்ததோடு அவ்லியாஉகளின் அருளாறு வற்றிவிட்டது.
அவர்கள் வைத்த பெயர்கள்:
முஹர்ரம் மாதம் – ஆஷூறா மாதம்.
இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்கள் தாஸூஆ என்றும், ஆஷூறா என்றும் சொல்லப்படும்.
ஸபர் மாதம் – ஸபர் மாதம்.
றபீஉனில் அவ்வல் மாதம் – தலைக் கந்தூரி மாதம்.
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பிறந்த மாதம். 12 நாட்கள் மௌலித் ஓதி கந்தூரி வழங்கப்படும்.
றபீஉனில் ஆகிர் – கடக் கந்தூரி மாதம்.
குத்பு நாயகம் அவர்களின் நினைவாக கந்தூரிகள் நடைபெறும் மாதம்.
ஜுமாதல் ஊலா – மிறார் (மதார்) கந்தூரி மாதம். மதார் என்பதே “மிறார்” என்று மருவி வழங்கப்பட்டது. இம்மாதத்திலேயே அஷ் ஷெய்கு ஸிந்தாஹ் ஷாஹ் மதார் வலீ நாயகம் “வபாத்” ஆனார்கள்.
ஜுமாதல் ஆகிறா – மீரா கந்தூரி
நாஹூர் நாயகமவர்களின் நினைவாக கந்தூரிகள் நடைபெறும் மாதம்.
றஜப் – தோவத்து மாதம்.
காரணம் புரியவில்லை.
ஷஃபான் – சஃபான் – விராத்து மாதம்.
நிஸ்புஷ்ஷஃபான். பறாஅத் இரவு நினைவாக விராத்து மாதம் என்பார்கள்
.
றமழான் – நோன்பு மாதம்.
ஷவ்வால் – நோன்புப் பெருநாள் மாதம்.
துல் கஃதா – இடைக் கந்தூரி மாதம்.
ஒரு நிகழ்வும் இல்லாத இடையில் உள்ள மாதம்.
துல் ஹஜ் – ஹஜ் மாதம்.
அறபு மாதங்கள் – சந்திர மாதங்களிற் சிலதுக்கு மேற்கண்டவாறு பெண்கள் பெயர் வைத்துள்ளார்கள்.
வார நாட்களில் சில நாட்களை “பறகத்” இல்லாத நாட்கள் என்று நம்பியுள்ள முஸ்லிம்களும் உள்ளனர். இதை மறுக்கின்ற முஸ்லிம்களும் உள்ளனர்.
ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை பெருமானார் அவர்களின் “வபாத்” மரணத்துக்கான நோய் ஆரம்பமான நாளாயிருப்பதால் இந்நாள் نَحْسْ “நஹ்ஸ்” நல்ல நாளில்லை என்றும் முஸ்லிம்களிற் பலர் நம்பியுள்ளார்கள். இவ்வாறு நம்புவோர்தான் “ஸபர்” மாதத்தின் இறுதிப் புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பெயர் சொல்லி அன்று வாழை இலையில் “இஸ்ம்” எழுதி கரைத்து உடலில் தேய்த்தும், கரைத்துக் குடித்தும் வருவார்கள்.
இதற்கு நூறு வீதும் ஆதாரங்கள் இல்லாது போனாலும் நமது முன்னோர்களில் “விலாயத்” உள்ள, தரமான உலமாஉகள் சரி கண்டுள்ளதாலும், எனது தந்தை வழக்கமாக செய்து வந்ததினாலும் நானும் செய்து வருகிறேன்.
வார நாட்களில் அல்லது வருட நாட்களில் “முஸீபத்” இல்லையென்று வைத்துக் கொண்டாலும் சில நல்ல காரியங்களைச் செய்வதற்கு சில குறித்த நாட்களை முன்னோர்கள் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களைப் பின்பற்றி நாமும் அதைச் செய்வது பிழையாகாது.
இது தொடர்பாக முன்னோர்களிற் சிலர் பாடல்கள் பாடியுள்ளார்கள். அவற்றை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.
نِعْمَ الْيَوْمُ يَوْمُ السَّبْتِ حَقًّا – لِصَيْدٍ إِنْ أَرَدْتَ بِلَا امْتِرَاءٍ
وَفِى الْأَحَدِ الْبِنَاءُ لِأَنَّ فِيْهِ – بَدْأُ اللهِ فِى خَلْقِ السَّمَاءِ
وَفِى الْإِثْنَيْنِ إِنْ سَافَرْتَ فِيْهِ – نَجَوْتَ مِنَ الْمَصَائِبِ وَالْبَلَاءِ
وَإِنْ رُمْتَ الْفَصَادَ فَفِى الثُّلَثَا – فَفِى سَاعَاتِهِ سَفَكُ الدِّمَاءِ
وَإِنْ شَرِبَ امْرُأٌ مِنْكُمْ شَرَابًا – فَنِعْمَ الْيَوْمُ يَوْمُ الْأَرْبِعَاءِ
وَفِى يَوْمِ الْخَمِيْسِ قَضَا الْحَوَائِجْ – فَإِنَّ اللهَ أَمَرَ بِالْقَضَاءِ
وَيَوْمُ الْجُمْعَةِ التَّرْوِيْحُ فِيْهَا – وَشَرْحُ أُمُوْرِ أَحْوَالِ النِّسَاءِ
وَهَذَا الْعِلْمُ لَا يَحْوِيْهِ إِلَّا – نَبِيٌّ أَوْ وَصِيُّ الْأَنْبِيَاءِ
01. வேட்டையாடுவதற்கு சனிக்கிழமை நல்ல நாள். இதில் மீன் பிடித்தலும் சேரும்.
02. ஞாயிற்றுக்கிழமை வீடுகள், கடைகள், பள்ளிவாயல்கள், கல்வித் தாபனங்களுக்கு அத்திவாரமிடுவதந்கு நல்ல நாள். இந்த நாள் அல்லாஹ் படைப்புக்களைப் படைப்பதற்கு ஆரம்பித்த நாள்.
03. திங்கட்கிழமை பயணம் செய்வதற்குப் பொருத்தமான நாள். துன்பம், துயரங்களிலிருந்து வெற்றி கிடைக்கும்.
04. இரத்தம் குத்தி எடுத்தல், கொம்பு குத்தி எடுத்தல், மருந்து செய்தல் போன்றவற்றுக்கு செவ்வாய்க்கிழமை பொருத்தமான நாள்.
05. மருந்து குடித்தல், பானங்கள் குடித்தல் போன்றவற்றுக்கு புதன்கிழமை நல்ல நாள்.
06. வியாழக் கிழமை மனைவி, மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்கும், வீட்டு வேலைகள் பார்ப்பதற்கும் நல்ல நாள்.
07. வெள்ளிக்கிழமை ஓய்வெடுத்தல், மனைவியுடன் சந்தோஷமாக இருத்தல் முதலான விடயங்களுக்குப் பொருத்தமான நாளாகும்.