வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்றே!
அதன் வெளிப்பாடுகளே படைப்புகள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அப்துல் கரீம் அல்ஜீலீ அல்லது அல் ஜீலானீ.
ஹிஜ்ரீ 767 – 826 அல்லது 805.
இவர்கள் எமன் நாட்டின் “சுபைத்” எனும் நகரில் “வபாத்” மரணித்தார்கள். தாய் வழியில் குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர். இறாக் நாட்டின் தலை நகர் “பக்தாத்” நகரில் மஸ்ஜித் அப்தில் கரீம் ஜீலீ பள்ளிவாயலில் உள்ள “மஸார்” இவர்களின் தந்தையுடையதாகும்.
தங்களின் வாலிப வயதிலேயே “பக்தாத்” நகரிலிருந்து பாரசீகம் சென்று “பார்ஸீ” மொழி கற்றுத் தேறினார்கள். அந்த மொழியிலேயே جنة المعارف وغاية المريد والعارف என்ற நூலை எழுதினார்கள். பின்னர் இந்திய நாடு சென்று ஹிந்தி மொழி கற்றார்கள். பின்னர் அறபு நாடுகளுக்குச் சென்று அங்கு பிரசித்தி பெற்ற இறைஞானிகளைச் சந்தித்து தங்களின் 30வது வயதில் எமன் நாடு வந்து சேர்ந்தார்கள். அங்கு “சுபைத்” என்ற நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பிரசித்தி பெற்ற குத்புஸ்ஸமான் “ஷெய்குஸ் ஸூபிய்யா” ஷறபுத்தீன் இப்னு இஸ்மாயீல் அல்ஜப்றதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்று அவர்களின் “முரீத்” சிஷ்யனாகவும் ஆனார்கள்.
ஹிஜ்ரீ 799ல் அஷ்ஷெய்கு ஜீலீ திரு மக்கா நகர் சென்று அங்கு அக்காலத்தில் வாழ்ந்த “தஸவ்வுப்” ஸூபிஸ மகான்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அல்லாஹ்வின் “இஸ்முல் அஃளம்” தொடர்பாகப் பேசிய போது அவர்கள் அது هُوْ – “ஹூ” என்று வாதிட்ட நேரம் அது இல்லை. “ஹூ” என்பது படர்க்கையைக் குறிக்கும். ஆகையால் “அல்லாஹ்” என்னும் வெளிப்படையான திரு நாமமே “இஸ்முல் அஃளம்” என்று நிறுவினார்கள்.
மகான் ஜீலீ அவர்களின் வாழ்க்கை வரலாறையும், இறைஞான அறிவில் அவர்கள் பெற்றிருந்த உச்சக் கட்டத்தையும், ஆன்மிகப் படித்தரங்களில் அவர்கள் அடைந்திருந்த உயர் படித்தரங்களையும் எழுதப் போனால் பல லாறிகளில் ஏற்றுமளவு நூல்கள்தான் எழுத வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கும் சில எருமைகளின் விமர்சனம் கருதி சில வரிகள் எழுதுகிறேன்.
ஜீலீ அவர்கள் தங்களின் “இன்ஸான் காமில்” எனும் நூல் 103ம் பக்கத்திலும், 105ம் பக்கத்திலும் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” என்ற தலைப்பில் இரண்டுக்கும் விளக்கம் எழுதியுள்ளார்கள். ஒரு சமயம் இது குறித்து நான் பேசிய போது இதை எதிர்த்து உலமாஉகளில் ஒருவர் ஜீலியை ஒரு பக்கம் வையுங்கள் என்று அந்த மகானைத் தூக்கியெறிந்து பேசினார்.
இவர், “தன்ஸீஹ்” மட்டுமே உண்டு. “தஷ்பீஹ்” என்பதே கிடையாதென்று குரைத்தார். இவர் இதற்கான தண்டனையை பெறாமல் மரணிக்கமாட்டார். இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறு சொன்ன எருமைக்காக “தஷ்பீஹ்” உண்டு என்று ஜீலீ அவர்கள் 105ம் பக்கத்தில் எழுதியுள்ளதை எந்த ஒரு மாற்றமுமின்றி இங்கு எழுதுகிறேன்.
(واعلم أنّ التشبيه فى حقّ الله تعالى حكم بخلاف التنزيه، فإنّه فى حقّه أمر عينيّ، وهذا لا يشهده إلّا الكُمّل مِن أهلِ الله تعالى، وأمّا من سواهم من العارفين فإنّه لا يدرك ما قلناه إلّا إيمانا وتقليدا، لما تقتضيه صور حسنه وجماله، إذ كلّ صورة من الموجودات هي صورة حسنِه، فإن شهدت الصورة على الوجه التشبيهيّ ولم تشهد شيئا من التنزيه فقد أشهدك الحقّ حسنه وجماله من وجه واحد، وإن أشهدك الصورة التشبيهيّة وتعقّلت فيها التنزيه الإلهيّ فقد أشهدك الحقّ جماله وجلاله فى وجهي التّشبيه والتنزيه، ‘فأينما تولّوا فثمّ وجه الله’ فنزّه إن شئت وشبّه إن شئت، فعلى كلّ حال أنت غارق فى تجلّياته، ليس لك عنه مفك) إلى آخر ما قال، (الإنسان الكامل، ج 1، ص 105، الإمام جيلي)
“தஷ்பீஹ்” என்பதையும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும் முல்லாக்களே! குறிப்பாக “தஷ்பீஹ்” இல்லையென்று மறுத்த மகானே! உங்களால் முடியுமாயின் நான் மேலே அறபியில் எழுதியுள்ள இறைஞானி ஜீலீ அவர்களின் வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்து காட்டுங்கள். அல்லது அதை மறுத்து ஆதாரங்களுடன் அறபியில் எழுதிக் காட்டுங்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள். உங்களின் சலசலப்பிற்கு ஒருபோதும் அஞ்சோம். உங்களின் வேஷம் எங்களை அசைக்காது. அதைக் கழட்டி நீங்கள் யார் என்று காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கழட்டிக் காட்டுவோம். ஆழமறியாமற் காலை வைத்து அவதிப்படாதீர்கள்.
எல்லாமாயும் வெளியாகியுள்ளவன் அல்லாஹ்தான் என்றும், நீரானது பனிக் கட்டியாகத் தோற்றுவது போல் அல்லாஹ்தான் படைப்புக்களாகத் தோற்றுகிறான் என்றும் கூறிய இமாம் ஜீலீ அவர்களின் பாடல் வரிகளையும் இங்கு குறிப்பிடுகிறேன். இப்பாடல்களுக்கு நான் கூறும் விளக்கம் பிழையெனில் இப்பாடலை தமிழில் நீங்கள் சரியாக மொழியாக்கம் செய்து காட்டுங்கள். அறிவுலகம் நீங்கள் யாரென்று புரிந்து கொள்ளட்டும்.
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ (الحجر 85 )
فمَثلُ العالم مَثلُ الثَّلجِ، والحقّ سبحانه وتعالى الماء الّذي هو أصلُ الثّلج، فاسم تلك الثّلجة على ذلك المنعقد مُعارٌ، واسمُ المائيّة عليه حقيقةٌ، وقد نبّهتُ على ذلك فى العقيدة المُسمّاة بـ ‘البوادر الغَيبيّة فى النّوادر العينيّة ‘ ، وهي قصيدة عظيمة لمْ ينسج الزّمانُ على كمّ الحقائق مِثل طِرازِها ولم يسمح الدّهر بفهمها لاعتزازها، وموضع التنبيه قولي:
وَمَا الْـخَلْـقُ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُــوَ نَـابِعٌ
وَمَا الثَّلْجُ فِى تَحْقِيْقِنَا غَيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الـشَّـرَائِعُ
وَلَكِنْ بَذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعٌ
تَجَمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِيْهَ تَلاشَتْ وَهُوَ عَنْهُنَّ سَـاطِـعٌ
(الإنسانُ الكامل، الجزء الأوّل، ص 89، للشّيخ عبد الكريم الجيلي)
சுருக்கம்:
வானங்களையும், பூமியையும், இவ் இரண்டுக்குமிடையிலுள்ளவற்றையும் “அல்ஹக்” கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. “அல்ஹக்” என்பது ஸூபீ மகான்களிடம் “வுஜூத்” உள்ளமையாகும்.
(திருக்குர்ஆன் 15-85)
“ஆலம்” எனும் படைப்புக்கு ஐஸ் கட்டி உதாரணமும், ஐஸ் கட்டியாக உள்ள நீருக்கு அல்லாஹ்வும் உதாரணங்களாகும். ஐஸ் கட்டி என்ற பெயர் இரவல் பெயரும், நீர் என்ற பெயர் எதார்த்தப் பெயருமாகும்.
இத் தத்துவத்தை “அல் பவாதிறுல் ஙைபிய்யா பின்னவாதிரில் ஐனிய்யா” எனும் எனது நூலில் எழுதியுள்ளேன். எச்சரிக்கையாகக் கூறியுள்ளேன். இது போன்ற ஒரு பாடலை காலம் நெய்து காட்டவில்லை. அதாவது எவரும் எழுதிக் காட்டவில்லை. மிக அற்புதமான பாடல். இதோ அந்தப் பாடல்.
பாடலின் பொருள்:
01. படைப்புக்கு உதாரணம் ஐஸ் கட்டி. அதாவது படைப்பு ஐஸ் கட்டி போன்றது. இறைவனுக்கு உதாரணம் நீர். அதாவது ஐஸ்கட்டியான நீர் போன்றவன்தான் நீ (அல்லாஹ்).
02. ஐஸ் கட்டி என்பது ஸூபீகளின் ஆய்வில் நீருக்கு வேறானதல்ல. ஆயினும் “ஷரீஆ”வின் பார்வையில் வேறானதே.
03. எனினும் ஐஸ்கட்டி கரைந்தால் கடும் குளிர் என்பது இல்லாமற் போய்விடும். அதேபோல் அப் பெயரும் இல்லாமற் போய் நீர் என்ற பெயரும் வந்து விடும்.
04. ஐஸ்கட்டி, நீர் எனும் ஒன்றுக்கு மற்றது எதிரான பெயர் இரண்டும் ஒன்றில் சேர்ந்திருப்பது வியப்பானதே!
ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில், பாகம்: 01, பக்கம்: 88, ஆசிரியர்;: அப்துல் கரீம் ஜீலீ
கட்டம் கட்டமாகவே உங்களின் அறியாமை வியாதிக்கு மருந்து தர வேண்டும். ஒரே நேரத்தில் மருந்து தந்தால் மயங்கிவிடுவீர்கள்.
தொடரும்..