தொடர் 04:
சென்ற தொடர் மூன்றில் مِثْلٌ “மித்லுன்” என்ற சொல்லுக்கும் مَثَلٌ “மதலுன்” என்று சொல்லுக்கும் விளக்கம் எழுதியுள்ளேன்.
நான் இப்போது எழுதப்போவது இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், சூபீ மகான்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூலில் அல்லாஹ்வை கனவில் ஏதேனும் ஓர் உருவத்தில் காண முடியும் என்று கூறியுள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன்.
وأمّا ما رأيتُه فى كتب الصوفيّة فمِن أفصحِهم عبارةً فيه الشّيخ محي الدين رضي الله تعالى عنه، فقال فى الباب الرابع والسّتّين من الفُتوحات، اعلم أنّه لا ينبغي لمسلم أن يتوقّف فى رؤيةِ الله تعالى فى المنام، لأنّه لا شيء فى الأكوان أوسعَ مِن عالَمِ الخَيالِ، وذلك أنّه يحكُمُ بحقيقتِه على كلّ شيء وعلى ما ليس بشيء، ويُصوِّرُ لك العَدَمَ المحضَ والمُحالَ والواجبَ فضلا عن المُمكن، ويجعلُ الوجودَ عدمًا والعدمَ وجودا، ويُريك العلمَ لبنًا والإسلامَ قُبَّةً، والثَّباتَ فى الدّين قَيْدًا، قال ودليلُنا فيما قلنا قولُه تعالى فأينما تُولُّوا فثمّ وجه الله، ووجهُ الشّيءِ حقيقتُه وعينُه، فقد صوّرَ الخيالُ مَن يستحيلُ عليه بالدّليل العقليّ الصّورةَ والتّصويرَ، فعُلِمَ أنّ كلّ ما جازَ وُقُوعُه فى المنام والدّار الآخرةِ جازَ وقُوعُه وتعجيلُه لِمَن شاء فى اليقظة والحياةِ الدّنيا، (اليواقيت والجواهر، ج 1، ص 108)
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள். (நான் சூபி மகான்களின் நூல்களை பார்வையிட்ட வகையில் அல்லாஹ்வை கனவில் காணும் விடயத்தில் மிகத் தெளிவான விளக்கம் சொன்னவர்கள் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள்.
அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யஹ்” எனும் நூலில் 64ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(எந்த ஒரு முஸ்லிமும் அல்லாஹ்வை கனவில் காணும் விடயத்தில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை ஏனெனில் உலகங்களில் – ஆலங்களில் மிக விசாலமான உலகம் “ஆலமுல் கயால்” என்று சொல்லப்படுகின்ற கனவுலகமேயாகும். இவ்வுலகம் எந்த வஸ்தாயினும் அதன் எதார்த்தத்தையும் தீர்ப்புச் செய்யும். எதார்த்தத்திற்கு மாறாகவும் தீர்ப்புச் செய்யும் அதாவது ஒன்றை அதன் எதார்த்தப்படியும் காட்டும், எதார்த்தத்திற்கு மாற்றமாகவும் காட்டும், இல்லாத ஒன்றை உள்ளதாகவும், அசாத்தியமானதை சாத்தியமானதாகவும், சாத்தியமானதை அசாத்தியமானதாகவும், உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் கனவில் காட்டும். அறிவை பாலின் உருவத்திலும், இஸ்லாம் என்பதை “குப்பா” டோம் உருவத்திலும், மார்க்கத்தில் நிலை பெற்றிருப்பதை கை விலங்காகவும் காட்டும். இவற்றுக்கெல்லாம் எங்களின் ஆதாரம் திருக்குர்ஆனின் فأينما تولُّوا فثمّ وجه الله “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு – அல்லாஹ் உள்ளான் – அவனின் “தாத்” உண்டு என்ற வசனமாகும்.
“வஜ்ஹுல்லாஹ்” அல்லாஹ்வின் முகம் உண்டு என்றால் முகம் என்பதின் கருத்து அவனே உள்ளான் என்பதாகும். ஏனெனில் وجْهُ الشيء حقيقتُه وعينُه ஒரு வஸ்தின் முகம் என்பது அவ்வஸ்து தானேயாகும். அல்லாஹ்வின் முகம் என்றால் அல்லாஹ்வின் “தாத்” என்பதே இதன் கருத்தாகும்.
“அல்கயால்” என்பது – அதாவது “ஆலமுல் கயால்” எனும் கனவுலகம் உருவம் இல்லாத ஒன்றை உருவத்தில் காட்டும். அதாவது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லாதிருந்தாலும் கனவுலகம் என்பது எவனுக்கு உருவம் அசாத்தியமோ அதை அவனுக்கு சாத்தியமானதாக காட்டும் உலகமாகும்.
எனவே, கனவுலகிலும், மறுமையிலும் எது ஆகுமோ, சாத்தியமோ அது இவ்வுலகில் நிகழ்வதும் சாத்தியமே. விழிப்பிலும், உலக வாழ்விலும் நிகழ்வதும் சாத்தியமே என்பது மேற்கண்ட விபரங்கள் மூலம் தெளிவாகிவிட்டது.
அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 108
وقال الشّيخ محي الدين ابن عربي فى عُلومِ باب التاسع والسّتّين وثلاثمأة لا يصحّ لإنسان قطّ أن يُعبِّر عن حقيقة ما طريقُه الذّوقُ مِن غير تكييفٍ كرؤية الله عزّ وجلّ أبدا،
அஷ்ஷெய்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “புதூஹாத்” எனும் நூல் 369 ஆம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அதாவது எந்த ஒரு மனிதனாயினும் அனுபவரீதியாக பெறக்கூடிய ஒன்றை வார்த்தைகள் – வசனங்கள் மூலம் விவரிப்பது கூடாது. உதாரணமாக அல்லாஹ்வை காணுதல் போன்று. அதாவது அல்லாஹ்வை காணுதல் என்பது “தவ்கீ” அனுபவித்து – சுவைத்து அறியக்கூடிய ஒன்றாகும். இதை வசனத்தால் விவரிக்க முடியாது விவரிக்கவும் கூடாது. (ஆதாரம்: மேற்கண்ட நூல் அதே பக்கம்.)
(இமாம் ஙஸ்ஸாலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவர்களில் ஒருவர் பேரின்பம் என்றால் எப்படியிருக்கும்? என்று அவர்களிடம் கேட்டார். உடலுறவின் இன்பம் சுவைத்து பார்த்தால் தான் புரியும் என்று கூறிய அவர்கள் சீனி என்பது எவ்வாறு இனிக்கும்? என்று அந்த மாணவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன் சுவைத்து பார்த்தால்தான் தெரியும் என்று, சொன்னார்)
وقال الشّيخ أيضا وإذا صَحَّ أنَّ العقلَ يُدرِكُ الحَقَّ تعالى جَازَ أنْ يُدركَه بالبصر مِن غير إحاطةٍ، لأنّه لا فضْلَ لمُحدَثٍ على مُحْدَثٍ مِن حيث الحُدوث، وإنّما الفضلُ مِن حيثُ الصّفات الجميلة، ومّن قال أنّ الحقّ تعالى يُدرَكُ عقلا ولا يُدرَكُ بصرا فمُتلاعِبٌ لا علمَ له بحُكمِ العقلِ ولا بحُكم البصر ولا بالحقائق على ما هي عليه،
மேற்கண்ட நூல் அதே பக்கம்
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் மேலும் கூறுகிறார்கள். அல்லாஹ்வை “அக்ல்” எனும் புத்தியால் அறியலாம் என்றிருந்தால் அவனை சூழ்ந்து கொள்ளாமல் பார்வையாலும் அறிய முடியும். ஏனெனில் “அக்ல்” புத்தி என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றாகும். இதே போல் பார்வை என்பதும் அல்லாஹ்வின் படைப்புத்தான். படைப்பு என்ற வகையில் புத்தியால் எதை அறிய முடியுமோ அதை பார்வையாலும் நிச்சயமாக அறிய முடியும். படைப்பு என்ற வகையில் புத்தியும் ஒன்றுதான், பார்வையும் ஒன்றுதான். (மேற்கண்ட அதே நூல் அதே பக்கம்)
اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا ‘رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمْرَدَ قَطِطٍ له وفرةٌ من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح، قال الشّيخ محي الدين ابن عربي فى الباب المذكور فوق، قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل، فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤية فى عالم الخيال، الّذي هو النّوم، ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضـرته تُعطي ذلك، فما ثَمَّ أوسع من الخيال، قال : ومن حضرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال، (اليواقيت والجواهر، ج1، ص 115)
அறபு பந்தியின் சுருக்கம்:
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யஹ்” எனும் நூல் 381ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அறிந்துகொள்! கனவில் அல்லாஹ்வை ஓர் உருவத்தில் காண முடியும் என்பதற்கு ஹதீது கலை மேதைகளில் ஒருவரான இமாம் தபறாணீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பலரும் அறிவித்துள்ள பலமான நபிமொழி ஆதாரமாக உள்ளது.
ஒரு நாள் இரவு நபீகள் நாயகம் உறக்கத்திலிருந்த போது அல்லாஹ்வை கனவில் கண்டார்கள். “நான் இன்றிரவு எனது “றப்பு” இரட்சகனை முகத்தில் முடி முளைக்காத, உடல் முறுக்கேறிய வாலிபனின் உருவத்தில் கண்டேன். அவனுக்கு அடர்ந்த முடி இருந்தது. அவனின் இரு கால்களிலும் தங்கத்தினாலான இரு செருப்புக்களும் இருந்தன”
இந்த ஹதீதின் தொடர் நீளமானது தேவையானோர் இமாம் தபறாணீ அவர்களின் நூலை வாசித்து பார்க்க முடியும்.
இந்த ஹதீது – நபீ மொழி பற்றி இமாம் அல்ஹாபிள் ஜலாலுதீன் சுயூதி றஹிமஹுல்லாஹ் அவர்கள், இது ஆதார பூர்வமான, பலமான ஹதீது என்று கூறியுள்ளார்கள்.
அஷ்ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள், இந்த ஹதீது பற்றி கூறுகையில் இந்த நபி மொழியின் கருத்தை அறிந்து கொள்ளும் விடயத்திலும் இது பலமானதா? இல்லையா? என்பதிலும் உலமாஉ – மார்க்க அறிஞர்களின் “அக்ல்” புத்திகள் தடுமாறி விட்டன. சில உலமாஉகள் இது ஹதீது அல்ல என்று கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் இது பலமான நபிமொழிதான் என்றும் கூறியுள்ளார்கள். அவர்களில் இன்னும் சிலர் இதற்கு விளக்கம் சொல்லும் விடயத்திலும், இதற்கு வலிந்துரை கொடுக்கும் விடயத்திலும் தடைபட்டு நின்றார்கள்.
இப்னு அறபீ அவர்கள் இது பலமான நபிமொழி என்பதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை. இதற்கு வலிந்துரை கொடுக்கவும் தேவை இல்லை என்று கூறியுள்ளார்கள். குறித்த நபீ மொழிக்கு تأويل – வலிந்துரை இல்லாமல் நபீ மொழி வசனங்களுக்கு நேரடிப் பொருளே கூறலாம் என்று கூறியுள்ளார்கள்.
ஏன் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள் என்றால் நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கண்டவாறு கண்டது கனவிலேயேயன்றி விழிப்பில் அல்ல.
கனவுலகம் என்பது மிக விசாலமான உலகமாகும் இவ்வுலகில் உருவம் இல்லாத வெறும் கருத்துக்களை உருவத்தில் காணலாம். உருவத்தில் மட்டுமல்ல சடத்திலும் காண முடியும். இது தொடர்பான விளக்கம் கடந்த தொடர்களில் உதாரணங்களுடன் பதிவிட்டிருக்கிறேன். கனவுலகில் உருவமற்ற, சடமற்ற வெறும் கருத்துக்களை சடமுள்ளதாகும், உருவம் உள்ளதாயும் காண முடியும்.
நாம் அசாத்தியம் என்று கருதக்கூடிய விடயங்களை கனவுலகில் சாத்தியமானவையாக காணலாம். இது மட்டுமல்ல “வாஜிபுல் வுஜூத்” ஆன, உருவமில்லாத, சடமில்லாத அல்லாஹ்வை உருவம் உள்ளவனாயும், சடமுள்ளவனாயும் காண முடியும்.
நீ அல்லாஹ்வை எவ்வாறு கண்டாலும் கனவுக்கு விளக்கம் சொல்பவர்களிடம் கேட்டால் நீ கண்டது சரி என்று அவர்கள் சொல்வார்கள். அதோடு விளக்கமும் சொல்வார்கள்.
கனவுலகுக்கு இவ்வாறு சக்தி இருக்கும் நிலையில் கனவுலகைப் படைத்த அல்லாஹ் எத்தகைய சக்தி உள்ளவனாய் இருப்பான்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
وكيف يقول بعضُهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسِه قُدرةَ الخيال على المُحال،
அல்லாஹ் அசாத்தியமானதை செய்வதற்கு சக்தியற்றவன் என்று சிலர் சொல்கிறார்கள். எவ்வாறு அவர்கள் சொல்ல முடியும்? என்று இபுனு அறபீ அவர்கள் “முதகல்லிமீன்” எனும் கூட்டத்தைச் சாடுகிறார்கள். சூபீ மகான்கள் “முதகல்லிமீன்” என்பவர்களை விட இறைஞான ஆய்வில் சிறந்தவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “முதகல்லிமீன்” என்பபோர் قُدْرَةُ اللهِ تَعَالَى لَا تَتَعَلَّقُ بِالْمُحَالِ அல்லாஹ்வின் சக்தி அசாத்தியமானது கொண்டு கொளுகாது என்று சொல்வார்கள். சூபீ மகான்களோ இவர்களுக்கு மாற்றமாக சொல்வார்கள். சூபீ மகான்களின் கருத்தே வலுவானதும், பலமானதுமாகும்.
முக்கிய குறிப்பு: நான் இத்தொடரில் எழுதியுள்ள விடயம் தொடர்பாகவோ, பொதுவாக “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாகவோ தெளிவான விளக்கம் தேவையானோர் முப்தீகளாயினும், ஹஸ்றத்மார்களாயினும், உலமாக்களாயினும் என்னுடன் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேர காலத்தை பெற்றுக் கொண்டு நேரில் வரவேண்டும். எந்தக் கருத்தாயினும் கருத்தை கூறியவனிடம் விளக்கம் கேட்பதே சிறந்தது.
குறிப்பு: “பத்வா” வழங்கிய முல்லாக்களே! கால தாமதம் இன்றி “பத்வா”வை வாபஸ் பெறுங்கள் இல்லையாயின்
فارتقبوا من الله الجبّار القهّار المنتقم عذابا، إنّ بطشَ ربّك لشديد،
தொடரும்…..