Friday, May 3, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வை இவ்வுலகில் விழிப்பிலும், கனவிலும் காண முடியுமா? மறுமையில் நேரில் தலைக்கண்ணால் காண முடியுமா?

அல்லாஹ்வை இவ்வுலகில் விழிப்பிலும், கனவிலும் காண முடியுமா? மறுமையில் நேரில் தலைக்கண்ணால் காண முடியுமா?

தொடர் 01:

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அல்லாஹ்வை இவ்வுலகில் தங்களின் தலைக் கண்ணால் விழிப்பில் கண்டவர்கள் எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவார்கள். வேறெவரும் இவ் உலகில் தலைக் கண்ணால் கண்டதற்கு இதுவரை நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் எவராலும் இவ் உலகில் தலைக் கண்ணால் காண முடியாதென்பது கருத்தல்ல. காண முடியும் என்பதே நம்பத் தகுந்த தகவல்.
 
இதற்குப் பல ஆதாரங்கள் இருந்தாலும் கூட எவராலும் மறுக்க முடியாத திருக்குர்ஆன் ஆதாரம் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.

واختلفوا هل تجوز رُؤيتُه تعالى فى الدنيا يقظةً ومناما، فقال بعضُهم يجوز، وقال بعضُهم لا يجوز، ودليلُ جوازِه فى اليقظة هو أنّ موسى عليه السّلام طَلَبَها حيث قال ‘أرني أنظر إليك ‘ وهو عليه السّلام لا يَجْهَلُ ما يجوز ويَمْتَنِعُ عن الله عزّ وجلّ، ودليلُ المَنْعِ أنّ قومَ موسى عليه السّلام طَلَبُوها فعُوقِبُوا، قال تعالى ‘ فقالوا أرنا الله جهرةً فأخذتْهُم الصاعقةُ بظُلمِهم ‘ قال الجلالُ المحلّي رحمه الله واعتُرِضَ هذا بأنّ عِقابَهم إنّما كان لعِنادِهم وتعنُّتِهم فى طلبِها، لا لامتناعِها فى نفسِه،
சுருக்கம்:
அல்லாஹ்வை இவ்வுலகில் விழிப்பிலும், கனவிலும் காண்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் முடியும் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் முடியாதென்று சொல்கிறார்கள்.
அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியுமென்று கூறுவோர் தமது வாதத்திற்கு ஆதாரமாக நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் “இறைவா! நீ எனக்கு உன்னைக் காட்டுவாயாக! நான் பார்க்க வேண்டும்” என்று கேட்டார்கள்.
 
ஒரு நபீ நிச்சயமாக அல்லாஹ்வை அறிந்தவராகவே இருப்பார்கள். அவனை அறியாத ஒருவருக்கு நபித்துவத்தை அல்லாஹ் வழங்கமாட்டான். ஆகையால் அல்லாஹ்வை இவ் உலகில் தலைக் கண்ணால் காண முடியாது என்றிருந்தால் நிச்சயமாக இதை ஒரு நபீ அறிந்துதான் இருப்பார்கள். அவர்கள் அறியாமற் போவதற்கு வாய்ப்பே இல்லை. இது முடியாத விடயம் என்றிருந்தால் இதை அல்லாஹ்விடம் அவர்கள் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஒரு நபீயின் சொற் செயல் எமக்கு ஆதாரமாகவே உள்ளது.
எனவே, இவ்வாதாரத்தின் மூலம் இவ் உலகில் தலைக்கண்ணால் அல்லாஹ்வைக் காண முடியுமென்பது தெளிவாகிறது. இவ் ஆதாரம் அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியும் என்பதற்கான ஆதாரமாகும்.
 
வாசக நேயர்களே! உங்களிடம் யாராவது இவ்வுலகில் அல்லாஹ்வை விழிப்பில் காண முடியாதென்று சொன்னால் அவர்களிடம் மூஸா நபீ அவர்களின் இவ்வரலாறைக் கூறி கேள்வி கேளுங்கள்.
அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியாதென்று கூறுவோர் பின்வருமாறு விளக்கம் சொல்கிறார்கள்.
அதாவது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார் அவர்களிடம் أَرِنَا اللهَ جَهْرَةً எங்களுக்கு நேரில், பகிரங்கமாக அல்லாஹ்வைக் காட்டுங்கள் என்று கேட்ட போது فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ அவர்களின் அநீதி காரணமாக அல்லாஹ்வின் தண்டனை அவர்களுக்கு இறங்கியது என்ற விடயத்தை காரணமாகக் கூறி அல்லாஹ்வை விழிப்பில் இவ் உலகில் பார்க்க முடியாதென்று கூறுகிறார்கள்.
 
இவ்வாறு கூறுபவர்களுக்கு இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதில் கூறியுள்ளார்கள்.
واعتُرِضَ هذا بأنّ عِقابَهم إنّما كان لعِنادِهم وتعنُّتِهم فى طلبِها، لا لامتناعِها فى نفسِه،
அவர்கள் அவ்வாறு கேட்டதற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் மனமுரண்டுள்ளவர்களாயிருந்ததால் தண்டிக்கப்பட்டார்களேயன்றி அல்லாஹ்விடம் உன்னைக் காட்டு என்று கேட்டதற்காக தண்டிக்கப்படவில்லை.
இவ்வாறு விளக்கம் கூறி அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காணலாம் என்று நிறுவியவர்கள் இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லீ ஆவார்கள். ஜலாலுத்தீன் ஸுயூதீ என்பவர் வேறொருவர் ஆவார்.
மேற்கண்ட விடயங்கள் மூலம் அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியும் என்பது தெளிவாகிறது.
அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காணலாம் – இது சாத்தியம் என்பதற்கான விளக்கம் முடிந்தது.
 
அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாமா?
والدّليل لجواز رؤية الله تعالى فى المنام، وقد ذكر الأئمة والعلماء وقوعَها في المنام لكثير من السلف الصالح، منهم الإمام أحمد بن حنبل وحمزةُ الزيّات والإمام أبو حنيفة رضي الله عنهم، كان حمزة الزيّات يقول قرأت سورة يس على الحق تعالى حين رأيته في المنام، فلمّا قرأت ‘ تنزيلُ العزيز الرحيم ‘ بضمّ اللام ، فردّ علي الحقّ تعالى ‘ تنزيلَ ‘ بفتح اللام، وقال إنّي نزّلته تنزيلا، وقال وقرأت عليه سورة طه فلمّا بلغت إلى قوله ‘ وأنا اِخْتَرْتُك ‘فقال تعالى ‘ إنّا اخترناك ‘ فهي قرائة برزخيّة، وقد أَجْمَعَ علماءُ التَّعْبِيْرِ على جواز رُؤْيَةِ الله تعالى فى المنام،ٌ
சுருக்கம்:
இவ் உலகில் அல்லாஹ்வைக் கனவில் காண முடியும் என்பதற்கான ஆதாரம் பின்வருமாறு.
முன்னோர்களில் பலர் அல்லாஹ்வைக் கனவில் கண்டுள்ளதாக உலமாஉகளில் – மார்க்க அறிஞர்களிற் பலர் கூறியுள்ளார்கள். அவர்களில் ஹன்பலீ மத்ஹபின் தாபகர் அஹ்மத் இப்னு ஹன்பல், ஹம்ஸதுஸ் ஸெய்யாத், ஹனபீ மத்ஹபின் தாபகர் இமாம் அபூ ஹனீபா ஆகியோர் அடங்குவர்.
மேற்கண்ட மூவரில் ஒருவர் – ஹம்ஸதுஸ் ஸெய்யாத் பின்வருமாறு சொல்கிறார். நான் அல்லாஹ்வைக் கனவில் கண்ட வேளை அவனிடம் “யாஸீன்” அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். நான் ஓதிய போது تَنْزِيْلُ – “தன்ஸீலு” என்று “லாம்” என்ற எழுத்துக்கு “ழம்மு” அடையாளமிட்டு ஓதினேன். அப்போது அல்லாஹ் “லாம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” அடையாளமிட்டு تَنْزِيْلَ என்று ஓதுமாறு திருத்தித் தந்து, إِنِّيْ نَزَّلْتُهُ تَنْزِيْلًا என்று கூறினான். இதன் மூலம் தான் திருத்தியது சரியென்றும் நிறுவிவிட்டான். மேலும் ஹம்ஸதுஸ் ஸெய்யாத் மகான் சொல்லும் போது இன்னும் அல்லாஹ்வுக்கு “தாஹா” அத்தியாயத்தையும் நான் ஓதிக் காட்டினேன். இடையில் وَأَنَا اِخْتَرْتُكُ என்று நான் ஓதிய போது அல்லாஹ் وَإِنَّا اِخْتَرْنَاكَ என்று பன்மையாக ஓதுமாறு திருத்தித் தந்தான். இவ்வாறு ஓதுதல் قِرَائَةٌ بَرْزَخِيَّةٌ என்று சொல்லப்படும். இதற்கான சரியான, தெளிவான விளக்கம் எனக்கு இல்லையாதலால் அதை நான் தொடவில்லை.
 
மேற்கண்ட இவ் ஆதாரங்கள் மூலமும், இவையல்லாத இங்கு கூறப்படாத வேறு ஆதாரங்கள் மூலமும் அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாம் என்று “தஃபீர்” கனவுகளுக்கு விளக்கம் கூறும் கனவுக்கான நிபுணர்கள் ஒரே குரலில் சொல்லியுள்ளார்கள்.
وأمّا رؤية الحقّ تعالى في اليقظة لغير نبينا محمد صلّى الله عليه وسلّم فَمَنَعَها جُمْهُورُ الْعُلَمَاءِ، واستدلّوا لذلك بقوله تعالى ‘لا تدركه الأبصارُ وهو يدرك الأبصار ‘ وبقوله تعالى لموسى عليه السلام حين طلبه الرؤية ‘ لَنْ تَرَانِي ‘ وبقوله صلّى الله عليه وسلّم ‘ لن يرى أحدُكم ربَّه حتّى يموت ‘، رواه مسلم فى كتاب الفِتَنِ فى صفة الدّجّال،
அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் கண்டவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான். வேறெவரும் அவ்வாறு கண்டதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. அறிஞர்களில் அதிகமானோர் இதுவே சரியான தகவல் என்று பின்வரும் ஆதாரங்கள் மூலம் நிறுவியுள்ளார்கள்.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில் “அவனைப் பார்வைகள் எட்டிக் கொள்ளமாட்டா” (103-06) கூறிய வசனத்தையும், மூஸா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் أَرِنِيْ أَنْظُرْ إِلَيْكَ நீ உன்னை எனக்கு காட்டு நான் பார்க்க விரும்புகிறேன் என்று கேட்ட போது لَنْ تَرَانِيْ நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என்று அவன் சொன்ன பதிலையும் ஆதாரமாகக் கூறுகிறார்கள். அதோடு பின்வரும் நபீ மொழி ஒன்றையும் ஆதாரமாக எடுத்துள்ளார்கள். لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது இரட்சகனைக் காணமாட்டான்.
மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் மேல்வாரியாக ஆய்வு செய்தால் அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்றே விளங்கும். ஆயினும் மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் ஆழமாக ஆய்வு செய்தால் அவற்றுக்கு ஒரு விளக்கம் வருமேயன்றி அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்ற விளக்கம் வராது. அந்த விளக்கம் விரிவாக எழுதப்பட வேண்டியதாகையால் அதை தனியான ஒரு தலைப்பில் எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்! மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் மேல்வாரியாக வாசித்து விட்டு அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்று முடிவு செய்து விடாமல் சற்று பொறுத்திருந்து எனது விளக்கத்தை எதிர்பார்க்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
وعبارة الشّيخ أبي طاهر القزويني فى كتاب سراج العُقول فى هذه المسئلة، واعلم أنّ أكثرَ المتكلّمين من الفِرقِ يُنكرون جوازَ رؤيةِ الله تعالى فى المنام، فضلا عن اليقظة لغير رسول الله صلّى الله عليه وسلّم، واحتجّوا فى ذلك بأنّ ما يراه النّائم يكون مُصوَّرًا لا محالةَ، ولا صورةَ للربّ تعالى، وأنّه يراه بواسطة مِثالٍ مُناسبٍ له، لا مِثلَ ولا مِثالَ لله ربّ العالمين، قال تعالى ‘ فلا تضرِبُوا لله الأمثال ‘، وقال ‘ليس كمِثْلِه شيءٌ ‘، وقال ‘ ولم يكن له كفوا أحد ‘ قال فمن رأى من ذلك شيئا وتخيّل أنّه الإلهُ فذلك مِن إرائةِ الشّيطان وتخييلِه وإغوائِهِ وتضليلِهِ أو هو مُشبَّهٌ يعتقِدُه كذلك فى اليقظة، (اليواقيت والجواهر، ج أوّل، ص 107، للشّعراني)
சுருக்கம்:
அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல்கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(“முதகல்லிமீன்” என்ற கூட்டத்தவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாம் என்பதை மறுக்கின்றார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர மற்றவர்கள் விழிப்பில் காண்பதையும் மறுக்கின்றார்கள். இவர்கள் மறுப்பதற்கு காரணம் என்னவெனில் அல்லாஹ்வை விழிப்பில் காண்பதாயினும், கனவில் காண்பதாயினும் ஏதாவது ஓர் உருவத்திலேதான் காண முடியும். உருவமற்ற ஒன்றைக் காண முடியாது. ஆகையால் இவ் உலகில் அவனை விழிப்பிலும் காண முடியாது, கனவிலும் காண முடியாது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது கனவில் காண்பதாயினும், விழிப்பில் காண்பதாயினும் காணப்படும் பொருள் உருவமுள்ளதாகவே இருக்க வேண்டும். இன்றேல் அதாவது உருவமில்லாத ஒன்றை உருவத்தில் காண்பதானது அசாத்தியம். அல்லாஹ் திருக்குர்ஆனில் فلا تضـربوا لله الأمثال அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூற வேண்டாம் என்று ஓர் இடத்திலும், ليس كمثله شيء அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்றும், இன்னோர் இடத்தில் ولم يكن له كفوا أحد “அவனுக்கு நிகராக எவருமில்லை” என்றும் கூறியிருப்பதால் அவனை உருவத்தில் காண முடியாதென்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஒருவன் ஏதோ ஒரு உருவத்தில் கண்டானாயின் அது ஷெய்தானின் விளையாட்டும், வழிகேடும் என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத்,
பாகம் 01, பக்கம் 77, ஆசிரியர்: ஷஃறானீ
 
நான் ஏற்கனவே “முதகல்லிமீன்” எனும் கூட்டம் பற்றி ஜாடையாகக் கூறியிருக்கிறேன். அவர்கள் இறை கொள்கை விடயத்தில் மேல்வாரியாகப் பேசுகின்றவர்களேயன்றி ஸூபீ மகான்கள் போல் ஆழமாகப் பேசுபவர்களல்ல. இதனால் இவர்களை நாங்கள் தூக்கியெறிந்து விடாமல் அவர்களின் பேச்சுக்கு விளக்கம் சொல்வோம். அடுத்த தொடரில் எமது விளக்கத்தை எதிர்பாருங்கள்.
 
தொடரும்…….
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments