தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவர்கள்தான் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்களுக்கும், இன்னும் “குத்பு”மார்களில் பலருக்கும் கற்றுக் கொடுத்த ஞானாசிரியர்,
அஷ்ஷெய்கு, அல்குத்பு, அல்கவ்து, ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,
பிறந்த நாடு: ஸ்பெய்ன்.
பிறந்த ஆண்டு: ஹிஜ்ரீ 509
மறைந்த ஆண்டு: ஹிஜ்ரீ 594 (கி.பி. 1198)
அடக்கம் பெற்ற இடம்: திலம்ஸான்.
اَلْخَلْقُ مَعْدُوْمٌ، أي مَفْقُوْدٌ، وَهُوَ عَدَمٌ مَحْضٌ فِى الْأَزْمِنَةِ الثَّلَاثَةِ، اَلْمَاضِيْ، وَالْإِسْتِقْبَالِ، وَالْحَالِ،
படைப்பு என்பது இல்லாதது. அது சென்ற காலம், எதிர் காலம், நிகழ் காலம் ஆகிய முக்காலங்களிலும் இல்லாததேயாகும்.
قال القطبُ والغوثُ شُعَيْب أَبُوْ مَدْيَنْ المَغْرِبِيْ قُدِّسَ سِرُّهُ،
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ
عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
وَاعْلَمْ بِأَنَّكَ وَالْعَوَالِمَ كُلَّهَا
لَوْلَاهُ فِيْ مَحْوٍ وَفِى اضْمِحْلَالٍ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ
فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
فَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا
شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِيْ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا
فِي الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
தமிழில்: அல்லாஹ் – கடவுள் தவிரவுள்ள யாவும் அவற்றை நீ ஆய்வு செய்தால் அவை “அதம்” இல்லாதவையேயாகும். நீ விபரமாக ஆய்வு செய்தாலும், சுருக்கமாக ஆய்வு செய்தாலும் முடிவு இதுதான்.
நீ அறிந்து கொள். நீயும், அல்லாஹ் படைத்த உலகங்கள் யாவும் அவன் – அல்லாஹ் இல்லையானால் இல்லாதவைதான்.
அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையிலிருந்து எவனுக்கு உள்ளமை – “வுஜூத்” இல்லையோ அவனுக்கு “வுஜூத்” உள்ளமை கிடையவே கிடையாது. அது அசாத்தியமாகும்.
தமது இறைவனை அறிந்த இறை ஞானிகள் தமது அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் காணமாட்டார்கள்.
எதார்த்தத்தில் அவனல்லாத அனைத்தும் இல்லாதது என்று அறிந்தார்கள். அவனல்லாத எதுவும் சென்ற காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் இல்லாதவை என்று அறிந்தார்கள்.
பாடல் வரிகள் குத்புஸ்ஸமான் ஷுஐப் அபூ மத்யன் அவர்களுக்குரியனவாகும்.
மேற்கண்ட பாடலின் ஒவ்வொரு வரியும் அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை – அல்லாஹ் தவிர வேறொன்றுமே இல்லை என்ற தத்துவத்தை உணர்த்துவது அறிவுள்ளவர்களுக்கு மறையாது.
அபூ மத்யன் என்றால் யாரென்று புரிந்து கொண்ட பின் அவர்கள் சொல்லிய தத்துவங்களை கூறினால் அதை எளிதில் நம்புவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்று நான் உணர்ந்ததால் முதலில் அவர்கள் பற்றிக் கூறிவிட்டு அவர்கள் சொன்ன தத்துவத்தைக் கூறுகிறேன். ஒருவர் யாரென்று புரியாமல் அவரின் தத்துவத்தைப் புரிந்து கொள்வது கடினம்.
أبو مدين شعيب بن الحسين الأنصاري والمعروف باسم سيدي بُومدين أو أبو مدين التلمساني ويلقب بـ«شيخ الشيوخ» ولقبه ابن عربي بـ«معلم المعلمين» (509 هـஃ 1115 م – 594 هـஃ 1198 م): فقيه ومتصوف وشاعر أندلسي، يُعَدُّ مُؤَسِّسَ أحدِ أَهَمِّ مَدَارِسِ التصوف في بلاد المغرب الكبير والأندلس، تَعَلَّمَ في إشبيلية وفاس وقضى أَغْلَبَ حياته في بَجَايَةَ وكثر أتباعه هناك واشتهر أمره،
ولد سنة 509 هـஃ 1115 م في مدينة قُطْنِيَانَة بالقرب من إشبيلية، ونشأ على تعلم القرآن وهو مشتغل بِرَعْيِ الغنم لأهله، وازداد اهتمامه بالقرآن فعزم على حفظه، فقَرَّرَ الارتحال لبلاد المغرب، وهو في رحلته لطلب العلم جال مُدُنَ سبتة وطنجة بالشمال، واشتغل مع الصَّيَّادين ثم انتقل إلى مراكش بالجنوب وانخرط في سلك الجندية وفيها نَصَحَه أحدُهم بالتَّوَجُّه لفاس.
سافر أبو مدين إلى فاس وهناك أخذ عن شيوخ ولازمهم ومال عن آخرين، وممن لازمهم وأخذ عنهم: الشيخُ أبو يعزى بلنور (توفي 572 هـ)، والشيخ علي بن حَرْزَهِمْ (توفي 559 هـ) وغيرهم،
قرر الشيخ أبو مدين الذهاب إلى الحج، وفي رحلته إلى المشـرق أخذ عن العلماء والتَقَى بالزُّهَّادِ والأولياء، وكان من أشهر ما حدث له في هذه الزيارة لقاؤُه بالشيخ عبد القادر الجيلاني، فقرأ عليه في الحرم الأحاديث وألبسه خرقةَ الصوفية. وبعد زيارته المباركة للمشـرق، رجع إلى إفريقية واستوطن في شرق الجزائر في مدينة بجاية حيث عاش هناك أغلب فترات حياته، وهنالك ظهر فضل الشيخ وكثر أتباعه وشاع اسمه وأقام بمسجد بجاية للتدريس وشرع في نشـر طريقته بين الناس وكان يقول: «طريقتنا هذه أخذناها عن أبي يَعْزَى بسنده عن الجنيد عن سري السقطي عن حبيب العجمي عن الحسن البصـري عن علي بن أبي طالب رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم عن جبرائيل عليه السلام، عن رب العالمين جل جلاله».
في بلدة بجاية أنجب ولده مدين فعرف بأبي مدين،
தமிழில்: அபூ மத்யன் ஷுஐப், தந்தை பெயர் ஹுஸைன், “அன்ஸாரீ” குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “பூ மத்யன்” அல்லது “அபூ மத்யன்” என்று பிரசித்தி பெற்றிருந்தார்கள். “அபூ மத்யன் திலம்ஸானீ” என்றும் அழைக்கப்பட்டார்கள். “ஷெய்குஷ் ஷுயூக்” குருமாரின் குரு என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு இப்னு அறபீ நாயகம் مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ “ஆசிரியர்களின் ஆசிரியர்” என்று பட்டம் சூட்டினார்கள்.
இவர்கள் ஹிஜ்ரீ 509ல் பிறந்து ஹிஜ்ரீ 594ல் “வபாத்” உலகைப் பிரிந்தார்கள். (கி.பி 1115 – 1198)
இவர்கள் “பிக்ஹ்” சட்ட மேதையாகவும், ஸூபீயாகவும், ஸ்பெய்ன் கவிஞராகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். மொறோக்கோ, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் ஸூபிஸக் கலாபீடங்களை கட்டியெழுப்புவதிலும் முழுக் கவனம் எடுத்தார்கள். “இஷ்பீலிய்யா”, “பாஸ்” போன்ற நாடுகளில் கல்வி கற்றார்கள். தனது அதிக காலத்தை “பஜாயா”விலேயே கழித்தார்கள். அங்கு அவருக்கு ஆதரவு பெருகி பிரசித்தி பெற்றார்கள்.
“இஷ்பீலிய்யா”வுக்கு அண்மையிலுள்ள “குத்னியானா”வில் ஹிஜ்ரீ 509ல் பிறந்த இவர்கள், தனது குடும்பத்தவர்களின் ஆடுகளை மேய்த்துக் கொண்டும், சிறு வயதிலேயே திருக்குர்ஆனைக் கற்றுக் கொண்டுமிருந்தார்கள். திருக்குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதால் அதை மனனம் செய்து முடித்தார்கள்.
மொறோக்கோ நாட்டிலுள்ள அதிகமான ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். இப்பயணத்தின் போது “ஸிப்தா”, “தன்ஜா” என்ற நகர்களுக்கும் சென்றார்கள். அவ்வேளை மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கும் தொழிலிலும் கவனம் செலுத்தினார்கள். பின்பு “மறாகிஷ்” நகர் வந்து படையணியில் சேர்ந்து கொண்டார்கள். அங்கிருந்த ஒரு படை வீரர் இவர்களை “பாஸ்” நாட்டுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரின் ஆலோசனைப்படி அபூ மத்யன் அவர்கள் “பாஸ்” நாட்டுக்குச் சென்று அங்கு கல்வி கற்றார்கள். அங்கு அக்காலத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற ஸூபீகளான “அபூ யஃஸா”, அலீ இப்னு ஹர்ஸஹிம் ஆகியோரிடமும், இன்னும் பலரிடமும் கல்வி கற்றார்கள்.
“அபூ மத்யன்” அவர்கள் “ஹஜ்” வணக்கத்திற்காக பயணமாக விரும்பி திரு மக்கா நகர் சென்று பல ஸூபீகளையும், ஞான மகான்களையும் சந்தித்து அவர்களில் நால்வரைத் தெரிவு செய்து அவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்களில் அபூ யஃஸாபல் நூர், அலீ இப்னு ஹர்சஹிம், இன்னும் பலரும் அடங்குவர். இவர்களின் விபரங்களை எழுத முடியவில்லை.
விஷேடமாக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் இவர்களுக்குக் கிடைத்தது. திரு மக்கா “ஹறம் ஷரீப்” இல் அவர்களிடம் ஹதீதுக் கலை படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குத்பு நாயகம் அவர்கள் இவர்களுக்கு “கிர்கா” خِرْقَةْ எனும் ஸூபீகளின் தலைப்பாகை சூடி “துஆ” பிரார்த்தனையும் செய்தார்கள்.
புனித ஹஜ் வணக்கத்தை முடித்து விட்டு ஆபிரிக்கா வந்து சேர்ந்தார்கள். அங்கு “பஜாயா” எனும் இடத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தார்கள். அங்கு தங்கியிருந்த கால கட்டத்தில் அவர்களின் புகழ் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கி அவர்களின் ஆதரவாளர்களும் அதிகமாகினர். “பஜாயா” பள்ளிவாயல் ஒன்றில் ஞானாசிரியராக நியமிக்கப்பட்டு ஸூபிஸ ஞானம் கற்றுக் கொடுக்கலானார்கள். அதோடு நின்று விடாமல் தனது “தரீகா”வைப் பகிரங்கப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார்கள்.
இவர்கள் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
طريقتنا هذه أخذناها عن أبي يعزى بسنده عن الجنيد عن سري السقطي عن حبيب العجمي عن الحسن البصـري عن علي بن أبي طالب رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم عن جبرائيل عليه السلام، عن رب العالمين جل جلاله،
في بلدة بجاية أنجب ولدَه مدين فعرف بأبي مدين، وَظَلَّ يمارس الوعظ والإرشاد في جامع البلدة ومدرستها حتى بلغ الثمانين من عمره،،
(எங்களின் இவ்வழியை – அதாவது “தரீகா” வழியை – ஸூபிஸ வழியை ஸூபீ மகான் “அபூ யஃலா” மூலம் பெற்றுக் கொண்டோம். அவர்கள் ஜுனைத் மூலமும், அவர்கள் ஹபீபுல் அஜமீ மூலமும், அவர்கள் ஹஸனுல் பஸரீ மூலமும், அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு மூலமும், அவர்கள் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூலமும், அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமும், அவர்கள் அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொண்டார்கள்)
அபூ மத்யன் அவர்கள் பஜாயாவில் தங்கியிருந்த காலத்திலேயே மகன் மத்யன் பிறந்தார்கள். இதனால் “அபூ மத்யன்” என்று தந்தை அழைக்கப்பட்டார்கள். பஜாயாவில் உள்ள பள்ளிவாயலிலும், மத்ரஸாவிலும் தனது 80 வயதுவரை பணி செய்தார்கள். இதுவே “அபூ மத்யன்” அவர்களின் சுருக்கமான வரலாறாகும்.
இவர்களின் அற்புதங்களையும், வாழ்க்கை வரலாறையும் எழுதுவதாயின் கட்டுரை நீண்டு விடும்.
இத்தகைய மகான் சாதாரணமானவர்கள் அல்ல. உலகப் பிரசித்தி பெற்ற ஞான மேதை ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்களுக்கும், அல்குத்பு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் (ஷஹீத்) அவர்களுக்கும், ஷாதுலிய்யா தரீகாவைத் தாபித்த அல்குத்பு அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் அவர்களுக்கும் கல்வி கற்றுக் கொடுத்த மகான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகான்தான் தலைப்பில் நான் குறிப்பிட்ட “ஷுஐப் அபூ மத்யன்” ஆவார்கள். மேலே எழுதிய “எல்லாம் அவனே” என்ற பாடலும் இவர்களுக்குரியதே! இப்பாடல் 100 வீதமும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தைக் கூறும் பாடலாகும். இதன் விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும்.
அபூ மத்யன் அவர்கள் “பஜாயா” நாட்டில் “எல்லாம் அவனே” என்ற ஞானத்தைக் கூறிக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் மீது பொறாமை கொண்ட நயவஞ்சகர்களான உலமாஉகள் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று பல வழிகளிலும் கடும் முயற்சி செய்து அந்நாட்டு அரசனிடம் தீர்ப்பை எடுத்துக் கொண்டு அங்கேயே அவரைக் கொலை செய்ய முயற்சித்தார்கள். இதற்குக் காரணம் அவர்களின் ஆதரவாளர்கள் “பஜாயா”வில் அதிகமாக இருந்ததேயாகும். இதனால் அங்கு அவர்களைக் கொலை செய்ய முடியாமல் அங்கிருந்து “திலம்ஸான்” என்ற ஊருக்கு பாதுகாப்புடன் பாலை வன வழியாக “திலம்ஸான்” நகருக்கு கொண்டு வரப்பட்டார்கள். கை, கால்கள் விலங்கிடப்பட்டவர்களாகவே கொண்டு வந்தார்கள். வரும் வழியில் – அதாவது “திலம்ஸான்” நகரை அடைவதற்கு சிறிது தூரம் இருக்கும் நிலையில் அபூ மத்யன் அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பின்வருமாறு கூறினார்கள். (அதிகாரிகளே! நீங்கள் திலம்ஸான் நகரில் என்னைக் கொலை செய்வதற்காகக் கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் அரசின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியவர்கள்தான். ஆயினும் நாம் திலம்ஸான் வருவதற்கு முன் நான் இப்பாலைவனத்திலேயே மரணித்து விட்டால் என்னைப் பாலைவனத்திலேயே அடக்கம் செய்து விடாமல் எனது “ஜனாசா”வை “திலம்ஸான்” நகருக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கம் செய்யுங்கள்) என்று சொல்லி முடிக்கும் போது அவர்கள் இயற்கை மரணத்தால் மறைந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் திலம்ஸான் எடுத்துச் சென்று அங்கேயே நல்லடக்கம் செய்தார்கள். திலம்ஸான் நாட்டிலுள்ள ஸூபீ மகான்களால் அங்கு அவர்களுக்காக “தர்ஹா” கட்டப்பட்டுள்ளது. தினமும் பக்தர்கள் அங்கு அலையலையாக வந்து அருள் பெற்றுக் கொள்கிறார்கள்.
தொடரும்…
அவர்களின் பாடலும், விளக்கமும் அடுத்த தொடரில்….
இஷ்பீலிய்யா – அந்தலூஸ் ஸ்பெய்ன் நாட்டிலுள்ள ஓர் ஊர்.
பாஸ் – மொறோக்கோ நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
பஜாயா – அல்ஜீரியாவிலுள்ள ஒரு நகரம்.
கத்னியானா – இஷ்பீலிய்யாவில் உள்ள ஒரு ஊர். இவ்வூரின் சின்னமாக அபூ மத்யன் அவர்கள் உள்ளார்கள்.
ஸிப்தா – மொறோக்கோவிலுள்ள ஓர் ஊர்.
தன்ஜா – மொறோக்கோவிலுள்ள ஓர் ஊர்.
மறாகிஷ் – மொறோக்கோ நாட்டின் மூன்றாவது பெரிய நகரம்.