Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஹிகம் கூறும் தத்துவம்

ஹிகம் கூறும் தத்துவம்

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

“ஹிகம்” என்ற இந்நூல் அறபு மொழியில் எழுதப்பட்ட ஒரு ஞானக் களஞ்சியமாகும். இதை எழுதிய மகான் “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தரீகா வழி வாழ்ந்த அவர்களின் “முரீத்” தாஜுத்தீன் அதாஉல்லாஹ் ஆவார்கள்.

இந்நூல் உள்வாங்கியுள்ள தத்துவங்களையும், அகமியங்களையும் அறிந்த அறிவுலக மேதைகள் இது பற்றிக் கூறுகையில் كَادَ الْحِكَمُ اَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம் என்ற நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கி விட்டது” என்று கூறியுள்ளார்கள்.

நூலாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
إِنَّ الشُّهْرَةَ آفَةٌ ،كُلٌّ يَتَمَنَّاهَا ، وَإِنَّ الْخُمُوْلَ نِعْمَةٌ وَكُلٌّ يَأْبَاهَا .
“பிரசித்தி பெறுதல் அபாயகரமானதாகும். எனினும் அதை அனைவரும் ஆசைவைக்கிறார்கள். விரும்புகிறார்கள். பிரசித்தி பெறாமல் மறைந்திருப்பது அருளாகும். எனினும் அதை அனைவரும் வெறுக்கின்றார்கள்.”

இதன் சுருக்கமென்னவெனில் ஒருவன் உலகில் பிரசித்தி பெற வேண்டுமென்று விரும்புவது نَفْسُ أمَّارَة – “நப்ஸ் அம்மாறா”வின் பண்பாகும். மனவெழுட்சியின் குணமாகும். வெளிப்பாடாகும். ஆயினும் மனிதர்கள் இதையே விரும்புகிறார்கள்.

இவ் விருப்பமுள்ள ஒருவன் திரையிடப்பட்டவனாவான். இவன் ஒருபோதும் ஆன்மீகத் துறையில் முன்னேற மாட்டான். அல்லாஹ்வை அறியவுமாட்டான். அவனை அடையவுமாட்டான்.
وَهَذَا الرَّجُلُ مَحْجُوْبٌ عَنِ الله تعالى بِالْحُجُبِ الظُّلْمَانِيَّةِ . مَنْ حُبِّ الْجَاهِ وَحُبِّ الشُّهْرَةِ وَغَيْرِهَا، وَكُلُّ مَحْجُوْبٍ بَعِيْدٌ عَنِ الله بُعْدَ الثَّرَى عَنِ الثُّرَيَّا وَأَعْمَى فِي الحقيقة ، وأمّا الأعْمَى فَلَا يَصِلُ إلى مَقْصُوْدِهِ، لِعَدَمِ مَعْرِفَتِه بِهِ،
திரையிடப்பட்டவன், பதவிமோகம், பிரசித்தி பெறுதல் என்ற திரைகளால் அல்லாஹ்வை விட்டும் திரையிடப்பட்டவனாவான். திரையிடப்பட்டவன் எதார்த்தத்தில் அந்தகனேயாவான். அந்தகன் ஒருபோதும் தனது குறிக்கோளை அடைந்து கொள்ள மாட்டான். குருடன் ஒரு போதும் அல்லாஹ்வை அறியவுமாட்டான், அவனை அடையவுமாட்டான்.

ஆகையால் இவன் தன்மீது போட்டுக் கொண்ட பிரசித்தி பெறுதல், பதவி மோகம் என்ற திரைகளை நீக்க வேண்டும். பாம்பு தனது சட்டையை கழட்டுவது போல் இவன் தன்னிலுள்ள திரைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.

بَيْنَ الْعَبْدِ وَرَبِّهِ سَبْعُوْنَ حِجَابًا
அடியான் – மனிதனுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் எழுபது திரைகள் உள்ளன என்று ஏந்தல் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள். இந்த நபீ மொழி மிகவும் நீளமானது. அது முழுவதையும் எழுதி விளக்கம் கூற இப்போதுள்ள சூழ்நிலை இடம் தராது.
وإن فُرض أنّه يحجبه شيئ فيكون الخلق غالبا والحقّ مغلوبا، فهذا محالٌ عقلا ونقلا
ஏதேனுமொன்று இறைவனை திரையிடுமென்று வைத்துக் கொண்டால் திரையிட்ட சிருட்டி அதன் கர்த்தாவில் அதிகாரமுள்ளதாக ஆகிவிடும். இது சத்தியமா? அசாத்தியமே!

اَلْمَحْجُوْبُ هُوَ الْعَبْدُ ، لا الرَّبُّ، لِاَنَّهُ لَا يَحْجُبُهُ شَيْءٌ،
திரையிடப்பட்டவன் அடிமைதான். மனிதன்தான். அல்லாஹ் அல்ல. ஏனெனில் அல்லாஹ்வை எதுவும் மறைக்காது.

ஆகையால் மனிதன் தன்மீது போட்டுக் கொண்ட எழுபது திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் முற்றாக நீக்க வேண்டும். திரை நீங்கினால் மட்டுமே தெளிவு கிடைக்கும்.

ஆகையால் மனிதன் பிரசித்தி பெற்று புகழ் தேடும் பண்பை அகற்றி, அதை வெறுத்து இலை மறை காய் போல் மறைந்து வாழ வழி செய்ய வேண்டும்.

மனிதன் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ வழி செல்லாமல் தூரப்பட்டிருப்பதினால்தான் திரைகள் என்பன எவை? அவற்றை நீக்குவதற்கான வழிகள் எவை? என்பதைப் புரியாமல் அறியாமைச் சேற்றில், சுரியில் புதைந்து போயுள்ளான்.

ஸூபி மகான்களில் அநேகர் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

مَاوَصَلْتُ اِلَى اللهِ بِكَثْرَةِ صَلَاتِيْ وَلَاصِيَامِيْ، وَلَكِنْ وَصَلْتُ اِلَيْهِ بِشَيْءٍ وُقِّرَ فِيْ قَلْبِيْ.

நான் அதிகம் தொழுது, அதிகம் நோன்பிருந்தோ அல்லாஹ்வை அடையவில்லை. எனினும் எனது உள்ளத்தில் பதிவான ஒன்றைக் கொண்டே அடைந்தேன். அதுவே இறை ஞானம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments