நேரடி அஞ்சல் -Live-
இன்ஷா அல்லாஹ் நாளை 20.10.2014 திங்கட் கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் பொதுக்கூட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும் எமது www.shumsme.com இணையத்தில் பி.ப. 2.00 மணி தொடக்கம் நேரடிஅஞ்சல் -live- செய்யப்படும். இணையத்தின் ஊடாக உலகம் எங்கும் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்நிகழ்வுகளை பார்வை இட முடியும். அதே போல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இணைய வானொலி ஊடாகவும் கேட்டுக்கொள்ள முடியும்.
Read Moreவிளக்கவுரை – முனைவர் H. முஜீபுர் றஹ்மான் Ph.D. அவர்கள்
மாநாட்டு நிகழ்வில் தற்போது தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த தமிழ் நாடு நெஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சங்கைக்குரிய முனைவர் H. முஜீபுர் றஹ்மான் Ph.D. அவர்கள் விளக்கவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
Read Moreஇரண்டாம் நாள் நிகழ்வின் இரண்டாம் உரை.
மாநாட்டு மண்டபத்தில் தற்போது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons),JP அவர்கள் “வஸீலா தேடலும் இரட்சிப்புத் தேடலும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
Read Moreஇரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்.
சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். நிகழ்வினை சங்கைக்குரிய மௌலவீ MYLM. முக்தார் அவர்கள் கிறாஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து தற்போது சங்கைக்குரிய மௌலவீ A. றபீயுத்தீன் ஜமாலீ அவர்கள் “ஸுன்னத்தும் பித்அத்தும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள்.
Read Moreஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வு
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வுகான முன்னேற்பாடுகள் நடைபெற்ற காட்சிகள்.
Read Moreதற்போதைய பயான் நிகழ்வின் புகைப்படங்கள் -புதிய பதிவேற்றம்-
சங்கைக்குரிய மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்கு M. அப்துல்லாஹ் ஜமாலி MA. அவர்களின் தற்போதைய பயான் நிகழ்வின் புகைப்படங்கள் -புதிய பதிவேற்றம்- நிகழ்வில் கலந்துகொண்டுள்ள உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ பஷீர் ஷேகுதாவூத் அவர்கள்.
Read Moreமுதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு -விசேட சொற்பொழிவு-.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் முதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு தற்பொழுது வெகுசிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்கு M. அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் “நன்மையை சேர்த்து வைத்தல், தறாவீஹ் தொழுகை, தல்கீன் ஓதுதல், சியாரத் பயணம்” போன்ற தலைப்புக்களில் விசேட சொற்பொழிவினை ஆற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
Read Moreஇரண்டாம் அமர்வின் 03ம் உரை.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் அமர்வில் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் (றவ்ழி) அவர்கள் “கப்றுகளைத் தரிசித்தலும் கட்டிடம் கட்டலும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
Read More01ம் நாளின் இரண்டாம் கட்ட அமர்வின் இரண்டாவது சன்மார்க்க உரை.
சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வில் தற்போது “மௌலித் ஓதுதலும் கந்தூரி கொடுத்தலும்” என்னும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் சங்கைக்குரிய மௌலவீ NM. நவாஸ் அத்லீ அவர்கள்.
Read Moreசுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு
சுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு தற்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்வினை சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் K. முஹம்மது வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ (தெவடகஹ ஜும்அஹ் மஸ்ஜிதின் பிரதம இமாம்) அவர்கள் அழகிய கஸீதா ஒன்றினை இசைத்து துவக்கம் செய்து வைத்தார்கள். தற்பொழுது மாநாட்டு மேடையில் மௌலவீ MR. முஹம்மது சில்மீ (நூரீ) [BA. Hon. PGDE. M.A. சிரேஷ்ட விரிவுரையாளர் -தர்ஹா நாகர் தேசிய கல்வியியற் கல்லூரி- முகாமையாளர் – அளுத்கம
Read More