ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?
الفكرة المصباحية فى بيان الحكم الغزالية ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா? தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ نَوِّرْ إِلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا نَوَّرْتَ قَلْبَ إِمَامِ النَّاسِ غَزَّالِيْ يَارَبِّ أَعْطِ لَـنَا عِلْـمًا وَفَـهْمًا كَمَا اَعْـطَيْتَ يَارَبَّـنَا لِلـشَّيْخِ غَـزَّالِيْ மனிதர்களின் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் உள்ளத்தை ஒளிபெறச் செய்தது போல் இவ்வேழைகளின் உள்ளத்தையும் ஒளிபெறச் செய்வாயாக! அஷ்ஷெய்கு கஸ்ஸாலீ அவர்களுக்கு
Read More38வது வருட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் (பெரிய ஆலிம்) வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 38வது வருட அருள் மிகு மாகந்தூரி 02.08.2015 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக அன்னார் பேரிலான திருக்கொடியேற்ற நிகழ்வு பெரும் திரளான மக்கள் ஒன்று கூடலுடன் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று
Read Moreநன்றி செலுத்துவோம்
من لم يشكر الله النّاس لم يشكرالله மனிதனுக்கு நன்றியுள்ளவனாக இருக்காதவன் (மனிதனுக்கு நன்றி சொல்லாதவனும், செய்யாதவனும்) அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருக்க மாட்டான். (அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னவனாகவும், செய்தவனாகவும் ஆகான்) “அல்லாஹ்” மனிதனுக்கு செய்கின்ற அருள்கள், உதவி உபகாரங்களுக்கு அவனுக்கு மனிதன் நன்றியுள்ளவனாக இருப்பது அவனின் தலையாய கடமையாகும். “ஷாகிர்” நன்றியுள்ளவனாயிருப்பதை விட “ஷகூர்” அதிகம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். நன்றியுள்ளவனாக இருப்பதென்றால் இறைவா! உனக்கு எனது நன்றிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை மட்டும் குறிக்காது.
Read Moreகஃபத்துல்லாஹ்
முடிவில்லா முதலோனின் முழுமை இல்லம் ! முஃமீன்கள் முன்னோக்கும் முதன்மை இல்லம் ! இறை கொள்கை ஈமானை சொல்லும் இல்லம் ! குறை கொள்கை குபுறை மறுக்கும் இல்லம் ! ஒற்றுமை உணர்வுகள் ஓங்கும் இல்லம் ! வேற்றுமை வேதாந்தங்கள் மறுக்கும் இல்லம் ! இறைநேசச் செல்வர்கள் இணைந்த இல்லம் ! இறைவணக்க வழிபாடு நடக்கும் இல்லம் ! இறைசின்னம் எத்தனையோ இருக்கும் இல்லம் ! இறைதியாகச் செயல்கள் நிகழ்ந்த இல்லம் ! சமத்துவம் சமரசம் பேணும் இல்லம் ! சாந்தி சமாதானம் காணும் இல்லம் ! வல்லமை அல்லாஹ்வின் வாய்மை
Read Moreநமது பத்ரிய்யஹ் நவீனமாகிட
HMM.றஹீம் ஆசிரியர் அருட் திருக் கரந்தனின் அடிக்கலில் ஒளிர்ந்து இருள்களை சகாபுகள் இனிய பேரமைந்து மருட்களை மத்ரசா மருங்கினில் எழுந்து பொருட்குவி செல்வரின் பொறுப்பினில் பொலிந்து திருக்கலிமா வதின் தேன் தினம் பொழிந்து திகழ்ந்திடும் பத்ரிய்யஹ் ஜூம்அஹ் நம் பள்ளி பரந்தவான் பௌர்ணமிப் பால் நிலா பொழிந்து பற்பல உடுக்களைத் தன் உடல் அணிந்து சிறந்த பேரழகியாய்ச் சிலிர்ப்பது போலே தனிப் பெருந்தவத்தின் தத்துவம் விளக்கி பனிப் புகார் அகல்வாய் பல் துறை துலக்கி பணிந்த நற்குணமும்
Read Moreமனம் நிறைந்த மணமான பெருநாள் வாழ்த்துக்கள்
கண்ணியத்திற்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே! தஸவ்வுப் ஸூபிஸ வழியில் வாழும் சங்கைக்குரிய உஸ்தாத்மார்களே! அன்பிற்குரிய முரிதீன்களே! சகோதர சகோதரிகளே! இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் எல்லாம் வளங்களும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ எல்லாமாயும் வெளியாகிக் காட்சி தரும் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்துகிறேன். காதிமுல் கவ்மி +++++++++++++++++ التهاني المعطّرة أيّها العلماء السنّيون !
Read Moreமகிழ்ச்சி தரும் பெருநாட்கள்
உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் வருடத்தில் இரு “பெருநாள்” கொண்டாடுகின்றார்கள். இவ்விரு பெருநாட்களும் இஸ்லாத்தில் மார்க்கமாக்கப்பட்டவையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் முக்கிய அம்சங்களில் மூன்றாவதான “நோன்பு” எனும் கடமையை அல்லாஹ்வுக்காக நோற்று, தன் மனவெழுச்சியை அவனுக்காக அடக்கிப் பசித்திருந்து, தாகித்திருந்து, சிறிய, பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்து, பகலில் நோன்பிருந்து, இரவில் நின்று வணங்கி , றஹ்மத், மஃபிறத், இத்கும் மினன்னார் போன்றவற்றை ஆதரவு தேடி அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்து இறுதியில் மனம் மகிழ பிரியாவிடை கொடுத்து றமழானை வழியனுப்பி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி, துதித்து, தக்பீர்
Read More“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.
ஒருவன் ஒரு தொழுகைக்காக “நிய்யத்” வைத்தான். ஆனால் அவன் தொழவில்லை. அவன் ஒரு தொழுகையை தொழுதான். அதற்காக அவன் “நிய்யத்” வைக்கவில்லை. அத் தொழுகை எது? அதற்கான விபரம் என்ன? ஒருவன் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்த நேரம் “இமாம்” – தொழுகை நடத்தியவர் – இரண்டாவது “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்தார். தொழ வந்தவன் “ஷாபிஈ” மத்ஹப் சட்டப்படி “உஸல்லீ பர்ழல் ஜும்ஆ” “ஜும்ஆ”வின் பர்ழை தொழுகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டு தொழுகை
Read Moreமுப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி
சத்திய சன்மார்க்கத்தை நிலைநாட்ட இறையோனின் பாதையில் அயராது உழைத்த நிறைநேசச் செல்வர்களான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரீ (குப்பிகாவத்ததை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (அட்டாளைச்சேனை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் நினைவாக றமழான் பிறை 24ம் இரவன்று (11.07.2015 சனிக்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி
Read More“அத்துஹ்பதுல் முர்ஸலா” தரும் “வஹ்தத்துல் வுஜூத்” தத்துவம்)
إعلمو إخواني أسعدكم الله وإيّانا أنّ الحقّ سبحانه وتعالى هو الوجود، وأنّ ذلك الوجود ليس له شكل ولا حصر، ومع هذا ظهر وتجلّى بالشّكل والحدّ، ولم يتغيّر عمّا كان من عدم الشّكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه. என்தருமைச் சோதரீர் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களையும், எம்மையும் நற்பாக்கியம் உள்ளவர்களாக ஆக்குவானாக! அல்லாஹ்தான் “வுஜூத்” ஆவான். உள்ளமை ஆவான்.
Read More