மௌலவீ ஸுபி இம்தாதீ அவர்களின் கடிதத்திற்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் மறுப்புக் கடிதமும் ஆதாரமும் 20.11.2014
ஸுஹூர் முஹம்மத் என்பவரால் 11.11.2014 அன்று எமது ஷம்ஸ் மீடியா யுனி்ட்டின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு மௌலவீ ஸூபி இம்தாதீ அவர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கான மறுப்புக் கடிதமும் அதற்கான ஆதாரங்களும் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் 20.11.2014 அன்று பதிவுப் தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதியினை எமது இணையத்தளத்தில் பதிவிடுகிறோம்.
Read Moreமல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்
இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.
Read Moreபிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்
ஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளின் பொறுப்பாளரும் இந்நாள் காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், பத்ரிய்யஹ்
Read Moreமௌலவீ பெஸுர் றஹீம்,மௌலவீ ஸூபீ இம்தாதீ ஆகியோருக்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பதில் கடிதங்கள்
07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ பௌஸுர் றஹீம் அன்னவர்களுக்கு எழுதப்பட்ட பதில் கடிதம் 07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ ஸூபீ இம்தாதீ அவர்களுக்காக எழுதப்பட்ட பதில் கடிதம்
Read Moreபாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி நிகழ்வுகள் – 2014
இந்தியாவின் தமிழ் நாட்டில் பாசிப்பட்டணம் எனும் ஊரில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் செய்யிதுனா நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் தந்தை றாவுத்தர் ஸாஹிப் மௌலானா ஆகியோரினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 07.11.2014 (வெள்ளிக்கிழைமை) அன்று பி.ப 05:00 மணிக்கு திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ மஜீத் றப்பானீ அவர்களின் துஆப் பிரார்த்தனையும், திருக்கொடியேற்ற நிகழ்வுக்காக ஒன்று சேர்ந்திருந்த மக்களின் முறாதிய்யஹ் முழக்கத்துடனும் கந்தூரிக்காக
Read Moreநேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ!
பாசிப்பட்டணத்தில் பள்ளி கொண்டுள்ள நேச மகனார் எங்கள் நெய்னார் வலிய்யுல்லாஹ்! ஆசை அனைத்தையும் அவனுக்காய் துறந்திட்ட நேசராய் வாழ்ந்த நெய்னார் வலிய்யுல்லாஹ்! அப்பா ராவுத்தர் அப்பாவின் வழியிலே தப்பாத தனையனாய் தரணியில் பிறந்திட்டார் அப்போதும் இப்போதும் அல்லாஹ்வின் அருளினை எப்போதும் பெற்றிட்ட ஏற்ற வலிய்யுல்லாஹ்! உள்ளமை அல்லாஹ்வை உள்ளத்தால் உணர்ந்திட்டார் இல்லாமை உலகத்தை எடுத்துப் பார்த்திட்டார் வல்லமை வல்லோனின் வாய்மையை அறிந்திட்டார் நல்லோர்கள் நபீமார்கள் நல்லாசி பெற்றிட்டார் சின்னஞ் சிறு வயதினிலே சிறப்புகள் பெற்ற மகன் உண்ண
Read Moreஆஷூறா தின சிறப்பு நிகழ்வுகள்
இஸ்லாமியப் புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்தொடர்ந்து 10 தினங்கள் ஓதப்பட்டு வந்த, ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் 03.11.2014 அன்று அஷூறா தின இரவோடு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆஷுறா தினத்தையொட்டி மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் விஷேட பயானும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் யாஸீன் சூறாவும் ஓதப்பட்டது நிறைவுபெற்றது. நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ஆஷுறா தினம் தொடர்பான முஸாதிக்
Read Moreஅழகொளிரும் ஸூபிசத் தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
இலங்கைத் திருநாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு மிக்க கண்கவர் ஊரான காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் சத்தியக் கொள்கையை உயிர்பிக்கும் தளமாகவும், இஸ்லாத்தின் ஆணிவேரான ஸுபிஸக் கொள்கையை ஆணி்த்தரமாக எடுத்தியம்பும் கொள்கையின் சிற்பமாகவும் இயங்கி வரும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அழகொளிர் காட்சிகள் சில……. புதிய கட்டிய நிர்மாணப் பணிகளின் போது…… அல்மத்றஸதுர் றப்பானி்ய்யஹ்,பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் ஆகிய இரு இறை சொத்துக்களின் ஸ்தாபகரும் ஆரிபுபில்லாஹ் அப்துர் மிஸ்பாஹீ தவப்புதல்வரின் அருமைத் தந்தையும், காத்தநகர் புகழ் சிறக்க
Read More