ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ”நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2017 ஞாயிற்றுக்கிமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் கௌரவிப்பு நிகழ்வும், அகீததுஸ் ஷூபிய்யஹ்
Read Moreபிறந்த நாள் நிகழ்வில் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் பங்கேற்பு
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத்தந்தை ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டிட வேலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும், அவர்களின் தேக ஆரோக்கியத்திற்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வும் புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிப் பொறுப்பாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அன்னவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக
Read More15வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக அன்றைய தினம் பி.ப 5.00 மணிக்கு அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும்,
Read More32வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரியின் தொகுப்பு – 2017
கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 13.01.2017 தொடக்கம் 15.01.2017ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 32வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது. கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 13.01.2017 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வும்,
Read Moreதென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்களின் இலங்கை விஜயத்தின் தொகுப்பு
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இறைஞான, இஸ்லாமியப் பாடகர் A. ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்கள் சிங்கப்பூரிலிருந்து கடந்த 21.12.2016 அன்று இலங்கைத்திருநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். இவ்விஜயத்தி்ல் காத்தான்குடி, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று இறைஞான கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்தார்கள். குறிப்பாக அல் ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களை புகழ்ந்து பாடி, ஸியாறத் செய்து அருள் ஆசிகளையும், சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
Read More15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 13.12.2016 செவ்வாய்க்கிழமையன்று புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம்
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு
அகிலத்தாருக்கு அருட்கொடையாய் அகிலத்தில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வருகின்ற மௌலித் மஜ்லிஸ் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக 04.12.2016 ஞாயிற்றுக்கிழமையன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யி்த்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பி.ப 2:30 மணியளவில்
Read Moreபூமான் நபீயின் புகழ் கூறும் புனித றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ்கள் ஆரம்பம்
நபீகட்கரசர், நவரத்திணம் பூண்டவர், நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களில் 30.11.2016 புதன்கிழமை
Read More20வது வருட தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 20வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.11.2016 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:45 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக மஃரிப் தொழுகையின் பின் “அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்
இறையொளி எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனிதமிக்க றபீஉனில் அவ்வல் மாதத்தினை சிறப்பித்து வருடாவருடம் காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வு இவ்வாண்டு 40வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காகவும், மௌலித் மஜ்லிஸுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் 18.11.2016 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகையின் பின் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் மற்றும் இறைநபீ நேசர்களுக்கான பொதுக் கூட்டம்
Read More