ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வு
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வுகான முன்னேற்பாடுகள் நடைபெற்ற காட்சிகள்.
Read Moreதற்போதைய பயான் நிகழ்வின் புகைப்படங்கள் -புதிய பதிவேற்றம்-
சங்கைக்குரிய மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்கு M. அப்துல்லாஹ் ஜமாலி MA. அவர்களின் தற்போதைய பயான் நிகழ்வின் புகைப்படங்கள் -புதிய பதிவேற்றம்- நிகழ்வில் கலந்துகொண்டுள்ள உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ பஷீர் ஷேகுதாவூத் அவர்கள்.
Read Moreமுதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு -விசேட சொற்பொழிவு-.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் முதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு தற்பொழுது வெகுசிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்கு M. அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் “நன்மையை சேர்த்து வைத்தல், தறாவீஹ் தொழுகை, தல்கீன் ஓதுதல், சியாரத் பயணம்” போன்ற தலைப்புக்களில் விசேட சொற்பொழிவினை ஆற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
Read Moreஇரண்டாம் அமர்வின் 03ம் உரை.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் அமர்வில் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் (றவ்ழி) அவர்கள் “கப்றுகளைத் தரிசித்தலும் கட்டிடம் கட்டலும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
Read More01ம் நாளின் இரண்டாம் கட்ட அமர்வின் இரண்டாவது சன்மார்க்க உரை.
சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வில் தற்போது “மௌலித் ஓதுதலும் கந்தூரி கொடுத்தலும்” என்னும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் சங்கைக்குரிய மௌலவீ NM. நவாஸ் அத்லீ அவர்கள்.
Read Moreசுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு
சுன்னத்வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வு தற்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்வினை சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் K. முஹம்மது வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ (தெவடகஹ ஜும்அஹ் மஸ்ஜிதின் பிரதம இமாம்) அவர்கள் அழகிய கஸீதா ஒன்றினை இசைத்து துவக்கம் செய்து வைத்தார்கள். தற்பொழுது மாநாட்டு மேடையில் மௌலவீ MR. முஹம்மது சில்மீ (நூரீ) [BA. Hon. PGDE. M.A. சிரேஷ்ட விரிவுரையாளர் -தர்ஹா நாகர் தேசிய கல்வியியற் கல்லூரி- முகாமையாளர் – அளுத்கம
Read Moreசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் முதலாம் அமர்விலிருந்து ஓர் தொகுப்பு
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 தொடர்பாக ஏற்கனவே எமது இணையத்தில் சில புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடராக இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் மற்றுமோர் புகைப்படத் தொகுப்பு.
Read Moreசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளின் ஓர் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக ஏற்பாடாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 இன் முதலாம் நாள் நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களின் ஓர் தொகுப்பு.
Read Moreஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அறபு நூலக திறப்பு வைபவமும்.
கடந்த 06.10.2014 திங்கட் கிழமை அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அதி சங்கைக்கும் மரியாதைக்கும் உரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து பயன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களாலும் ஏனைய “உலமாஉ”களாலும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அறபு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. (அவை தொடர்பான புகைப்படங்கள் உள்ளே )
Read Moreஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு 2014ற்கான -ஊடகவியலாளர் சந்திப்பு-
காத்தான்குடியில் நடைபெறவுள்ள ஸுன்னத் வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடி அல் ஜாமிஅதுர் றப்பானியா மண்டபத்தில் 10-10-2014 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத்தலைவர் மௌலவீ எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ கருத்து தெரிவிக்கையில் இந்த மாநாட்டில் ஆரம்ப வைபவம் 18.10.2014 சனிக்கிழமை காலை நடைபெறும். இதில் அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாடு எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ்
Read More