தொழுகையின் அவசியமும், அதன் சிறப்பும்.
ஆக்கம் – மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் தீன் நகர், காத்தான்குடி ++++++++++++++++++++++++++++++++++++ தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமான ஒன்றாகும். கியாமத் நாளில் முதலில் கலிமாவைப்பற்றி விசாரிக்கப்படும். அதன் பின் பர்ளான ஐவேளைத் தொழுகைகளைப் பற்றியே வினவப்படும், ஆராயப்படும். தொழும் விடயத்தில் எதுவித காரணமும் சொல்லித் தப்பித்து விட முடியாது. நோன்புக்கு சலுகைகள் இருந்தாலும் தொழும் ஒருவருக்கு அதனை விட்டு விடுவதற்கு எதுவித சலுகையும் இல்லை.
Read Moreஸலாம் ஓர் பார்வை
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பேஷ் இமாம் ஸலாம் என்பது இஸ்லாத்தில் ஒரு சகோதரர் தன் மற்ற சகோதரரை கண்டபோது – முகமன் – சொல்வதற்கு குறிப்பாக பயன் படுத்தப்படுகின்றது. மாற்றுமத சகோதரர்கள் அவர்களின் வழக்கத்திலுள்ள அய்போவன், வணக்கம், குட்மோனிங், என்ற தங்களின் மதம் கூறும் வழியில், அல்லது அவர்களின் வழக்க முறைப்பிரகாரம் தங்கள் முகமன்களை கூறிக் கொள்கின்றனர். ஸலாம் என்பது ஓர் அறபுச்சொல்லாகும். இச்சொல்லை உரிய முறையில் சொல்வதாயின் “ஸலாம்” என்ற இந்த
Read Moreஐஸ்கட்டியும், தண்ணீரும்
قال الشيخ عبد الكريم الجيلي رحمه الله! وَمَا الْخَلْقُ فِيْ التَّمْثِيْلِ اِلاَّ كَثَلْجَةٍ وَاَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعٌ وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ وَيُوْضَعُ اِسْمُ الْمَاءِ وَالْاَمْرُ وَاقِعٌ மேற்கண்ட கவியில் “இன்ஸான் காமில்” நூலாசிரியர் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும், அல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான்.
Read Moreசிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்)
ஆக்கம் – புஸ்தானுல் ஆஷிகீன் சுத்தம் ஈமானின் பாதியாகும் என அண்ணல் நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள் சுத்தம் என்பது அகச்சுத்தம், புறச்சுத்தம் என்று இரண்டாகவும் உடல், உடை, உள்ளம் என விரிவு படுத்தி மூன்றாகவும் சொல்லப்படுகின்றது. ஒருவர் இறைவனை வழி படுவதாக இருந்தால் அவரிடம் இம்மூன்றுடன் சேர்த்து இடச்சுத்தத்தையும் கவனிக்கப்படும் . தான்தொழுமிடம் “நஜாசத்” எனும் அசுத்தம் உடையதாக இருப்பின் அவரின் தொழுகை பாதிலானதாக (வீணானதாக) ஆகிவிடும். எனவே உடை சுத்தம் பேணப்பட்ட பின்னர் தன்
Read Moreசற்குருமார்களும், கடலாமைகளும்
கடலாமை முட்டை கரை தனிலிட்டபின் கடலில் இறங்கி தியானம் செய்து உடனே தன் முட்டை பொரிக்கும் உவமை போல் உள்ளமையாகுமாம் என் பிறவி கடலில் வாழும் கடலாமை என்ற பெரிய ஆமை முட்டையிடுவதற்கு கரைக்கு வந்து மண்ணைக் கிளறிக் குழி தோண்டி அதில் முட்டையிட்ட பின் கடலுக்கு சென்று விடும். நீருள் இருந்து கொண்டே கரையிலிட்ட முட்டையை கண் இமைக்காமல் தொடர்ந்து பல மணி நேரம் உற்று நோக்கி குஞ்சுகள் பொரித்து அவற்றை வெளிப்படுத்தும். இவ்வாறுதான் ஆன்மீகக்
Read Moreதிருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்
திருக்குர்ஆன் என்பது மனிதனின் உள நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருப்பது போல் அவனின் உடல் நோய்களைச் சுகமாக்கும் மருந்தாகவும் உள்ளது. அது எந்த நோய்க்கு மருந்தென்றாலும் அதைக் கொண்டு மருந்து செய்தால் மட்டுமே நோய் சுகமாகும். அதை உறையிலிட்டு காலையும் மாலையும் அதை முத்தமிட்டு வருவதால் எந்த நோயும் குணமாகி விடாது. அல்லது தினமும் திருக்குர்ஆனை ஓதி வருவதாலும் குணமாகி விடாது. திருக்குர்ஆனை முத்தமிடுவதும், அதை ஓதுவதும் நன்மை தரக்கூடிய நற் செயல்கள்தான். ஆயினும் அவ்வாறு செய்தல்
Read Moreகுறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் “ஈரான்”நாட்டின் “குறாஸான்” மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111) “தூஸ்” எனும் நகரில் பிறந்தார்கள். “ஸூபிஸம்” பேசிய தத்துவஞானி. இவா்களின் அறிவுத்திறமையால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்ற சிறப்புப் பெயரால் பிரசித்தி பெற்றார்கள். இமாமுல் ஹறமைன் அபுல் மஆலி அல் ஜுவைனீ றஹ் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்களிடம் கல்வி கற்றார்கள். பக்தாத் நகரில் பிரசித்தி பெற்ற “நிளாமிய்யா”வில் படித்துக் கொடுத்தார்கள். அறபு மொழியில்
Read Moreஉறக்கம் “வுழூ”வை முறிக்குமா?
தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி) “வுழூ”என்றால் ஒருவன் “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி – விதிப்படி – தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும். உதாரணமாக முதலில் “வுழூ”வின் “பா்ழை” இறுக்குகின்றேன் என்று “நிய்யத்” வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால்
Read Moreஉள்ளம் தெளிவானால் உலகத்தையே பார்க்கலாம்
ஒரு மனிதனின் வெளிக்கண்கள் இரண்டும் தெளிவாக இருந்தால்-ஆரோக்கியமாக இருந்தால் இவன் தன்னை விட்டு மறையாத எதையும் பார்க்க முடியும். ஆனால் மனக்கண்-கல்புக்கண்-தெளிவானவன் தன்னை விட்டும் மறைந்தவற்றையும் அது கொண்டு பார்ப்பான். மனக்கண் தெளிவானவனுக்கு வெளிக்கண் தேவையில்லை. இமாம் அப்துல்லாஹ் இப்னு அலவிய்யுல் ஹத்தாத் றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள் இரு கண் பார்வையையும் இழந்திருந்தார்கள். எனினும் அவா்கள் கூர்மையான பார்வை உள்ளவா்கள் போன்றே மற்றவா்களுக்குத் தென்பட்டார்கள். அவா்கள் வழமையாக அறை ஒன்றில் தனியாகவே உறங்குவார்கள். எவரையும் உள்ளே அனுமதிக்க
Read Moreபருந்து
இப்பறவை பறவைகளின் தலைவன் என்று சொல்லப்படும். பறவைகளில் அதி வேகமாக பறப்பது பருந்துதான். இது ஒரே நாளில் கிழக்கில் இருந்து மேற்கிற்கு செல்லும் வல்லமை உள்ளது. காட்டில் வாழும் யானைக் குட்டிகளைக் கூட இறாஞ்சிக் கொண்டு பறந்து செல்லும். அதன் காலின் சக்தி மிக அபாரமானது. இப்பறவை பறவைகளிலேயே அற்புதமானது. இது போன்று நுகரும் சக்தியுள்ள பறவை எதுவுமில்லை. சுமார் 400 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பிணத்தின் வாடையைக் கூட நுகரும் சக்தி இதற்கு உண்டு. காட்டில்
Read More