லைலதுல் கத்ரே வருக!
கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன். திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன். றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன். வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே! காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே!
Read Moreஇறையில்லம் சென்று வா! இன்ஸானே வென்று வா!
இறையடிமை இன்ஸானே! ஈமான் கொண்டவனே! இறைகடமை ஹஜ்ஜதனை இதயத்தால் எண்ணிப்பார்! இறையில்லம் சென்று நீ “இபாதத்” செய்யப்பார்! இரண்டென்ற இணை நீங்க “இஃறா” மை நீ உடுத்துக் கொள்! ஒன்டென்ற “தௌஹீத்” ஓங்க “தல்பியா” வை உரத்துச் சொல்! நானென்ற உணர்வு போக்கி நாயனிடம் எழுந்து நில்! உள்ளமை “அல்லாஹ்” வை உள்ளத்தால் உணர்ந்துவிட இல்லம் “கஃபா” வை ஏழு முறை சுற்றி விடு! கள்ளமை ஷைத்தானை விரட்ட கல்லெடுத்து எறிந்துவிடு! மலை அறபா தரித்து –
Read Moreகஃபத்துல்லாஹ்
முடிவில்லா முதலோனின் முழுமை இல்லம் ! முஃமீன்கள் முன்னோக்கும் முதன்மை இல்லம் ! இறை கொள்கை ஈமானை சொல்லும் இல்லம் ! குறை கொள்கை குபுறை மறுக்கும் இல்லம் ! ஒற்றுமை உணர்வுகள் ஓங்கும் இல்லம் ! வேற்றுமை வேதாந்தங்கள் மறுக்கும் இல்லம் ! இறைநேசச் செல்வர்கள் இணைந்த இல்லம் ! இறைவணக்க வழிபாடு நடக்கும் இல்லம் ! இறைசின்னம் எத்தனையோ இருக்கும் இல்லம் ! இறைதியாகச் செயல்கள் நிகழ்ந்த இல்லம் ! சமத்துவம் சமரசம் பேணும் இல்லம் ! சாந்தி சமாதானம் காணும் இல்லம் ! வல்லமை அல்லாஹ்வின் வாய்மை
Read Moreநமது பத்ரிய்யஹ் நவீனமாகிட
HMM.றஹீம் ஆசிரியர் அருட் திருக் கரந்தனின் அடிக்கலில் ஒளிர்ந்து இருள்களை சகாபுகள் இனிய பேரமைந்து மருட்களை மத்ரசா மருங்கினில் எழுந்து பொருட்குவி செல்வரின் பொறுப்பினில் பொலிந்து திருக்கலிமா வதின் தேன் தினம் பொழிந்து திகழ்ந்திடும் பத்ரிய்யஹ் ஜூம்அஹ் நம் பள்ளி பரந்தவான் பௌர்ணமிப் பால் நிலா பொழிந்து பற்பல உடுக்களைத் தன் உடல் அணிந்து சிறந்த பேரழகியாய்ச் சிலிர்ப்பது போலே தனிப் பெருந்தவத்தின் தத்துவம் விளக்கி பனிப் புகார் அகல்வாய் பல் துறை துலக்கி பணிந்த நற்குணமும்
Read Moreஷம்ஸுல் உலமா தந்த ஷம்ஸே!
உலகில் ஆயிரம் இணையம்- அதில் உன் பெயர் உரக்கச் சொல்கிறோம் ஷம்ஸ்.! காத்த நகர் மண்ணில் பூத்த மா வலீ – அபுல் இர்பான் காதிமுல் கவ்மி தந்த அறிவுப் பெட்டகம் ஷம்ஸ்! ஆலமுல் அர்வாஹ் ஆன்ம உலகு முதல் ஆலமுல் அஜ்ஸாம் சூக்கும உலகுத்தவராஜர் வரை- நபிமார், வலீமார், நல்லடியார்களைச் சுமக்கும் பேழை ஷம்ஸ்! என்ன கோடி தவம் செய்தோம் நாம் ??? பொய்யான உலகினில் மெய்யான மெஞ்ஞானம் மோதிடும் அஞ்ஞான ஐயம் அறுத்திடும்
Read Moreதீனுக்காக வாழ்ந்த மகான்
எங்கள் மௌலவீ பாறூக் காதிரீ உங்கள் பிரிவு இன்றும் வாட்டுது நெஞ்சில் நினைவு நிழலாய் நிறையுது உங்கள் வாழ்வு உணர்வில் இருக்குது
Read Moreநேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ!
பாசிப்பட்டணத்தில் பள்ளி கொண்டுள்ள நேச மகனார் எங்கள் நெய்னார் வலிய்யுல்லாஹ்! ஆசை அனைத்தையும் அவனுக்காய் துறந்திட்ட நேசராய் வாழ்ந்த நெய்னார் வலிய்யுல்லாஹ்! அப்பா ராவுத்தர் அப்பாவின் வழியிலே தப்பாத தனையனாய் தரணியில் பிறந்திட்டார் அப்போதும் இப்போதும் அல்லாஹ்வின் அருளினை எப்போதும் பெற்றிட்ட ஏற்ற வலிய்யுல்லாஹ்! உள்ளமை அல்லாஹ்வை உள்ளத்தால் உணர்ந்திட்டார் இல்லாமை உலகத்தை எடுத்துப் பார்த்திட்டார் வல்லமை வல்லோனின் வாய்மையை அறிந்திட்டார் நல்லோர்கள் நபீமார்கள் நல்லாசி பெற்றிட்டார் சின்னஞ் சிறு வயதினிலே சிறப்புகள் பெற்ற மகன் உண்ண
Read Moreஇன்பம் தரும் இறை நோன்பு.
கவித்திலகம் மாதிஹுர்றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ. மாண்புடையோன் அல்லாஹ்வின் நோன்பை நோற்கும் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்கள் எண்ணற்ற கூலிதனை இறையிடத்தில் இமயமலை போல் குவிக்கும் வணக்கமாகும். நோன்பாளி நித்திரையும் மூச்சும் கூட நேய இறை வனுக்குகந்த வணக்கமாகும். நோன்பாளி சிந்தனையும் பேச்சும் கூட நிகரில்லா நன்மையொளிர் வணக்கமாகும். +++++=====+++++ நரகத்தின் வாசலெல்லாம் மூடும் மாதம்! நாயனருள் பூமியிலே இறங்கும் மாதம்! முரடர்களும் மனமுடைந்து வணங்கும் மாதம்! திருடர்களும் திருந்தியுளம் பணியும் மாதம்! மரணித்த பாவிகட்கும் வேதனைகள் மிகக்குறைவாய்
Read Moreஹாஜிகளே வாருங்கள்!
கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ ஹாஜிகளே வாருங்கள் ஹாஜ்ஜாக்களே வாருங்கள் கடும் தவம் புரிந்து சுடும் தரையில் கால் பதித்து கஷ்டங்கள் அனுபவித்து ஹஜ்ஜதனை நிறைவு செய்த ஹாஜிகளே வாருங்கள் இறைஜோதிகளே வாருங்கள்! பணத்தாசைதனையறுத்து பெருந்தொகையைச் செலவு செய்து படைத்தோனை வணங்கிடவே பெரும்தூரம்தனைக்கடந்தீர் பயணத்தில் களைப்புற்று பயகம்பர் ஆசியுடன் புனித ஹஜ் முடித்திட்ட புனிதர்களே வாருங்கள்! புனிதர்களாம் நபிமார்கள் பேரிறையின் வலீமார்கள் பாதம்பட்ட பூமியிலே பாதங்கள் தொட்டவர்காள்! பாவங்கள் உதிர்தவர்காள்! பரிசுத்தம் பெற்றவர்காள்! பாலர்காள் வாருங்கள் பறகத் நாம்
Read More