அன்பான வேண்டுகோள்!

October 9, 2017

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்

முக நூல் (Facebook சமூக வலைத்தளத்தில் புனைப்பெயர்கள் மூலம் எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கு சார்பானவர்களாக கருத்துக்கள் தெரிவித்து வரும் சகோதரர்களே!

எமது ஷெய்ஹுநாயகம் அவர்கள் பேசி வரும் ஸூபிஸ இறைஞானக்கருத்துக்களை மறுத்து அன்னாரை விமர்சிப்பவர்கள் மீது நீங்கள் 
கண்ணியமற்ற வன்மையான வார்த்தைப்பிரயோகங்கள் மேற்கொண்டு தர்க்கிப்பதாக அறிகின்றோம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்
‎” ‫ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة‬”
நபியே! உங்களின் றப்பின் வழிக்கு “ஹிக்மத்”தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழையுங்கள் என்று கூறியுள்ளான்.
(அல்குர்ஆன் 16 :125 )

சகோதரர்களே!
மேலே நாம் கூறிக்காட்டிய திரு வசனத்தில் “அழகிய உபதேசத்தைக்கொண்டு” என்பதை கோடிட்டுக்காட்டுவதே எம் நோக்கமாகும்.

அழகிய வார்த்தைப்பிரயோகங்கள் இல்லாமல் ஹிக்மத் எனும் ஞானத்தை மாத்திரம் கொண்டு மக்களை நல்வழிக்கு எவ்வளவுதான் அழைத்தாலும் அது விழலுக்கிறைத்த நீர்போன்றாகும் என்பதை கவனத்திற்கொள்ளுமாறு வினயமாகக்கேட்டுகொள்கின்றோம்.

“ஷெய்ஹுனா மிஸ்பஹீ நாயகம் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள்! அதனால்தான் அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கிறோம்” என்று நீங்கள் நியாயப்படுத்தலாம்.
அப்படியானவர்களை வன்சொல் கொண்டு தூற்றித்தான் சத்தியத்தை நிலைநாட்டவேண்டும் என்பது எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் வழிமுறையல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
உலகமே எதிர்த்தாலும் அன்னாரின் கீர்த்தியை அல்லாஹ் மென்மேலும் ஓங்கச்செய்து
கொண்டிருக்கின்றான் என்பதை கடந்துவந்த பாதை சான்று பகரும்.

அவ்வாறு அவர்கள் தூற்றினால் சாத்வீக ரீதியில் உங்கள் நியாயமான கருத்துக்களை அத்தகையவர்களிடம் முன்வையுங்கள்.
தயவு செய்து வன்சொல் கொண்டு தூற்றுவதையும் அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள்மீது எதிரிகள் கொடும்வார்த்தைகளை அள்ளி வீசும்போது அவற்றை அவர்கள் எவ்வாறு பொறுமையுடன் எதிர்கொண்டார்கள் என்பதை முன்மாதிரியாகக்கொள்ளுங்கள்.
அழகிய வார்த்தைகளைக்கொண்டு இறைஞானத்தை நிலைநிறுத்த உதவுங்கள்.

இவ்வண்ணம்
ஷம்ஸ் மீடியா யுனிட்

You may also like

Leave a Comment