இது தான் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

July 17, 2018

-மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ –
———————————

01.அவனே வஸ்த்துக்களின் மூலப் பொருளாகும்….. சிருஷ்டிகள் என்ற பெயரில் அவனே இருக்கின்றான்….. உலகம் அவனுடைய உருவமாகும்.

நூல் – புஸூஸுல் ஹிகம், பக்கம் – 111,
இமாம் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்

02.இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள். நாம் சிருஷ்டிகளில் யாரையும் காணவில்லை. உள்ளமையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உண்டா?

நூல் – ஈகாழுல் ஹிமம்,பக்கம் – 44,
ஆசிரியர் – இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்
நூல் – லதாஇபுல் மினன், பக்கம் – 130,
ஆசிரியர் – தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ்

03.படைப்புகளின் தோற்றத்தில் அல்லாஹ்வின் தாத்- உள்ளமைதான் வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல் இன்ஸானுல் காமில் பக்கம்:41
ஆசிரியர் : அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்

04.அல்லாஹ் தஆலா தனது நெருங்கிய அடியானுக்கு சொல்கின்றான், “எனது அன்புக்குரியவனே! என்னை காட்சியாக காண்பதளவில் (என்னை நீ மேலும்) நெருங்கு! நான் எனது உள்ளமையைக்கொண்டு உன்னை நெருங்கியுள்ளேன்! அன்பனே நுகர்பவைகளில் என்னையே நீ நுகர்! உணவில் என்னையே நீ சாப்பிடு! அன்பனே புலன்களால் உணரப்பட்டவைகளில் என்னையே நீ பார்! தொடுபவைகளில் என்னையே நீ தொடு!” உடையாக அணிவைகளில் என்னையே நீ அணிந்துகொள்!

நூல் : அல் இன்ஸானுல் காமில், பக்கம் : 70
ஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி

05.படைப்பு (கல்கு), படைத்தவன் (ஹக்கு) என்ற பெயர்கள் சூட்டப்படுபவைகளின் எதார்த்தம் அவனே! (அல்லாஹ்வே! )

நூல் : அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 5
ஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி

06.அல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும், அல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான். ஐஸ்கட்டி கரைந்தால் அந்தப் பெயரும், அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும். நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும். ஐஸ்கட்டி என்பது நீரின் ஒரு உருவமேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டி என்று ஒன்றில்லை. நீரேதான் ஐஸ்கட்டியின் உருவத்தில் தோற்றுகிறது.

நூல்: அல் இன்ஸானுல் காமில், பக்கம் : 51
ஆசிரியர் : இமாம் அப்துல் கரீம் ஜீலி றஹிமஹுல்லாஹ்,

07. “நிச்சயமாக ஹக்கு ஸுப்ஹான ஹுவ தஆலாதான் வுஜூத் உள்ளமை ஆகும். அந்த உள்ளமைக்கு கோலமில்லை, எல்லையில்லை, கட்டுப்பாடில்லை. அவ்வாறு இருப்பதுடன் அது (அந்த உள்ளமை) கோலத்திலும், எல்லையிலும் வெளியாகியுள்ளது. (இவ்வாறு வெளியாகிய காரணத்தினால்) கோலமின்மை, எல்லையின்மை ஆகிய தன்மைகளிலிருந்து அது (அந்த உள்ளமை) மாறுபடவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றது. வுஜுத் – உள்ளமை ஒன்றே ஆகும். உடைகள் பலதாகும். அந்த வுஜுத் – உள்ளமை சகல சிருஷ்டிகளுக்கும் எதார்த்தமாகவும், அந்தரங்கமாகவும் இருக்கின்றது. சகல படைப்புகளும் அணு உட்பட அந்த உள்ளமையை விட்டும் நீங்கியிருக்காது”

நூல் : அத்துஹ்பதுல் முர்ஸலஹ்.,பக்கம் 01
ஆசிரியர் :அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ்

08. நிச்சயமாக சகல படைப்புகளும் வுஜூத்- உள்ளமை என்ற அடிப்டையில் ஹக் தஆலா தானானதாகும். ( படைப்பு என்ற வெளிரங்க) குறிப்பின் அடிப்டையில் ஹக் தஆலாவுக்கு வேறானதாகும். வேற்றுமை ஒப்பீட்டில் உள்ளதாகும். யதார்த்தத்தில் எல்லாம் ஹக் தஆலா தான்

நூல் : அத்துஹ்பதுல் முர்ஸலஹ்.,பக்கம் 04
ஆசிரியர் :அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ்

09.உருவங்களில் வெளியாகி இருப்பது தாதுல் அலிய்யஹ் (ذات العليّة) அல்லாஹ்வின் தாத் – உள்ளமையாகும்.

ஆசிரியர் : அஷ்ஷெய்ஹ் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னுல் மஹ்தீ இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்

நூல் : மிஃறாஜுத் தஷவ்வுக் இலா ஹகாஇகித் தஸவ்வுப், பக்கம்57

10.”நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளித்தோற்றத்தில் மறைந்து, “பாதினிய்யத்” உள்ளமைப்பில் – எதார்த்தமாக வெளியானபோது….. இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளமைப்பை – எதார்த்தத்தை புரியவில்லை. அதாவது அது இறைவனின் உருவம் என்பதைப் புரியவில்லை”////

நூல் : அல் பத்ஹுர் றப்பானீ பக்கம் 208
ஆசிரியர் : இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ்

11.”அவ்விரண்டும் (படைப்பும், படைத்தவனும்) இரண்டல்ல. ஆனால் ஒன்றேதான்”

நூல் :ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி, பக்கம் – 196
ஆசிரியர் : இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ்

12. “கண்கள் காணக்கூடிய அனைத்து வஸ்த்துக்களும் ஹக் தஆலாவேதான். ஆனால் “கயால்” என்று கூறப்படும் திரையிடப்பட்ட மாயை அதற்கு படைப்பு என்று பெயிரிடுகிறது. காரணம் அது (ஹக்) சிருஷ்டி என்ற உருவத்தினால் மறைக்கப்பட்டிருக்கின்றமையே ஆகும்.

நூல் : ஷர்ஹு புஸூஸில் ஹிகம் ,பக்கம் : 152
ஆசிரியர் : இமாம் காஷானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்

13. “பார்க்கப்படுபவது ஹக் தஆலாதான். அதாவது சகல படைப்புக்களிலும் அவனையே காணுகின்றோம். படைப்பு என்பது பேதமையாகும். அதனால்தான் அது படைப்பென்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில் “அல்கல்கு” என்பதற்கு மொழி இலக்கணத்தில் “பொய்” என்றே கூறப்படும்.”

நூல் : ஷர்ஹு புஸூஸில் ஹிகம் லில் கைஸரீ, 1-365
ஆசிரியர் : இமாம் தாவூத் அல் கைஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்

14.சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. அவன் சிருஷ்டிதான். சிருஷ்டி அவன்தான்.

நூல்: ஹாஷியதுல் அரூஸீ, பாகம் – 20, பக்கம் – 02,
இமாம் ஷெய்குல் இஸ்லாம் அஸ்ஸெய்யித் முஸ்தபா அல் அரூஸீ றஹிமஹுல்லாஹ்

You may also like

Leave a Comment