“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு – 2017

September 1, 2017

தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 02.09.2017 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது.

9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும்,  10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ  ACM. பைஸல் றப்பானீ அன்னவர்களினால் பெருநாள் குத்பஹ்வும், துஆவும் ஓதப்பட்டது.

இறுதியாக ஆன்மீகச் சுரங்கம், அல்வலிய்யுல் காமில், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் புனித தர்கா ஷரீபில் அன்னாரின் வஸீலா வேண்டி புகழ்மாலை பாடப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

– ஈத்முபாறக் –

You may also like

Leave a Comment