தென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்களின் இலங்கை விஜயத்தின் தொகுப்பு

December 30, 2016

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற இறைஞான, இஸ்லாமியப் பாடகர் A. ஸெய்னுலாப்தீன் பைஸீ அவர்கள் சிங்கப்பூரிலிருந்து கடந்த 21.12.2016 அன்று இலங்கைத்திருநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

இவ்விஜயத்தி்ல் காத்தான்குடி, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று இறைஞான கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்தார்கள்.

குறிப்பாக அல் ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களை புகழ்ந்து பாடி, ஸியாறத் செய்து அருள் ஆசிகளையும், சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ நாயகம் அன்னவர்களை சந்தித்து துஆ பறகத்தையும் பெற்று கொண்டு 31.12.2016 அன்று சிங்கப்பூர் நோக்கி பயணிக்கிறார்கள்.

அல்லாஹ் அன்னாரின் வாழ்வில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் அன்பைக் கொண்டும், வலீமார்களின் நல்லாசிகள் கொண்டும் பறகத் செய்வானாக! ஆமீன்

You may also like

Leave a Comment