வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு

December 15, 2019

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு” 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபீ மன்ஸில், மஞ்சந்தொடுவாய் ஹிழுறிய்யா கலாசார நன்நோக்குச் சங்கம் ஆகிய இடங்களில் சுமார் 1300 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாகிகளும், மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment