ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பெருநாள் வாழ்த்து

September 1, 2017

أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة، أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة

 السلام عليكم ورحمة الله وبركاته

أنا أشدّ فرحا بتقديم تهاني عيد الأضحى المبارك إليكم، وكلّ عام وكلّ شهر وكلّ أسبوع وكلّ يوم وكلّ ساعة وكلّ لحظة وأنتم بخير وسلامة وعافية وفرح وسرور

وأرفع يديّ إلى من أظهرني وأظهركم من ذاته المقدّسة المنزّهة من العيوب والنّقائص، أن يرزقني وإيّاكم أعمارا تجاوز مأة، وعلوما ومعارف تُوصلني وإيّاكم إلى الجنّة التي فيها سعادة لقاء وجهه الكريم، وأن ينعم عليّ وعليكم بنعمه الظاهرة والباطنة ويعيذني وإيّاكم من الهمّ والحزن والكسـل والجبن والبخل ومن غلبة الدّين وقهر الأعداء والقرنيّين، وأن يبارك فى معيشتي ومعيشتكم بركة واسعة، وأن يسكنني وإيّاكم الفردوس مع سيّد الوجود صلّى الله عليه وسلّم ومع أنبيائه وأوليائه والمقرّبين، وأن يفتح قلبي وقُلوبكم كما فتح قلوب أنبيائه وأوليائه

وأرفع يديّ أيضا إلى من كشف حُجُبَ من أراد من عباده أن يكشف حجب أعداء التصوّف ووحدة الوجود، وأن يريهم الحقّ حقّا والباطل باطلا

وأسئل كلّ موحّد أن يمدّ يده بالمساعدة لإتمام مبنى الجامع البدريّ الّذي هو روح الموحّدين المتصوّفين فى سريلانكا

أخوكم فى الله، عبد الرؤوف بن عبد الجواد

 01.09.2017

—————————————————————————————–

இலங்கை, மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஸுன்னீகளான இஸ்லாமிய சகோதரர்களே!

ஸூபீகளான ஏகத்துவ வாதிகளே!

இலங்கை, மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஸுன்னீகளான இஸ்லாமிய சகோதரர்களே!

ஸூபீகளான ஏகத்துவ வாதிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு,

உங்கள் அனைவருக்கும் “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு விநாடியும் சிறப்புடனும், சாந்தியுடனும், ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும், மகிழ்வாகவும் வாழ வாழ்த்துகிறேன்.

எனக்கும், உங்களுக்கும் நூறு வருடங்களைத் தாண்டிய ஆயுளையும், சங்கையான அல்லாஹ்வின் திருமுகக் காட்சி கிடைக்கக் கூடிய சுவனத்தின் பால் எம்மை அடையச் செய்யும் அறிவு ஞானங்களையும் அருளுமாறு என்னையும், உங்களையும் குறையற்ற தன்னுடைய பரிசுத்த “தாத்” உள்ளமையிலிருந்து வெளிப்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் வேண்டுகின்றேன்.

மேலும் என் மீதும், உங்கள் மீதும் வெளிப்படையான “நிஃமத்” அருளையும், மறைவான “நிஃமத்” அருளையும் சொரிந்து, கவலை, சோம்பல், உலோபித்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, எதிரிகளினதும், “கறனீ”களினதும் அடக்குமுறை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பானாக என்றும் வேண்டுகிறேன்.

இன்னும் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் அவனுடைய விசாலமான அருள் கொண்டு அருள் சொரிதலையும், என்னையும் உங்களையும் அவனுடைய மேலான “பிர்தவ்ஸ்” எனும் சுவனத்தில் எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனும், ஏனைய நபீமார், வலீமார் மற்றும் இறை நெருக்கத்தைப் பெற்றவர்களுடன் குடியமர்த்துவதையும் வேண்டுகின்றேன்.

இன்னும் என் உள்ளத்தையும் உங்கள் உள்ளங்களையும் தன்னுடைய நபீமார், வலீமார்களின் உள்ளங்களை திறந்ததைப் போன்று திறந்து வைப்பானாக என்றும் வேண்டுகின்றேன்.

தன்னுடைய அடியார்களில் நின்றும் தான் நாடியவர்களின் திரையை நீக்கிய வல்லோன் அல்லாஹ் “வஹ்ததுல் வுஜூத்” உடையதும், “ஸூபிஸம்” உடையதும் எதிரிகளின் திரையை நீக்கி அவர்களுக்கு “ஹக்”கை “ஹக்” ஆகவும், “பாதில்”ஐ “பாதில்” ஆகவும் காட்டுவானாக!

“தௌஹீத்” வாதிகளான நீங்கள் அனைவரும் இலங்கை வாழ் அனைத்து “ஸூபீ”களின் உயிர் நாடியான பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகள் மிக விரைவில் பரிபூரணமடைய உதவிக் கரம் நீட்டுமாறு உங்கள் அனைவரையும் அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

இறைபணியிலுள்ள உங்கள்,

மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ.

01.09.2017.

—————————————————————————————-

Dear Islamic Sunni brothers following Sufi path, living in Sri Lanka and abroad!

Assalaamu alaikum Warahmathullaahi Wabarakaathuhu.

I feel great pleasure in expressing Eid Ul Alha Haj festival wishes to you all to live with glory, happiness and delight at every second of the life.

I solicit the almighty Allah who emitted me and you from his sheer “dhaath” existence to condescend to gain perception which leads us so as to reach the paradise where we could see his holy face.

In addition , I solicit the Almighty to shower his obvious and crypt “nihmath” to get rid of laziness, parsimony, debt and the repression of enemies and “Karanees” (Those who destroy  the holy tombs of Awliyas’)

I further solicit him to settle us in the highest Firdous paradise along with his beloved ones Awliyas, prophets and our holy prophet Muhammath Musthafaa Sallallahu Alaihi Wasallam, by showering his mercy upon us.

Further I solicit him to purify our heart as he did to Awliyas and prophets.

May almighty Allah who unveiled his bellowed ones out of his believers unveil to us too to have known the Sufism and “Wahthathul Wujooth” by sorting the truth and false.

I request all thowheeth followers to help to have completed the construction of Bathriyyah Jum’ah masjith which is the soul of all Sufi path followers of Sri Lanka.

In the service of theology

Moulavi Al haj A Abdurrauff  Misbaahee, Bahjee

01.09.2017

You may also like

Leave a Comment