ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 76வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு

February 9, 2020

அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 76வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2020 புதன்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிஹாம் குழுவினரால் வாழ்த்துப்பாடல் மஜ்லிஸும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடனும், நீடிய ஆயுளுடனும் நலமாக வாழ சங்கைக்குரிய மௌலவீ MSA. ஷாஹ்ஜஹான் றப்பானீ அவர்களினால் துஆப் பிரார்த்தனை நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்த பெருந்திரளான மக்களுக்கு சோறும், கறியும் வழங்கப்பட்டு, இனிதே ஸலாவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment