Saturday, April 27, 2024
Homeஎழுத்தாக்கங்கள்طاعون عِمْوَاسْ (“இம்வாஸ்” நோய்)

طاعون عِمْوَاسْ (“இம்வாஸ்” நோய்)

தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

ஹிஜ்ரீ 18 (கி – பி 640)ல் ஏற்பட்ட “தொற்று நோய் வைரஸ்” என்று கருதப்பட்ட “தாஊன் இம்வாஸ்” நோயால் பாதிக்கப்பட்டு மரணித்த நபீ தோழர்கள் பட்டியல்.

01) அபூ உபைத் இப்னுல் ஜர்றாஹ் – أبو عبيدة بن الجرّاح

02) அல் பழ்ல் இப்னுல் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் – الفضل بن العبّاس بن عبد المطلب

03) ஸறஹ்பீல் ஹஸனா – سرحبيل حسنة

04) முஆத் இப்னு ஜபல் அல் கஸ்றஜீ – معاذ بن جبل الخزرجي

05) அப்துர் றஹ்மான் இப்னு முஆத் இப்னு ஜபல் – عبد الرحمان بن معاذ بن جبل

06) அல் ஹாரித் இப்னு ஹிஷாம் – الحارث بن هشام ;

07) அம்ர் இப்னு ஸஹ்ல் அல் ஆமிரீ – عمرو بن سهل العامري

08) அபூ ஜந்தல் இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – أبو جندل بن عمر بن سهيل

09) உத்பா இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – عتبة بن عمرو بن سهيل

10) ஆமிர் இப்னு ஙய்லான் அத்தகபீ – عامر بن غيلان الثقفي

11) அம்மார் இப்னு ஙய்லான் அத்தகபீ – عمّار بن غيلان الثقفي

12) நஸ்ர் இப்னு ஙானிம் அல் அதவீ – نصر بن غائم العدوي

13) ஹுதாபத் இப்னு நஸ்ர் அல் அதவீ – حذافة بن نصر العدوي

14) ஸலமத் இப்னு நஸ்ர் அல் அதவீ – سلمة بن نصر العدوي

15) ஸக்ர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صخر بن نصر العدوي

16) ஸுகைர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صُخير بن نصر العدوي

17) ஹிம்தத் இப்னு ஷரீக் அல் அதவீ – حِمْطَطْ بن شريق العدوي

18) வாயில் இப்னு ரிதாப் – وائل بن رثاب

19) மஃமர் இப்னு ரிதாப் – معمر بن رثاب

20 )ஹபீப் இப்னு ரிதாப் – حبيب بن رثاب

”طاعُون عِمْوَاسْ” وهو وباء وقع في بلاد الشام في أيّام خلافة عمر بن الخطاب، سنة 18 هجرية ، 640 ميلادية، بعد فتح بيت المقدس، ومات فيه كثير من المسلمين ومن صحابة النبي محمد صلى الله عليه وسلم،
“தாஊன் இம்வாஸ்” என்ற பயங்கர நோய் தொற்று நோயென்று கருதப்பட்ட நோயாகும். (ஹிஜ்ரீ 18 – கி-பி 640) இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் “ஷாம்” சிரியா நாட்டுப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நோயாகும். இந்தச் சம்பவம் “பைத்துல் மக்திஸ்” வெற்றிக்குப் பின் நிகழ்ந்ததாகும். இந்த நோயால் அதிகமான முஸ்லிம்களும், நபீ தோழர்களில் பலரும் உயிரிழந்தனர். “ஷஹீத்” ஆயினர்.

“தாஊன் இம்வாஸ்”
இந் நோய்க்கு இவ்வாறு பெயர் வந்ததற்கான காரணம்
وإنّمَا سُمِّيَ ”بطاعون عمواس” نسبةً إلى بلدة صغيرة في فلسطين، بين الرملة وبيت المقدس، وذلك لأنّ الطاعون نَجَمَ بهَا أوّلاً ثم انتَشَر في بلاد الشام، فنُسب إليها، وبلدة عمْواس هدمتها إسرائيل عام 1967م وشردت أهلها وزرعت مكانَها غابةً بأموالِ المُتَبَرِّعين اليهود.
இந்நோயின் “இம்வாஸ்” என்ற பெயர் பலஸ்தீனிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராகும். இது றம்லா என்ற ஊருக்கும், “பைதுல் மக்திஸ்” ஊருக்கும் இடையில் உள்ளது. இக்கிராமத்திலேதான் முதலில் அம்வாஸ் நோய் உண்டாகி طَلَعَ َ نَجَمَ – வெளியாகி பின்னர் “ஷாம்” சிரியப் பிரதேசங்களில் பரவியது. இக் கிராமத்தின் நினைவாக இந் நோய்க்கு இம்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்து.
இந்த “இம்வாஸ்” கிராமத்தை இஸ்ரவேலர்கள் 1967ம் ஆண்டு தகர்ந்தழித்து தரைமட்டமாக்கி அவ்வூர் வாசிகளை வெளியேற்றி விட்டு யூதர்களின் நன்கொடைப் பணத்தால் ஒரு பெரும் காட்டை வளர்த்துள்ளனர்.

قال الواقديّ تُوُفِّي في ”طاعون عِمْواس” من المسلمين في الشام خمسة وعشرُون ألفاً، وقال غيره ثلاثون ألفاً، من أبرز من ماتوا في الوباء أبو عبيدة بن الجراح و معاذ بن جبل ويزيد بن أبي سفيان و سهيل بن عمرو و ضرار بن الأزور و أبو جندل بن سهيل وغيرُهم من أشراف الصحابة، عُرِفَت هذه السنة بِعَام ِالرَّمادةِ للخَسَارة البَشَرِيّة العظيمة ، التي حدثت فيها، قال النبي ” طاعون عمواس” اُعدُدْ ستاً بين يَدَيِ الساعة،
வலாற்றாசிரியர் “வாகிதீ” கூறுகிறார். “தாஊன் இம்வாஸ்” என்ற பயங்கர இந்நோயால் “ஷாம்” பிரதேச முஸ்லிம்களில் 25 ஆயிரம் பேர் மரணித்தார்கள். முப்பதாயிரம் என்றும் சிலர் கூறுகிறார்கள். நபீ தோழர்களில் இந்நோயால் மரணித்தவர்கள் அநேகர். அவர்களில்

01) அபூ உபைத் இப்னுல் ஜர்றாஹ்
02) முஆத் இப்னு ஜபல்
03) யஸீத் இப்னு அபீ ஸுப்யான்
04) ஸுஹைல் இப்னு அம்ர்
05) ழறார் இப்னு அஸ்வர்
06) அபூ ஜந்தல் இப்னு ஸுஹைல்
ஆகியோர் அடங்குவர்.

இவ் ஆறு பேர்களும் நபீ கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மறைவதற்கு முன் குறித்த நோயால் மரணிப்பார்களென்று முன்னறிவிப்புச் செய்யப்பட்வர்களாவர்.

இது தொடர்பான இன்னும் பல விபரங்களும், வரலாறுகளும் உள்ளன. இக்கால சூழலைக் கருத்திற் கொண்டு விரிவாக எழுதவில்லை. வாய்ப்புக் கிடைத்தால் இது தொடர்பாக மீண்டும் பதிவு செய்வேன். அதோடு தொற்று நோய் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? உண்டா? இல்லையா? என்பது தொடர்பாகவும் பதிவு செய்வேன். இன்ஷா அல்லாஹ்!

“கஷ்புஷ் ஷுப்ஹத்” சந்தேக நிவர்த்தி:

தொற்று நோயென்று சொல்லப்படுகின்ற “கொரோனா”, “தாஊன் இம்வஸ்” போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் நல்லடியார்களில்லை என்ற தவறான எண்ணத்தை – கருத்தை மேற்கண்ட நோயால் பிரதான நபீ தோழர்கள் பாதிக்கப்பட்டு மரணித்திருப்பது நீக்கிவிடுமென்று நம்புகிறேன். அதோடு பின்வரும் நபீ மொழியும் நீக்கி வைக்குமென்று நம்புகிறேன்.

اَشَدُّ بَلَاءًا اَلْاَنْبِيَاءُ ثُمَّ الْعُلَمَاءُ ثُمَّ الْاَمْثَلُ فَالْأَمْثَلُ
கடுமையான சோதனைக் குள்ளானவர்கள் நபீமார், அதையடுத்து உலமாஉகள், அதையடுத்து பதவியில் அடுத்தவர்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

இலங்கைத் திரு நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் உற்றார், உறவினர், மனைவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். சோதனைகளைச் சுமந்து சுவர்க்கம் சென்ற நபீ தோழர்களுக்கும், நல்லடியார்களுக்கும் எனது நல்வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments