Friday, April 26, 2024

கனவுலகம்

ஆக்கம் – மௌலவீீ ASM. இர்ஷாத் றப்பானீ

قال الشيخ أبو طاهر رحمه الله [ أنّه لايَلزَمُ من كون الشيئ لا صورة له اَنْ لا يُرى فى صورة، اَلا ترى أنّ كثيرا من الأشياء الّتي لا أشخاصَ لها ولاصورةَ تُرى فى المنام بأمثلة تُناسِبُها بأَدْنَى معنًى ولا يُوجب التشبيهَ ولاالتّمثيلَ،

وذلك كالمعاني المجرَّدة مِثلَ الإيمان والكُفر والشّرف والقرآن والهدى والضلالة والحياة الدنيا ونحو ذلك،

فأمّا الإيمان فكقول النّبيّ صلّى الله عليه وسلّم رأيتُ النّاس فى المنام يُعرَضُون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصُه إلى أنصاف ساقَيْه، فجاء عمربن الخطّاب وهو يَجُرُّ قميصَه، فقالوا يارسول الله ما اَوَّلْتَ ذلك؟ قال الإيمانُ،

فالإيمان لا شَكلَ له ولا صورةَ، ولكن جُعِل القميصُ له مثالا، فَرُئِيَ بواسِطته، وكذلك الكفرُ، يُمَثَّلُ فى المنام بالظُّلمة، وكذلك الشَّرفُ والعِزُّ، يُرى بواسطةِ صورةِ الفرس، وكذلك يُمثَّلُ القرآنُ بالُّلؤلُؤ، ويُمثَّل الهُدى بالنُّور والضّلالة بالْعَمَى،

ولا شَكَّ أنّ بين هذه الأشياء مُضَاهاةً لِتِلْكَ المعانى المَرئِيَّةِ، وتَجَسُّدُ المعاني لا ينكره العلماء بالله تعالى،

قال وموضعُ الغَلَطِ فى ذلك لمن منع رُؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بكسرِ الميمِ وسُكونِ المُثَلَّثَةِ، وذلك خطأٌ فاحِشٌ

فاِنَّ المِثْلَ بالسُّكون يَسْتَدْعِي المُساواةَ فى جميع الصِّفاتِ، كالسوادين والجوهرين، ويقومُ كلُّ واحد منهما مقامَ الآخَرِ مِن جميع الوجوه فى كلّ حالٍ، بخِلاف المَثَلِ بفَتْحتَيْنِ، فإنّه لايُشتَرَطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستَعمَلُ فيما يُشارِكه بأدْنَى وصفٍ، قال تعالى ” إنَّما مَثَلُ الحياة الدّنيا كماءٍ أنزلناه من السَّماء ”

والحياةُ لا صورة لها ولا شكلَ، والماءُ ذو شَكلٍ وصورةٍ، وقد مَثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ” مَثَلُ نُوره كمِشكاةٍ فيها مصباح ” وغير ذلك،

فعُلِم أنّه لا مِثْلَ لِلّه تعالى، ولكن له المَثَلُ الأعلى في السموات والأرض، قال ومِنْ هُنَا جَوَّزَ الاَكْثَرُون من السَّلَف الصالح جَوَازَ تَجَلِّيْهِ تعالى لعبده فى المنام،

{ اليواقيت والجواهر للإمام عبد الوهّاب الشعراني، الجزء الأول – ص ١٠٧ – ١٠٨ }

அஷ் ஷெய்கு அபூதாஹிர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ( உருவமில்லாத ஒரு வஸ்த்தை – ஒன்றை – கனவுலகில் உருவத்தில் காண முடியும். ஏதாவதொன்று உருவமில்லாமல் இருப்பதால் அதை எந்த ஓர் உலகிலும் உருவத்தில் காணவே முடியாது என்ற கருத்து வராது. உருவமில்லாத ஒன்றை உருவத்தில் காண முடியாதென்பது இவ்வுலகில் மட்டும்தான். “ஆலமுல்கயால்” என்ற, அல்லது “ஆலமுல் மனாம்” என்ற கனவுலகில் அதை காண முடியும்.

உதாரணமாக “ஈமான்”, விசுவாசம் – நம்பிக்கை – “ஷறப்”, சிறப்பு திருக்குர்ஆன், “ஹுதா” நேர்வழி, “ஹயாதுத்துன்யா” உலக வாழ்க்கை என்பவற்றை உதாரணமாக எடுக்கலாம்.

மேற் கண்ட ஐந்து விடயங்களும் உருவமில்லாதவையாகும். எனினும் இவற்றை இவ்வுலகில் – விழிப்புலகில்தான் உருவத்தில் காணமுடியாதேயன்றி கனவுலகில் உருவத்தில் காண முடியாதென்ற கருத்து இல்லை. இவற்றை அவ்வுலகில் உருவத்தில் காண முடியும்.

“ஈமான்” என்ற நம்பிக்கையை எடுத்துக் கொள்வோம். இதற்கு உருவம் இல்லை. எவராலும் இதற்கு உருவம் காட்ட முடியாது. எனினும் இதை கனவுலகில் உருவத்தில் காண முடியும்.

இதற்கு பின்வரும் “ஹதீது” நபீமொழி ஆதாரமாகும். (எனது கனவில் மனிதர்களை காட்டப்பட்டது. அவர்களிற் சிலரின் உடை “கமீஸ்” – சேட்டு அல்லது ஜுப்பா – கரண்டை வரை – கரண்டிக்கால் வரை இருந்தது. இன்னும் சிலரின் உடை “ஷேட்” கணுக்கால் வரை – கரண்டைக்கும், முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதி – இருந்தது. ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “ஷேட்” – ஜுப்பாவை தரையில் இழுத்துக் கொண்டு வந்தார்கள்) என்று நபீகளார் அலைஹிஸ்ஸலாதுவஸ்ஸலாம் கூறிய போது ( இதற்கு என்ன விளக்கம் என்று நபீ தோழர்கள் அவர்களிடம் கேட்டனர். அதற்கு ஈமான் நம்பிக்கை என்று அவர்கள் பதில் கூறினார்கள்.)

[ முஸ்னத் அபீதாஊத் அத்தயாலிஸீ – 2476, இதே கருத்தை தருகின்ற இதைவிட நீளமான ஹதீதும் வந்துள்ளது. பழாயிலுஸ்ஸஹாபா, அஹ்மத் இப்னு ஹன்பல் – 363 ]

1) ஈமான் விசுவாசம் அல்லது நம்பிக்கை என்பது சடப் பொருளான, உருவமுள்ள ஒன்றல்ல. எனினும் கனவுலகில் அது ஷேட் – கமீஸ் உருவத்தில் காட்டப்பட்டுள்ளது.

உருவமில்லாத, சடமில்லாத ஒன்று கனவுலகில் பொருத்தமான உருவத்தில் காட்டப்படும் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.

2) இவ்வாறுதான் “குப்ர்” நிராகரிப்பு என்பதுமாகும். இது இருள் உருவத்தில் கனவுலகில் காட்டப்படும்.

3,4) இவ்வாறுதான் சிறப்பு, கௌரவம் என்பவையுமாகும். இவ்விரண்டும் உருவமற்றவையாக இருந்தாலும் கனவுலகில் குதிரையின் உருவத்தில் காட்டப்படும்.

5) இவ்வாறுதான் திருக்குர்ஆன் – அல்லாஹ்வின் பேச்சு என்பதுமாகும். இது உருவமில்லாத ஒன்றாயிருந்தாலும் முத்து உருவத்தில் கனவுலகில் காட்டப்படும்.

6) இவ்வாறுதான் “ஹிதாயத்” என்ற நேர்வழியுமாகும். நேர்வழி உருவமில்லாத ஒன்றாயிருந்தாலும் கனவுலகில் ஔி உருவத்தில் காட்டப்படும். இதேபோல் “ழலாலத்” வழிகேடு என்பது உருவமில்லாத ஒன்றாக இருந்தாலும் கனவுலகில் “அமா” குருடு உருவத்தில் காட்டப்படும். குருடனாக காட்டப்படும்.

மேற்கண்ட உருவமில்லாத ஏழு அம்சங்களும் கூறப்பட்ட ஏழு உருவங்களில் கனவுலகில் காட்டப்படும். காட்டப்படும் ஏழு உருவங்களுக்கும், குறித்த ஏழு அம்சங்களுக்கும் பொருத்தம் இருக்கும். இவ் உண்மை ஆய்வாளர்கள், சிந்திப்பவர்களுக்கு மறையாது. உருவம், சடம் இல்லாதவை கனவுலகில் சடம், உருவமுள்ளவையாக தோற்றுவது சாத்தியமானதேயன்றி அசாத்தியமானதல்ல.

சடமில்லாத, உருவமில்லாத “மஆனீ” கருத்துக்கள் சடம் எடுத்து தோற்றுகின்ற இவ்வுண்மையை “அல்உலமாஉபில்லாஹ்” அல்லாஹ்வின் ஞானமுள்ள அறிஞர்கள் ஒரு போதும் மறுக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்கள்.

இவ்வாறுதான் அல்லாஹ்வை கனவுலகில் காண்பதுமாகும். உலமாஉகளிற் பலர் அல்லாஹ்வை கனவில் ஏதேனும் பொருத்தமான உருவத்தில் காணலாம் என்று சொன்னால் நாகம் போல் சீறிப்பாய்ந்து சொல்பவர்களை தீண்ட வருகிறார்கள். நஞ்சைப் பாய்ச்சி நாசமாக்க நினைக்கிறார்கள். சதி செய்வதற்கும் முயற்சிக்கிறார்கள். சொல்வோரை இல்லாமற் செய்வதற்கும் திட்டமிடுகிறார்கள். இதில் முக்கிய பங்கு எடுப்பவர்கள் வஹ்ஹாபிகளேயாவர். இவர்களின் பின்னணியில் கூலிப்படைகளும் இருப்பதாக காற்றில் வரும் செய்திகள் கூறுகின்றன.

அல்லாஹ்வை கனவில் காண முடியாதென்று ஒற்றைக்காலில் நின்று கூச்சலிடுவோர் துறை தெரியாமல் தோணி தொடுக்கும் அந்தகர்களாவர்.

இவ்விடயத்தில் இவர்கள் கால் சறுக்கி விழுந்த இடம் பின்வருமாறு.

அறபு மொழியில் مَثَلٌ என்றும், مِثْلٌ என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. [ “மதலுன் – மித்லுன்” ] இவ்விரு சொற்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு இவர்களுக்கு தெரியாமற் போனதால்தான். مَثَلٌ என்றால் உதாரணம், مِثْلٌ என்றால் நிகர். அல்லாஹ்வுக்கு “மதல்” உதாரணம் உண்டு. ஆனால் “மித்லுன்” நிகர்தான் இல்லை. وَلِلّهِ الْمَثَلُ الْاَعْلَى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு. ( அத்தியாயம் – அந்நஹ்ல். வசனம் 60 ) لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ அவனுக்கு நிகரான ஒன்றுமில்லை. ( அத்தியாயம் – அஷ்ஷுறா. வசனம் 11 )

அல்லாஹ்வை கனவில் காண்பவர் எந்த உருவத்தில் காணுகிறாரோ அந்த உருவத்தை அல்லாஹ்வுக்குரிய مَثَلٌ உதாரணமாகக் கொள்ள வேண்டுமேயன்றி அதை مِثْلٌ நிகராக கொள்ளக் கூடாது. அல்லாஹ்வை கனவில் காணும் உருவத்தை நிகர் என்று கொள்பவர்கள்தான் அதை மறுக்கிறார்கள். அல்லாஹ்வுக்கு நிகர் கற்பிக்கிறார்கள் என்று விளங்காமல் சொல்கிறார்கள்.

மறுக்கும் புத்திசாலிகளுக்காக இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அறபியில் விளக்கமாக எழுதிவிட்டு தமிழில் எழுதுகின்றேன்.

أيّها العلماء المنكرون رؤية الله تعالى فى عالم الخيال – أي فى المنام إقرئوا العبارة الآتية لكي تعلموا الحقّ حقًّا والفرق بين المِثْلِ وَالْمَثَلِ،

موضع غَلَطِكم فى هذاالأمر ظَنُّكُمْ أنَّ الْمَثَلَ بفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بكسر الميم وسكونِ المُثَلَّثَةِ، وذلك خطأ فاحشٌ، وهاهنا زلَّتْ اَقْدامُكم، ونامت عقولُكم،

فإنّ الْمِثْلَ بالسكون يَسْتَدْعِيْ المُساواةَ فى جميع الصِّفاتِ، كالسَّوادَين والجَوهَرَين، ويقوم كلُّ واحد منهما مقام الآخر من جميع الوجوه فى كلّ حال، بِخِلَاف الْمَثَلِ بفتحَتَين، فإنّه لا يُشْتَرَطُ فيه المساواةُ من كلّ وجه وإنّما يُستَعملُ فيما يُشاركه بأدْنَى وصفٍ، قال تعالى ” إنّما مَثَلُ الحياة الدنيا كماءٍ أنزلناه من السماء ”

والحياة لا صورة لها ولا شكلَ، والماءُ ذو شكلٍ وصورة، وقد مَثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ” مَثَلُ نُوْرِه كمِشكاةٍ فيها مصباح ”

فعلم أنّه لا مِثْلَ لله تعالى، ولكن له المَثَلُ الأعلى فى السموات والأرض، قال ومن هنا جوَّزَ الأكثرُون من السلف الصالح جَوَازَ تَجلِّيْه تعالى لعبده فى المنام،

اليواقيت والجواهر، للإمام عبد الوهّاب الشعراني، الجزء الأول ص – ١٠٧- ١٠٨

கனவுலகில் அல்லாஹ்வை காண்பதை மறுக்கும் உலமாஉகளே! பின்வரும் வசனங்களை வாசித்து சத்தியத்தையும், “மதல்” , “மித்ல்” என்ற இரு சொற்களுக்குமிடையில் உள்ள வித்தியாசத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வை கனவில் காணமுடியாதென்று நீங்கள் சொல்வதற்கான காரணம் அவ்வாறு காணுதல் “மித்ல்” என்ற நிகர் கற்பித்ததாகும் என்பதேயாகும். இதற்கு காரணம் “மதல்” , “மித்ல்” என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடு உங்களுக்கு தெரியாமல் இருப்பதாகும். ஆகையால் இதன் விபரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

“மதல்” என்றால் உதாரணம். “மித்ல்” என்றால் நிகர். அல்லாஹ்வுக்கு “மதல்” உண்டு. “மித்ல்” என்ற நிகர்தான் இல்லை. இவ்விரண்டும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. எனினும் நீங்கள் இரண்டும் ஒன்றென்று நம்புகிறீர்கள். அதாவது விளங்கிக் கொண்டீர்கள். இதனால்தான் இவ்விடயத்தில் நீங்கள் தெளிவில்லாமல் உள்ளீர்கள்.

நான் மேலே எழுதியுள்ள அறபு வசனத்தில் وموضع الغلط فى ذلك என்ற வசனத்தில் இருந்து குறித்த பந்தி முடியும் வரை வாசியுங்கள். நான் பின்னால் எழுதப்போகின்ற விபரம்அதில் இடம் பெற்றுள்ளது.

“மித்ல்” என்றால் நிகர். நிகர் என்றால் என்ன? ஒன்று இன்னொன்றுக்கு நிகரானது என்று சொல்வதாயின் அதிலுள்ள சகல அம்சங்களும் இதிலும் இருக்க வேண்டும். ஓர் அம்சமாவது இல்லாமற் போனால் இது அதற்கு நிகர் என்ற சொல்லை பயன்படுத்த முடியாது.

மேலே எழுதிய அறபு வசனத்தில் இதற்கு இமாம் ஷஅறானீ அவர்கள் இரண்டு உதாரணம் கூறியுள்ளார்கள். அவ்விரண்டையும் கூறாமல் அதைவிட எளிதாக விளங்கும் வகையில் வேறு உதாரணம் கூறுகிறேன்.

ஒரே அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட இரண்டு தங்க வளயல்கள் போன்று. இரண்டும் எல்லாத் தன்மைகளிலும் ஒன்று போலவே இருக்கும். சிறிதளவேனும் வித்தியாசம் இருக்காது. அல்லது இரண்டு குண்டூசிகள் போன்று. இவற்றில் ஒன்றை மற்றதற்கு நிகரானதென்று சொல்ல முடியும். இதற்கே “மித்ல்” நிகர் என்று சொல்லப்படும்.
هذاالسِّوَارُ مِثْلُ هَذَاالسِّوَارِ
هذه الإبْرةُ مِثْلَ هذِهِ الإبْرَةِ
இந்தக்காப்பு இந்தக் காப்புக்கு நிகரானது. இந்த ஊசி இந்த ஊசிக்கு நிகரானது என்பன போன்று.

ஒன்று இன்னொன்றுக்கு அதன் எல்லாத் தன்மைகளிலும் அதே போன்றில்லாமல் அதன் ஒரு சில தன்மைகளில் மட்டும் அது போன்றிருந்தால் அதற்கு “மித்ல்” நிகர் என்று சொல்லாமல் “மதல்” அல்லது “மிதால்” என்று சொல்ல முடியும்.
مَثَلُ شَجَاعَةُ مَزَمِّلٍ كَالاَسَدِ
مُزَمِّلٌ مَثَلُ اَسَدٍ
مُزَمِّلٌ كَالأسَدِ
முசம்மிலின் வீரம் சிங்கம் போன்று, முசம்மில் சிங்கம் போன்றவன், முசம்மில் சிங்கம் போன்றவன் என்பன போன்று. இம்மூன்று உதாரணங்களிலும் முசம்மில் சிங்கம் போன்றவன் என்பது அதன் அனைத்து தன்மைகளிலும் அவன் சிங்கம் போன்றவன் என்ற கருத்தில் அல்ல, அதன் தன்மைகளில் வீரம் என்ற தன்மையில் மட்டும் அவன் சிங்கம் போன்றவன் என்ற கருத்தில் மட்டும். இது நிகராக மாட்டாது. இது உதாரணம் மட்டும்தான்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்
“ اِنّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ اَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ “
துன்யா – இவ்வுலகின் வாழ்க்கை நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீர் போன்றது என்று கூறியுள்ளான். உலக வாழ்க்கை நீர் போன்றதென்று கூறியுள்ளான். இங்கு “மித்ல்” என்ற சொல்லை பயன்படுத்தாமல் உதாரணம் என்ற பொருளுக்குரிய “மதல்” என்ற சொல்லைப்பயன்படுத்தியுள்ளான். ஏனெனில் உலக வாழ்க்கை என்பது நீரின் எல்லாத் தன்மைகளிலும் அது போன்றதல்ல. எல்லாத் தன்மைகளிலும் அது போன்றிருந்தால்தான் “மித்ல்” நிகரானதென்று சொல்ல முடியும்.

துன்யா வாழ்க்கை என்பது உருவம் இல்லாததாகும். நீர் என்பது உருவமுள்ளதாகும். அல்லாஹ் உருவமில்லாத ஒன்றை உருவமுள்ள ஒன்றுக்கு உதாரணமாக கூறியுள்ளானே தவிர நிகராக கூறவில்லை. கூறவும் முடியாது.

மேற்கண்ட விபரங்கள் மூலம் அல்லாஹ்வுக்கு “மித்ல்” நிகரில்லை என்பதும், ஆயினும் அவனுக்கு “மதல்” உதாரணம் உண்டு என்பதும் தெளிவாகிவிட்டது.

இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களின் கனவில் ஏதோ பொருத்தமான ஒரு “மதல்” மூலம் தோற்றுவான் என்பதும், அத் தோற்றம் அவனுக்கு உதாரணமேயன்றி நிகர் இல்லை என்பதும் தெளிவாகி விட்டது.

அல்யவாகீத் வல் ஜவாஹிர்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றழியல்லாஹு அன்ஹு.
முதலாம் பாகம்
பக்கம் 107 – 108

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments