15 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு

December 14, 2016

மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 13.12.2016 செவ்வாய்க்கிழமையன்று புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை இரவு 10.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை தரிசித்து அருள் பெற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து 2.30 – 3.30 மணி வரை சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

அதன்பின் சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒருமித்த குரலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் முழங்கப்பட்டது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்
dsc_0024-forwebdsc_0044-forweb dsc_0049-forwebdsc_0001-forweb dsc_0031-forweb dsc_0043-forweb
dsc_0050-forweb dsc_0054-forweb dsc_0063-forwebdsc_0077-forwebdsc_0084-forwebdsc_0167-forwebdsc_0062-forwebdsc_0063-forweb-2 dsc_0070-forweb dsc_0698-forwebdsc_0709-forwebdsc_0078-forweb dsc_0085-forweb dsc_0141-forweb dsc_0225-forweb dsc_0229-forweb dsc_0258-forweb dsc_0266-forweb dsc_0272-forweb dsc_0292-forwebdsc_0760-forweb dsc_0300-forweb dsc_0304-forwebdsc_0318-forweb dsc_0351-forweb dsc_0354-forweb dsc_0362-forweb

dsc_0308-forweb

You may also like

Leave a Comment