பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி – 2014

July 17, 2014
பத்ர்
ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி கடந்த 14.07.2014 திங்கட்கிழமை அன்று (புனித றமழான் 17ம் இரவு) காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித தறாவீஹ் தொழுகையின் பின் திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மஜ்லிஸ் நிகழ்வுகளில்
பத்ர் ஸஹாபாக்களின் புனித ”மௌலிது ஷுஹதாஉல் பத்ரிய்யீன்” ஓதப்பட்டு, பத்ர் ஸஹாபாக்களின்
திரு நாமங்களும் வாசிக்கப்பட்டது. அதனை அடுத்து அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு பின்னர் பெரிய
துஆவும் ஓதப்பட்டது.
இறுதியாக இந்நிகழ்வுகளில்
கலந்து கொண்ட முஹிப்பீன்களுக்கு அருளன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே சலவாத்துடன்
நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்வு தொடர்பான காணொளியும் சில புகைப்படங்களும்.


You may also like

Leave a Comment