கஸ்தூரி நபீயின் மீது ஸலவாத் ஓதும் புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2015

January 1, 2015
அகிலத்தின் அருட்கொடை, இறையொளியின் முதலொளி, நம்பெருமானார் றஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 
புகழ் பாடும்
புனித ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இவ்வருடமும் எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அதிகாலை 02:30 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளது. 

அண்ணல் நபீ ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
அகிலத்திற்கு அருளாக அவதரித்த தினத்தை – நேரத்தை கண்ணியப்படுத்துமுகமாகவே இம்மஜ்லிஸ் வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இம் மஜ்லிஸில் கண்ணிய நபீ ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அன்னவர்கள்
மீது பாசமும் நேசமும் கொண்ட பல்லாயிரக்
கணக்கான நேசர்கள் கலந்து கொண்டு நபியுல்லாஹி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும், அன்னவர்களினது குடும்பத்தோரினதும் அருள்பறக்கத்தை பெறுகின்றனர். புனித பயான் நிகழ்வின் மூலம் அண்ணல் நபீயின் அகமியங்களை அறிந்து கொண்ட உள்ளங்கள் அன்னவர்கள் மீது அழகாகவும் அமைதியாகவும் பக்திப்பரவசத்தோடு புனித ஸலவாத்தை ஓதி தன் உள்ளங்களில் ஒளியூட்டிக் கொள்கின்றனர். மறுமை நாளில் தன் உம்மத்துக்களுக்காக மன்றாடும் மாநபீ மீது மக்களெல்லாம் மனமுருகி புனித ஸலவாத்துரைத்து மன்னர் நபீயிடம் மன்றாடுவர். மாநபீ புகழ் ஓங்க பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மகிழ்வுடன் மணம் பரப்பி மகிழும். மஜ்லிஸை மணம் ஓங்க மனமுவந்து மகிழ்வுடன் தந்த இறைநேசர், இறைஞான ஜோதி ஷம்சுல் உலமா ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹு) அன்னவர்களை தவ்ஹீத் மனங்களெல்லாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும். அத்தர் மணம் அழகாக வீச, சாம்பிரானி வாசம் சாந்தமுடன் வீச சாந்தி நபீயின் ஸலவாத் மஜ்லிஸ் சங்கைமிகு ஸலவாத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.
இந்நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்க அன்பாய் அழைக்கின்றோம்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அழைப்பு
SAA. ஹலீம்
அலுவலர், அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை

You may also like

Leave a Comment