67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு

April 1, 2015
இந்தியா – தமிழ்நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் கன்ஜே ஸவா, குத்புல் மஜீ்த், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத், அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்களின் நினைவாக கடந்த 27.03.2015 – 29.03.2015ம் திகதிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான 67வது வருட மாகந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஆரம்பமாக திருக்கொடியேற்றி வைக்கப்பட்டு, கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ், மீரான் ஸாஹிப் மௌலித் மஜ்லிஸ், ஹத்தாத் றாதிப், முறாதிய்யஹ் பைத், கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ், சங்கைமிக்க உலமாக்களின் மார்க்க உபந்நியாசங்கள் போன்ற பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதித் தினமான கந்தூரி தினமன்று பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு ஸலவாத்துடன் 67வது வருட பாதுஷா நாயகம் அன்னவர்களின் கந்தூரிகள் இறையருளால் நிறைவு பெற்றது.
சிறப்பு நிகழ்வாக பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு சொந்தமாகக் கிடைத்த அருள் நபீ அண்ணல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அடங்கிய பேழை பாதுஷா நாயகம் அன்னவர்களின் மஜ்லிஸில் வைக்கப்பட்டு, மக்களால் பார்வையும் இடப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++

காத்தான்குடி மண்ணில் புகழ் பூத்து விளங்கும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்கள் தர்ஹா ஷரீபில் வருடாந்தம் ஏற்றப்படும் கொடியேற்ற நிகழ்வு கடந்த 26.03.2015ம் திகதி வியாழக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்  சங்கைமிக்க உலமாஉகளால் ஏற்றி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment