சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 72வது பிறந்த தினமன்று நடைபெற்ற காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், துஆப் பிரார்த்தனை நிகழ்வும்

February 7, 2016
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்
அதிசங்கைக்குரிய ஆன்மீகத் தந்தை அல் ஆரிப்பில்லாஹ் மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்கள் 05.02.2016 அன்று தங்களின் 72வது வயதினைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு, அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றை எமது காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள், முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அன்னாரின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தனர். மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களினால் அன்னார் பொன்னாடைகள் போர்த்தப்பட்டும், நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டும் வாழ்த்துக் கவிகள் பாடப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக அன்னாரின் நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை நடாத்தப்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, இறுதியில் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
– அல்ஹம்துலில்லாஹ் –

You may also like

Leave a Comment