Saturday, April 27, 2024
Homeநிகழ்வுகள்விஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் - 2016

விஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2016

அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் 14.04.2016 வியாழக்கிழமை காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லஸும் நடைபெற்று இறுதியா சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் பெரிய துஆ ஓதப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
– அல்ஹம்துலில்லாஹ் –

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments