இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை வாசிப்பது ஆகுமா?

September 30, 2015
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله ماحكم
مطالعة كتب الشّيخ محي الدّين ابن عربي؟ فأجاب بقوله أنّ الشّيخ محي الدّين ابن
عربي من أولياء الله تعالى العارفين، ومن العلماء العاملين، وقد اتّفقُوا على أنّه
كان أعلمَ أهل زمانه، بحيث أنّه كان فى كلّ فنّ متبوعا لا تابعا، وأنّه فى التحقيق
والكشف والكلام على الفَرق والجمع بحر لا يجاري، وإمام لايغالط ولا يماري، وأنّه
أورع أهل زمانه، وألزمهم للسّنّة وأعظمهم مجاهدة حتّى أنّه مكث ثلاثة أشهر على
وضوء واحد.
(الفتاوى الحديثيّة صفحة – 215)
கேள்வி – இமாம்
இப்னு ஹஜர் அல் ஹைதமீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களிடம், அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ “றழியல்லாஹு அன்ஹு” அவர்களின் நூல்களை வாசிப்பது தொடர்பான சட்டம் என்ன? என்று கேட்கப்பட்டது.  

பதில் – அஷ்
ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ “றழியல்லாஹு அன்ஹு” அவர்கள் இறைஞானிகளான அவ்லியாஉகளில் ஒருவர். கற்றபடி செயல்படுவர். அவர்களின் காலத்தவர்களில் மிக அறிஞராகவும், எல்லாக் கலைகளிலும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டவர்களாகவும் அவர்கள் எவரையும் பின்பற்றும் நிலையில் இல்லாதவர்களாகவும், “கஷ்பு” என்ற இறைவனால் வழங்கப்படும் அறிவிலும், ஒரு விடயத்தை ஆய்வு செய்து அதில் சரியான முடிவு காணுகின்ற அறிவிலும், “அல்பர்கு, அல்ஜம்உ” என்ற விடயங்களுக்கு விளக்கம் கூறுவதிலும் பெருங்கடலாகவும், தவறு செய்யாத பெரும் “இமாம்” ஆகவும், அவர்களின் காலத்தில் மிகப் பேணுதல் உள்ளவர்களாகவும், பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றி நடப்பதில் மிகச் சிறந்தவர்களாகவும், மன ஆசையுடன் போராடும் விடயத்தில் மிகப் பற்றுள்ளவர்களாகவும் இருந்தார்கள். இவர்களின் பேணுதலுக்கும், மார்க்கப் பற்றுக்கும் இவர்கள் ஒரே “வுழூ” உடன் மூன்று மாதம் இருந்தது ஒன்றே போதும்.

(அல்பதாவல் ஹதீதியா, பக்கம் – 215)  

You may also like

Leave a Comment