Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே! பகிரங்கப்படுத்திய தினகரனுக்கு நன்றிகள்.

முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே! பகிரங்கப்படுத்திய தினகரனுக்கு நன்றிகள்.

மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05

2014 செப்டம்பர் 4ம் திகதி வெளிவந்த
தினகரனின் 5ஆம் பக்கத்தில் “முஹம்மது நபியின்
அடக்கஸ்தலத்தை இடமாற்ற சர்ச்சைக்குரிய ஆலோசனை” என்ற கட்டுரையை
படித்தபோது அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன், கியாமத்
நாள்தோன்றி விட்டதோ என்ற ஐயம்
எனக்கு ஏற்பட்டது.

        
        மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாயலின்
அருகே அதைச் சேர்ந்தாற்போல் நபிகள் திலகம்
நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது அவர்களும் அவர்களின் மனைவி ஆயிஷஹ் அன்னையும் வாழ்ந்த இடமாகும்.

        நபிகள் (ஸல்) அவர்கள் இவ் உலகை
விட்டும் பிரிந்தபோது  அவர்களை எங்கே அடக்கம்செய்வது என்று சஹாபாக்களும்
குடும்பத்தினரும் ஆலோசனை செய்தனர்.

        சிலர் ஜன்னதுல் பகீயில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் இப்றாஹீம் நபீ
அடக்கப்பட்ட இடத்தில் அடக்கப்படவேண்டுமென்றும்
கருத்துக்களை பகிர்ந்தனர். ஆனால் அபூபக்ர் சித்தீக்
(றழி) அவர்கள் ‘எந்த 

நபீமாரும் அவர்கள் மௌத்தான இடத்திலேயே அடக்கப்பட்டனர்’ என்ற நபிகள்
திலகத்தின் பொன்மொழியை ஆதாரமாகக் கொண்டு நபிகள் வாழ்ந்து மௌத்தாகிய இடத்திலேயே
அடக்கப்படவேண்டு மென்பதை இறுதியாகத் தெரிவித்தார்கள்.

ஹழ்றத் அபூபக்ர் சித்தீக் (றழி) அவர்களின்
கருத்தை அங்கிருந்த நபிகளின் குடும்பத்தவர்களும் ஏனைய சஹாபாக்களும் ஏகமனதாக
ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து
அவர்கள் வாழ்ந்து மௌத்தாகிய இடத்திலேயே
நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். (ஆதாரம்- நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தகபுன் நபாயிஸ்
பக்கம்-409)​

மேலும் இறுதி காலத்தில் வானில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸா (அலை) அவர்கள் உலகில்
தோன்றி தஜ்ஜாலை வெட்டி இஸ்லாத்தின் கொடியை உலகெங்கும் நட்டியபின் மரணிப்பார்கள். அவர்களின்
ஜனாசாவும் நபிகள் (ஸல்) அவர்கள்
அடக்கப்பட்டிருக்கும் றவ்ழஹ்வின் உள்ளேதான் அடக்கப்படுமென்று எங்கள் நபிகள் (ஸல்) அவர்களே
நவின்றுள்ளார்கள்.

எனவே நபிகள் நாதரின் திருவுடலை பெரும் பெரும் சஹாபாக்களே ஆலோசனை செய்து
தற்போதைய இடத்தில் நல்லடக்கம் செய்திருப்பது 1400 ஆண்டுளையும்
எட்டிவிட்டன. மறுமை நாளில் அவர்களின் அடக்கத்தலத்தை கொண்ட இடம் சொர்க்கத்திற்கு தூக்கிச்செல்லப்படும். என்றும் வரலாறு
சொல்கிறது.

மேலும் கஃபாவுக்கு நடந்து செல்வதை விட
நபிகளின் றவ்ழாவுக்கு நடந்து செல்லுதல் சிறந்தது என்றும் அவர்களது உடல்
அடக்கப்பட்ட இடம் அர்ஷ், குர்ஸை விடச் சிறந்ததென்றும் முதுபெரும் மார்க்க அறிஞர்களான
இமாம்களின் கருத்தாகும். (ஆதாரம்- முன்தகபுன் நபாயிஸ்
பக்கம்-229)

நபிகளின் புனித கப்று ஷரீபின் மாண்புகள் இப்படியிருக்க சென்ற 4ம் திகதி தினகரனின் செய்தி என்னை
மட்டுமல்ல, நபிகளின் மீதுஅன்பு கொண்ட உண்மை
விசுவாசிளையும் 
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது வஹ்ஹாபியக் கொள்கையுடைய அடிப்டைவாதிகளின் திட்டமிட்ட செயலேயாகும். இது உலக
முஸ்லிம்களால் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இவர்களின் இந்த
சதி இன்று நேற்று
ஏற்பட்டதல்ல. நபிகளின் திரு உடலை எப்படியாவது அங்கிருந்து அகற்றிவிட வேண்டுமென்று பல
தடவைகள் யூதர்கள் முயன்றதுண்டு. யூதர்களின்
சதிக்கும் பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்ட சில அறபிகளும் உதவியாக இருந்ததுண்டு.

அய்யூபீன்களின் ஆட்சிக்காலத்தில் அக்கால ஆட்சி அதிகாரம் அல்மலிகுஸ் ஸாலிஹ்
நூறுத்தீன் என்பவரிடம் இருந்த போது இஸ்லாமிய
ஆட்சிபீடம் டமஸ்கஸில் இருந்தது.

ஒரு நாள் மன்னர் உறங்கும் போது நபிகள் (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி எனது உடலை
திருடிச்செல்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். என்னை
எடுப்பதற்கு எனது கப்றின் அப்பாலில் இருந்து பங்கர் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். இதை நீங்கள்
கவனிக்க வேண்டாமா? என்று சொல்லிச் சென்றார்கள். கண்விழித்த
மன்னர் உடன் மதீனா கவர்னர்களிடம் இதை கவனிக்குமாறு பணித்தார்கள். அதன்படி
அதிகாரிகளால் தேடப்பட்டது. எவரும் தென்படவில்லை. இதை மதீனா
அதிகாரிகள் மன்னருக்கு தெரிவிக்க மன்னர்
டமஸ்கஸில் இருந்து மதீனா வந்து பரீட்சித்த போது சிலர் நபிகளின் கப்ருக்கு அப்பால்
ஒரு கூடாரம் அடித்து அதிலிருந்து கொன்டிருந்தனர். இவர்கள் யார் என்று
வினவிய போது இன்னோர் வெளியிலிருந்து  வந்துள்ளனர். இவர்கள் வணக்கம்
புரியும் நல்லடியார்கள். நபிகளின் அருள் பெற்றுச்செல்வதற்காக
இங்கே இருக்கின்றனர். என்றுசொல்லப்பட்டது.

மன்னருக்கு ஐயம் ஏற்பட்டு அவர்கள் இருந்த இடத்தை பரீட்சித்தபோது அவர்கள்
இருந்த பாயின் கீழே பங்கர் ஒன்று காணப்பட்டது. அது நபிகளின்
கப்றை அண்மித்திருந்து இவர்கள் நபிகளின் திருஉடலைத் திருடுவதற்காக வந்து பகலில் வணக்கவாளிகள்
போலிருந்து இரவில் கப்று தோண்டும் வேலையில்
ஈடுபட்டிருந்தது. அவர்களின் வாக்கு மூலத்தின் மூலம் தெரியவந்த்து. இவர்கள்
இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனர். இதன் பின்பே
நபிகள் (ஸல்) அவர்களின்
கப்றின் பக்கங்களுக்கு  ஈயம்
வார்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. (ஆதாரம்- வபாஉல் வபா, பிஅஹ்பாரி தாரில் முஸ்தபா, ஆசிரியர் அஷ்​-ஷெய்கு சம்ஹூதி, ஹிஜ்ரி 911 பக்கம் 648, 2ம் வால்யூம்) இந் நிகழ்வு 557ல்
நிகழ்ந்துள்ளது.

எனவே, நபிகள் (ஸல்) நம்போன்ற சாதாரண
மனிதர்தானென்று நபிகளின் மாண்பை கொச்சை படுத்தும்
பணியில் ஈடுபட்டுள்ள வஹ்ஹாபியக் கொள்கையுடையோரின் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். நபிகளின்
காலத்தில் இருந்து நூற்றாண்டுகளாக சீரிய சுன்னத்வல்ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்த
மக்களிடையே முதலில் வஹ்ஹாபிய கருத்தைப் பரப்பியவர் ஷெய்குல் இஸ்லாம்
என்றழைக்கப்படும் இப்னுத்தைமிய்யா என்பவரேயாகும். இவரே முதலில்
இஸ்லாத்திற்கு மாறான வஹ்ஹாபிய கொள்கைக்கு அத்திவாரமிட்டார். அதனால் அவர் அக்கால
ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே மரணித்தார்.

அதன் பின் ஹிஜ்ரி1111ல் சவூதியில் தோன்றிய முஹம்மத்
பின் அப்துல் வஹ்ஹாப் என்பவரால் வஹ்ஹாபியக்கொள்கை பரப்பப்பட்டது. இவரது பெயர் முஹம்மது, இவருடைய கொள்கையை
இவரது பெயரோடு சேர்த்து ‘முஹம்மதிய்யஹ்’ கொள்கை என்று
சொல்வதை விரும்பாத அன்றைய மார்க்க அறிஞர்கள் அவர் தந்தையின் பெயர் அப்துல்
வஹ்ஹாப் ஆகையால் தந்தையின் பெயருடன் அவரது கொள்கையைச் சேர்த்து வஹ்ஹாபியக் கொள்கை
என்று அழைக்கலாயினர்.

இவரது பிரதான சீடர் ஒருவர் ‘தனது கையில் வைத்திருந்த
ஊன்று கோலைக் காட்டி’ “அஸாய ஹாதிஹீ
கைறுன் மின் முஹம்மத்” எனது கையில் இருக்கும் தடி முஹம்தை விடச்சிறந்தது. “முஹம்மதுன் கத்
மாத” முஹம்மத் இறந்து விட்டார். அவரால் பலனில்லை என்றுசொன்னார்.
என்னே ஆச்சரியம்! முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது
கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு நாம் அத்தஹிய்யாதில் “அஸ்ஸலாமு அலைக்க
அய்யுஹன் நபிய்யு” நபி​யவர்களே உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வதே மிகப்பெரும் ஆதாரமாகும்.

முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அரச குடும்பத்தில் திருமணம்செய்ததன்
மூலம் தனது கொள்கையை அரசமயமாக்கினார். அரச ஒத்தாசையுடன் ஜன்னதுல் பகீஇல் உள்ள முக்கிய
ஸஹாபாக்களின், நபிகளின் பிள்ளைகள், குடும்பத்தினர்களின் மஸார்களை உடைத்து தரைமட்டமாக்கினார். முஸ்லிம்கள் ஸியாறத்திற்காக ஒன்று கூடுகின்ற
நிலையைத் தடுக்கவேண்டும் என்ற  யூதர்களின்
சதித்திட்டம் இவர்மூலம் உருப்பெற்றது.

ஜன்னதுல் பகீயை உடைத்தபின் றஸூலுல்லாஹ்வின் றவ்ழஹ்வை உடைக்க கோடரியுடன் முன்
வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குளவிகள் குத்தியதால் அவரும் சில
நாட்களில் வேதனைப்பட்டு மரித்ததாக
வரலாறுகள் சொல்கின்றன.

ஆகவே, தர்காக்களை உடைப்பதும், இறைநேசர்களை இம்சிப்பதும் நபிகள் (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு குறை கற்பிப்பதும்
வஹ்ஹாபிகளுடைய செயல்களாகும்.

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவரின் காலத்திலேயே உண்மையான சுன்னத்வல்ஜமா அதைச்​சேர்ந்த
ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களும் நபிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நேர்வழி
நடந்தவர்களும் அதிகளவில் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டனர். அவரது கொள்கையை
ஏற்றுக்கொண்ட ஆண்களுக்கும், பெ​ண்களுக்கும் மொட்டை ​அடிக்கப்பட்டது. காரணம் – அவர்களின் முடி
ஷிர்க்குடைய காலத்தில் முளைத்திருந்த காரணத்தினால் அதை முற்றாக களையவேண்டும் என்ற
சட்டத்தை ஏற்படுத்தினார்.

அப்போது அவரது கொள்கையை ஏற்ற ஒரு பெண்ணுக்கு மொட்டையடிக்கப்பட்டது. அவள் அவரிடம் ‘ஷிர்க்குடைய
காலத்தில் முளைத்த தலைமுடியை அகற்ற வேண்டுமென்றால்
தாடிமுடியையும் அகற்றவேண்டுமே
என்றுகேட்டாள். அவரால் அவளின் கேள்விக்கு
பதில்சொல்ல முடியவில்லை, இறுதியில்  கேள்வி கேட்டதற்காக
அப்பெண்னை கொலைசெய்யும் முடிவுக்கு வந்தனர்.

எனவே, நபிகளின் திருவுடலை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்ற வஹ்ஹாபியக் கொள்கையுடையோரின்
முடிவு மறுமை விரைவில் தோன்றப் போகின்றது என்பதையே காட்டுகின்றது.

தற்போது நபிகளின் றவ்ழஹ்வில் பொறிக்கப்பட்டுள்ள “யாஸெய்யிதீ யாறஸூல்லாஹ்” எனும்
திருக்கஸீதஹ்வை அகற்ற முடியாமல்
பெயின்ட் அடித்து
மறைத்திருப்பது றவ்ழஹ்வுக்கு போனவர்களுக்கு
மறைவானதல்ல இன்னும் எதிர் காலத்தில் கஃபாவின் அருகில் உள்ள மகாமே இஸ்மாயீல், மகாமே இப்றாஹீம்
ஆகிய புனித சின்னங்ளையும் அகற்ற வேண்டும் என்று வஹ்ஹாபியக் கொள்கையுடையோர்
முன்வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்களின் கொள்கையின் படி  மஸார் (கப்று) உள்ள இடங்களில் தொழக்கூடாது என்பதேயாகும். இது இவர்களின் அறியாமையாகும் அப்படியாயின் கஃபாவின்
சூழலில் இஸ்மாயீல் (அலை), ஹாஜர் ஆகியோரின்
கப்று இருப்பதும் 70 நபிமார்கள் அவ்வெல்லையில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதும் இவர்களுக்கு தெரியாதா? உலகில் தோன்றிய
பல நபிமார்களும் சஹாபாத் தோழர்களும்
பெரும் இமாம்களும் பள்ளிவாயல்களில் அடக்கம் செய்யப்பட்ட வரலாறுகள் புரியாதா? 

நபிமார்கள் மௌத்தாகிய இடங்களிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று
சொன்ன நபிகளின் வாக்கு தன்னையும் அவ்வாறே அடக்கம் செய்யவேண்டுமென்று நபிகள்
நாடியுள்ளார்கள் என்பதை இன்னோர் எங்கே புரியப்போகின்றனர். அதேபோல் அபூபக்கர், உமர் போன்ற தோழர்களுக்கு
நபிகளை  அவர்கள் மரித்த இடத்திலே அடக்கம் செய்தால் பள்ளியை
விஸ்தரிக்கும் போது அதில் தொழுவது (இவர்களின்
கருத்தின் படி) ஹராமாகிவிடும் என்ற கருத்து அவர்களுக்கு தெரியாமல் போனதா? அதன் பின் நபிகளினிடத்தில்
அடக்கம் செய்யப்பட்ட அபூபக்கர், உமர் போன்றோருக்கு வஹ்ஹாபிய கொள்கையுடையோருக்கு தெரிந்த சட்டம் தெரியாமலா இருந்தது. உமர் (றழி) அவர்கள் ஆயிஷா
நாயகியின் அனுமதி பெற்றல்லவா அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?

எனவே நபிகளின் கப்றையும், குப்பாவையும் உடைத்து தரைமட்டமாக்கவேண்டமென்பதும் நபிகளுடையவும்
தோழர்களுடையவும் கப்றுகளைத் தோண்டி
ஜனாஸாக்ளை எடுத்து ஜன்னதுல் பகீஇல் யாரும் அறியாதவாறு அடக்கிவிட்டு அடையாளத்தை
இல்லாதொழித்து விடவேண்டுமென்பதே அடிப்படை வஹ்ஹாபிகளின் யூதக் கொள்கையாகும். இதை உலகில்
வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். இதை தினகரன்
பகிரங்கமாக அறிவித்தமைக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இத் தீய
செயற்பாட்டுக்கு  எனது கண்டனத்தை தினகரன்
மூலம்தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments