ஸலாம் ஓர் பார்வை

March 16, 2015
மௌலவீ  HMM.பஸ்மின் றப்பானீ
மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பேஷ் இமாம்
ஸலாம்
என்பது இஸ்லாத்தில் ஒரு சகோதரர் தன் மற்ற சகோதரரை கண்டபோது  – முகமன் – சொல்வதற்கு  குறிப்பாக பயன்
படுத்தப்படுகின்றது. மாற்றுமத சகோதரர்கள் அவர்களின் வழக்கத்திலுள்ள அய்போவன்,
வணக்கம், குட்மோனிங், என்ற தங்களின் மதம் கூறும் வழியில், அல்லது அவர்களின் வழக்க
முறைப்பிரகாரம் தங்கள் முகமன்களை கூறிக் கொள்கின்றனர்.
ஸலாம்
என்பது ஓர் அறபுச்சொல்லாகும். இச்சொல்லை உரிய முறையில் சொல்வதாயின் “ஸலாம்” என்ற
இந்த  சொல்லிற்கு முன்னால் அலிப், லாம்
என்னும் இவ்விரண்டு ஹர்புகளையும் (எழுத்தக்களை) சேர்த்து  “அஸ்ஸலாமு” எனச் சொல்லவேண்டும். “அஸ்ஸலாமு”
என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று சொல்லப்படும்.
இவை வெளிப்படையான
பொருள்களாகும். வெளிப்படையான இந்த பொருள்களுக்கும்  விளக்கம் கூறப்படுகின்றது.
காணிக்கை
என்றால்
: அன்பளிப்பு போன்ற ஒரு விரும்பத்தக்க நன்மையை விளைவிக்கும் நற்
செயலாகும்.
ஈடேற்றம்
என்றால்
: அல்லாஹ்வின் தண்டணை அவனுடைய கோபம், நரக வேதனை போன்றவற்றில் இருந்து
விடுபடுதல்.
சாந்தி
என்றால்
: சுபீட்சம், அமைதியான வாழ்வு, சுகந்தம் என்பதனையும் குறிக்கும்.
“அஸ்ஸலாம்”
என்ற வார்த்தையை (சாந்தி எனும் அமைப்பில்) விளக்கிவைக்க  அறபு அகராதி தரும் உதாரணம்.)
சுவர்க்கங்களில்
“தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்) என்று ஒரு சுவர்க்கம் உண்டு.
(வலீமார்கள் அதிகம் நிறைந்த) பக்தாத் என்ற நகரிற்கு “மதீனதுஸ்ஸலாம்” (சாந்தியுடைய பட்டணம்) என்றும், 
நஹ்ருஸ்ஸலாம்
(சாந்தி​யுடைய ஆறு) என தஜ்லா நதிக்கும் சொல்லப்படும்.
ஸலாம்
என்ற வார்த்தைக்கு ஆரிபீன்களான ஞான வான்கள் தரும் விளக்கமாகிறது “அஸ்ஸலாம்” என்ற
வார்த்தையானது அல்லாஹ்வின் சிறப்பு மிக்க திருநாமமாகும். “அஸ்ஸலாமு அலைகும்”
என்றால் உங்கள் மீது  அபயம், ஈடேற்றம்
அளிப்பவனான அல்லாஹ் (விட்டுப்பிரியாத தாதிய்யத்தான சொந்தத்தின் அடிப்படையில்)
இருக்கின்றான். எச்சரிக்கை! என்பதாகும்.
ஸலாம்
என்பது இஸ்லாத்தில் வருவதற்கு அடிப்படையான 
காரணம் ஒன்றும் இருக்கின்றது. அக்காரணம் 
ஆதிபிதா என்று போற்றப்படும் “அபுல்
பஷர்” (சடத்தின் தந்தை) முதல் மனிதர், முதல் நபி, ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களுடன் தொடர்புடையதாகும்.
ஒரு முறை நபிகள்  நாயகம் 
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்   
    
وعن أبي هريرة، رضي اللّه ستون ذراعاً، فلما خلقه قال: اذهب فسلم على أولئك، نفر من الملائكة، جلوس، فاستمع ما يحيونك، فإنها تحيتك وتحية ذريتك، فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، فزادوه: ورحمة الله، فكل من يدخل الجنة على صورة آدم، فلم يزل الخلق عنه، عن النبي صلى الله عليه وسلم قال: (خلق الله آدم على صورته، طوله ينقص بعد حتى الآن)
أخرجه البخارى, – باب: بدء السلام  5463. .
வல்லமையும்
மாண்பும் மிக்க அல்லாஹ் (ஆதிமனிதர்) ஆதமை அவனது (அல்லாஹ்வின்) உருவத்தில்
படைத்தான்.
அவரது
உயரம் அறுபது முழங்களாகும்.
அவரைப் படைத்தபோது, “நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் வானவர்கள் குழுவுக்கு முகமன் (சலாம்) கூறுவீராக;
அவர்கள் உமக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்வீராக.
ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்களுடைய சந்ததிகளின்
முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான்.
அவ்வாறே
ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம்) சென்று, “அஸ்ஸலாமு அலைக்கும்”
(உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள்.
அதற்கு வானவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்” (சாந்தியும் இறைவனின் பேரருளும்
உங்கள்மீதும் பொழியட்டும்) என்று பதில் (முகமன்) கூறினர். அவர்கள் (தமது பதிலில்)
“இறைவனின் பேரருளும்” (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகச்
சொன்னார்கள்.
ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில்
நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம்
உயரம் கொண்ட ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். அவருக்குப் பிறகு
இன்று வரை அவருடைய சந்ததிகள் (உயரத்தில்) குறைந்துகொண்டே வருகின்றனர்.  என்று கூறினார்கள்.
நூல் புகாரீ
முஸ்லிம்.
முதல்
மனிதர் ஆதிபிதா ஆதம் நபி (அலை) அவர்கள் படைக்கப்பட்ட பின்னர் மலக்குகளுக்கு ஸலாம்
சொல்லிவர  அல்லாஹ்வினால் ஆரம்பமாக
ஏவப்பட்டார்கள், இது  அவர்களின்
பிச்சளங்களுக்கும் விதியாக்கப்பட்டது என்பதும், மேல் சொல்லப்பட்ட ஹதீதில் நின்றும்
புலனாகின்றது. 

ஸலாம் சொல்வது பற்றி  அல்
குர்ஆன்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا
عَلَىٰ أَهْلِهَا ۚ
 ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
24:27
ஈமான்
கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில்
, அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு
 ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்)
பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு
நன்மையாகும்; நீங்கள் நற்போதனை
பெறுவதற்கு (இது உங்களுக்குக்
கூறப்படுகிறது).
قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَىٰ عِبَادِهِ
الَّذِينَ اصْطَفَىٰ ۗ
 آللَّهُ خَيْرٌ أَمَّا ُيشْرِكُونَ

27:59


(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய
அடியார்கள் (ஸஹாபாக்கள்) மீது
 ஸலாம் உண்டாவதாக ! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள்
(அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”


மேற்கண்ட
ஆரம்ப வசனத்தில் தன் வீடு அல்லாத வேறெந்த வீடுகளுக்குச் செல்வதாயினும்  ஸலாம் சொல்லிய பின்னரே உட் பிரவேசிக்க வேண்டும்
எனவும், இரண்டாம் வசனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 
நாயகத்தோழர்களை நோக்கி ஸலாம் சொல்வது கொண்டு நாயகம் அவர்களை  அல்லாஹ்  பணித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 
(2ம் வசனம்) இவ்வசனத்தில் வந்துள்ள “அலா
இபாதிஹி” என்ற வார்த்தை ஸஹாபாக்களையே குறிக்கும்.
 أخرج عبد بن حميد وَابْن جرير عَن سُفْيَان الثَّوْريّ
فِي قَوْله {وَسَلام على عباده الَّذين اصْطفى} قَالَ: نزلت فِي أَصْحَاب مُحَمَّد
خَاصَّة
நூல்:
தப்ஸீரு துர்றில் மன்தூர்.

 سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي
الْعَالَمِينَ
37:79
ஸலாமுன்
அலாநூஹின் பில் ஆலமீன்” –
அகிலங்கள் எங்கும் நூஹ் (அலை) மீது ஸலாம் 
உண்டாவதாக.
سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيم
37:109
ஸலாமுன்
அலா இப்ராஹீம்” (
இப்ராஹீம் (அலை) மீது ஸலாம்  உண்டாவதாக)!
سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
37:120
 
ஸலாமுன்
அலா மூஸா வஹாரூன்”
மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் (அலைஹிமா) ஸலாம்  உண்டாவதாக.
وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
37:181


மேலும்
முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது 
ஸலாம்  உண்டாவதாக.!
மேற் கூறப்பட்ட “ஸலாம்” எனும் சொல் கொண்டு
ஆரம்பிக்கப்படும் 4 நான்கு வசனங்களும் றசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கு
அல்லாஹ்வால் ஸலாம் சொல்லப்பட்டிருக்கின்றது. என்பதை விளக்கி வைக்கின்றன. அவற்றில்
நின்றும் “ஸலாம்” சொல்வதின் சிறப்புக்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஸலாம் சொல்வது பற்றி வந்த ஸஹீஹான நபி மொழிகள்.

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رجلاً
سأل رسول الله صلى الله عليه وسلم: (أي الإسلام خير؟ قال: تطعم
الطعام، وتقرأ السلام على من عرفت ومن لم تعرف
) متفق عليه.


‘ஒருவர்  நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ‘இஸ்லாத்தில்
சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு)
நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம்  கூறுவதுமாகும்’ என்றார்கள்”
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)அறிவித்தார்.
‘நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள் ஸலாம் கூறினால்
மூன்று முறை
 ஸலாம் கூறுவார்கள்; ஏதாவது ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை திரும்பக்
கூறுவார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.


புகாரீ ஷரீப்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:   

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு நாள்) என்னிடம்,
“(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று
சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் 
வரஹ்மத் துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின்
கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்
தொடர் வழியாகவும் வந்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின்
துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு நாள் என்னிடம்)
“ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று
சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம்  வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும்
சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன். நான்
பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள். 
 முஸ்லிம்

قال : ” ثم صعد حتى أتى السماء السادسة فاستفتح ، فقيل : من هذا ؟ قالجبريل قيل : ومن معك ؟ قال
محمد قيل : أو قد أرسل إليه ؟ قال : نعم . قيل : مرحبا به ولنعم المجيء جاء . ففتح ، فلما خلصت ، فإذا أنا بموسى ، قال : هذا موسى ، عليه السلام ، فسلم عليه ، فسلمت عليه ، فرد السلام ثم قال : مرحبا بالأخ الصالح والنبي الصالح ” . قال :
فلما تجاوزته بكى . قيل له : ما يبكيك ؟ قال : أبكي ؛ لأن غلاما بعث بعدي ، يدخل الجنة من أمته أكثر مما يدخلها من أمتي

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்ற
வேளையில் வானங்களில் நபிமார்களைக் கண்டார்கள். ஸலாம் 
சொன்னார்கள்.


 ( நீண்ட  ஹதீதின்
ஒரு பகுதி )……….
பிறகு
நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று
அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், “நல்ல
சகோதரரும் நல்ல நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்)
கூறினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். “நீங்கள்
ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு
அவர்கள், “இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம்
செல்கின்றவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப் பெற்ற இந்த
இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம்
செல்வார்கள்” என்று பதிலளித்தார்கள்.   

ஸஹீஹ் 
முஸ்லிம்
மேற்கண்ட பொன் மொழிகள் யாவும் ஸலாம் சொல்வதின் சிறப்புக்களை
எடுத்துக்காட்டுகின்றன.

ஸலாம் சொல்வதில் சிறப்பான முறை.
ஸலாம் சொல்லும் போது “கும்” என்னும்
பன்மைச் சொல்கொண்டு  இவ்வாறு சொல்வதும்,

அஸ்ஸலாமு  அலைகும்
வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
,

(உங்கள் மீது சாந்தியும்,அல்லாஹ்வின்
றஹ்மத்தும், பறக்கத்தும் சார்க அதேபோல் 
கூறப்பட்ட  ஸலாத்திற்கு பதில் சொல்லும்
போது ‘கும்” என்ற பன்மைச் சொல்கொண்டு 
பதில் சொல்வதுடன் அதன் ஆரம்பத்தில் “வ” என்னும் பதஹு சொய்யப்பட்ட  அறபு எழுத்தான “வாவு” கொண்டும் ஆரம்பித்து
இவ்வாறு

“வஅலைகுமுஸ்ஸலாமு வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு”
என்று ஜவாப் (பதில்) சொல்வதும் ஸலாம்
சொல்வதில் மிகச்சிறப்பான முறையாகும். இம்ரான் பின் ஹஸீன் றழி அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.,
நபி நாயகத்திடத்தில் ஒரு  மனிதர் வந்தார் வந்தவர்  அஸ்ஸலாமு 
அலைகும் என்றார்  அதற்கு  அண்ணலார் பதில் சொல்லிவிட்டு பத்து 10
என்றார்கள்.

அதன் பின்னர் மற்றொருவர் வந்தார் அவர் “அஸ்ஸலாமு  அலைகும் வறஹ்மதுல்லாஹி” என்று சொன்னார் அதற்கு
நபிகளார் பதில் சொல்லிவிட்டு 20 இருபது என்றார்கள். அதன்பின்னர் வேறொரு நபித்தோலர்
வந்து “அஸ்ஸலாமு  அலைகும் வறஹ்மதுல்லாஹி
வபறகாதுஹு” என்றார் அதைக்கேட்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முப்பது
30 என்றார்கள்.

முஸ்னத் தாறமி, சுனன் அபூ தாவூத்,திர்மிதீ
அபூதாஊத் என்ற கிரந்தத்தில் முஆதுப்னு அனஸ் றழி என்ற றாவியின் வாயிலாக
வருவதானது,
“அதன் பின்னர் ஒருவர் வந்தார் “அஸ்ஸலாமு  அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு வமஃபிரதுஹூ
என்று சொன்னார் அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாற்பது 40
என்றார்கள். என்றும் கூறப்பட்டுள்ளது”.   

10,20,30,40 என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்களால் எண்ணப்பட்ட எண்ணிக்கையானது சொன்ன 
ஸலாத்திற்குரிய நற் கூலியையாகும்.

ஸலாம்  சொல்வதில் ஏற்றுக் கொள்ளப்பட முறை.
ஸலாம் சொல்பவர்  “அஸ்ஸலாமு 
அலைகும்”, “அஸ்ஸலாமு  அலைக”, ஸலாமுன்  அலைக என்றால் ஸலாம்  நிகழ்ந்து விடும்.

பதில் சொல்பவர்  “வஅலைகஸ்ஸலாம்”, என்றோ அல்லது “வஅலைகுமுஸ்ஸலாம்”
அல்லது ‘வ” என்ற ஹர்பு இல்லாமல் அலைகுமுஸ்ஸலாம் 
என்று​ சொன்னாலோ அதுபோதுமாகும். அவர் சொன்னது பதிலாகவும் ஆகிவிடும்.

இது பிரசித்தமான சரியான மத்ஹபின்
கருத்தாகும் இக்கருத்தையே இமாம் ஷாபிஈ அவர்களும், அவர்களைச் சார்ந்த ஏனைய பெரும்
பான்மையான சட்டமேதைகளும் கூறுகின்றனர்.

இமாம் நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி
                                          நூல்:  அல் அத்கார்
பாலர்களின் வளரும் பருவத்தில், ஸலாம் சொல்வதின் அவசியம்.

இன்று முஸ்லிம்களுக்குள் குழப்பம், குடும்ப
உறவுகளுக்கு மத்தியில் பிரட்சணை, பெற்றோர், பிள்ளைகளுக்கிடையில் சண்டை மனச்
சஞ்சலம் ஏற்படக் காரணம் நபி வழிமுறை இல்லாததும், பின்பற்றல் “செயல் முறை, வழி
மூலம்” இல்லாமல் இருப்பதுமாகும். ஒரு
முஸ்லிம்  மற்ற முஸ்லிம் சகோதரரை காணும்
போது முகமன் ஸலாம் சொல்லவேண்டும். அதுபோல் இரத்த பந்தத்தையுடையவர் தன் உறவினர்
வரும்போது முகம் மலர்ந்து ஸலாம் கூறி அவரை வரவேற்க வேண்டும். பெற்றோரை பிள்ளைகள்
சந்திக்கும்போதும், பிள்ளைகளை பெற்றோர் காணும்போதும்  எழுந்து நின்று ஸலாம் கூறி வரவேற்கவும் வேண்டும். இது
சுன்னத்தான ஒரு நற் பன்பாகும்.

 كانت إذا دخلت عليه
قام إليها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه، وكان إذا دخل عليها قامت إليه
فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها    
                                                                   
ஆயிஷா றழி அன்ஹா அறிவிக்கின்றார்கள்.,
நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் பாதிமா றழி
அவர்கள் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து அவர்களின் கரத்தைப் பற்றி,
அவர்களுக்கு அன்பு முத்தம் கொடுத்து தன் சபையில் அவர்களை அமர்த்திவைப்பார்கள். பாதிமா
றழி அன்ஹா அவர்களிடம்  நபிகள் நாயகம்
வந்தால் (தந்தையின்) திருக்கரத்தைப் பற்றி 
தந்தைக்கு அன்பு முத்தம் சொரிந்து  தன் சபையில் (மகள்) பாத்திமா (றழி)
அமரச்செய்வார்கள்..
நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸாயீ 

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிறுவயதில்  ஸலாம் சொல்லும் பலக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களும் சிறுவர்களுக்கு ஸலாமும் சொல்லி சமூகத்திற்கு படிப்பினையூட்டியும் இருக்கின்றார்கள்.

” مر على صبيان فسلم عليهم
“சிறுவர்களின் அருகே நடந்து சென்ற கண்மணி
நாயகம் 
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள், 
அச்சிருவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள்”. 
நூல் நஸாயீ
இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய அறபிகள்
அனைவரிடமும் எவரைக்கண்டபோதிலும் சலாம் சொல்லும் நல்ல பண்பு இருந்து வருகின்றது. இஸ்லாத்தை  வாளின் போர்முனையில் வளர்த்ததை விட நற்குணம்,
ஸலாம் சொல்லுதல், முஃஜிஸாத், போன்ற வற்றாலும் உரமூட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வளர்த்திருக்கின்றார்கள்.

பெற்றோர் 
பிள்ளைகளை இது விடயத்தில் கவனம் 
செலுத்தினால் ஒழுக்கம் என்பது தன்னாலேயே அவர்களின்  வாழ்வில் வந்துவிடும்., இஸ்லாத்தை சரியாக
எடுத்து நடப்பதற்கு பிற்காலத்தில் அவர்களுக்கு கடினம் இல்லாமலும் இருக்கும். ஸலாம்
சொல்லும்போது உள்ளத்தில் பெருமைக் குணம் இருக்காது..     
                                             
في الصحيح
“لا يدخل الجنة من في قلبه مثقال ذرة من كبر

அணுஅளவு பெருமை உள்ளவர் சுவனத்திற்குள்
நுளையமாட்டார். -நபிமொழி-
பிள்ளைகள் விடயத்தில் சரியாக இஸ்லாத்தின்
பாதையை காட்டுவது   பெற்றோர்களின்
பொறுப்பல்லவா?
தொடரும்…….

You may also like

Leave a Comment