கத்தார் மஜ்லிஸ் நிகழ்வுகள்…

February 16, 2012
கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றி சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனிய பாடலும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டது. இதில் கடந்த 05/02/2012 அன்று 68 வது வயதையடைந்த சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களுக்காக விசேட துஆ பிரார்தனையும் செய்யப்பட்டது.
அதன் பின் கலந்து கொண்ட 60 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு உணவும் தபர்ருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் 

நன்றி..
செயலாளர்.
ஹுப்புல் பத்ரிய்யீன்.
தோஹா – கத்தார்.

You may also like

Leave a Comment