அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு

January 29, 2017
————————————————————————
ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ
————————————————————————
 
اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ
مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ
الله عَنْهُ.
அல்வாரிதுல் முஹம்மதிய்யு, ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர் முஹம்மத் இப்னு அலீ அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு
பெயர் : முஹம்மத்

தந்தையின் பெயர் : அலீ
 
பிறந்த நாடு : ஸ்பெயின்

பிறந்த ஹிஜ்ரீ ஆண்டு : 560
 
வபாத் ஹிஜ்ரீ ஆண்டு : 638

மாதமும் நாளும் : றபீஉனில் ஆகிர் பிறை 28 வெள்ளியிரவு

 
வயது : 78
 
மறைந்த நாடு : சிரியா டமஸ்கஸ்
 
அடக்க இடம் : டமஸ்கஸ் தலைநகர்
 
திருமணம் : ஒன்று
 
குழந்தைகள் : மூன்று ஆண்
 
எழுதிய நூல்கள் மொத்தம் : 900 (தொள்ளாயிரம்)
 
பிறர் படிப்பதற்கு அவர்கள் அனுமதி வழங்கிய நூல்கள் : 400
 
மிகப் பெரிய நூல் : அத்தப்ஸீருல் கபீர்
 
பாகம் : வால்யூம் 95
 
பக்கம் : ஒவ்வொரு பாகமும் 1000 பக்கங்கள் (95000)
 
இதற்கான துணை நூல்கள்: 0 ஒன்றுமில்லை
 
திருக்குர்ஆன் 30 பாகங்களுக்குமான தப்ஸீரா? : இல்லை, 15பாகங்களுக்கு மட்டும்
 
எந்த அத்தியாயம் வரை? : சூறதுல் இஸ்றா(யி) 15ம்பாகம் நடுப்பகுதி
 
எந்த வசனங்கள் வரை : وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا “நாங்கள் அவருக்கு எங்களிடமிருந்து அறிவை (ஞானத்தை)க் கற்றுக் கொடுத்தோம்” வரை
 
“இல்ம்” என்ற சொல் எந்த அறிவைக் குறிக்கும்? : ஸூபிஸ ஞானத்தை
 
“இல்முல் லதுன்னீ” என்றால் எது? ஆசிரியர்கள்,நூல்களின் உதவியின்றி அல்லாஹ்வால் நேரடியாக வழங்கப்படும் அறிவு.
 
“இல்முல்லதுன்னீ” என்ற ஞானிகளின் கலைச் சொல்லுக்கு மூலச்சொல் எது?: لَدُنَّا عِلْمًا (லதுன்னா இல்மன்)
 
கேந்திர கணித அறிவில் இவர்களுக்கு நிகரில்லை என்பது உண்மையா? : ஆம். உண்மை
 
இவர்களின் நூல்களில் அறபு மொழி தவிர வேறு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் உண்டா? எந்த நூல்கள்? எந்த மொழியில்? :
அல் புதூஹாதுல் மக்கிய்யஹ், புஸூஸுல் ஹிகம்,ஆங்கில மொழி
 
மொழியாக்கம் செய்தவர் யார்? : வெள்ளைக்காரர்கள்.
 
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் எவை? யாரால்? : புஸூஸுல் ஹிகம். அறிஞர் RPM. கனி BABL
 
நூலின் பெயர்? : மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்.
 
மேற்கண்ட ஆறு சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட வேறு ஞானி யார்? : ஒருவருமில்லை.
 
“ஸுல்தானுல் ஆரிபீன்” என்ற சிறப்புப் பெயர் தவிர. இது கொண்டு ரிபாயீ நாயகம் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
 
ஸூபிஸ தௌஹீத் ஞானத்தில் இவர்களுக்கு நிகரானவர் யார்? : யாருமில்லை.
 
இதன் பிறகு யாராவது தோன்றலாமா? : அல்லாஹ் வல்லமையுள்ளவன்.
 
இவர்களுக்கு விஷேட அறிவு வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? ஆதாரம் உண்டா? : உண்மை. ஆதாரம் அவர்களின் பேச்சுதான்.

خُصِّـصْتُ بِـعِلْمٍ لَـمْ يُـخَـصَّ بِـمِـثْـلِـهِ سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِى الْعَرْشِ وَالْكُرْسِيْ
 
இவர்களின் பெயருடன் முஹ்யித்தீன் என்ற பெயர் சேர்க்கப்பட்டதேன்? : இப்னு அறபீ
றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெற்றோர் பிள்ளைப் பாக்கியமின்றி பல வருடம் வாழ்ந்தார்கள். ஒருநாள்
இப்னு அறபீ அவர்களின் தந்தை கவலையுடன் வீட்டு முற்றத்தில் இருந்தபோது வழியால் சென்ற
ஒருவர் – பகீர் கோலத்திலுள்ளவர் – அவரிடம்
என்ன கவலை? என்று வினவினார்.
 
குழந்தைப் பாக்கியம் இல்லை என்றார். கவலை வேண்டாம். பக்தாத் சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரைச் சந்தியுங்கள் என்றார்.
தந்தை பக்தாத் வந்து அவர்களைக் கண்டு நடந்ததைக் கூறினார். (நல்ல நேரம் வந்து விட்டீர். எனது முதுகெலும்பில் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே இருக்கிறது. அதை உங்கள் முதுகெலும்புக்கு மாற்றித் தருகின்றேன். உங்கள் சட்டையை கழட்டி
விட்டு உங்கள் முதுகெலும்பை எனது முதுகெலும்புடன் உரசுங்கள் என்றார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.
 
உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு “முஹ்யித்தீன்” என்று பெயர் சூட்டுங்கள் என்றார்கள். அந்தக்குழந்தைதான் முஹ்யித்தீன்
இப்னு அறபீ ஆவார்கள்.
 
இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து நல்லடக்கம் செய்யப்பட்ட பின்
அவர்களின் “கப்றை” தோண்டி அவர்களை வெளியே எடுப்பதற்கு எதிரிகள் முயற்சி
செய்தது உண்மையா? : ஆம். ஓர் எதிரி முன்
வந்தான். ஒருநாள் நடு நிசியில் அவர்களின் கப்றடிக்கு வந்தான் அவ்வளவுதான், பூமி அவனை விழுங்கி விட்டது.
அவனை பூமி விழுங்கிய இடம் இன்றும் அங்கு உண்டு.
 
இப்னு அறபீ அவர்களின் நூலில் ஏதாவது விஷேடங்கள் உண்டா?: ஆம். உண்டு.
 
قَالَ الْفَيْرُوْزَابَادِيْ صَاحِبُ الْقَامُوْسِ وَاَمَّا كُتُبُهُ رَضِيَ الله عَنْهُ فَهِيَ الْبِحَارُ الزَّوَاخِرُ الَّتِيْ مَاوَضَـعَ الْوَاضِـعُوْنَ مِثْلَهَا. وَمِنْ خَصَائِصِهَا مَاوَاظَبَ اَحَدٌ عَلَى مُطَالَعَتِهَا اِلَّا وَتَـصَدَّرَ لِحَلِّ الْمُشْكِلَاتِ فِى الدِّيْنِ وَمُـعْضَلَاتِ مَسَائِلِهِ. وَهَذَا الشَّأْنُ لَا يُوْجَدُ فِى كُتُبِ غَيْرِهِ
இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்கள் அலையெழும்பும் பெருங்கடல்கள். அவர்களின் நூல்கள் போன்று வேறெவரும்
எழுதவில்லை. அந்த நூல்களில் உள்ள விஷேடம் என்னவெனில் அவற்றை வாசிக்கும் ஒருவன் மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையாயினும் அதைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றுவிடுவான்.
 
இத்தகைய விஷேடம் வேறெவரின் நூலிலும் இல்லை என்று காமூஸ் நூலாசிரியர் இமாம் பைறூஸாபாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
இப்னு அறபீ அவர்களை குறை சொல்வோர் பற்றி ஏதும் தகவல் உண்டா? : ஆம். உண்டு.
 
كَانَ الشَّـيْـخُ سِـرَاجُ الدِّيْنِ الْمَخْـزُوْمِيْ شَيْخُ الْاِسْلَامِ بِالشَّامِ يَقُوْلُ : اِيَّاكُمْ وَالْاِنْـكَارَ عَلَى شَيْئٍ مِنْ كَلَامِ الشَّيْخِ مُـحْيِ الدِّيْـنِ. فَاِنَّ لُـحُوْمَ الْاَوْلِـيَاءِ مَسْمُوْمَةٌ وَهَـلَاكَ اَدْيَانِ مُـبْـغِـضِـهِـمْ مَـعْـلُوْمَةٌ. وَمَـنْ اَبْغَضَهُمْ تَــنَصَّرَ وَمَاتَ عَلَى ذَلِكَ. وَمَنْ اَطْـلَقَ لِسَانَهُ فِيْهِمْ بِالسَّـبِّ اِبْـتَلَاهُ الله بِمَوْتِ الْقَلْبِ
 
சிரியாவின் ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல்மக்சூமீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேச்சில் ஒன்றையேனும் நீங்கள் மறுத்துவிடக் கூடாதென்று உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் அவ்லியாக்களின் உடல் நஞ்சூட்டப்பட்டது. அவர்களைக் கோபப்படுத்துவோரின் மார்க்கம்
அழிந்து போகுமென்பது பகிரங்கமானது. அவர்களைக் கோபப்படுத்தினவன் நஸாறா -காபிராகி விடுவான். அவர்களை ஏசினவனின் கல்பு – உள்ளம் செத்துவிடும்.
 
وَمِمَّنْ أَثْنَى عَلَى الشَّيْخِ – مُحْيِ الدِّيْنِ شَيْخُ الْاِسْلَامِ فَـخْرُ الـدِّيْنِ الرَّازِيْ صَاحِبُ التَّفْسِيْرِالْكَبِيْرِ رَحِمَهُ الله وَقَالَ كَانَ الشَّيْخُ مُحْيِ الدِّيْنِ وَلِيًّا عَظِيْمًا
 
“அத்தப்ஸீறுல் கபீர்” என்ற நூலை எழுதிய ஷெய்ஹுல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இப்னு
அறபீ அவர்களைப் புகழ்ந்து கூறுகையில் அவர்கள் வலுப்பமுள்ள ஒரு வலீ என்று கூறியுள்ளார்கள்.
 
وَسُئِلَ الْاِمَامُ مُـحْيِ الدِّيْنِ النَّوَوِيْ رَحِمَهُ الله عَنِ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ قَالَ تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ. وَلَكِنِ الَّـذِيْ عِنْدَنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى كُلِّ عَاقِلٍ اَنْ يُسِيْئَ الظَّنَّ بِاَحَدٍ مِنْ أَوْلِـيَاءِ
اللهِ عَزَّوَجَلَّ وَيَجِبُ عَلَيْهِ اَنْ يُـؤَوِّلَ اَقْـوَالَهُمْ وَاَفْعَالَهُمْ مَادَامَ لَمْ يَلْحَقْ بِدَرَجَتِهِمْ. وَلَايَـعْجِزُ عَنْ ذَلِكَ اِلَّا قَلِيْلُ التَّـوْفِيْقِ. قَالَ فِيْ شَرْحِ الْمُهَذَّبِ ثُمَّ اِنْ اُوِّلَ فَلْيُؤَوَّلْ كَلَامُهُمْ اِلَى سَبْعِيْنَ وَجْهًا. وَلَانَقْبَلُ تَأْوِيْلًا وَاحِدًا. مَاذَاكَ اِلَّا تَعَنُّتٌ
 
இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இப்னு அறபீ றஹ்மதுல்லாஹி அலைஹி பற்றிக் கேட்கப்பட்ட போது பின்வருமாறு சொன்னார்கள்.
 
(அந்த சமூகம் வாழ்ந்து மரணித்துப் போய்விட்டது. ஆனால் எங்களின் கருத்தென்னவெனில் அவ்லியாக்களில்
எவர் பற்றியும் தப்பான எண்ணம் கொள்வது புத்தியுள்ளவனுக்கு “ஹறாம்” ஆகும். அவர்களின் பேச்சுகளுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொண்டு நோக்குவது அவன் மீது கடமையாகும். ஆயினும் அவர்களின் தரத்தை அவன் அடைந்திருந்தாலன்றி, அவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் வலிந்துரை கொள்வதாயினும் ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடாமல் எழுபது வலிந்துரை வரை கொள்ள வேண்டும். ஒரு வலிந்துரையை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஒரு வலிந்துரை மட்டும் கொண்டு அவர்களைக் குற்றவாளிகளாகப்
படம் பிடித்துக் காட்டுவது மணமுரண்டேயாகும்.)
 
அண்மையில் ஒரு மௌலவீ இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை “அவன்” என்ற கீழ்த்தரமான சொல் கொண்டு சுட்டி ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தார். அவருக்குத் தண்டனை கிடைக்குமா? அவர் ஒரு மௌலவீ பொடியன்தான். முத்திப் பழுத்த முழு மனிதல்ல. இவரை மன்னிப்பதும் தண்டிப்பதும்
அவர்களைப் பொறுத்தது. மன்னித்தால் மனிதனாகுவார். தண்டித்தால் தடம் புரண்டு போவார்.
 
தாங்க முடியாத சோதனைக்குள்ளாவார். மக்கள் அவரைப் பார்த்து ஸுப்ஹானல்லாஹ்! அவ்லியாக்கள் தமது எதிரிகளை இப்படியுமா
சோதிக்கிறார்கள் என்று வியந்து நிற்பர் சிலர். அவ்லியாக்களின் எதிரிக்கு வரத்தான் வேண்டுமென்று கை கொட்டிச் சிரிப்பர் பலர்.
 
وَاَمَّا الشَّخْصُ الَّـذِيْ اَسَاءَ ظَنَّهُ بِابْنِ عَرَبِيْ وَسَبَّهُ بِكَلِمَةٍ لَايُنَاسِبُ مَقَامَهُ فَهُوَ طِفْلٌ يَمُصُّ ثَدْيَ اُمِّـهِ بِالـنِّسْبَةِ اِلَى عُلُوْمِ الْقَوْمِ وَمَقَامَاتِ الْاَوْلِيَاءِ. وَدَرَجَاتِ الْاَقْطَابِ. وَمَرَاتِبِ الْاَبْدَالِ وَالْاَنْجَابِ. وَمُعَاقَبٌ بِعِقَابٍ لَا يُوْصَفُ بِاَلْفَاظِ الْعَبْدِ. كَمَا وَرَدَ فِى الْحَدِيْثِ الْقُدْسِيِّ مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ. وَمَاذَا جَرَى لِفِرْعَوْنَ عَادَى نَـبِــيَّ اللهِ مُـوْسَـى؟ وَمَاذَا جَرَى لِنَمْرُوْدَ عَادَى نَـبِـيَّ اللهِ اِبْـرَاهِـيْـمَ؟ فَعَلَى الطِّـفْلِ الْمُشَارِ اِلَيْهِ اَنْ يَرْجِعَ عَمَّا قَالَ فِى حَـقِّ الشَّيْخِ ابْنِ عَرَبِيْ وَعَنْ اِسَاءَةِ الظَّنِّ بِـه وَبِسَائِرِ الْاَوْلِـيَاءِ. لِأَنَّ لُـحُوْمَ الْأَوْلِيَاءِ مَسْمُوْمَةٌ. مَاتَ مَنْ أَكَلَهَا أَوْ اِبْتَلَاهُ الله بِمَا شَاءَ. وَبِمَا شَاءَ وَلِيُّهُ. وَالله عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ. وَبِالْاِجَابَةِ جَدِيْر.
வெளியீடு
காதிரிய்யஹ் திருச்சபை
காத்தான்குடி-05

You may also like

Leave a Comment