Friday, April 26, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் – 
அல்ஜாமிஅதுர்
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 08









ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர், இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத்
இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள். 
ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர்
அல் அல்லாமஹ் இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம்
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மூன்று திருமுடிகள்
காணப்பட்டன.
தான் மரணித்த பின்
அருள் நிறைந்த அந்தத் திருமுடிகளை தனது கபனுடன் வைத்து அடக்கும் படியும், அவற்றில்
ஒன்றை தனது ஒரு கண்ணிலும், மற்றதை தனது மற்றக் கண்ணிலும்,
மற்றதை தனது வாயிலும் வைக்கும் படியும் வஸிய்யத் செய்தார்கள்.
அவர்கள் மரணித்த போது அவ்வாறே செய்யப்பட்டது.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் உண்டு என்பதை திடமாக நம்பியிருந்தார்கள். இமாமுனா
அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள். தான் மரணித்த
பின்னும் அவை தனக்குப் பயனளிக்கும் என்பதை நம்பியிருந்த காரணத்தால் தான் அவற்றை தனது
கபனுடன் வைத்து அடக்கும் படி பணித்தார்கள்.
இமாமுனா அஹ்மத் இப்னு
ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் எதிரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை
அல் பழ்ல் இப்னுர் றபீஃ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மூன்று முடிகளை இவர்களுக்கு
வழங்கி இவை அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் என்று
கூறினார்கள்.
எதிரிகளால் மிகவும்
துன்புறுத்தப்பட்டவர்களில் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும்
ஒருவர். இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்
திருமுடிகளை தங்களின் சேட்டின் கைப்பகுதியில் வைத்து தைத்திருந்தார்கள். முஃதஸம் என்பவன் அவர்களை துன்புறுத்துகின்ற வேளை அவர்களின் சேட்டின் கைப்பகுதியில்
முடிச்சு போன்று ஒன்று இருப்பதைக் கண்டு இது என்ன? என்று கேட்டான்.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள்
என்று பதிலளித்தார்கள் இமாமவர்கள். அதைத் தாருங்கள் என்று அவர்களிடமிருந்து
அவற்றை எடுத்துக் கொண்டான். இந் நிலையில் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அவர்களுடன் இருப்பதை அவன் காணும் பொழுதெல்லாம்
அவர்கள் மீது அவன் இறக்கம் காட்டக் கூடியவனாக இருந்தான் என்று அஹ்மத் இப்னு ஸினான்
என்பவர்கள் கூறுகிறார்கள்.
அபூபக்ர் இப்னு மகாரிம்
இப்னு அபீயஃலா அல் ஹர்பீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் கனவு கண்டார்கள். அதில்
அவர்கள் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடத்தில் பின்வருமாறு
கேட்டார்கள்.
“நாயகமே! ஏனைய கப்றுகளன்றி உங்களின் கப்று முத்தப்பமிடப்படுவதன் இரகசியம் என்ன?”
அதற்கவர்கள் “எனது
சின்ன மகனே! இது எனக்கு வழங்கப்படும் கண்ணியமல்ல இது அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம். ஏனெனில் என்னுடன்
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருக்கின்றன”.
என்று கூறினார்கள்.
இமாமுனா அஹ்மத்
இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஅலா அன்ஹு அன்னவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் றழியல்லாஹு
தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வறுமாரு கூறுகிறார்கள்.
“அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை எனது தந்தை எடுத்து, அவற்றைத் தனது வாயில்
வைத்து முத்தமிடுவதை நான் கண்டிருக்கிறேன். மாத்திரமன்றி அவற்றை தனது இரு கண்களில்
வைப்பதையும் நான் கண்டிருக்கிறேன். மாத்திரமின்றி அந்தத் திருமுடிகளை நீரில்
கழுவி, அந்த நீரைக் குடித்து சுகம் பெறுவதையும் நான் கண்டிருக்கிறேன்”.
இமாமுனா அஹ்மத்
இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் மிகச் சிறந்த ஓர் அறிஞர், ஹன்பலீ
மத்ஹபை ஸ்தாபித்த ஓர் மேதை. பிக்ஹ் சட்டக் கலையில் மேதையாகத் திகழ்ந்தவர்கள்.
இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில்
அருள் – பறகத் உண்டு என்பதை மிக உறுதியாக நம்பியிருந்தார்கள். இதனாற்தான் அந்த
திருமுடிகளின் அருளை பெற்றுக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் அணியும் சேட்டில் அதைத்
தைத்திருந்தார்கள். தான் மரணித்த பின்னும் தனக்கு அவற்றின் அருள் கிடைக்க
வேண்டுமென்று விரும்பிய காரணத்தினால் தான் தனது ஜனாஸஹ்வுடன் அவற்றை வைத்து அடக்க
வேண்டுமென்று பணித்தார்கள். அருள் பெற்றவர்கள் அவர்கள் இவர்களின் அருளை அல்லாஹுத்
தஆலா எமக்குச் சொரிவானாக.
அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் மாத்திரமல்ல அவர்கள் பாவித்த அனைத்துப்
பொருட்களிலும் பறகத் – அருள் உண்டு என்பதை உறுதி கொண்டவர்கள் இமாமுனா அஹ்மத் இப்னு
ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
இதனாற்தான் அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பாவித்த பீங்கான் ஒன்றை தங்களிடம்
பாதுகாத்து வைத்திருந்தார்கள் இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் இது பற்றி இவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பீங்கானை எனது தந்தை எடுத்து, அதை நீர்ப்
பாத்திரத்தில் கழுவி, அதில் குடிப்பதை நான் கண்டிருக்கிறேன்”.
எனவே தான்,
இமாமுனா அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில், அவர்கள் பாவித்த பொருட்களில் அருள் –
பறகத் உண்டு என்பதை உறுதியாக நம்பியிருந்தார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள
முடியும்.
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ்
முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட
அண்ணலாரின் அருள் முடி.
ஹதீத் கலை மாமேதை அபூ
அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்
நிகரற்ற மாமேதை இஸ்லாமிய வரலாற்றில் அதிகம் பணிபுரிந்தவர்கள். அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் முன் கொண்டு
சென்ற ஓர் அறிஞர்.
இவர்கள் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் அருள் – பறகத்
உண்டு என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். மாத்திரமன்றி அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாவித்த அனைத்துப் பொருட்களிலும் அருளுண்டு
என்பதை மிக உறுதியாக நம்பியிருந்தார்கள். புனித ஸஹீஹுல் புஹாரீயில்
பதியப்பட்டுள்ள சின்னங்கள் கொண்டு அருள் பெறுதல் சம்பந்தமான ஹதீத்கள் இதற்கு சான்றாகும்.
இவர்களிடத்தில் அண்ணல்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடி காணப்பட்டது. அது
அருள் பெறும் நோக்கில் தங்களின் ஆடையில் வைத்திருந்தார்கள்.
இது பற்றி அவர்களிடம்
எழுத்தாளராகப் பணிபுரிந்த முஹம்மத் இப்னு அபீ ஹாதிம் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்
பின்வருமாறு கூறுகிறார்கள்.
“அவர்களிடம் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி இருந்தது. அதை
தனது ஆடையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.
பத்ஹுல் பாரீ
பக்கம் 645
இமாமுனா முஹம்மத் இப்னு
இஸ்மாயீல் அல் புஹாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் ஆடையில் அண்ணல் முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடியை வைத்திருந்தார்களென்றால் அதில் அருளுண்டு
என்பதை அவர்கள் நம்பியிருந்த காரணத்தினால்தான். அதன் அருள் தனக்குக் கிடைக்கும்
என்று உறுதி கொண்ட காரணத்தினால்தான்.
தொடரும்….







RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments